வியாழன், 31 மார்ச், 2011

விலக்கப்பட்ட கல்லே வீட்டுக்கு மூலைக்கல்லாயிற்று ( வைகோ பற்றிய பார்வை)


தமிழக அரசியல்களம் முன்னெப்போதையும் விட பல விசித்திரக்காட்சிகளைக் கண்டு வியந்து நிற்கிறது.  தேர்தல் கூட்டணி என்பது கொள்கைக்கூட்டணியல்ல, வெறும் கொள்ளைக்கூட்டணியே என்பதை பிரதான அரசியல்கட்சிகள் அனைத்துமே மெய்ப்பித்து அம்மணமாகி நிற்கின்றன. ஒருபுறம் "காங்கிரஸ் செய்வது நியாயமா?" என்று வீராவேசத்துடன் முழங்கி மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக ஓர் ஓரங்க நாடகத்தை நடத்தி திராவிட இயக்கத்தின் சுயமரியாதை, தன்மானம் என்கிற எல்லாவற்றையும் உதறிப் போட்டுவிட்டு பதவி என்னும் கோவணத்துக்காக அலைகிறார் 'கலைஞர்' கருணாநிதி.

தன்னை நம்பி உடனிருக்கும் கூட்டணிக்கட்சிகளைக்கூட துச்சமாகத் தூக்கியெறிந்து என்றுமே தானொரு தான்தோன்றித்தனமான, அகங்காரம் பிடித்த தற்குறித்தனமான தலைவிதான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார் ஜெயலலிதா. ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை ஒரே இரவில் டிஸ்மிஸ் செய்தும், சுப்பிரமணியசாமிக்கு மகளிர் அணி 'ஷோ' காட்டியதும், இன்னபிற அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகங்களையும், சர்வாதிகாரத்தையும் கைக்கொண்டு இன்னும் மிச்சமிருக்கும் 'மைசூர் திவான் பங்களாவில் அரண்மனை வைத்தியம் பார்த்தவரின் பேத்தி' என்கிற 'கெத்'தில் நிற்கிறார் ஜெயலலிதா.

இந்த இரண்டு அரசியல் கட்சிகளுக்கும் மாற்றாக வேறு யாரும் இல்லையே என்று புழுங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு ஒரு தற்காலிக வடிகாலாய் வந்து சேர்ந்தார் விஜயகாந்த். நீண்ட நெடுங்காலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு மல்லுக்கட்டியதில் அலுத்துப்போய் அவ்வப்போது சுகன்யாக்களின் தொப்புள்களில் பம்பரம் விட்டதும் சலித்துப்போய் இறுதியாக அவர் கரைசேர்ந்த இடம் அரசியல். மாமண்டூரில் அரசுப் புறம்போக்கு நிலங்களை வளைத்துப்போட்டு ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியைத் துவங்கி 'தூய்மை'யான பொதுவாழ்வுக்கு அடித்தளம் போட்டுக்கொண்டு நுழைந்தார். பக்கத்தில் பிரேமலதாவையும், அவர்தம் இளவலார் சுதீஷையும் வைத்துக்கொண்டே கூச்சநாச்சமின்றி கருணாநிதியின் குடும்ப அரசியலை எதிர்த்து கொஞ்சகாலம் லாவணி பாடவும் செய்தார். எத்தனைகாலம்தான் 'சுட்டி சுட்டி உன் வாலைக் கொஞ்சம் சுருட்டிக் கொள்ளடி' என்று பாடிக் கொண்டிருப்பது?! தனி ஆவ்ர்த்தனமெல்லாம் இனி கவைக்குதவாது என்றுசொல்லி மூட்டையைக் கட்டிக்கொண்டு போயஸ் கார்டனுக்குள் தஞ்சம் புகுந்துவிட்டார்.

இவர்களில் இருந்து எந்த வகையில் மாறுபடுகிறார் அல்லது எந்தெந்த வகைகளில் ஒன்றுபடுகிறார் வைகோ என்கிற அரசியல்வாதி?

மறுமலர்ச்சி திமுக என்ற கட்சியைத் துவங்கிய போதிலிருந்தே அந்தக்கட்சிக்கான சவக்குழியை கூடிய சீக்கிரம் வெட்டிவிட வேண்டும் என்கிற குறிக்கோளில் 'ஓடமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்கும் கொக்கு' போல அல்லும் பகலுமாக அயராது பணி செய்துவரும் கருணாநிதி, 'பகையாளிக் குடியை உறவாடிக் கெடு' என்கிற வித்தைகளையெல்லாம்கூட செய்து பார்த்தார். 2001 தேர்தலிலும், 2006 தேர்தலிலும் அவர் ஆடிய சதுரங்கத்தில் வெட்டுப்படும் குதிரையானார் வைகோ.

தேர்தல் அரசியலில் ஈடுபடும் எந்தக்கட்சியும் சமரசங்களைத் தவிர்க்க முடியாது என்ற சூழ்நிலையில் தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேறு வழியின்றி போயஸ் தோட்டத்தில் சரண்புக வேண்டிய இழிமைக்கும் தள்ளப்பட்டார். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்று தேவை என்று இன்றைய நிலையில் ஏற்பட்டிருக்கிற ஒரு வெற்றிடம் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டிருக்கவில்லை.

தனித்து நின்றே தனது கட்சியைக் காபந்து செய்ய வேண்டும் என்பது பெரியளவில் மக்களிடம் செல்வாக்கு இல்லாத நிலையில் சாத்தியமில்லை. மேலும் கட்சியில் அவருடன் இருந்த சாறுண்ணிகளும், ஒட்டுண்ணிகளுமான எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் போன்றவர்களின் 'காயசண்டிகை'ப் பசிக்கும் தீனி போட வேண்டிய கட்டாயம்.

எனவே கூட்டணி அரசியல் சகதியில் அவரும் தாராளமாகப் புழங்கியவர்தான்... மறுக்கவில்லை. அவரது வார்த்தைகளிலேயே சொல்லப்போனால் காட்டாற்று வெள்ளத்திலே சந்தன மரங்களும் அடித்துச் செல்லத்தான் படும் என்கிற தமிழக அரசியல் சூழலில் கரையொதுங்க வேண்டிய நிர்ப்பந்தங்களிலும் அவருக்கென்று சில தனித்தன்மைகள் இருந்தன. மற்றெந்த அரசியல் தலைவர்களிடமும் இல்லாத அந்தத் தன்மைகள்தான் இன்று அவரைத் தனித்துக் காட்டி இருக்கின்றன.

1) முதலானதும் தலையாயதுமானது வாரிசு அரசியலை இதுவரை வைகோ முன்னெடுக்கவில்லை. அவரது பிள்ளைகளான துரைவையாபுரியையும், கண்ணகியையும், தடா சட்டத்தில் சிறைவாசமிருந்த தம்பி ரவிச்சந்திரனையும் இதுவரை கட்சிக்கு பட்டாதாரர்களாக மாற்றவில்லை.

2) இதுவரை மத்திய அரசில் பங்கேற்று மத்திய அமைச்சர் வாய்ப்பு கிடைக்குபோதெல்லாம் அவற்றைப் புறம்தள்ளி தனது சகாக்களுக்கே பதவியைத் தாரைவார்த்தவர் வைகோ.

3) கூட்டணிக்கேற்றவாறு கொள்கைகளை மாற்றிப்பேசும் வழக்கமும் அவரிடமில்லை. இதுவரை புலிகள் ஆதரவுக் கொள்கையையோ, சேது சமுத்திரத் திட்டத்தின் பாலான தமது உறுதிகளையோ மாற்றிக்கொள்ளவில்லை.

4) ஸ்டெர்லைட் ஆலைப்பிரச்சினையில் எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தபோதிலும் இன்று அவரது அரசியல் எதிகாலத்துக்கு சவாலாக வந்தபோதிலும் கூட தனது உறுதியை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இன்று ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் அந்த நிர்வாகத்தால் செய்யப்பட்ட நிலையில் இன்றளவும் சட்டரீதியாக அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவர் வைகோ ஒருவர் மட்டுமே.

5) முல்லைப்பெரியாறு அணைக்கட்டு தொடர்பான போராட்டங்களிலும் முன்னிற்பவர் வைகோ மட்டுமே.

6) நெய்வேலி அனல்மின் நிலையத்தை தனியார்மயமாக்க முயற்சிகள் நடந்தபோது அதனைத் தடுத்து நிறுத்திய காரணகர்த்தாக்களில் வைகோ முக்கியமானவர்.

இப்போது அரசியல்களத்தில் அவமானப்பட்டு நிற்கும் நிலையில், இருபெரும் திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் வாய்ப்பை காலம் அவருக்கு வழங்கி இருக்கின்றது.

வைகோவின் அரசியல் இப்போது துவங்குகிறது எனக் கணக்கு வைத்துக் கொள்ளலாம். இந்தத் தேர்தலுக்குப் பிறகும் அவரிடம் மிச்சமிருக்கும் தொண்டர்கள் இனி எக்காலத்திலும் விலைபோக மாட்டார்கள் என்று நம்பலாம்.

இந்த தொண்டர் பலத்தை வைத்து அவர் தமிழக அரசியலில் ஒரு புதிய பாதையைத் துவங்கிட வேண்டும் என்பதே தமிழுணர்வாளர்களின் எதிர்பார்ப்பு. சரியான திசையில் பயணிப்பாரா வைகோ?

"வீடுகட்டுவதற்கு வேண்டாம் என்று விலக்கிவைக்கப்பட்ட கல் மூலைக்கு தலைக்கல்லாயிற்று" என்கிறது விவிலியம்..(மத்தேயு சுவிசேஷம் 21)

பின்குறிப்பு : இந்தக் கட்டுரை ஆக்கத்திற்கு பெருமளவு துணைபுரிந்த என் இனிய நண்பரும், என் வாழ்வில் பகிர்தலுக்கும், புரிதலுக்குமாக இருக்கும் மிகச்சில சுமைதாங்கிகளில் ஒருவருமான கா.அன்புவேலுக்கு என் நன்றிகள்

செவ்வாய், 29 மார்ச், 2011

திசைமறந்து திரியும் பறவையொன்றின் புலம்பல்கள்...


அலங்காரங்களின்றி 
எழுத நினைத்தேன்
ஒரு கவிதையை
கண்ணீராலும் துக்கத்தாலும்...
வழியும் கண்ணீரில்
காகிதக் கப்பலாய் என் காதல்...


வரிகளைத் தேடும் 
வலிமையில்லை


பின்னொரு பொழுதில்


திசைமறந்து திரியும் 
பறவையொன்றின் புலம்பல்களைக்
கோர்த்து
எழுதத் துவங்கினேன்
ஒரு கவிதையை.
குஞ்சுகளைத் தொலைத்த 
குருவியொன்று
ஒப்பாரி வரிகளுக்கு
ஒப்பனை செய்ய முன்வந்தது...


எழுதி முடித்த கவிதையில்
மிதந்து கொண்டிருந்தன
கனவுகளின் சடலங்கள்

வியாழன், 24 மார்ச், 2011

கொஞ்சம் ரசிக்க... கவிதை, எதிர்க்கவிதை, எதிருக்கு எதிர்....


கவிதை எழுதி ரொம்பநாளாச்சேன்னு கை அரிச்சி ஒக்காந்திருந்தேன். இன்னிக்குன்னு பாத்து கூகிள் பஸ்ஸுல கவிதை மழையா பொழிஞ்சிட்டு இருந்தாரு அண்ணன் கேஆர்பி.செந்தில். அவரோட கவிதைய பாத்தவொடனே அப்பிடியே எதிர்க்கவிதை பொங்கிடுச்சி! எதிர்க்கவிதை போட்டுட்டு பொசுக்குன்னு வந்துரலாம்னு பாத்தா "என்ன கைய புடிச்சி இழுத்தியா"ன்னு இழுத்து வெச்சி வம்பளந்தாரு நண்பர் பலாபட்டறை சங்கர். மனுசன் பின்னி பெடலெடுத்துட்டாரு. கவிதை, எதிர்க்கவிதை, எதிருக்கு எதிர் அப்டீன்னு மூணுமணி நேரம் போனதே தெரியல

நண்பர்களும் நாங்க அடிச்ச கூத்தை ரசிக்கணும்ல! அதான் இந்தப் பதிவு

krpsenthil kumar - Buzz - Public

சொல்லிவிட்டு பெய்வதில்லை
எப்போதும் மழை ..
அது காதலைப்போல்
வரமாய் வரும் ..

இப்போதும் பெய்கிறது
பெருமழை அவ்வப்போது,
உடன் நனைய
நீதான் இல்லை...

உடைந்து அழும் கண்களின்
உப்பு
மழையில் கலந்து
கடலெல்லாம் உப்பாச்சு..

10 people liked this - subramanian rajaraman, Karthik L (LK), ४१ தோழி १४, எஸ். கே, ஓம் அருணையடி ஓம் and 5 others

nesamitran online - ஆஹா ...

இந்த நரகத்தில் நான் மட்டும் உழலுவதோன்னு கடலெல்லாம் உப்பாக்குறான்யா/கடலளவு அழுகுறான்யா கவிஞன் :)11:54 am

subramanian rajaraman -

எதிர்கவுஜ எழுதி நாளாச்சு... அதுனால

கண்ணு ரெண்டும் கொளமாச்சு
கடலெல்லாம் உப்பாச்சு
காஞ்சி போன நெலமெல்லாம்
கழனியா மாறிப்போச்சு

கொஞ்ச மழை பேஞ்சாலும்
கூதலில ஒன் நெனப்பு
கோரமழை பேயிறப்போ
கொமரி உன்னை காங்கலியேEdit12:42 pm

ஷங்கர் Shankar - எதிருக்கு எதிர்

வானம் பார்த்த பூமியிலே
பெஞ்ச மழை ஈரத்துல
விளைச்ச கீர காசக் கொண்டு
பெத்த புள்ளை பட்டணம் போயி
காதலிக்கான கண்ணீருல
கடலெல்லாம் உப்பாச்சுன்னு
கவித ஒன்னு எழுதினானே
பாடுபட்டு அனுப்பிவெச்ச
ஆத்தாளோட வேர்வை
கரிக்காத காரணமென்ன
ராஜாராமா கரிக்காத காரணமென்ன?12:56 pm

subramanian rajaraman -

ஆத்தாவோட வேர்வையெல்லாம்
ஆனிப்பொன் தங்கமய்யா
அவ மனசு பூக்கணும்னு
அச்சுவெல்ல மருமவன்னு
ஆறு கொளம் ஏரி கரை
அத்தனையும் வல போட்டு
ஆப்புட்டுது கன்னிமீனு
அசந்திருக்கும் நேரத்துல
வலையறுத்து பாஞ்சதென்ன
வாழ்க்கையெல்லாம் மாஞ்சதென்ன

வானமெல்லாம் பூத்திருக்க
வறண்ட நெஞ்சு இருட்டடிக்க
எசப்பாட்டு நாம்படிக்க
எதிர்ப்பாட்டு ஏதுக்கய்யா
சங்கரனே
எதிர்ப்பாட்டு ஏதுக்கய்யா?Edit1:09 pm (edited 1:10 pm)

