செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
கொஞ்சம் கவிதைகள்...
1) வலிக்கவில்லை
கடந்து செல்கிறது
அமரர் ஊர்தி
********************************
2)ஓடி விளையாட
மேகமின்றித்
தவிக்கிறது நிலா
********************************
3)ஆவேசமாய் அலையடிக்கிறேன்
தூரத்திலிருந்து சிரிக்கிறாய்
முழுநிலாவாய்...
********************************
4) ஒளிந்திருக்கும் வன்முறையின் குரூரம்
மென்மையாய்ச் சிரித்து
வேடமிட்டுப் பின் பதுங்கி
கொஞ்சம் கொஞ்சமாய் ஈர்த்து
கூந்தல் கோதி இழுத்தணைத்து
முத்தமிட்டபின்
மனதில் நாற்றமெடுக்கிறது
கவிச்சிவாடை
********************************
5)துணுக்காய் மேகம்
என்ன செய்கிறது
தனியாக?
********************************
6)ஒவ்வொருமுறையும்
வாழ்வைக் கேலிசெய்கிறது
முன்னிருக்கைக் கூந்தலிலிருந்து
உதிரும் பூ!
********************************
7) வார்த்தையடுக்குகள்
பாடையலங்காரங்கள்
புகழுரை பற்றிய கற்பனைகள்
ஆகா!
பிறந்துவிட்டது 'கவிதை'.
********************************
(என் பழைய டைரிய பொரட்டுனப்போ கெடைச்சிது.... கடைசிக் கவிதை மத்த எல்லாத்துக்கும் பொருந்துமோ?!)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
10 பேரு கிடா வெட்டுறாங்க:
உதிரும்பூ சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் அருமை.
# 6 செம. பிடிச்சிருக்கு.
"ஓடி விளையாட
மேகமின்றித்
தவிக்கிறது நிலா
துணுக்காய் மேகம்
என்ன செய்கிறது
தனியாக?"
இரண்டாவது, ஐந்தாவது கவிதைகளை சேர்த்துப் படித்தேன் இப்படியாகிவிட்டது. :)))
ஆவேசமாய் அலையடிக்கிறேன்
தூரத்திலிருந்து சிரிக்கிறாய்
முழுநிலாவாய்...
மிகவும் ரசித்தேன்
//கூந்தல் கோதி இழுத்தணைத்து
முத்தமிட்டபின்
மனதில் நாற்றமெடுக்கிறது
கவிச்சிவாடை//
காமம் மறைந்த பின், மனதில் நிகழும் போராட்டத்தை அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள் நண்பரே! கவிதை வரிகள் அழகு
//வலிக்கவில்லை
கடந்து செல்கிறது
அமரர் ஊர்தி//
ஏன்? அதில் இருப்பது, நாம் அறிந்தவர் அல்லர் என்பதாலா? மிகவும் நன்றாக வந்திருக்கிறது கவிதை!!!
ராஜாராமன்,உங்கள் கவிதைகள் அனைத்துமே சிறப்பானவை. வார்த்தைகளை விரயமாக்காமல்,நேரான கவிதைகள்.நன்று.நன்று
உங்கள் பழையபனை ஓலைகள் நன்கு உள்ளது...
அடிக்கடி புரட்டுங்கள் ., உங்களின் கடந்த நாட்களின் பக்கங்களை.
நன்று.. நண்பரே.,
அன்புடன்.,
இரா. சா.
ஐந்தும், ஆறும் பிரமாதம் ...
கவிதை அருமை...
மிகவும் ரசித்தேன்.
எல்லாம் அருமை
மிக ரசித்தேன்
கருத்துரையிடுக