செவ்வாய், 27 ஏப்ரல், 2010

வார்த்தை என்னைக் கைவிடும்போது மௌனம் பேசுகிறேன்...

உலர்ந்துபோன என் உதடுகளில்
ஒட்டவைத்துப் போகிறாய்
ஒரு புன்னகையை

நீண்டதூரப் பயணங்களின்
ஜன்னலோரங்களில்
எழுதிக் கொண்டே
இருக்கிறேன்
உனக்கான என் கவிதையை

தூக்கம் கலைந்த அதிகாலைகளில்
மீண்டும் தொடர்கின்றன
முத்தம் பற்றிய கனாக்கள்

இமைகளைப் பறித்துக்கொண்ட
மொட்டைமாடி இரவுகள்
எத்தனை யுகங்களாய்
நீள்கின்றன?

கவிதைக்குச் சொற்களைத்
தேடிக்கொண்டிருந்தபோது
மெல்லக் கடந்து
செல்கிறது
உன் காதல்

வியாழன், 22 ஏப்ரல், 2010

இங்கே பிராமணன்!

நான்கு நாட்களாக நெஞ்சில் குமுறிக்கொண்டிருந்த நெருப்பை வார்த்தைகளாக வார்க்கும் திறனின்றித் தவித்துக் கொண்டிருந்தேன்.

இத்தனை நாளாய் எங்கே பிராமணன் என்று நீட்டி முழக்கிக்கொண்டிருந்த சோ, சுப்ரமணியசாமி,டோண்டு கும்பலுக்கு ஜல்லியடித்துக் கொண்டிருப்போருக்கு (”நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்... இல்லையா டோண்டு சார்) “இங்கே பிராமணன், இங்கே பிராமணன்” என்று பூணூலைப் பிடித்து கையில் பிடித்து ஆட்டி நிரூபித்திருக்கிறார் திருவாளர் டோண்டு.

அன்று சம்புகனின் ரத்தத்தை ருசி பார்த்த அதே நாக்குகள் முள்ளிவாய்க்காலிலும் தாகம் அடங்காமல் இன்று பார்வதியம்மாளின் ரத்தத்துக்காக நாக்கைச் சுழற்றியிருக்கின்றன.

வரதராஜப் பெருமாளுக்கு வால் பிடித்தபோது ஆகாத செலவும், ஜெயேந்திரனுக்கு கழிவதற்கு வாழையிலை வாங்கியபோது ஆகாத செலவும், ராஜபட்சேவுக்கு விளக்கு பிடித்தபோது ஆகாத செலவும் இந்தக் கிழவியின் பாதுகாப்புக்கு ஆகிறதாம்... அணுவிபத்து நேர்ந்தால் பன்னாட்டுக்கம்பெனிகள் சார்பாக 2000 கோடி ரூபாய் எலும்புத்துண்டுகளை வீசியெறியத் தயாராயிருக்கும் இருபத்தியோராம் நூற்றாண்டின் வல்லரசுக்கு...

கழுகின் நிழலைக் கண்டால் கூட நடுநடுங்கி நத்தையாய்ச் சுருண்டுகொள்ளுமாம் நாகப்பாம்புகள்... இந்த மனித உருக்கொண்ட பாம்புகள் பிரபாகரனின் மூச்சுக்காற்று பட்ட தூசினைக் கண்டால் கூட நடுங்குவதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்? பின்னே!! பூணூல்கள் குறிகளாய் நீளும்போது முதுகெலும்பை முன்புறமாக வளைத்து வளைத்து உயரம் குன்றிப்போன தமிழன் காலம்தாழ்த்தியாவது நிமிர்ந்து விட்டானென்றால் என்ன செய்வது? பார்வதியம்மாளைப் பார்த்து பயம் வரத்தான் செய்யும்!!!

பார்ப்பனத்துவேஷம், பார்ப்பனத்துவேஷம் என்று நீலிக்கண்ணீர் வடித்ததைப் பார்த்து ஏமாந்து நின்ற இளிச்சவாயர்களே! இதோ நிர்வாணமாக நிற்கிறது பார்ப்பனர்களின் துவேஷம்!!!

“அவா மணியத்தான் ஆட்டுறா... இல்லை ........த்தான் ஆட்டுறா... நமக்கென்ன”னு போகாம வீடியோ போட்டு நாறடிச்சப்போ வந்த துவேஷமா இருக்குமோ!!!

கருவறையைக் காட்டி இரைப்பையை நிரப்பியது போதாதென்று கருப்பைகளையும் நிரப்பிய கூட்டம் ஓலமிடுகிறது நாட்டின் நலனையும்,இறையாண்மையையும் பற்றி...(ஒருவேளை இறையின் முன்பு ஆண்மையைக் காட்டுவதுதான் இறையாண்மையோ!!! ஒரு எழவும் புரியல... அவா சொன்னா சரியாத்தான் இருக்கும்)

பார்வதியம்மாளின்மேல் விஷநாக்கை நீட்டியதற்கு பார்ப்பனவெறியைத்தவிர வேறென்னவாக இருக்க முடியும்...

அவரென்ன கோவணத்தை அவிழ்த்து தண்டத்தில் மாட்டிவிட்டு அம்மாமிகளோடு ஓடிப்போன அந்தர்யாமியா? போயும் போயும் தமிழ்த்தேசியத்தைத் தலையில் தூக்கிவைத்து ஆடிய அசட்டுப் பிரபாகரனின் அம்மாதானே? ’அப்போது’ காணாமல்போன சாஸ்திரங்களெல்லாம் இப்போது சதங்கை கட்டி ஆடத்தான் செய்யும்.

ஆனந்தபுரத்துச் சமரோடு சாம்பலாக்கிவிட்டோம் என்ற மமதையில் ஆடும் கூட்டமே!!! அந்த சத்ரியர்களின் சாம்பலிலிருந்து புதிய ஃபீனிக்ஸ் பறவைகள் சிறகு விரிக்கத்தான் செய்யும்.

அன்று வழங்கப்படும் இறுதித்தீர்ப்பு!

சனி, 17 ஏப்ரல், 2010

யோனி, முலை மற்றும் சில கவிதைகள்

கிழவிக்கு வைத்தியம் பார்த்தா
கலவரம் வ்ந்துடுமாம்

ஒரு ரூவா அரிசியில
பீ நாத்தம்

“சித்தப்பன் பொண்டாட்டியை
இழுத்துட்டு போயிட்டான்
எம் புருஷன்”
சீரியல் சிலுக்கு
சிங்காரமா அழுவுறா

பக்கத்து ஓட்டல்ல
இட்லி
பதினாறு ரூவாயாம்

”குண்டியை நக்கு
குதூகலம் வரட்டும்”

செவத்த குட்டி சிலும்பல்ல
கேட்ச்சை விடுறான் டோனிப்பயல்

வப்பாட்டிக்கு புடிச்சிருக்காம்
கபடி டீம் எவ்ளோ ரூவா

ஆதிவாசிக்குட்டி
அம்சமா இருப்பாளாமே!
ஆபரேஷன் க்ரீன்ஹண்ட்ல
ஆபீசர் போஸ்ட்டுக்கு எவ்ளோ?

என்ன நடந்தா
எனக்கென்ன
மசுராப்போச்சு

எட்ரா பேனாவ
எழுதுடா கவுஜய
“யோனி, முலை மற்றும் சில கவிதைகள்”
Related Posts with Thumbnails