ஷங்கர் Shankar -

Yes Sir
Yes Sir
Three Bags Full! :))1:11 pm

subramanian rajaraman -

 புரியலயே?Edit1:15 pm

ஷங்கர் Shankar -

இக்கட்டான நிலைமைல மாட்டிக்கிட்டா இப்படி சொல்லிட்டு எஸ்கேப்பாகறது என் ஃபார்முலா! :))))))1:16 pm

subramanian rajaraman -

அடடா.. அப்பிடியே கொஞ்சநேரம் கண்டினியூ பண்ணினா எடுத்து பதிவா போட்ரலாம்னு பாத்தேனே? :)Edit1:17 pm

ஷங்கர் Shankar -

பத்து மாசம்தான் சொமந்து
ரத்தம் வத்தப் பால் கொடுத்து
குத்தம் கொற இல்லாம
நான் வளத்த என் புள்ள

பத்து நாளு முன்னாடி
பளபளன்னு சேலகட்டி
பல்லக் காட்டி வந்தவ
பறிச்சிட்டுத்தான் போனாளே

சுள்ளி சொமந்த தலையிலே
கள்ளி வந்து போட்ட மண்ணு
கொள்ளி வரை மறக்காதே

என்ன செய்வேன் ராஜாராமா
யார் தடுப்பா ராஜாராமா1:36 pm

subramanian rajaraman -

பெத்ததொரு தாயாரு
சித்தமெல்லாம் கலங்கி நிக்க
குத்தமென்ன நாஞ்செஞ்சேன்
சத்தமாக சொல்லுமய்யா

வாழக் குருத்தாட்டம்
வளந்திருக்கும் பொண்ணொருத்தி
வாக்கப்பட்டு வந்து நின்னா
வாண்டாமுன்னா சொல்லப் போறா

செல்ல மவன் வாழ்க்கையில
செல்வமெல்லாம் நெறஞ்சிருக்க
குத்து வெளக்கு ஒண்ணை
கொண்டுவந்தா கோவமென்ன

மாமியாரும் மருமவளும்
மனம் நெறஞ்சி கதைபேச
கொணவதியா வரணுமின்னு
கொண்டிருந்தேன் கனவு ஒண்ணு

கனவுல வெதச்ச வெத
கருகித்தான் போகுமின்னு
கண்டேனா பாவிமவன்
கசங்கித்தான் போனேனய்யா
சங்கரரே
கசங்கித்தான் போனேனய்யாEdit1:50 pm

ஷங்கர் Shankar -

அடியாத்தீ என்று சொல்லி
நாலு வெரலு மடக்கி
மோவாயி தாங்க நாம் பாத்த
படமொன்னு டிவியிலே
வந்துச்சே குடும்ப கொடுமையெல்லாம்
சொல்லிச்சே,

மரம்போல நாங்கிடந்து
மந்திகத கண்ட நேரம்
புத்தியில ஏறலியே
புள்ள இப்படி பண்ணுமின்னு

அந்திசாயும் நேரம்தானே
என் புள்ளையும் வந்தானே
கண்ணீரத் தொடச்சி
சொன்னானே குத்திக் கொன்னானே

பக்கத்து வீட்டு கோவால நான்
கட்டிக்கிட்டா போதுமம்மா
மருமவ தொல்லை ஏது
நீ கவலப்படவேணாம்மா

என்ன செய்வேன் ராசா ராமா
சொல்லு என்ன செய்வேன் ராசாராமா?2:12 pm

subramanian rajaraman -

அய்யய்யோ சங்கரரே
அபச்சாரம் அபச்சாரம்
ஆம்பளையும் ஆம்பளையும்
அணைச்சிக்கிடும் குடித்தனமும்
அடுக்குமா சாமிக்கும்?

வாலைக் கொமரிப்பொண்ணு
வரிசைகட்டி நின்னிருக்க
வந்த பொண்ணு போனா என்ன
வந்திடுவா அடுத்தொருத்தி

வாழ்க்கையில காதலெல்லாம்
வாசல் தாண்டிப் போனாலும்
வசந்தங் கெட்டு போவாதின்னு
வந்திடுச்சி புத்தி அய்யா

செவத்த தோலு பொண்ணொருத்தி
சிங்காரிச்சி வந்துநின்னா
சிலுத்துக்கிட்டு காதலிச்சேன்
செருப்படியும் வாங்கி நின்னேன்

அத்தமவ ஒருத்தி அழகான கருப்பட்டி
சித்தமதிர வைக்கும் செலமாரி நின்னிருக்கா
கத்துங் குயிலோச கானம் சொக்கவைக்கும்
கருத்த பொண்ணுகூட வாழ்க்க இனிச்சிருக்கும்Edit2:30 pm (edited 2:31 pm)

ஷங்கர் Shankar -

தேலிக்கை சொல்லாலே
மனம் கேளிக்கை அடையும் நேரம்
துடுப்பாட்ட காணொளியை
காண மனம் விழையுதே

அன்பான கேஆர்பி
இனி கவித எழுதலேன்னு
முடிவேதும் எடுக்கும் முன்னே

இம்புட்டு நேரமா இழுத்திழுத்த
இந்தக் கத முடிச்சிக்கலாம்
நான் ஆவறேன் அப்பீட்டு
அதுவே நீங்களும் ரிப்பீட்டு!
யப்பா சாமி முடியல!
வெளிலதான் என்னா வெயிலு!
:)))))))))))2:32 pm (edited 2:33 pm)

subramanian rajaraman -

இழுத்துவெச்சி கதையளந்த
இனிய நண்பர் சங்கரரே
இப்போ போயி நாளைவாரும்
எசப்பாட்டு பாடிடலாம்

எசப்பாட்டு தான் கேக்க
இங்க வந்து காது தந்த
எல்லாரும் நலம்வாழ
எஞ்சாமி காத்திருக்கும்

திங்கள், 21 மார்ச், 2011

கச்சத்தீவும் நமதே! கீழைக்கடலும் நமதே!! #DefeatCongress


காங்கிரஸை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து எதிர்வரும் 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் காங்கிரஸை மண்ணைக்கவ்வச் செய்யவேண்டும் என்று சிலநாட்களுக்கு முன் நானும் அண்ணன் கேஆர்பி.செந்திலும் பதிவுகளை வெளியிட்டிருந்தோம். எதிர்பார்த்த அளவிற்கு தமிழ்ப்பதிவுலத்தினரின் ஒத்துழைப்பு கிட்டவில்லை என்றபோதிலும், எதிர்பாராத திசைகளிலிருந்து இணைய நண்பர்கள் மூலம் ஆதரவு குவிகின்றது.

நானும், அண்ணன் கேஆர்பியும் இது தொடர்பான மேலதிகச் செயற்பாடுகளையும், நடைமுறைத் தந்திரங்களையும் பற்றி தொடர்ந்து நண்பரும் பதிவருமான கும்மியுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு முன்னெடுப்பு செய்து வருகிறோம். நண்பர் கும்மி ஏற்கனவே தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பான இணையநண்பர்களின் முன்னெடுப்புகளை ஒருங்கிணைத்து வருகிறார். நேற்று மாலை தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலை முடித்துவிட்டு, மேற்கொண்டு, வரும் தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடிப்பது தொடர்பான கலந்துரையாடலை நடத்தலாம் என்று கூறியிருந்தார். அது தொடர்பானவற்றைப் பேசிமுடித்தபின் தியாகராயநகரில் , 'மே பதினேழு' இயக்கமும், தமிழக மக்கள் உரிமைக்கழகமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த "தமிழக மீனவர் படுகொலையும், மக்களை திசை திருப்பும் சதியும்" என்கிற கலந்துரையாடலில் கலந்துகொண்டோம்.

மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ் வெப்துனியா இணைய இதழ் ஆசிரியர் கா.அய்யநாதன், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் பா.புகழேந்தி(வழக்கறிஞர்), கச்சத்தீவு மீட்பு இயக்கம் சீதையின் மைந்தன், பாரம்பரிய மீனவர் சங்கம் மகேஷ் ஆகியோரின் உரைகளின் சாராம்சத்தைத் தொகுத்துத் தருவதன் முலம் இந்திய நடுவண் அரசு தமிழனிடம் காட்டிவரும் மாற்றாந்தாய் மனப்பான்மையும், ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் என்கிற காவாலிக்கட்சி தமிழக மண்ணுக்கும், மானவாழ்விற்கும், மனித உரிமைக்கும் செய்துவரும் பச்சைத் துரோகங்களையும் ஓரளவு எடுத்துக்காட்ட முடியும் என்று நம்புகிறேன்.

மேற்சொன்ன நண்பர்களின் உரைகளிலிருந்து :

எந்த ஒரு மக்கள்பிரச்சினையும் அதன் அளவில் தீவிரமடையத் துவங்கும்போது ஆளும் மத்திய அரசு தன் கைக்கூலிகளான உளவுத்துறையினர், எலும்புத்துண்டுகளுக்கு எச்சில் ஒழுக நிற்கின்ற, ஊடகதர்மம் பிறழ்ந்த பத்திரிகையாளர்கள், போலி முற்போக்கு அறிவுஜீவிகள் ஆகியோர் மூலம் மக்கள்பிரச்சினைகளில் புதிய கதையாடல்களை பரப்புரை செய்து போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்கின்றது. அதே போலத்தான் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து கொல்லப்படும் கொடுமைகள் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக மாறிப்போவதைப் பார்த்த நடுவணரசு, மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர், தடைசெய்யப்பட்ட இருமடி மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துகின்றனர், அதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிட்டு வருகின்றனர். "தமிழக மீனவர்கள் பேராசையால் எல்லை தாண்டுகின்றனர்" என்று கொஞ்சம்கூட மனச்சாட்சியும், கூச்ச உணர்வுமின்றி தமிழக முதல்வர் கருணாநிதி சில மாதங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது ஞாபகம் இருக்கும் ( லட்சக்கணக்கான கோடிகளுக்கெல்லாம் தனது குடும்பம் ஆசைப்படுவது 'ஞாயமான' ஆசையாகவும், அன்றாட பிழைப்புக்காக மீனவன் எல்லை தாண்டிச் செல்வது 'பேராசை'யாகவும் அவருக்குத் தோன்றுவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. கொட்டுவது எப்போதுமே தேளின் குணம்! கொட்டாது என்று எதிர்பார்ப்பது நமது மடமை!).

ஆனால் மீனவர்களை அவர்களின் வாழ்வாதாரங்களிலிருந்து அப்புறப்படுத்துவது என்பது பன்னாட்டு முதலாளிகளிடம் தேசத்தைக் காட்டிக் கொடுப்பதற்கான அயோக்கியத்தனத்திற்கு மீனவர்களிடமிருந்து எவ்வித இடைஞ்சலும் வராமல் இருப்பதற்கான ஒரு யுக்தியாகவே மைய அரசால் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனைப் புரிந்துகொள்ள முதலில் மீன்பிடித்தொழில் தொடர்பான சில தகவல்களை அறிந்துகொள்வது அவசியம்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் கடல்பரப்பில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அப்புறப்படுத்துவதற்காக நார்வே அரசு இரும்பாலான சிறப்பு வலைகளைப் பயன்படுத்தத் துவங்கியது. மீனவர்கள் பயன்படுத்தும் சாதாரண வலைகள் கடலின் பாதி ஆழத்தோடு நின்றுவிடும். ஆனால் இப்படிப்பட்ட இரும்புவலைகள் கடலின் அடியாழம்வரை இறங்கிச்சென்று கண்ணிவெடிகளை அப்புறப்படுத்த உதவின. அதே சமயம் அந்த வலைகளில் மிக அதிகமான அளவில் மீன்களும் பிடிபட்டன். இந்த கூடுதல் உபயோகத்தைக் கண்டுகொண்ட மேலைநாடுகள்  தங்களுக்கான கடலுணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இவ்வகையான வலைகளை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தன. அளவுக்கு அதிகமாக இவ்வகை வலைகளைப் பயன்படுத்தியதால் இன்று மத்தியத் தரைக்கடல் பிரதேசமே மீன்வளம் இழந்து காணப்படுகின்றது. எனவே மேலைநாடுகள் தங்களது மீன் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள புதிய கடல்பரப்புகளைத் தேர்வுசெய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின.

எனவே அவர்களின் பார்வை, வளம் மிகுந்த இந்தியக் கடற்பகுதியின் மீது திரும்பியது. இந்தியக் கடற்பகுதியில் குறிப்பாக மன்னார் வளைகுடா, பாக் நீரிணை பகுதிகளில் அவர்கள் மீன்பிடித் தொழிலை நடத்துவதற்கு பெரும் இடைஞ்சலாக உள்ளூர் மீனவர்களே இருப்பார்கள். அவர்களை மீன்பிடித்தொழிலில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால்...???

இந்தியாவில் இழுவைப்படகு மீன்பிடித்தொழில் :

மேலைநாடுகள் இருமடி வலைகளைப் பயன்படுத்த ஆரம்பித்த சிறிது காலம் கழித்து இந்தியக் கடல்பரப்பில் இருமடி வலைகளைப் பயன்படுத்துவதை இந்திய அரசே மீனவர்களுக்கு மானியங்களும் சலுகைகளும் கொடுத்து ஊக்குவிக்க ஆரம்பித்தது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் காமராசர் ஆட்சிக்காலத்தில் இருமடி வலைகளையும் ட்ராலர்கள் எனப்படும் இழுவைப்படகுகளையும் பயன்படுத்தி மீன்பிடித்தொழிலைச் செய்ய மிகப்பெரும் அளவில் ஊக்குவிக்கப்பட்டது. இந்திய கடலுணவுத்தேவை வருடத்திற்கு ஏறக்குறைய ஐந்தரை மில்லியன் டன்கள். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே அரசு மீனவர்களை மானியங்களும், சலுகைகளும் கொடுத்து ஊக்குவித்தது. ஆனாலும் மீன்வளம் குறைந்துவிடாமல் பாதுகாக்கும் பொருட்டு மீன்கள் குஞ்சு பொறிக்கும் பருவகாலத்தில் மட்டும் இருமடி வலைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தமிழக மீனவர்களில் ஏறத்தாழ முப்பதுசத மீனவர்கள் மட்டுமே இழுவைப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலை நடத்தி வருகின்றனர். ஏனையோர் பாரம்பரிய மீன்பிடிப் படகுகளையே பயன்படுத்துகின்றனர்.

காலங்காலமாக இந்திய மீனவர்கள் இலங்கையின், நெடுந்தீவு, தலைமன்னார், யாழ்ப்பாணம் வரையிலும் சென்று மீன்பிடிப்பதும், இலங்கை மீனவர்கள் தமிழக எல்லையில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதும் வழக்கமாகவே இருந்து வருகின்றது. இந்திய மீனவருக்குத் தேவையான மீன்கள் இலங்கைப் பகுதியிலும், இலங்கை மீனவருக்குத் தேவையான மீன்கள் இந்தியப்பகுதிகளிலும் பெருமளவு கிடைப்பதே இதற்குக் காரணம்.

புலிகளுடனான உள்நாட்டு யுத்தம் துவங்கியபின் சிங்களப்படைக்கு இயல்பாகவே தமிழக மீனவர்கள் மீதான வெறுப்பு அதிகரிக்கத் துவங்கியது.தமிழக மீனவர்கள் மீதான அவர்களின் தாக்குதலும் பெருமளவில் நிகழ ஆரம்பித்தது. தற்போது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுக்கொல்வதும், நடுக்கடலில் சித்திரவதை செய்வதும், அவர்களின் மீன்பிடிச் சாதனங்களை நாசப்படுத்துவதும் நின்றபாடில்லை.

