திங்கள், 9 ஆகஸ்ட், 2010

மன்மோகன் போற்றித் துதிஅணுசக்தி ஒப்பந்தத்தின் அய்யா போற்றி!
ஆண்டனியோ தாள் பணியும் அழகே போற்றி!
இந்தியா விற்க வந்த இறையே போற்றி!
ஈழம் எரித்த ஈசா போற்றி!

இங்கிலாந்து, அமெரிக்க எடுபிடியே போற்றி!
எண்ணை விலையை ஏற்றினாய் போற்றி!
ஈரானின் எரிவாயு என்னாச்சு போற்றி!
எத்தனில் ஜித்தனாய்த் திகழ்ந்தாய் போற்றி!

சீக்கியத் தலைப்பாகைக்காய் சீறினாய் போற்றி!
பிரெஞ்சு அரசுமுழி பிதுக்கினாய் போற்றி!
தமிழன் தாலியென்ன தகரமா போற்றி!
தமிழச்சி கற்பென்ன கடைச்சரக்கா போற்றி!

'சிதம்பர'ச் சேர்க்கையில் திளைத்தாய் போற்றி!
செழிப்பான அம்பானிதோள் சேர்ந்தாய் போற்றி!
பருத்தி விவசாயி பாவமே போற்றி!
பல்லாக்குத் தூக்கிடு எம்.என்.சிக்கு போற்றி!

ஏமாந்த இந்தியனுக்கு இரையென்ன போற்றி!
நூறுநாள் வேலைப் புழுபோதும் போற்றி!
நடுத்தரக் குடிகளுக்கு நமைச்சலாம் போற்றி!
காஷ்மீரப் புகையில் தேசபக்தத் தீபம் போற்றி!

'வேதாந்தா' விளையாட இடம்வேணும் போற்றி!
தண்டகாரண்யம் அழித்துத் தருவாய் போற்றி!
பழங்குடி வாழத் தேவையா போற்றி!
பணக்காரன் வாழ்வதுபின் எப்படி போற்றி!

பெட்ரோலில் விலைவைத்துப் பிடுங்கினாய் போற்றி!
பேராயுதம் இலங்கைக்குக் கொடுத்தாய் போற்றி!
பிறந்தபிள்ளை தலைச்சுமையில் கடன்வைத்தாய் போற்றி!
ஸ்விஸ்பேங்க் கணக்குகேட்க மறுத்ததேன் போற்றி!

குவாத்ரோச்சி குடும்பம்காத்த குலவிளக்கே போற்றி!
கும்பலாய் மக்கள்கும்பி காய்வதேன் போற்றி!
காமன்வெல்த் போட்டிகளில் கலக்குவாய் போற்றி!
காலித்திடலாய் மக்கள்வயிறு இருக்குதே போற்றி!

மாவோயிஸ்ட் மயக்கத்தில் கலங்காதே போற்றி!
சிங்களவன் பயிற்சி சிறக்குமே போற்றி!
சிதம்பரம் துணையிருக்கப் பயமேன் போற்றி!
சீராளா! கோமகனே!! உன்னடி போற்றி போற்றி!!!

3 பேரு கிடா வெட்டுறாங்க:

பெயரில்லா சொன்னது…

இத்தாலிச் சனியாள் முந்தானை போற்றி!கொலைஞர் வலது கரமே போற்றி!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

கோபத்தை துப்பி இருக்கிறீர்கள்.. அவர்கள் சர்வ சாதரணமாய் துடைத்து போட்டு போவார்கள்...
துப்பு கெட்டவர்களை எத்தனை துப்பினால் என்ன..?

Related Posts with Thumbnails