வியாழன், 5 ஆகஸ்ட், 2010

பாரத் மாதா கீ ஜே!

தண்டகாரண்யப் பாஞ்சாலிகளைத்
துகிலுரியும் பாண்டவர்கள்
சிங்கு, சிதம்பரம்,
எம்.என்.சி, சல்வாஜூடும்,
ரிசர்வு போலீசு

சிங்குக்கும் ஒபாமாவுக்கும்
கள்ளக்காதலாம்
அவமான சாட்சியாய்
அணு ஒப்பந்தக் குழந்தை

மைனா அம்மாவுக்கு
கவுதாரிக்கறி பிரியமாம்
காஷ்மீரும் ஈழமும்
தோதான இடம்

அம்பானி குடும்பத்துல
அடிபுடி தகறாறு
அய்யோ பாவங்குது
ஆங்கிலப் பத்திரிகை

அரிசில புழு இருக்கா
புழுவுக்குள்ள அரிசி இருக்கா
ஆராய்ச்சி பண்றான்
அழுக்கு கோமணத்தோட

இரண்டாயிரத்தி இருவதுல
இந்தியா வல்லரசாம்
எழுதி மாயுறாரு
கலாம் அய்யரு

இருந்துட்டு போவட்டும்
இருக்கவே இருக்கு
கிரிக்கெட்டு, கிசுகிசு,
அரையாடை நடிகை
அறைக்குள்ள புளூபிலிம்

எதுக்கும் சொல்லிவைப்போம்
"பாரத் மாதா கீ ஜே!"

இல்லன்னா பாயுமாம்
தேசிய பாதுகாப்பு(!) சட்டம்

8 பேரு கிடா வெட்டுறாங்க:

மதுரை சரவணன் சொன்னது…

ஆமாம் ..ஆமாம் ...கவிதை வாழ்த்துக்கள்

raja சொன்னது…

கவிதையால் செருப்படி அடிக்கமுடியும்னு.. உங்க வார்த்தைகள் தமிழன் செவுல பிச்சி எடுக்கிறது.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

கலாம் ஐயரை ரசித்தேன்...
கவிதைக் கோபம் நியாயமானது... ஆனால் மக்கள் செம்மறி ஆடுகளாய் மாறிவிட்ட பின் இனி எதுவும் நியாயமாய் நடக்க வாய்ப்பில்லை...

பெயரில்லா சொன்னது…

//மக்கள் செம்மறி ஆடுகளாய் மாறிவிட்ட பின் இனி எதுவும் நியாயமாய் நடக்க வாய்ப்பில்லை... //

கே ஆர் பி செந்தில்,
மக்களை விடுங்கள். நீங்க எப்படி? செம்மறியாடா இல்ல களத்தில் போராடும் ஆசாத்தின் வாரிசா?

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ஆசாத்தின் வாரிசானால் சட்டங்கள் பாய்ந்து சிறைத்தண்டனையோ, என் கவுண்டரோ பரிசாக கிடைக்கும்,

முடிந்தவரை செம்மறி ஆடாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டியதுதான்...

ஹேமா சொன்னது…

மனசு முழுக்கக் கோவம்.உணர்வுள்ளவர்கள் மட்டுமே கோபப்படுகிறார்கள் உங்களைப்போல !

பெயரில்லா சொன்னது…

//
முடிந்தவரை செம்மறி ஆடாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டியதுதான்... //

அந்த வழிமுறையைச் சொன்னால் என்னைப் போல பலருக்கும் உதவிகரமாக இருக்கும்.

parthasarathy சொன்னது…

விந்தை மனிதர் காணீர் ! அய்யா ! விந்தை மனிதர் காணீர்
ஓட்டை குடம் ஒன்றில் , குடிநீர் பிடித்தேன், என்னை பார்த்து முட்டாள் என்றாய்
அடைக்கலாம் என்றால், ஒழுகும் நீர் செடி கோடி களுக்கு உதவும் என்றாய் ,
நீயே ஓட்டுவாய் , பின் நீயே ஓட்டுவாய் . இதை எழுத ஒருவன் , எழுதி என்ன பயன் என்று ஒருவன். ஆகா மொத்தம் , நாம் எழுதி நம் மனசாட்சிக்கே பொய் சொல்கிறோம் , நாம் நல்லவர்கள் என்று !
விந்தை மனிதர் காணீர் ! அய்யா ! விந்தை மனிதர் காணீர்

Related Posts with Thumbnails