கச்சத்தீவைக் கொடுத்த அயோக்கியத்தனம்:

இதற்கிடையில் கச்சத்தீவினை தாரைவார்த்துக் கொடுத்த அயோக்கியத்தனமும் சிங்களத்துக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. கச்சத்தீவானது பிரிட்டிஷார் காலத்திலும், அதற்கு முன்னும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான நிலமாக இருந்ததை பிரிட்டிஷ் ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இலங்கையில் ஆட்சி செய்த பண்டாரநாயகா குடும்பமும், இந்தியாவின் ஜவகர்லால்நேரு குடும்பமும் ஒன்றுக்கொன்று நட்பாக இருந்துவந்தன. நேருவுக்குப் பின்னரும் இந்த நட்பு தொடர்ந்து நீடித்து வந்தது. இந்திராவின் ஆட்சிக்காலத்தில், இலங்கையில் திருமதி.பண்டாரநாயக பிரதம மந்திரியாக இருந்துவந்தார். தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது செல்வாக்கு மக்கள்மத்தியில் குன்றியிருந்த நேரத்தில் இலங்கையில் பொதுத்தேர்தலுக்கான காலமும் வந்தது. மக்கள் மத்தியில் குறைந்துபோன தனது செல்வாக்கினை மீண்டும் உயர்த்திக்கொள்ள அவர் கச்சத்தீவினைப் பெற்று இலங்கையோடு இணைக்க முயற்சித்தார். அதற்குத்தான் ஏற்கனவே குடும்ப நண்பரான இந்திராகாந்தி இருக்கிறாரே?! சேதுபதி மன்னருக்கும், தமிழக மீனவர்களுக்கும் சொந்தமான கச்சத்தீவு இவர்கள் யாருடைய அனுமதியும் இன்றி சட்டத்துக்குப் புறம்பான வகையில் ஒரு (அ)சுபயோகத்தில் இலங்கைக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தாரைவார்க்கப்பட்டது. இது நடந்தது 28-06-1974-ல்.

இது தொடர்பான பாராளுமன்ற விவாதங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், இரா.செழியன், பி.கே.என் தேவர், முகமது ஷெரீஃப் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக மீனவர்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று தெரிந்தும்கூட இந்திய அரசாங்கம் தமிழகத்துக்கு இந்த இரண்டகமான வேலையைச் செய்தது. இதற்கு தோதாக ஏற்கனவே கடல் எல்லையைக் குறிக்கும் வரைபடங்கள் திருத்தப்பட்டு, கச்சத்தீவானது இலங்கைக்குச் சொந்தம் என்று காட்டுமாறு வரைபடங்கள் மாற்றப்பட்டன.

கச்சத்தீவினைத் தாரைவார்க்கும் ஒப்பந்தம் எட்டாவது ஷரத்தின்படி இந்த ஒப்பந்தமானது அரசியல்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றத்தின் இருவகைகளிலும் ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும். ஆனால் நாளது தேதிவரையிலுங்கூட இந்த ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படவோ, பாராளுமன்ற அவைகளில் ஒப்புதல் பெறப்படவோ இல்லை.

உதாரணமாக, நான் ஒருவரிடம் அவரது நிலத்தை கிரய ஒப்பந்தம் செய்து வாங்கிக் கொள்கிறேன் என்று கொள்வோம். அந்த ஒப்பந்தம் முறையாக குறிப்பிட்ட பதிவாளர்/சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டால்தானே அந்த கிரய ஒப்பந்தம் சட்டப்பூர்வமானதாக இருக்கும்? அப்படி பதிவு செய்யப்படவில்லையென்றால்...?

ஆக, ஒரு திருட்டுத்தனமான, அயோக்கியத்தனமான, தமிழக மக்களின் நலனை அழிக்கக்கூடிய ஒரு ஒப்பந்தம் இன்று வரையிலும் அரசியல் சாசனத்துக்கு விரோதமான முறையில் இருப்பதைக்கூட கண்டுகொள்ளாத காங்கிரஸ் அரசின் காவாலித்தனத்தை என்னவென்று சொல்வது?

காலங்காலமாய்த் தமிழர்களுக்கு துரோகம் செய்துவரும் காங்கிரஸ் :

இப்படி பரம்பரை பரம்பரையாகவே காங்கிரஸ் கட்சியானது தமிழர்களுக்கு துரோகம் செய்தே வருகின்றது. இன்றும் சிங்களக் கடற்படை தமிழக மீனவனை சுட்டுக் கொல்வதற்கு இந்திய அரசு உடந்தையாக இருப்பது அதன் கள்ளமௌனத்தின் மூலமே வெட்டவெளிச்சமாகிறது.

தாங்கவொண்ணாக் கொடுமைகள் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து அவர்களை மாற்றுத் தொழிலை நோக்கி திசைமாற்றிவிட்டால், ஏற்கனவே அகோரப் பசியில் இருக்கும் பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களைக் கூப்பிட்டு ஆசை, ஆசையாக பந்தி வைக்கலாமே?

எல்லை தாண்டும் பிரச்சினை :

ஐக்கியநாடுகள் சபையின் வழிகாட்டுதல்களின்படி கடல் எல்லையைத் தாண்டும் மீனவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பவும், ஒருவேளை சந்தேகம் எழுந்தால் அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் மட்டுமே செய்யவேண்டும். அதைமீறி அவர்களைக் காயப்படுத்துவதும், மரணம் ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றங்கள்.

தனது சொந்த நாட்டு மீனவன் செத்தால் என்ன, வாழ்ந்தால் என்ன என்ற ஆண்மைகெட்ட தேசத்துக்கு என்ன மயிர்பிடுங்கி இறையாண்மை இருக்க முடியும்? தன் பெண்டு, பிள்ளைகளைக் காப்பாற்ற முடியாத ஒரு குடும்பத்தலைவனை பேடி என்று சொல்லித்தான் எங்களுக்குப் பழக்கம்.

தம் மக்களை அநியாயமாகக் கொன்றுகுவிக்கக் கள்ளத்தனமாக துணைபோகும், கொன்று குவிக்கப்படுவதை விழிவிரிய வேடிக்கை பார்க்கும், தன் மக்களுக்குச் சொந்தமான சொத்தை திருட்டுத் தனமாக ஊரானுக்கு பட்டா போட்டுக்கொடுக்கும் காங்கிரச் கட்சியும், அரசும் நமக்குத் தேவைதானா?

தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும், உடலில் தமிழ்க்குருதி பாயும் ஒவ்வொருவனும் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தமிழ் இளைஞனும் குறைந்தது பத்து வாக்குகளையாவது காங்கிரஸுக்குப் போகாமல் தடுக்க வேண்டும்.
***************************************************

கூட்டம் முடிவடைந்த பின்னர் 'மே பதினேழு' இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தியுடன் நானும் கேஆர்பி அண்ணனும் எமது இணைய நண்பர்களின் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னது:

"தொகுதிக்கு பத்துபேர் இருந்தால்கூட போதும் தோழர். மிகத் தீவிரமான பிரச்சாரத்தின்மூலம் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸை மண்ணைக் கவ்வச் செய்யலாம். பத்து நூறாகவும், ஆயிரம், லட்சங்களாகவும் மாறும் நாள் தொலைவில் இல்லை. "நாம் தமிழர்" போன்ற இயக்கங்களுடனும் நாம் ஒருங்கிணைந்து செயல்படுவோம்"

என்றார் திருமுருகன்.

இன்னும் ஓரிரு நாட்களில் பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கம், தமிழ் தேசிய உணர்வுள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் இவர்களையும் சந்திக்க உள்ளோம். இணைய நண்பர்கள் மென்மேலும் களப்பணியாற்ற வரவேண்டுமாய் இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.

தொடர்புக்கு :

கேஆர்பி.செந்தில் - 8098858248
விந்தைமனிதன்( ராஜாராமன்) - 9500790916

" ஹே... பூதலமே! என் போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் அந்தப் போதினிலே"


ஞாயிறு, 20 மார்ச், 2011

காங்கிரசை தோற்கடிப்போம் #DefeatCongress in #TNae11...


எல்லா அரசியல் கட்சிகளுமே மக்கள்நலன், தேசநலன் போன்றவற்றைத் தலைமுழுகிவிட்டு ஆட்சி, அதிகாரம், பதவிசுகம், பணபேரம் என மூழ்கிக் கிடந்தாலும் காங்கிரஸ் கட்சிமட்டும் எப்போதும் ஒரு தனித்தன்மையுடனேயே வலம் வருகின்றது. கஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையை ஐ.நா சபை முன்னிலையில் பொதுவாக்கெடுப்பு நடத்திக் காப்போம் என்றுகூறி கபளீகரம் செய்தலில் இருந்து துவங்குகிறது சுதந்திரத்துக்குப் பிறகான காங்கிரஸின் லீலைகள். தேசநலன் என்ற பெயரில் வடகிழக்கு மாகாணங்களின் நலன்களை பலிகொடுத்ததன் மூலம் தனது கொடுங்கரங்களை தேசமெங்கும் நீட்டியது. ராணுவ ஒடுக்குமுறையின்கீழ் கட்டமைக்கப்படும் எந்த தேசியமும் தேசத்தினை அமைதியாக வாழவிட்டதாக சரித்திரமே இல்லை. நாடெங்கும் வன்முறை தலைவிரித்தாட மறைமுகமாகப் பங்காற்றி ராணுவத்திற்கென பெரும்பகுதி வளங்களைச் செலவழித்து உலகின் மிகப்பெரும் ஜனநாயக தேசத்தினை ஓட்டாண்டியாக மாற்றியதே ஐம்பதாண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் சாதனை.

தமிழகத்தை எடுத்துக்கொண்டாலும்கூட இதுவரையிலும் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளான காவேரி, முல்லைப்பெரியார், பாலாறு போன்றவற்றிலும், கச்சத்தீவு மற்றும் தேவிகுளம், பீர்மேடு பிரச்சினைகளிலும் எதிலுமே காங்கிரஸ் ஒரு சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப் போட்டதில்லை.

(சிறுகுறிப்பு : காமராஜர் ஆட்சிதான் அதைச் செய்தது; இதைச் செய்தது! என்று வாய்ஜாலக்குகளைக் காட்டுவது காங்கிரஸ்காரர்களின் ரத்தத்தில் ஊறிய விஷ(ய)ம்! ஆனால் காமராஜர் அந்த இயக்கத்தில் ஒரு விதிவிலக்கு. அப்படிப்பட்ட காமராஜரையே அவரது இறுதிக்காலத்தில் தலையால் தண்ணிகுடிக்க வைத்த மகானுபாவர்கள்தான் இந்த காங்கிரஸ்காரர்கள். தனது இறுதிக்காலத்தில் காமராஜர் இந்திய தேசிய காங்கிரஸ்காரனாக அல்ல; ஸ்தாபன காங்கிரஸ்காரனாகவே இறந்தார். இந்த விஷயங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் ஞாபகமறதியின் பாற்பட்ட அலாதி நம்பிக்கையில் மூடிமறைத்துவிட்டு 'காமராஜர்' ஆட்சி என்று பசப்புவார்கள்.)

இறுதியாக ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக ஒன்றரைலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவிக்க சிங்கள அரசுக்கு துணையாக மட்டுமன்றி, அந்த பச்சைப்படுகொலைகளில் மறைமுகப் பங்கெடுப்பாளர்களாகவும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது என்பதை சமீபத்தைய விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தெரியப்படுத்தியுள்ளன.

தமிழினத்தையே கருவறுத்த காங்கிரஸ் கட்சி, தமிழ்மீனவன் தனது கெண்டைக்கால் ரோமத்துக்குச் சமம் என்று அலட்சியமாய்ப் புன்னகைக்கும் காங்கிரஸ் கட்சி, இதோ மீண்டும் ஒருமுறை நமது ஞாபகமறதிமீது அதீத நம்பிக்கை வைத்து ஓட்டுகேட்டு வீதிகளில் பவனி வரத் தொடங்கிவிட்டது.

தலைப்பாகைப் பிரச்சினைக்கு பஞ்சாயத்து பேசாவிட்டால் சீக்கியன் விரட்டி விரட்டி அடிப்பான்! தெலுங்கானா உரிமைப்போராட்டத்தில் அயோக்கியத்தனம் செய்தால் தெலுங்கன் துரத்தித் துரத்தி வெட்டுவான் என்கிற பயம் இருந்ததால்தான் அந்தந்த மாநிலங்களிலெல்லாம் காங்கிரஸ் பூனை வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்தது. இங்கும் எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் இல்லாமல் துரத்தப்பட்டால்தான் தமிழனுக்கும் சூடி,சொரணை மிச்சமிருக்கிறது என்பது காங்கிரஸ் புத்திஜீவிகளின் மண்டையில் உறைக்கும்.

வரும் 2011 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் பாடம் கற்பிக்காவிட்டால் 'என்ன செய்தாலும் தமிழ்நாட்டானுக்கு உறைக்காது' என்கிற திமிர் ஊறிப்போய்விடும்.

ட்விட்டரில் ஏற்கனவே #defeatcongress என்று செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இணையத்தில் காங்கிரஸை எதிர்க்கும் அதேசமயம் வீதிகளிலும் இறங்குவோம்.

இணையநண்பர்கள் நேற்று மாலை தி.நகரில் ஒன்றுகூடி இது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டோம். அதுபற்றிய தெளிவான இடுகை ஒன்றை கேஆர்பி.செந்தில் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.நண்பர்களின் பங்களிப்பை இன்னும் எதிர்பார்க்கிறோம்

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு காங்கிரஸும் அவசியமற்றவை நண்பர்களே! விரட்டுவோம் காங்கிரஸை திருத்தணிக்கு அப்பால்!

வெள்ளி, 18 மார்ச், 2011

#தேர்தல் 2011 அப்டேட்ஸ்... கூகுள் பஸ்ஸும் நானும்...




கூகிள் வழங்கும் ப்ளாக்கர் சேவையை மிஞ்சிக் கொண்டிருக்கிறது அதன் பஸ் (Buzz) சேவை. கருத்துக்கள், எதிவினைகள், மீண்டும் எதிர்வினைகள், பதில்கள் என விநாடிக்கு விநாடி அதகளம் பண்ணிக் கொண்டிருக்கின்றது கூகிள் பஸ். தமிழகச் சட்டசபைத் தேர்தல் நேரத்தில் பஸ்ஸில் விவாதங்களும், கிண்டல்களும், கேலிகளும் அனல் பறக்கின்றன.

என் பங்கிற்கு நானும் பஸ்ஸில் துண்டு போட்டு வைத்திருக்கிறேன். தமிழகச் சட்டசபைத் தேர்தல் தொடர்பான எனது பஸ்களை இங்கு தொகுத்திருக்கிறேன். ரசிக்கலாம், திட்டலாம், லேசாய் புன்னகைத்து ஒதுக்கிச் செல்லலாம், முடிந்தால் கருத்துக்களையும் பகிரலாம்.
******************************************************


கடைய இழுத்து மூடிட்டு ஓடுனான்னா அவன் நமக்கு அடிமை. தொறந்தே வெச்சிருந்தான்னா நாம அவனுக்கு அடிமை. டேய்... எட்டிப்பார்றா... என்ன செய்றான்னு # அம்மா பத்தின பஸ் இல்லீங்கோவ் # தேர்தல்2011 அப்டேட்ஸ்
******************************************************

கலைஞ டி.வி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு நேரடி ஒளிபரப்புல முடிஞ்சவொடனே 'தூங்காநகரம்' வெளம்பரம் போட்டாங்க. "நாந்தாண்டி அல்வா பேசுறேன்"னு ஆரமிக்குது. ஏதாச்சும் உள்குத்து இருக்கா??? :))) #தேர்தல்2011 அப்டேட்ஸ்
******************************************************

இனிமே ஒடம்பொறப்புக்கெல்லாம் இதயதெய்வம் 'அம்மா'தான் போலருக்கு :))) #தேர்தல்2011 அப்டேட்ஸ்
******************************************************

ஸ்பெக்ட்ரம் பணம் போயஸ்தோட்டம் வரை பாய்ஞ்சிடுச்சோ? அரசியல்ல எதுவும் நடக்கலாம் #தேர்தல்2011 அப்டேட்ஸ்
******************************************************

சத்தியமூர்த்தி.பவனுக்குள்ள உள்ளாற வர்றவங்க மினிமம் நாலு பட்டாபட்டி டிராயராவது போட்ருக்கணும்னு புதுசா ரூல்ஸ் போட்ருக்காங்களாம். நியூசென்ஸ் கேஸ்ல மாட்டாம இருக்க முன்னெச்சரிக்கை :))) #தேர்தல்2011 அப்டேட்ஸ்
******************************************************

விநாசகாலே விபரீதபுத்தி # அதிமுக அணியில் மதிமுக இல்லை # தேர்தல்2011 அப்டேட்ஸ்
******************************************************

நேத்துதான் என்னோட சிநேகிதன் தங்கராசு சொல்லிட்டு இருந்தான்.

"அந்தம்மாவுக்கு எதிர்க்கட்சி தலைவரா இருந்து சொகுசு பழகிப்போச்சு. கொடநாட்டுல நாலுமாசம், சிறுதாவூருல மூணுமாசம், ஹைதராபாத்துல ரெண்டு மாசம், போயஸ் தோட்டத்துல டிங்கரிங், மராமத்துப் பணிகளை மேற்பார்வையிடுறதுல ரெண்டுமாசம். கோயிலு கொளம், பரிகாரப்பூசைன்னு ஷேத்ராடனத்துல ஒருமாசம் அப்டீன்னு ஜாலியா பொழுதுபோக்கிக்கிட்டு, அப்பப்போ போரடிச்சா அறிக்கைக்கப்பல் செஞ்சிவுட்டு வெளையாடுறது, தொண்டர்களுக்கு தரிசனம் கொடுக்கிறது, பச்சப்புள்ளைங்களுக்கு கிலுகிலுப்பையை புடுங்கி புடுங்கி மறுவடி கொடுத்து அழுவாச்சி காட்றமாதிரி கட்சிப் பதவிகளை வெச்சி வேடிக்கை காட்றதுன்னு குந்துனாப்புல இருக்குறத உட்டுப்புட்டு ஆட்சில ஒக்காந்து லொட்டான், லொசுக்கான், நண்டுசிண்டுக்கெல்லாம் மாஞ்சி மாஞ்சி பதில் சொல்லிக்கிட்டு எதுக்கு பிரஷரை ஏத்திக்கணும்னு இருப்பாங்க."

" மைசூரு திவானு பங்களாவுல வேல பாத்த பரம்பரைன்னா சும்மாவா. ஒரு கெத்து மெயிண்டெயின் பண்ணனும்லே"

தங்கராசு வாயிக்கு சக்கரையை (நோ..நோ... அந்த 'சக்கரை' இல்லீங்க) அள்ளிப் போடணும் # வைகோவுக்கு வைக்கோல் :))))

# தேர்தல்2011 அப்டேட்ஸ்
*****************************************************

தமிழகத்தின் இருபெரும் கட்சித் தலைவர்களும் அவங்கவங்க பூர்வீக ஊர்ல போட்டியிடுறாங்க... மு.க திருவாரூர்லயும், ஜெ. ஸ்ரீரங்கத்துலயும்.

இதுல மட்டும் ஒரே மாதிரி சிந்திக்கிறாங்கப்பா! # தேர்தல் 2011 அப்டேட்ஸ்
*****************************************************

மாமல்லபுரத்துல நடக்குதாம் பஞ்சாயத்து! பக்கத்தூட்டுக்காரனோட வாய்க்காவரப்பு பாகப்பிரிவினையைவிட, பங்காளி பாகப்பிரிவினை கஷ்டமா இருக்கும் போல! :))) # தேர்தல்2011 அப்டேட்ஸ்
*****************************************************

20 கெடச்சாலே வேட்டிய கிழிச்சுக்குவானுங்க. இப்போ 63 வேற. சத்தியமூர்த்தி பவனத்துக்குள்ள போற ஒவ்வொருத்தனும் ஆளாளுக்கு ஒண்ணுக்கு மூணு பட்டாபட்டிய மாட்டிட்டுப் போறதா கேள்வி. :))))) #தேர்தல்2011 அப்டேட்ஸ்
****************************************************

சாமி இல்லேன்னாரு பெரியாரு. ஒன்றே குலம் ஒருவனே தேவன்னாரு அண்ணா. கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு போனாரு எம்சியாரு. குருபலத்துக்காவ மஞ்சத்துன்ண்டு போட்டாரு கலைஞ்சரு. சாய்பாபா மோதிரத்துக்கு வாயப்பொளந்தாரு தொரமுருகன். கோயில்கோயிலா படியேறி பரிகாரம் பண்றாங்க பொர்ச்சித்தலேவி.# டார்வின் இருந்திருந்தா theory of evaluation ஐ ரிவர்ஸ்ல யோசிச்சிருப்பாரோ???
***************************************************

பேசாம காங்கிரஸ்காரனுங்க 90 சீட்டு வேணும்னு சொல்லியே புடிவாதமா இருந்திருக்கலாம். மிஞ்சி மிஞ்சி போனா என்ன பண்ணுவாங்க திமுகவுல? ரெண்டுநாளு ராஜினாமா நாடகம் நடத்திட்டு அப்பாலிக்கா 90 சீட்டுக்கு ஒத்துக்குறோம்னு சொல்லி இருப்பாங்க. காங்கிரஸ்காரங்களுக்கு அரசியலே தெரியலப்பா. :))))) ஸ்பெக்ட்ரம் மாதிரி அலாவுதீன் பூதத்தை கையில வெச்சிக்கிட்டு அல்ப்பை சல்ப்பையா 63 லயே நின்னிருக்கானுங்க :))))))) #தேர்தல்2011 அப்டேட்ஸ்
***************************************************

அறுவது சீட்டுக்கும், சிபிஐ வேட்டைநாயை கட்டுப்படுத்திக்கவும் அவுங்க ஒப்புத்துக்குவாங்க. உலக்கைக்கு வாழ்க்கைப்பட்டா இடிவாங்காம இருக்க முடியுமான்னு இவிங்களும் சமாதானம் ஆயிக்குவாங்க. கிய்யான் முய்யான்னு கத்திக்கிட்டு இருந்த தொண்டர்கள் கைகோர்த்து வேலை பார்க்க ஆரமிச்சிடுவாங்க. தலைவருங்கோ எல்லாம் கொள்கைக்கூட்டணி, கூட்டணிக்கொள்கை எல்லாத்தையையும் பத்தி வெக்கமில்லாம மொழங்க ஆரமிச்சிடுவாங்க. அய்யா வந்தாலுஞ்சரி, அம்மா வந்தாலுஞ்சரி... அடுத்த தேர்தல் வரைக்கும் தர்பார் வாசல் காவல்காரன்கூட சாமானியப்பட்டவனை ஏறெடுத்தும் பாக்கமாட்டான். ங்கொய்யால... ஜனநாயகமாம், மக்கள்நலனாம், மசிராப்போச்சி :((( #தேர்தல்2011 அப்டேட்ஸ்
***************************************************

என் கூகிள் பஸ் ஐடி : subramanian rajaraman


காங்கிரஸைத் தோற்கடிக்கத் தேர்தல் களத்தில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் ஒருங்கிணைந்து குழுவாகச் செயல்படலாம் என்று சென்ற பதிவில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதனை தனது தளத்திலும் வெளியிட்டிருந்தார் கேஆர்பி.செந்திலண்ணன். ஏகப்பட்டபேர் தன்னார்வலர்களாக வருவார்கள் என்று நினைத்தேன். ஒரு சில நண்பர்கள் கேஆர்பி செந்திலுக்கு தொலைபேசியில் பேசி தங்களது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று கூறியுள்ளனர்.

சமூக அக்கறையுடன் அரசியல் விமர்சனங்களை எழுதிவரும் நிறைய பதிவர்கள் தமது பங்களிப்பினை சிறிய அளவிலேனும் வெளிப்படுத்தலாமே? வெறுமனே இணையத்தில் மட்டும் 'பொங்கி' நானும் சமூக ஆர்வலன் தான் என்று காட்டிக் கொள்வதனால் ஆகப்போகும் பயனென்ன?

நண்பர் பதிவர் கும்மி இது சம்பந்தமான ஒழுங்கமைவுகளில் ஈடுபட்டு வருகிறார். நாளை 19.03.2011 சனியன்று ஆர்வலர்களின் சந்திப்பை ஒழுங்கு செய்வதாக உத்தேசம். விருப்பமுள்ளோர் கேஆர்பி செந்திலை 80988 58248 என்ற எண்ணிலும், என்னை 95007 90916 என்ற எண்ணிலும் அழைக்கலாம். நம்மால் முடிந்தவரை குறைந்தபட்சம் பத்து தெருக்களாவது சுற்றிவந்து தெருவுக்கு நாலு ஓட்டை காங்கிரஸுக்குப் போகாமல் தடுத்து நிறுத்தலாமல்லவா?

எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் - மக்கள்
தனை ஈன்ற தமிழ்நாடு தனக்கும் - என்னால்
திணை அளவு நலமேனும் கிடைக்குமாயின், நான்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்.
உன்னை ஒன்று வேண்டுகிறேன் - என்னால்
ஆவதொன்று உண்டாயின் அதற்கெந்தன்
உயிர் உண்டு!

- பாவேந்தர் பாரதிதாசன்



வியாழன், 17 மார்ச், 2011

1967 ஐ காங்கிரஸின் நினைவுகளில் தட்டியெழுப்புவோம்! தேர்தல் களத்தில் சூன்யத்தைப் பரிசளிப்போம்!!



காங்கிரசுக்கு இறுதிச்சடங்குகளை செய்யத் தேவையான சாமக்கிரியைகளைப் பற்றி நானும் கேஆர்பி அண்ணனும் பேசிக் கொண்டிருந்தோம். நம்மால் என்ன செய்ய இயலும் என்பதனைப் பற்றிய ஆலோசனைகளை பதிவர் கும்மி உடல்நலன் குன்றி இருந்தபோதிலும் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட நேரம் தொலைபேசி உரையாடலில் பகிர்ந்து கொண்டார். அண்ணன் குழலியுடனான தொலைபேசி உரையாடலில் அவர் திமுகவையும் சேர்த்துப் புதைக்க வேண்டும் என்ற கருத்துக்களை பகிர்ந்தார்.

இருக்கும் மிகச்சில நாட்களில் மிகச்சிறு அளவில் இருக்கும் தமிழ்(உணர்வுள்ள)  இணையஜீவிகள் - ப்ளாக், டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாசகர்கள்- (அதிலும் நேரடியாக தேர்தல் களப்பணிக்கு தயாராக இருப்பவர்கள் மிக மிகக் குறைவு) மிகப்பெரும் அஜெண்டாவை வைத்துக்கொண்டு செயல்படுவது என்பது நடைமுறைச் சாத்தியங்களற்ற ஒன்று என்பதை நண்பர் கும்மி தனது கருத்தாகச் சொன்னார். இவ்வாறு களப்பணியாற்றத் தயாராக இருக்கும் தமிழ் இணையவாசிகள் ஏனைய தமிழ்தேசிய இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து, அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படுவதே சரியானதாக இருக்கும் என்றும் அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

காங்கிரஸ் போட்டியிடும் 63-ல் நிச்சயம் தோற்றுப்போகும் என்ற தொகுதிகளில் கவனம் குவிப்பதை விடுத்து, காங்கிரஸ் கடுமையான போட்டியைக் கொடுக்கக்கூடிய தொகுதிகளிலும், ஏறத்தாழ ஜெயித்துவிடும் என்ற நிலை இருக்கும் தொகுதிகளிலும் கூர்மையான செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் சிறந்த பலனைத் தரும் என்பதும் கும்மி அவர்களின் ஆலோசனை.

இணையத்தமிழ் வாசகர்களும், ப்ளாக்,டிவிட்டர், ஃபேஸ்புக் முதலானவற்றில் பங்களிப்போருமாக இருப்பவர்களில் தேர்தல் பணிக்கு வர விரும்புவோருக்காய் பொதுவான ஒரு ஃபோரம் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்பது எனது கருத்து. அப்படி நமக்குள்ளேயே ஒரு ஒருங்கிணைப்பும், ஏனைய இயக்கங்களினுடன் ஒத்திசைந்து செயல்படுவதும் அவசியமானது என்று கருதுகிறேன்.

இந்தத் தேர்தல் பணிகளில் பிரதானமாய் காங்கிரஸுக்கு எதிராய் எடுத்துவைக்கப்பட வேண்டிய பிரச்சாரங்களாக நான் கருதுபவை:

1) மிக முக்கியமானதாக ஈழப்படுகொலைகள். ஒரு இனத்தையே கருவறுத்த குரூரத்தை துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், ஒளிப்பதிவுகளின் மூலமாகவும் கொண்டு செல்லுதல். வைகோ எழுதி இயக்கிய "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" என்ற ஆவணப்படத்தினை இதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பது பற்றி மதிமுக தோழர்கள் மூலமாக நான் முயல்கிறேன். அப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் எனில் அந்த ஆவணப்படத்தினை பல்லாயிரம் குறுவட்டுக்களில் படியெடுத்து விநியோகிக்க வேண்டும்

2) தமிழக மீனவர் படுகொலைகளை எவ்வித இடையூறுகளுமின்றி நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசிற்கு கால்தாங்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் அயோக்கியத்தனத்தைப் பற்றிய பிரச்சாரங்கள்

3) கேவலமான பொருளாதாரக் கொள்கைகளினால் மக்களின் வாழ்க்கைத் தரத்தினைச் சீரழித்து, விண்ணளந்த பெருமாளைப்போல சிகரத்தை எட்டி நிற்குமளவு விலைவாசி உயரக் காரணமாக இருந்த கையாலாகாத்தனங்கள், அற்பத்தனங்கள் பற்றிய பிரச்சாரம்

4) அரசுக்கிடங்குகளில் இருக்கும் தானியங்கள் அழுகிப்போனாலும் போகுமே ஒழிய, அடித்தட்டு மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கமாட்டோம் என்று மேட்டிமைத்திமிர்த்தனத்துடன் இறுமாந்திருந்துவிட்டு இன்று அதே அடித்தட்டு வர்க்கத்திடம் "போடுங்கம்மா ஓட்டு" என்று பல்லை இளித்து பசப்பும் பொறுக்கித்தனம் பற்றிய பிரச்சாரங்கள்

5) இதுவரையிலும், மீனவர் பிரச்சினையானாலும் சரி, காவேரிப் பிரச்சினையானாலும் சரி, முல்லைப்பெரியாறு பற்றிய பிரச்சினை, ஒகேனக்கல் பிரச்சினை என தமிழக நலன் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினைகளிலும் வாய்மூடி கள்ளமௌனம் சாதிக்கும் சாமர்த்தியம் பற்றிய பிரச்சாரம்

6) காமன்வெல்த் போட்டிகளில் துவங்கி ஆதர்ஷ் ஊழல், ஸ்பெக்ட்ரம் என்று நீளும் காங்கிரஸின் லட்சணமான முகத்தினை மக்களுக்கு விளக்கும் பிரச்சார யுக்திகள்

7) அந்தந்த பகுதி சார்ந்த உள்ளூர்ப் பிரச்சினைகளில் காங்கிரஸின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றிய விளக்கங்கள்.

இவற்றை மையப்படுத்தி ஏனைய தமிழுணர்வாளர்களுடன் இணைந்து தீவிரமாக வீதிப் பிரச்சாரங்களில் கலந்துகொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைபார்க்கும் இளைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆகியோரின் தேர்தல் பணிகளின் தீவிரத்தை ஏற்கனவே சிவகங்கைச் சீமான் சிதம்பரம் அனுபவித்திருக்கிறார்.

63-ல் மிகக்கடுமையாக வேலைசெய்ய வேண்டியதாக இருக்கும் 25 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து நான்கு அல்லது ஐந்து பேர்கொண்ட சிறு குழுக்களாக வீதிநாடகங்களை அரங்கேற்றுவது போன்ற வேலைகளைச் செய்யவேண்டும்.

அமைக்கப்படும் ஃபோரத்திற்கு தலைவர் என்று யாரும் இல்லாமல் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவை நமக்குநாமே அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறாக தொடங்கப்படும் சிறிய அளவிலான ஃபோரத்தைப்பற்றிய செய்திகளை இணையத்தில் பரவலாக அறியப்பட செய்யக்கூடிய வேலைகளையும் நாம் செய்தாக வேண்டும். சிறு பொறிதான் தீயாகப் பரவ ஆரம்பிக்கின்றது. தனித்தனியாய் தன்னார்வலர்களாய் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் தமிழுணர்வாளர்களை ஒருங்கிணைக்கும்போது அதன் ஆற்றல் மிகப்பெரிதாக இருக்குமென்று எண்ணுகிறேன். ஏற்கனவே #tnfisherman என்ற வார்த்தை டிவிட்டர் மூலம் ஏற்படுதிய அதிர்வலைகளை நாம் கவனிக்கவேண்டும்.

நண்பர் கும்மி இது தொடர்பாக "நாம் தமிழர்" இயக்கம், மற்றும் சில இயக்கங்களுடன் பேசுவதாகச் சொல்லி இருக்கிறார். நானும்  என் தொடர்பிலுள்ள நண்பர்களிடம் பேசுவதாக இருக்கிறேன். அண்ணன் கேஆர்பி செந்திலும் இது தொடர்பான வேலைகளில் தீவிரமாக இயங்குவார்.

காங்கிரஸுக்கு போடப்படாமல் தடுக்கப்படும் ஒவ்வொரு ஓட்டும் தமிழினத்தின் வேரில் பாய்ச்சப்படும் ஜீவ ஊற்று என்பதை கருத்தில் கொள்வோம்; களமிறங்குவோம்!

இதற்கென பொதுவான ஒரு வலைப்பூவோ அல்லது இணையதளமோ (சாத்தியப்படின்),  இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.

நாம் விதையை ஊன்றுவோம். இது விருட்சமாகுமா, இல்லை வீணாய்ப்போகுமா என்பதை நாளைய தமிழகம் முடிவுசெய்து கொள்ளட்டும்.

"காங்கிரசுக்கு ஒரு ஓட்டுக்கூட விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. அப்படியும் காங்கிரசுக்கு யாரேனும் ஓட்டுப்போடுவார்களேயானால் அது இந்த நாட்டுக்கும், திராவிட மக்களுக்கும் செய்கிற துரோகம் மட்டுமல்ல.. தன் தாய், தகப்பன், பெண்டு பிள்ளைகளுக்குச் செய்யும் பெருந்தீங்கு. இந்த நிலையில் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்று எப்படி தம்பி நான் கூறமுடியும் & நாடு நகைக்காதா? நல்லோர் கை கொட்டிச் சிரிக்கமாட்டார்களா?’’


& 55 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா சொன்ன வார்த்தைகள் இவை. - இன்றும் ஜீவித்திருக்கின்றன இவ்வார்த்தைகள்.

புதன், 16 மார்ச், 2011

இதோ ஜயத்ரதன்! அதோ சூரியன்! எடு காண்டீபத்தை!!



குருஷேத்திர யுத்தகளத்தின் பதிமூன்றாம் நாள். சின்னஞ்சிறு இளைஞனாக இருந்தாலும், பகைக்கூட்டத்தினிடையே சூறாவளியாய்ச் சுழன்று சக்கரவியூகக்கணக்குகளை சிதறச்செய்த அபிமன்யூவை சுற்றி வளைக்கின்றனர் கௌரவர் கூட்டத்தின் மகாவீரர்கள். தன்னந்தனியாய்க் களத்தில் சுழன்றடித்த அபிமன்யூவை பெருவீரர்கள் கூடிப் போர் செய்தபோதிலும் தோற்கடிக்க முடியாமல் போரியல் தர்மநெறிகளுக்குப் புறம்பான முறையில் அபிமன்யூ என்ற மகாவீரனைச் சிதைத்தனர் கௌரவர் படையின் தளகர்த்தர்கள்.

"என் மகன் அபிமன்யூவினை அதர்மமாகக் கொன்ற ஜயத்ரதனை நாளைய சூர்ய அஸ்தமனத்துக்குள் கொல்வேன்! இல்லையேல் தீயில் வீழ்ந்து மடிவேன்" என்று சபதம் செய்கிறான் அர்ஜுனன்.

விடிகின்றது பதினான்காம் நாள். ஜயத்ரதனைப் பாதுகாப்பாக வைத்து சுற்றி அரணமைத்து நிற்கின்றனர் துரோனாச்சாரியும், கர்ணனும், பூரிச்ரவசும், சகுனியும், சல்லியனும், விகர்ணனும்,சுதாயுவும், ஸகஸ்ரபாகுவும்,கிருபாச்சாரியாரும்,அஸ்வத்தாமனும், துரியோதனனும். கடும்போரில் ஒவ்வொருவராக வீழ்த்திவிட்டு முன்னேறியபோதிலும் அர்ஜுனனால் ஜயத்ரதனை நெருங்க முடியவில்லை. சூரியன் அஸ்தமிக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எப்படியும் இன்னும் கொஞ்சநேரம் தப்பியிருந்துவிட்டால் அர்ஜுனனிடமிருந்து உயிரும் பிழைக்கும், அர்ஜுனனும் இறந்துபடுவான் என்று காத்திருக்கிறான் ஜயத்ரதன்.

முக்கால நிகழ்வுகளும் தப்பாது உணரும் கண்ணனும் இதை உணர்ந்து தன் வேலையைத் துவங்குகிறான். தன் சக்கராயுதத்தை வீசியெறிய அது சூரியனை மறைத்துக் கொண்டு அஸ்தமனம் ஆனதுபோல தோற்றத்தை ஏற்படுத்துகிறது. சண்டமாருதமாய் சுற்றிச் சுழன்றும், கொண்ட சபதத்தை நிறைவேற்ற முடியாத அர்ஜுனன் தீக்குண்டத்தை வளர்க்க ஆணையிடுகிறான். "தீக்குளிக்கத் தயாரானான் பார்த்தன்" என்று கேட்டு ஆனந்தக்கடலில் முக்குளித்த கௌரவர்கள் பார்த்தன் அக்கினியில் இறங்குவதைக் காண ஆவலுடன் சுற்றி நிற்கத் தொடங்கினர்... வாயைப் பிளந்துகொண்டு ஜயத்ரதனும் வந்து எட்டிப் பார்த்துக்கொண்டு நின்றான்.

ஜயத்ரதன் எதிரே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கியது கண்ட கண்ணன் ஆதவனை மறைத்திருந்த சக்கராயுதத்தை திரும்பப் பெறுகிறான். எங்கும் பரவுகிறது அந்தியின் பொன்னொளி.

கண்ணன் சொல்கிறான்...

"அர்ஜுனா! இதோ ஜயத்ரதன்! அதோ சூரியன்!! அஸ்தமிக்க இன்னும் நேரம் இருக்கிறது. எடு காண்டீபத்தை! தொடு அம்பினை!!"

காண்டீபம் நிமிர்கிறது...

காண்டீபம் வளைகிறது...

காண்டீபம் துளைக்கிறது...

பறந்துபோய் விழுந்தது ஜயத்ரதனின் தலை!

நண்பர்களே! இது புராணம். நடந்ததாகக் கூறப்படுவது அல்லது நம்பப்படுவது.

இதே அபிமன்யூ, அர்ஜூனன், ஜயத்ரதன், கண்ணன், காண்டீபம் கதை நம் காலத்திலும் நிகழ்வதை உணர்கிறீர்களா?

முப்பது ஆண்டுகாலம் எத்தனை முக்கியும் முழங்கால் மயிரைக்கூட பிடுங்க முடியாமல் நுரைதள்ளிப்போய் கிடந்தது சிங்களம்.  மிகச்சிறு நிலப்பரப்பில் மிகச்சிறு படையை நடத்திக்கொண்டு, சாராயம் இல்லாத, விபச்சாரம் இல்லாத, தூய்மையான ஒரு நிர்வாகத்தை, இது தமிழனின் நிர்வாகமுறை என்கிற ஒரு பாரம்பரியத் தொடர்ச்சியை உலகத்துக்கே முன்னுதாரணமாய் நிகழ்த்திக் கொண்டிருந்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்களது போரியல் முறைகளில், யுத்தகளங்களில் ஊழிப்பெருவெள்ளப்பெருக்காய்க் காட்டிய வீரத் தியாகங்களில், விக்கித்துப்போய் கிடந்தன வல்லரசுநாடுகள். முப்படைகள் சேர்ந்து கடுந்தாகுதல் நடத்தினால் ஒழிய தகர்ப்பது கடினம் என்று அமேரிக்கப் படைவல்லுனர்கள் கருத்து தெரிவித்துச் சென்றிருந்த ஆனையிறவுக்கோட்டையை முப்பத்தைந்தே நாட்களில் வெறும் 1200 வீரர்களைக் கொண்டு வீழ்த்திக்காட்டிய வீரம் புலிகளுக்கே சொந்தமானது.

சிவில் நிர்வாகத்திலும், ராணுவ சாதனைகளிலும் தேர்ந்து தமக்கான ஒரு விடியலை கருக்கொண்டு இருந்த ஒரு சின்னஞ்சிறு தேசத்தை, இந்திய, சீன அரசுகள் தோள்கொடுக்க, மேற்கத்திய வல்லரசுநாடுகள் பின்னிருக்க, அபிமன்யூவாய் சிலிர்த்தெழுந்து கொண்டிருந்த அந்த தேசம் சிதைக்கப்பட்டது. லட்சக்கணக்கில் நரபலியெடுத்து, சிங்களத்துக்கு வால்பிடித்து, ஆயுத உதவியும், இன்னபிற தொழில்நுட்ப உதவிகளையும் கொடுத்து தனது ஜனநாயகக் கிரீடத்தில் ரத்தாபிஷேகம் நடத்திக்கொண்டது இந்திய வல்லரசு. "இந்தியாவுக்கான போரை நாங்கள் நடத்தினோம்" என்று கூச்சலிடுகிறான் மகிந்த ராஜபக்க்ஷே.

தனது தனிப்பட்ட வஞ்சம் தீர்ப்பதற்காய் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்களைக் காவுகொண்ட காங்கிரஸ் கட்சி இன்று தமிழகத் தேர்தல்களத்தில் ரத,கஜ, துரக பதாதிகளோடு களமிறங்கி இருக்கின்றது. தனித்து நின்றால் தமிழகத்திலிருந்தே துடைத்தெறியப்படுவோம் என்பதை நன்குணர்ந்து வியாபார பேரங்களை வெற்றிகரமாக ஸ்பெக்ட்ரம் உதவியுடன் முடித்து மிதப்பாக உலாவரத் தொடங்கிவிட்டது.

சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே தேசமக்களுக்கு துரோகம் செய்தே பழக்கப்பட்ட ஒரு கட்சி, தனது சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக்கித் துரத்திக் கொல்லும் ஒரு கட்சி ( லால்கர், தண்டகாரண்யா), நரித்தனமான தனது ஆட்சித் தந்திரங்களால் நாட்டுமக்களுக்கிடையே மதவாதத்தையும், சாதி, மொழிப்ப் பிரிவினைகளையும் செவ்வனே தூண்டிவிட்டுக் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் ஒரு கட்சி, மிச்சம் மீதி இருந்த கோவணத்தையும் அடமானம் வைத்ததுபோல கொஞ்சம்போல ஒட்டிக் கொண்டிருந்த இறையாண்மையையும் அணுசக்தி ஒப்பந்தம் மூலம் அமெரிக்க வல்லரசுக்கு பந்திவைத்த ஒரு கட்சி, "வீணில் அழுகிப்போய் கடலில் கொட்டினாலும் கொட்டுவோம்; பட்டினியில் கும்பி காய்ந்து சாகும் கஞ்சிக்கில்லா கபோதிகளுக்குத் தரமாட்டோம்" என்று திமிர்த்தனம் காட்டிய ஒரு கட்சி, தமிழனின் உயிருக்கு ஆபத்து வரும்போதெல்லாம் கள்ளமௌனம் சாதித்து சீக்கியனின் மயிருக்கு பங்கம் நேர்ந்தால் மட்டும் பொங்கியெழுந்த ஒரு கட்சி, கொஞ்சமும் வெட்கமில்லாமல் உத்தம முகமூடி அணிந்து ஓட்டுக் கேட்டு வருகின்றது.

இதோ கண்களுக்கெதிரில் காட்டப்பட்டிருக்கிறது நமக்கான இலக்கு...திருத்தணி தொடங்கி கிள்ளியூர் வரையிலான அறுபத்திமூன்று சட்டமன்றத் தொகுதிகள். காங்கிரஸ் கட்சியைக் கருவறுக்க, தமிழனின் பழிமுடிக்க களமாய் விரிந்து நீள்கிறது தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2011.

இணையத்தில் மட்டுமே பொழிந்து கொண்டிருக்கும் மாயமழையாய் இல்லாமல், குறைந்தபட்சம் ஆளுக்கு ஐந்து நாட்களாவது தமிழுணர்வு கொண்ட பதிவர்கள், இணைய வாசகர்கள் அனைவரும் நமக்கு அருகிலிருக்கும் அறுபத்திமூன்றில் ஒன்றைத் தேர்வுசெய்வோம். தெருத்தெருவாய் இறங்கி மக்களைச் சந்திப்போம்.குறைந்தபட்சம் ஆளுக்கு ஐம்பது ஓட்டுக்களையாவது காங்கிரஸுக்குப் போகாமல் தடுப்போம்.

என்னைப் பொறுத்தவரை நான், எங்கள் ஊரிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் அப்பகுதியில் உள்ள தமிழுணர்வாளர்கள், தமிழ்தேசியம் பேசும் அரசியல் இயக்கங்கள் ஆகியவற்றிடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்களோடு இணைந்து காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரத்தினை மேற்கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

தமிழ் என்ற இன உணர்வும், மனிதநேயமும் மிக்கோர் இந்தத் தருணத்தில் நமது இனத்துக்காய் செய்யவேண்டிய கடமையை செய்ய மறந்து விடாதீர்கள்.

ஈழம் என்ற அபிமன்யூவைச் சிதைத்த ஜயத்ரதன் காங்கிரஸ் இதோ அறுபத்துமூன்று தொகுதிகளில்!

ஓட்டுச்சீட்டுக்களாகவும், எதிர்ப்புப் பிரச்சாரங்களாகவும் நமது கரங்களில் காண்டீபம்!

வீழட்டும் காங்கிரஸ் தமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும்!

பின்குறிப்பு: மயிலாடுதுறை சட்டமன்றத்தொகுதிக்குச் செல்லும் அல்லது அங்கிருந்தே தேர்தல் பணிகளை ஆற்றிவரும் தோழர்கள் யாரேனும் என்னைத் தொடர்புகொண்டால் எனக்கு மிகவும் உபயோககரமாக இருக்கும்.

இணைப்பு : காங்கிரஸ் பற்றிய எனது முந்தைய பதிவு:      "தமிழகத்தில் மீளுயிர்க்கும் காங்கிரஸ் - ஒரு பைனாகுலர் பார்வை!"

திங்கள், 14 மார்ச், 2011

இந்தியாவா? 'இந்தி'யா வா?


'தமிழ்பிளாக்கன்' என்று ஒரு பதிவு எழுத ஆரம்பித்திருந்தேன். வழக்கம்போல முதல்பாரா எழுதி மூன்றுமாத காலம் ஆகின்றது. அப்படியே மூடிவைத்திருக்கிறேன். பெரும்பாலும் பின்னூட்டமிடும் பதிவர்கள் வெறுமனே மொய்வைக்கும் முறைக்காக எங்காவது இரண்டு வரியைப் படித்துவிட்டு அதை காப்பி&பேஸ்ட் செய்து கமெண்ட் எழுதிவிட்டு "ஆகா!சூப்பர்", "அருமை", "நல்லாருக்கு" என்பது போன்று டெம்ப்ளேட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர். மலேரியா ஜூரம் வந்தவரைப்போல ஒருநாளைக்கு ரெண்டு பதிவு எழுதி 'பிரபலன்' ஆகும் கனவில் துடிப்பவரும் பலருண்டு. மிகச்சில பதிவர்களின் வலைப்பக்கங்களைத்தவிர மற்ற வலைப்பதிவுகளில் பெரிய அளவு சீரியஸ் விவாதங்கள் நடைபெறுவது அரிதாகவே இருக்கின்றது. மாற்றாக தற்போது கூகிள் பஸ், ப்ளாக்கைவிட மிகச்சிறப்பான விவாதத்தளமாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் மாறி இருப்பதால் நிறைய ப்ளாக்கர்கள் தற்போது பஸ்ஸர்களாக மாறி வருகின்றனர். கூகிள் பஸ்ஸில் ஆழமான விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதில் புருஷோத்தமன் பொன்னுசாமி (குழலி அண்ணன்), சிவகுமார் மா, பலூன் மாமா(கல்வெட்டு) போன்றோரும், இன்னும் விவாதங்களில் சீரிய பங்கெடுப்பாளர்களாக கேவிஆர், மணிஜி, குசும்பன், ஜோசப் பால்ராஜ், கென், அய்யனார், ஜ்யோவ்ராம் சுந்தர், மணிஜி, யுவகிருஷ்ணா, அதிஷா போன்ற பல பழம்பெரும் பதிவர்களும் இருக்கின்றனர்.

சமீபத்தில் நான் படித்தவற்றுள் மிக ஆழமான புள்ளிகளை தொட்டுச் செல்வதாகவும் அடர்த்தியானதாகவும் நான் உணர்ந்த பஸ்ஸை இங்கு பகிர விரும்புகிறேன். மா.சிவகுமார் அவர்களின் "இந்தி தேசிய மொழியா? இந்தி கற்பது அவசியமா?" என்பது பற்றிய விவாதங்களை உள்ளடக்கிய இந்த பஸ் ஆழமான தகவல்கள் விரும்புவோருக்கு ஒரு தூண்டுபுள்ளியாக அமையும் என்று எண்ணுகிறேன்.
***********************************************************************

சிவகுமார் மா - Buzz - Public
தேர்தல் கூட்டணி பற்றிப் பேசும் சந்திப்பில், ராகுல் காந்தி இந்தியில் பேசியதால் கருணாநிதியின் மனம் புண்பட்டதாம்.

இதற்கும் 'தேசியக் கட்சியுடன் பேசப் போனால் இந்தியில் பேசாமல் எதில் பேசுவார்கள்' என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாமே!

(தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் ஊர் பெயர் எழுதியதற்கு இப்படித்தான் சமாதானம் சொன்னார்கள்).


 2 people publicly reshared this - அத்திவெட்டி ஜோதிபாரதி and Santhappan Sambandham
10 people liked this - subramanian rajaraman, Karthik J, Kathir கதிர், O.R.B Raja, அத்திவெட்டி ஜோதிபாரதி and 5 others

Akilan R - அவர் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் இவர் மனம் புண்பட்டிருக்காதோ..? இப்படித்தானே தமிழகத்தில் இந்தி ஒழிக்கிறேன் என்று இரண்டாவது மொழியாக கூட இந்தி படிக்க விடாமல் தமிழரை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட விட்டு பார்த்தவர்கள், ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கூட இல்லாமல் முதல் மொழியாக ஆக்கி பல ஆங்கில வழி கல்வி கூடங்களுக்கு அனுமதி அளித்து, இன்று தமிழ் எழுத பேச தெரிந்த இளைஞர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.Mar 10

சிவகுமார் மா - அகிலன்,

நீங்கள் இரண்டு முரணான கருத்துக்களைச் சொல்கிறீர்கள்.

1. இந்தி படிக்காததால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறோம்.
2. ஆங்கிலம் படித்ததால் தமிழ் பேச தெரிந்த இளைஞர்கள் அருகிப் போய் விட்டார்கள்.

எனக்குப் புரிந்த வரை (எனக்கு சரி எனப்படும்) திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கை:

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில மொழி ஆட்சி மொழியாக இருக்கும் (அந்த மாநிலத்தில் நடக்கும் மாநில மற்றும் மத்திய அரசு பணிகள் அனைத்திலும்).

வெளி உலகுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும்.

வேறு மாநிலத்துக்குப் போக விரும்புபவர்கள் அந்த மாநில மொழியைக் கற்றுக் கொண்டு போக வேண்டும். எந்த மொழிக்கும் முதலிடம், முன்னுரிமை கிடையாது.

இன்னொன்றையும் யோசித்துப் பாருங்கள்:

இன்று ஆங்கிலம் அல்லது இந்தி பேசத் தெரியாத தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மக்களவையிலோ, மாநிலங்களவையிலோ செயல்பட முடியாத நிலை இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் இருப்பதைப் போல உடனக்குடன் மொழி பெயர்க்கும் பணியாளர்கள் மூலம் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியிலும் பேசவும், அதை விரும்பிய மொழியில் கேட்கவும் ஏன் வசதி செய்யக் கூடாது.

15 மொழிகள் என்று வைத்துக் கொண்டால் கூட 200க்கும் மேற்பட்ட வகைகளில் மொழிமாற்றப் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். ஆயிரக்கணக்கான பேர் அந்தத் துறையில் ஈடுபட்டுத் தேர்ச்சி பெறுவார்கள். அதன் மூலம் இந்திய மொழிகளுக்கிடையே உறவாடலும், கருத்துப் பரிமாற்றமும் வளரும்.

எல்லா வேறுபாடுகளையும் (diversity) அழித்து ஒற்றை கலாச்சாரத்தை உருவாக்குவது என்றும் நடக்க முடியாத ஒன்று.Mar 10

Akilan R - நான் ஆங்கிலம் கற்றுக்கொள்வதை தவறாக சொல்லவில்லை. நீங்கள் சொல்லும் கூற்றுப்படி ஆங்கிலம் இல்லாமல் வெளிநாடுகளுக்கு, ஐ நா சபைக்கெல்லாம் செல்ல முடியாதுதான். நான் கேட்க வந்தது பிறகு ஏன் இந்திஐ மட்டும் ஒழிப்போம் என்றெல்லாம் பேசுகிறார்கள்? வெறும் ஓட்டுக்காக பேசும் பேச்சுதானே இது?

குண்டு சட்டிக்குள் என்று நான் சொன்னது இந்தியாவிற்குள். உதாரணமாக இன்று என் கல்வி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் இருந்து மாணவர்கள் படிக்கிறார்கள். வெவ்வேறு மாநிலத்தார் கூடி பேசும் நிலை வரும்போது அனைவரும் இந்தியில் பேசுகிறார்கள். தமிழன் மட்டும் பேந்த பேந்த முழிக்கிற நிலைமை உள்ளது. அவர்களை ஆங்கிலத்தில் பேச சொன்னால் அவர்கள் கேட்கிறார்கள்: "மற்றவர்களுடன் உரையாட ஆங்கிலம் படிக்கும் நீங்கள் இந்தியை மட்டும் ஒழிப்போம் என்று பேசுவது நியாயமா? ஏன் தேசிய மொழியில் பேசும் இந்தியர்களான எங்களை ஆங்கிலத்தில் பேச சொல்கிறீர்கள்?" இதற்கு நான் என்ன பதில் சொல்ல?Mar 10

சிவகுமார் மா - நீங்கள் சொல்லும் சூழல் இந்தியாவில் நிலவுவது வருத்தமான உண்மை. நானும் பல இடங்களில் இந்தக் கேள்வியைச் சந்தித்திருக்கிறேன்.

இந்தியா பல்வேறு தேசிய இனங்களின் தாயகம். இந்தியாவுக்கு ஒற்றை தேசிய மொழி இருக்க முடியாது.

இலங்கைக்கு இரண்டு தேசிய மொழிகள், மலேசியா/சிங்கப்பூரில் மூன்று (நான்கு?) தேசிய மொழிகள். அவற்றைப் போல இந்தியாவுக்கு குறைந்தது 16 தேசிய மொழிகள்.

'தேசிய மொழியில்' பேசுகிறோம் என்று இந்தியில் பேசுபவர்கள் சொன்னால், நாமும் அவர்கள் இருக்கும் சூழலில் தமிழில் பேசலாம் (தமிழும் இந்தியாவின் தேசிய மொழிதான்).

(கூட்டத்தில் இருக்கும் ஒருவருக்குப் புரியாத மொழியில் பேசுவது அநாகரீகம். அது இந்தி பேசும் மக்களிடம் அதிகமாக இருக்கிறது. )Mar 10

Akilan R - நீங்கள் நான் சொல்வதை தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன். அவர்கள் இந்திகாரர்கள் அல்ல. அவர்களுடைய தாய் மொழி எல்லாம் வெவ்வேறு. அவர்கள் கூட்டத்தில் உள்ள எல்லோருக்கும் புரிய வேண்டும் என்றுதான் இந்தியில் பேசுகிறார்கள். உதாரணமாக என் லாபிலேயே கன்னடரும் ஒரு பெங்காளியும்உள்ளனர். அவர்கள் இந்தியில்தான் பேசுவர். 16 மொழிகள் தேசிய மொழி என்றாலும் இந்திதான் இந்தியாவின் வழக்கு மொழி என்பதை நினைவு கூர்கிறேன்.

மற்றவருடன் உரையாட வேண்டும் என்று ஆங்கிலம் கற்றுகொல்வதை பற்றி கவலை படாதவர்கள் இந்தியை மட்டும் தடை செய்ய வேண்டும் என்று ஏன் பேச வேண்டும்?Mar 10

Akilan R - அவர்கள் இந்திகாரர்கள் என்றால் நான் உடனே 'நான் மட்டும் என் தாய்மொழியை ஏன் விட வேண்டும் நான் தமிழில்தான் பேசுவேன்' என்று அவர்களிடம் சொல்லியிருப்பேன். ஆனால் அவர்கள் வெவ்வேறு மொழியினத்தார். தத்தம் நண்பர்களுடன் அவர்களது தாய்மொழியில் பேசுபவர்கள். கூட்டத்தில்தான் (மற்றவர்க்கு புரிய வேண்டும் என்று ) தம் தாய் மொழியை விட்டு இந்தியாவின் வழக்கு மொழியான இந்தியில் பேசுகிறார்கள். அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்வதற்கு எனக்கே வெட்கமாக உள்ளது. :-( Mar 10

சிவகுமார் மா - 1. இந்தியாவில் இந்தி மொழி பேசும் பகுதிகள் எண்ணிக்கையில் முதலிடம் (பெரும்பான்மை இடம் கிடையாது.

2. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஓரிசா, மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்கள், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் அந்தந்த பகுதிக்கான தேசிய இனங்கள் பல நூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மொழிகள் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

3. இந்தி பேசும் பகுதிகளில் (குஜராத், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம்) - இந்தியின் ஆதிக்கத்தால் முக்கியமான மொழிகள் அழிந்து போய் விட்டன அல்லது அழியும் நிலையில் இருக்கின்றன.

4. தமிழ்நாட்டில் மையம் கொண்ட இந்தி எதிர்ப்பு நிகழ்ந்திரா விட்டால், இன்னும் சில நூற்றாண்டுகளில் அழிந்து போகும் திசையில் 2ல் சொன்ன தேசிய மொழிகள் அடி எடுத்து வைத்திருக்கும்.

5. இந்தியா என்பது 3ல் சொன்ன மைய நிலப்பகுதி மட்டும்தான், சூழ்ந்த தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு தேசிய இனங்கள் இந்தி பேசும் பகுதிகளின் colony என்று ஏற்றுக் கொண்டால்தான் இந்தி மொழியை வழக்கு மொழி என்று ஏற்றுக் கொள்ள முடியும்.

the authority of a thousand is not worth the humble reasoning of a single individual என்று

அறிவியலைப் பற்றி கலிலியோ சொன்னது போல, நமது நிலைப்பாட்டை தெளிவாக வைத்துக் கொண்டு எத்தனை பேர் கூட்டத்திலும், தனி ஒருவராக கருத்தைச் சொல்லலாம்.Mar 10

Akilan R - ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஆங்கிலம் மட்டும் பெரும்பான்மை மொழியா? அதை படிக்க ஒப்புக்கொள்வது ஏன்?
பெரும்பான்மை பார்த்து வருவதல்ல வழக்கு மொழி. எல்லோரும் சேர்ந்து ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதே அது.

எந்த மொழியை வழக்கு மொழியாக ஏற்றாலும்(தமிழ் உட்பட ) ஒரு சில மாநிலத்தார் அதனை தாய்மொழியாக கொண்டுள்ளனர் என்ற நிலை இருக்கத்தான் செய்யும். அதற்காக அவர்கள் நம்மை அடிமை படுத்த எண்ணுகிறார்கள் என்று சொல்ல முடியாது.Mar 10

சிவகுமார் மா - ஃபிரான்சில் ஆங்கில மொழியை ஒப்புக் கொள்வது இல்லை. ஃபிரெஞ்சு மொழிக்கு நெருக்கமான உறவுடன் இருக்கும் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தா விட்டால், ஃபிரெஞ்சு மொழி அழிந்து விடும் என்று உணர்வு.

ஒன்றுக்கொன்று நெருக்கமான உறவுடைய இந்திய மொழிகளில் ஒன்றை ஆதிக்கம் செலுத்த விட்டால், மற்ற மொழிகள் காலப்போக்கில் மறைந்து ஒழிந்து போகும்.

(அதனால் என்ன என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.)

மனிதரால் பேசப்படும் மொழி 'வெறும் தகவல் பரிமாற்ற கருவி' என்று சிலர் சொல்வது கிடையாது. ஒரே மொழியில் பேசுபவர்கள் தமக்குள் ஆழமான தொன்மையான கலாச்சார பரிமாற்றங்களைச் செய்து கொள்ள முடிகிறது. இன்னொரு மொழியில் அதே பரிமாற்றம் கிடைக்காது. ஒரு மொழியை இழப்பது அந்த கலாச்சார வளத்தை இழப்பதாகி விடும்.

75 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தேசிய மொழி பற்றி விவாதம் வந்த போது இன்றைக்கு இருக்கும் தகவல் தொழில் நுட்பங்கள் வளர்ந்திருக்கவில்லை. அதனால் மொழிமாற்ற சாத்தியங்கள் குறைவாக இருந்திருக்கலாம். அதனால், இணைப்பு மொழியாக (வெவ்வேறு மொழி பேசும் மக்கள் உறவாடும் இடத்தில் மட்டும்) ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டார்கள் இந்தி மொழி பேசாத மக்களின் தலைவர்கள்.

21ம் நூற்றாண்டில் அதுவும் தேவைப்படாது. ஒருவர் தாய்மொழியில் மட்டுமே கல்வி கற்று தேர்ச்சி பெற்று மற்றவர்களுடன் உறவாட, மொழி மாற்றக் கருவிகளைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் உள்ளன.

தொழில் புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் பொதுவான இணைப்பு மொழி, வழக்கு மொழி என்ற கேள்வி குறைவாகவே இருந்திருக்கும். மிகச்சிலரே மாற்று மொழி பேசும் பகுதிகளுக்கு பிரயாணம் செய்திருப்பார்கள். பயணத்துக்கு முன்பு அந்தப் பகுதி மொழியைக் கற்றுக் கொண்டு போயிருப்பார்கள்.

திராவிட அரசியல்வாதிகள் வியாபாரிகளாக உருவெடுக்காமல் இருந்திருந்தால், தொடர்ந்து சிந்தித்து காலத்துக்கு ஏற்ப மொழிக்கொள்கையை வளர்த்துச் சென்றிருப்பார்கள்.

அது நடக்காமல், (நீங்கள் சொல்வது போல) ஆங்கிலம் மூலை முடுக்கெல்லாம் ஊடுருவி நிற்பது நமது தோல்வி.Mar 10 (edited Mar 11)

டிபிசிடி TBCD - @அகிலன்

//ஏன் தேசிய மொழியில் பேசும் இந்தியர்களான எங்களை ஆங்கிலத்தில் பேச சொல்கிறீர்கள்?"//

இந்தியாவிற்கு இன்னமும் தேசிய மொழி என்று எதுவும் நிறுவப்படவில்லை. இந்தி நடுவண் அரசின் அதிகாரப்பூர்வ மொழி. அந்தந்த மாநிலங்களில் பேசப்படும் மொழியும், ஆங்கிலமும், அந்தந்த மாநிலங்களுக்கு உள்ளது.

இந்தி தேசிய மொழியாக மாற்றப்பட வேண்டும் என்று தான் இந்தியயை வலுக்கட்டாயமாக பள்ளிகளில் திணிக்க முற்பட்டனர்.

நீங்கள் கூறிய பிற மாநிலங்களில் அவர்கள் பேசிய மொழிகள் இன்று வழக்கொழிந்து அந்த இடத்தில் இந்தி மட்டுமே கோலோச்சுகின்றது.Mar 10


அரசு பாரி - @அகிலன்

1947க்கு முன்பு பெரும்பான்மை மக்களால் பேசப்பட்ட மொழி பெங்காலி... அது எப்படி பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாக இந்தி ஆனது!?Mar 10


அரசு பாரி - @அகிலன்

இரண்டு எடுத்துகாட்டுகளை பார்ப்போம்...

1. இந்தியை ஏற்றுக்கொண்டதால், அண்டை மாநிலமான கேரளாவில் 40சதவிகித மக்களுக்கு மலையாளம் பேச மட்டுமே தெரியும். எழுத தெரியாது.

2. இந்தியை ஏற்றுக்கொண்டதால் மராட்டிய மொழியே வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டை பொருத்தவரை இந்தி எதிர்ப்பு என்பது இந்தி திணிப்பை எதிர்த்து தான் இருந்தது... மற்றபடி தனிமனிதர்கள் தேவைப்பட்டால் கற்க எந்த தடையும் இல்லை.Mar 10


சிவகுமார் மா -

//இந்தியை ஏற்றுக்கொண்டதால் மராட்டிய மொழியே வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கிறது.//

அந்த வெறுப்புதான், சிவசேனா போன்ற கட்சிகளின் தீவிர அரசியலுக்குக் காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.Mar 10
அரசு பாரி - @அகிலன் பலர் நினைத்துக்கொண்டிருப்பது போல மொழி என்பது வெறும் தொடர்புக்கொள்ளும் கருவி அல்ல (communication medium) அதையும் தாண்டி பல உள்ளன.

1. அகிலன் என்கிற தனிமனிதன் வாழ்நாள் முழுவதும் லைப்பரரி ஆப் காங்கிரஸில் உட்கார்ந்து படித்தால் கூட அறிவு, சிந்திக்கும் திறன், கற்கும் திறன் போன்றவை உயர்ந்து விடாது. அறிவு, சிந்திக்கும் திறன், கற்றல் திறன் மூன்றும் தலைமுறை சுழற்சியோடு தொடர்புடையவை. ஒரு சமூகம் தலைமுறை சுழற்சியில் பெரும் அறிவை மொழியின் ஊடாக பொதிந்து வைத்துள்ளது.

2. ஒரு சமூகத்தின் தாய்மொழியை சிதைப்பதன் மூலம் அந்த சமூகத்தின் அறிவு, சிந்திக்கும் திறன், கற்றல் திறன் மூன்றையும் சிதைக்க முடியும் அல்லது பின்னோக்கி தள்ள முடியும்.Mar 10 (edited Mar 10)

அரசு பாரி - @மா.சி

//அந்த வெறுப்புதான், சிவசேனா போன்ற கட்சிகளின் தீவிர அரசியலுக்குக் காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.//

மராட்டிய மக்களின் உணர்வுகளை வைத்து சிவசேனா அரசியல் மட்டுமே செய்கிறது. மராட்டிய மொழி, வாழ்வாதாரம் போன்றவற்றில் சிவசேனா அரசியல் விளையாட்டு விளையாடுகிறது.Mar 10

Akilan R - @அரசு பாரி:

நீங்கள் கூறுவதை நான் நன்றாக அறிவேன். இங்கு தமிழில் உரையாடுவதற்கும், மேலும் என் நண்பர்களிடையேயும் நான் இருக்கும் அலுவலகம், குழுமங்கள் போன்றவற்றிலும் தமிழை நான் முன்னிறுத்தி போராடுவதற்கும் அதுவே காரணம். எனக்கும் மா.சி. அவர்களுக்கும் பொதுவாக இருந்த இந்த குணங்களே எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட காரணம்.

communication medium என்ற அளவில் நான் பேசியதற்கு காரணம் நான் பேசியது எல்லாம் ஆங்கிலத்தையும் இந்தியையும் பற்றியது என்பதால். அவை நமது தாய் மொழி அல்லவாகையால் நமக்கு அவை தொடர்பு கருவிகளே.Mar 10

Akilan R -

//மராட்டிய மக்களின் உணர்வுகளை வைத்து சிவசேனா அரசியல் மட்டுமே செய்கிறது. மராட்டிய மொழி, வாழ்வாதாரம் போன்றவற்றில் சிவசேனா அரசியல் விளையாட்டு விளையாடுகிறது//

அதுதான் தமிழகத்திலும் நடக்கிறது என்பதே நான் சொல்ல வந்தது.Mar 10

சிவகுமார் மா - @அரசு பாரி,

அகிலனின் கேள்வி, ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை வளர்த்து விட்டு இந்தியை மட்டும் எதிர்ப்பதன் போலி அரசியலைப் பற்றியது.

அது திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டுக்கு இழைத்த துரோகம் என்பது உண்மைதானே!Mar 10

அரசு பாரி - @அகிலன், @மா.சி

ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டு இந்தியை எதிர்க்க வேண்டியதேன்? இதை புரிந்துக்கொள்ள 1947 பிந்தைய அரசியலில் நடந்த தகிடுத்தோம்கள், சதிகளை புரிந்துக்கொள்ள வேண்டியிருகிறது.

நேரு, படேல் மட்டுமல்ல... அம்பேத்கர் உடன் பணியாற்றிய 5 பேரும் சமஸ்கிருதத்தை பின்னணியாக கொண்டவர்கள்... சமஸ்கிருதத்தை முன்மொழிவதன் மூலம் தங்களுடைய சமூகத்தை முன் நகர்த்தி மற்ற சமூகத்தை பின் தள்ள நடந்த சதி தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் நடந்த மொழி சார்ந்த குளறுபடிகள்.

சமஸ்கிருதத்தை முன்மொழிய நடந்த முயற்சி தோல்வியடைந்தபொழுது... சமஸ்கிருதத்தை அடிதளமாக கொண்ட இந்தியை முன்மொழிந்து தங்களுடைய சமூக இருப்பையும், அதிகாரத்தையும் தக்க வைக்க முயற்சித்தார்கள்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்திடன் குவியும் அதிகாரத்தை முதன் முதலில் அடையாளம் கண்டு எதிர்த்தவர்கள் பஞ்சாபிகளே! மொழி சார்நத போராட்டமாக அது அமையவில்லை... அது முழுக்க, முழுக்க பிராந்திய போராட்டமாக இருந்தது. இதனால் கிட்டதட்ட 20 லட்சம் பஞ்சாபிகள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமே இது மொழி சார்ந்த போராட்டமாக இருக்கிறது... மற்றபடி உள் ஆழ்ந்து பார்த்தால் சமஸ்கிருதத்தை அடிதளமாக கொண்ட சமூகம் முன்னோக்கியும்... மற்ற சமூகத்தை பின் தள்ளும் ஒரு ஆயுதமாக மொழியை பயன்படுத்தினார்கள் என்பது தான் உண்மை.

திராவிட இயக்க முன்னோடிகள் இதன் சிக்கலையெல்லாம் விரிவாக மக்கள் மன்றத்தில் வைக்கவில்லை (அண்ணா உட்பட) ... உணர்வு மட்டத்தில் இந்த பிரச்சினையை கையாண்டார்கள்.

பெரியார் போன்றவர்கள் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்ட காரணம் 18ம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஐரோப்பியர்கள் முன்னோக்கி சென்றுக்கொண்டிருந்த காரணத்தால்... ஆங்கிலத்தை முன்மொழிந்து... தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை பயன்படுத்தினால்.... தமிழ் சமூகத்திற்கு கூடுதல் வளர்ச்சி கிட்டும் என்று எண்ணியிருக்கலாம் Mar 10 (edited Mar 10)

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் -

 மாயாவதி உள்ளிட்ட இலட்சோபலட்ச மக்களின் தாய்மொழியும் இந்திதான் ;-) Mar 10 (edited Mar 10)

அரசு பாரி - @ரமாதாஸ்

உ.பி, பீகார் போன்ற மாநிலங்களின் இன்றைக்கு கிராம மக்கள் பேசுகிற மொழியும் மேட்டுகுடி இந்தியும் வேறுபடுகிறபொழுது... மிக அழுத்திருத்தமாக சொல்ல முடியும்... எல்லோரையும் இந்து என்று கழுத்தறுக்கிற இந்திய சட்டம் போல... "இந்தி" என்று உ.பி, பீகார் மக்களின் மொழியும் சிதைக்கப்பட்டடுள்ளது.

பல லட்சகணக்கான மக்களின் தாய்மொழி இந்தியே கிடையாது... "இந்தி" அவர்களின் தாய்மொழி என்று இந்திய (பார்ப்பன, பனியா) அதிகாரத்தால் திணிக்கப்பட்டுள்ளது.Mar 11 (edited Mar 11)

பிரியமுடன் பிரபு - Mm    Mar 11

Akilan R - இதற்கு மேல் இங்கு நான் பேசுவது நல்லதல்ல என்று படுகிறது. மொழி பற்றிய விவாதம் என்பது போய், திராவிட 'முன்னேற்ற' கட்சிகளின் போலி அரசியலின் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சு போடும் முகம் வெளிப்படுகிறது. ஒரு இனத்தையே வெறுப்பது அல்லது எதிர்ப்பது என்றுமே போலி, ஆதாய அரசியல்வாதியின் குணம் என்றார் நெல்சன் மண்டேலா. (இதை அவர் வெள்ளையர்களை தென் ஆப்ரிக்காவில் இருந்து துரத்த வேண்டும் என்று குரலிட்டவர்களை நோக்கி சொன்னார்.) இதுவே இங்கு என்னுடைய கடைசி பதிலீடு.Mar 11

அரசு பாரி - @அகிலன்

பல்வேறு இடங்களில் சுட்டிகாட்டியது... மீண்டும் நினைவு ஊட்ட வேண்டியுள்ளது... திராவிட இயக்க முன்னோடிகள் யாரும் குறிப்பிட்ட இனத்தை தாக்க வேண்டும், விரட்ட வேண்டும் என்று வலியுறுத்தியது கிடையாது. பெரியாரின் காலக்கட்டத்தில் அவ்வாறு செய்ய நினைத்திருத்தால்... அவருக்கிருந்த மக்களின் பலத்திற்கு முன்பு.. அச்செயல் ஒரு கட்டளையில் முடிந்திருக்கும். அதே போல அண்ணா காலத்திலும்!

ஒரு குறிப்பிட்ட இனத்தின் அதிகார வெறியையும், ஆதிக்க சிந்தனையும் சுட்டிக்காட்டும்பொழுது... உங்களை மாதிரியானவர்கள் போலி நடுநிலைமை வேடம் கட்டுவீர்கள்!

இங்கே ஆமாச்சு பேசியிருக்கிறார்...
இந்தியாவில் எத்தனை தேசிய இனங்கள் இருக்கிறது, அவர்களின் பண்பாட்டுடைமை இருக்கிறது.

ஆனால் open office இந்தியா பதிப்புக்கு Bharatiaya OO என்று பெயர் வைக்க யார் காரணம்?
Bharatiaya என்ற சொல் எங்கிருந்து வந்தது?

இந்தியாவில் இதுவரை நடந்துள்ள எத்தனை ஆராய்ச்சி பெயர்கள் சமஸ்கிருதம் அல்லாத பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நுண்ணரசியலை புரிந்துக்கொள்ள மறுத்து... இது போலிதனம், அது ஆதாயத்திற்காக செய்கிறார்கள்.. புறங்கையால் எதையும் தள்ளிவிட்டு போவது எளிது!Mar 11 (edited Mar 11)

Balloon MaMa - .

//மொழி பற்றிய விவாதம் என்பது போய், திராவிட 'முன்னேற்ற' கட்சிகளின் போலி அரசியலின் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சு போடும் முகம் வெளிப்படுகிறது. //

திராவிடம் என்பது ஆரியவாதத்திற்கு (சனாதன பார்ப்பன) எதிரான கலக அரசியல் குறியீடு.

இதை பெரியார் சரியாகப் பயன்படுத்தினார்.
வீரமணி என்பவர் திராவிடம் என்பது அவரின் கல்லூரி மற்றும் அறக்கட்டளையைக் காக்க என்ற அளவில் பயன்படுத்தி வருகிறார்.
கருணாநிதி அவரின் குடும்ப நன்மைக்காகப் பயண்படுத்தி வருகிறார்
ஜெயலலிதா , கேப்டன் காந்த் ...அது என்ன என்றே தெரியாமல் அப்படிப்பெயர் கொண்ட கட்சிக்குத் தலைமை தாங்குகிறார்கள்.


எனவே திராவிடம் என்பது என்ன என்று தெரியாமல் இந்தக்கால அரசியல் மொக்கைகளோடு இணைத்துப்பேச வேண்டாம்.

இந்தியாவில் இருந்தாலும் வடகிழக்கு மாநிலங்களில் என்ன நடக்கிரது என்பது கடைக்கோடி தமிழனுக்குத் தெரியாது. இந்தியா என்பது பல கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. அதை கிந்தி என்று தட்டையாகப் பார்த்து பேசமுடியாது.

மொழித்திணிப்பை எதிர்த்து வெற்றி பெற்றதால்தான் இன்று தமிழ் திரைப்பட உலகம் கோலிவுட்டைவிட சாதிக்கிறது. கிந்தியை ஏற்றுக்கொண்டிருந்தால் இங்கும் கான்கள்தான் ஆட்சி செய்திருப்பார்கள். இது ஒரு சின்ன உதாரணம்.


மொழி என்பது அடையாளம் மட்டுமல்ல வரலாறு. அதை இழக்கமுடியாது.
.Mar 11

ப்ரியன் / Vignesh Palaniswamy - Hindi yetrukondiruntal India muluthum kuthirai otti irukkalam , paavam tamilargal English ah yetrukondu ulgam yendra kundu satiyil kuthirai ooti kondirukkiraragal     Mar 11

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் - //உ.பி, பீகார் போன்ற மாநிலங்களின் இன்றைக்கு கிராம மக்கள் பேசுகிற மொழியும் மேட்டுகுடி இந்தியும் வேறுபடுகிறபொழுது..//

ஒரே மொழி அம்மொழியையே பொதுவாய் பேசும் பல்வேறு இனத்திற்கு இனம் - ராஜ்யத்திற்கு ராஜ்யம் வேறுபடுவது இயல்பான ஒன்று.

ஆற்றல் படைத்தோர் அச்சிறு சிறு தனித்தன்மைகளை கூட பொதுத்தன்மையென்ற பெயரால் நசுக்கத் தான் செய்கிறார்கள். கொங்குநாட்டிற்கு இருக்கும் தனித்தன்மையை தமிழ்நாடு நசுக்குகிறது. தமிழ்நாட்டிற்கு இருக்கும் தனித்தன்மையை இந்தியா நசுக்குகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் தனித்தன்மையை அமேரிக்கா போன்ற நாடுகள் நசுக்குகின்றன..

ஒருத்தன் ஒரு மொழிபேசுவோரெல்லாம் ஓரினம் என்று சொல்கிறான். வரலாறு அவன் சேர சோழ பாண்டிய இனங்களாக இருந்ததை வெளிப்படையாக தெரிவிக்கும் போதும். ஒருவன் அரசியல் சாசனத்தைக் காட்டி ஒரே நாடு ஒரெ இனம் என்று கூப்பாடு செய்கிறான் - அப்படி இணைத்த ஒரே இழை தூய்மையான ஆன்மீகம் ஒன்றைத்தவிர வேறில்லை என்பதை மறந்து. மற்றொருவன் உலகத்துக்கெல்லாம் நாட்டாமை.. உலக மக்கள் எல்லாரும் ஒன்று என்ற மேதாவித்தனத்தை சுட்டி சுரண்டிக் கொண்டிருக்கிறான். கம்யூனிஸ்ட் இன்டர்னேஷனல் அதைவிட பலே! ;-)

மொழியால் ஒரு இனத்தை தாராளமாய் ஏற்படுத்துங்கள். அதில் யார்மாட்டும் துவேஷம் இல்லாது செய்யுங்கள்.

மேட்டுக்குடின்னு நகரத்தில் இருப்போரை குறிப்பிடறீங்களா? கிராமங்களில்தான் அந்த வேறுபாடு ஜாஸ்தி.

பீகார் மாநில மைதிலி மொழி உள்ளிட்ட இன்ன பிற விவகாரங்களும் அறிவேன். ஆனாலும் மாயாவதி போன்ற கோடானு கோடி மக்களின் தாய் மொழியும் இந்திதான்!Mar 11 (edited Mar 11)

subramanian rajaraman -

மிகமிக பயனுள்ள அலசல். மா.சி அவர்களும், அகிலன், டி.பி.சி.டி, அரசு பாரி ஆகியோரும் இந்த விவாத்தை இன்னும் முன்னகர்த்திச் செல்ல வேண்டுகிறேன். என்னைப்போன்ற பலருக்கு மிகப் பயனுள்ளதாக அமையும்.EditMar 11

டிபிசிடி TBCD -

 //அப்படி இணைத்த ஒரே இழை தூய்மையான ஆன்மீகம் ஒன்றைத்தவிர வேறில்லை//

ஆன்மிகம் தானே இன்றளவிற்கும் பிரித்து வைத்து கொண்டியிருக்கின்றது..Mar 11

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் - @TBCD

அதனாலதான் நான் தூய்மையான ஆன்மீகம்னு சொன்னேன். அப்படி பட்டவங்க இதையெல்லாம் காதுலையே போட்டுக்க மாட்டாங்க. unlike me ;-)Mar 11

Balloon MaMa - .

தேசிய மொழி

இந்தியாவில் தேசிய மொழி (National Language. ..similar to national flag, national anthem, national animal ) என்ற ஒன்று கிடையாது. ஒன்றும் தெரியாத கிணற்றுத்தவளைகள் கண்டது கேட்டது என்று வாய்மொழியாக இந்த பொய்யைப் பரப்பி வருகின்றனர். :-((((

இது பற்றி பல இடங்களில் பேசியாகிவிட்டது
http://simulationpadaippugal.blogspot.com/2006/02/blog-post_22.html
http://tvpravi.blogspot.com/2007/04/hate-hindi-and.html

--

மாநில அரசாங்கம் நினைத்தால் நரிக்குறவர் மொழியைக்கூட அவர்கள் மாநிலத்திற்கு official language ஆக வைத்துக் கொள்ளலாம்.

ஹிந்தி "தேசிய மொழி" (National language) என்பது உண்மையல்ல.

THE CONSTITUTION OF INDIA
PART XVII
OFFICIAL LANGUAGE

(பி.கு:
CONSTITUTION OF INDIA வின் வேறு எந்தப் பிரிவிலும் தேசிய மொழி பற்றி இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.)

PART XVII
OFFICIAL LANGUAGE
CHAPTER I.—LANGUAGE OF THE UNION

CHAPTER II.—REGIONAL LANGUAGES

CHAPTER III.—LANGUAGE OF THE SUPREME COURT,
HIGH COURTS, ETC.

http://india.gov.in/
Home > Government > Constitution of India : English Version

.Mar 11

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் - @Balloon MaMa - true to a large extent but only in theory.

I applied for a current account with HDFC bank for our business.

Gave our Board Resolution Copy in Tamil & Director Seal in Tamil.

The assistant manager & local bank authority got stunned.

He was of the opinion that Bank authorities will reject it & asked things in English. I stuck to my decision.

I only said - never was a law enacted in this land of that kind, by default it is a practice to copy paste such things from previous instances that happened in English[1] or an inferiority attitude towards one's own language[2] or a pre-conceived opinion that expressing in English elevates one's status[3].

Today the account is going to get created without any issue only to the surprise of many banking authorities that such a thing is acceptable in their own Bank.

The same thing happened when we registered a Trust & provided the trust deed in Tamil. The sub-registrar of Pallavaram municipality was surprised that she has never met such a thing in her experience over the years, but that was allowed.

Isn't it unfortunate to say that this still happens after 30 years of Dravidian parties in rule that claims to have got back the lost glory?

English comfortably sits today in place where Dravidian parties accused Sanskrit or Hindi was/ would sitting/ sit with people's wish.

Most of them say its unusual and ask Why? I only say, there isn't any special reason whatsoever to do this. It is as usual as speaking to my mom, dad, brothers & sisters & I live in my land. [to be open, Even people in my own family finds its different ;-)] Check back the reason why are you not doing so [1] [2] [3] or [?] ?

We are equally smart not to send a parcel out of Tamilnadu covered or documented or labeled totally in Tamil, probably like a Japanese or French.

Not to mention, it was the Brahmin community that adopted English in its life, at the earliest stages of post East India Company, British India's history, when they took the opportunity of jobs offered under them on a large scale, qualifying themselves for it, which Justice party & others followed followed ;-)

I have reason to write all these in English though. ;-)Mar 11 (edited Mar 11)

Balloon MaMa - @ ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம்

//தூய்மையான ஆன்மீகம்னு //

1.ஆன்மீக‌ம் என்றால் என்ன?
2.அதன் உட்பிரிவுகளான "தூய்மையான ஆன்மீகமும்" , "தூய்மைஅற்ற ஆன்மீகமும்" எந்த தூய்மையில் வேறுபடுகிறது?

புரியல தயவு செய்து விளக்கவும். ( காப்பி ரைட் டிபிசிடி)
.Mar 11

Janakiraman n -

//இந்தியாவில் தேசிய மொழி (National Language. ..similar to national flag, national anthem, national animal ) என்ற ஒன்று கிடையாது. ஒன்றும் தெரியாத கிணற்றுத்தவளைகள் கண்டது கேட்டது என்று வாய்மொழியாக இந்த பொய்யைப் பரப்பி வருகின்றனர்//

அப்படியல்ல... The official language of the Union shall be
Hindi in Devanagari script. என்பது ஆர்டிகில் 343ல் கூறப்பட்டுள்ளது. இதன் படி, இந்திய ஒன்றியத்தின் அலுவலக ரீதியான மொழியாக ஹிந்தி பயன்படுத்தப்படவேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சொல்லும் விதி. இது ஒருவகையில் தேசிய மொழி என்று தான் புரிந்துகொள்ளவேண்டும்.

அதே போல, national flag, national anthem, national animal போன்றவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாதவை....Mar 11

டிபிசிடி TBCD - @சானகி இராமன் -

நடுவண் அரசுக்கு அலுவலக் மொழி இந்தி. தேசிய மொழி என்பது மாநில அரசுகளில் அலவல் மொழியாக ஆங்கிலமும், அந்த மாநில மொழியும் இருக்கு. அரசியல் சாசனத்தில் ஏற்றாமல் தேசிய மொழி இந்தி என்று நீங்களாக அறிவிக்க முடியாது. அதை அறிவிக்க எடுத்த முயற்சிகளை வங்காளம் ., தமிழகம் போன்ற மாநிலங்கள் எதிர்த்து, அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் மக்கள் 5 கோடி. 11 தேசிய மொழிகள் இருக்கு. இந்தியாவில் மக்கள் தொகை 100 கோடி...30 மொழிகள் கூட தேசிய மொழிகள் ஆக்கலாம்...ஆனால் ஆக்க மனசில்லை..அவர்களுக்கு இந்தி மட்டுமெ ஆகனும்..அதன் மூலம் சமுசுகிருதம். !Mar 11

Balloon MaMa - @ Janakiraman n

// இது ஒருவகையில் தேசிய மொழி என்று தான் புரிந்துகொள்ளவேண்டும்.//

இப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும் என்று நீங்கள் யாருக்குச் சொல்கிறீர்கள்? இந்திய அரசு சார்பாக எல்லா இந்தியக்குடிமகன்களுக்குமா? அல்லது எனக்கா?

அலுவல்மொழி என்பதும் தேசியமொழி என்பதும் ஒரே அர்த்தம் கொண்டது என்று நீங்கள் குஜராத் கோர்ட் ஜட்ஜ்ஜை எதிர்த்து வழக்குப்போடலாம்.

// Hindi is not national language: Gujarat HC
The Gujarat High Court has observed that there is nothing on record to suggest that any provision has been made or order issued declaring Hindi a national language of India.//

http://www.deccanherald.com/content/48899/hindi-not-national-language-gujarat.html

http://articles.timesofindia.indiatimes.com/2010-01-25/india/28148512_1_national-language-official-language-hindi

.


யானை என்ற விலங்கு அதுபாட்டுக்கு இருக்கிறது எப்போதும் யானையாக. குருடர்கள் அதை பானை என்றும், முறம் என்றும் ,உலக்கை என்றும் , தூண் என்றும் புரிந்துகொள்வதுபர்றி அதுக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்தாலும் அதற்கு எந்தக் குறையும் வரப்போவது இல்லை.

**

என்னளவில் "அலுவல் மொழி" என்பதும் "தேசிய மொழி" என்பதும் வேறு.
(நானும் ஹைகோர்ட் ஜட்ஜும் ஒருவகை குருடர்கள் என்று கொள்வோம்)

**

உங்களைப் பொறுத்தவரை "அலுவல் மொழி" என்று சொன்னாலும் அதை "தேசிய மொழி "என்றே புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் பாக்கியவான் Janakiraman n :-))

.Mar 11

Balloon MaMa - @ Janakiraman n

//அதே போல, national flag, national anthem, national animal போன்றவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாதவை...//


??? @$%&^$%*((^%&()(( ????

இதற்குப்பேசமால் இந்திதான் தேசியமொழி அதைச் சொல்லாத இந்திய கான்ஸ்டியூசன் சரியல்ல் என்று சொல்லிவிடலாம்.

இல்லாத ஒன்றைப் பாதுகாக்கச்சொல்லி ஏன் இந்திய அரசியல் சட்டம் இப்படி மெனக்கிடுகிறது?


http://india.gov.in/govt/documents/english/coi_part_full.pdf

51A. It shall be the duty of every citizen of India—
(a) to abide by the Constitution and respect its ideals and institutions, the National Flag and the National Anthem;

Appendix I
http://india.gov.in/govt/documents/english/coi_appendix.pdf

//integrity of India or bringing about cession of a part of the territory of India or secession of a part of the territory of India from the Union or causing insult to the Indian National Flag, the Indian National Anthem and this Constitution; and..//

97. Prevention of activities
//(b) directed towards disclaiming, questioning or disrupting the sovereignty and territorial integrity of India or bringing about cession of a part of the territory of India or secession of a part of the territory of India from the Union or causing insult to the Indian National Flag, the Indian National Anthem and this Constitution,//


.Mar 11

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் -

//1.ஆன்மீக‌ம் என்றால் என்ன?
2.அதன் உட்பிரிவுகளான "தூய்மையான ஆன்மீகமும்" , "தூய்மைஅற்ற ஆன்மீகமும்" எந்த தூய்மையில் வேறுபடுகிறது?//

for me both are same. I qualified ஆன்மீகம் with தூய்மை adjective for people who might have other opinions about it ;-)

i am not a guru of it. in search of it, so probably will let u know & explain if i could elevate myself to one of such kind (with or without the assistance of a guru) & if i find that u are in real search of it. meantime if interested u too search and let me know back if you attain it & i qualify for it in ur opinion.Mar 11 (edited Mar 11)

டிபிசிடி TBCD - @மாசி -

சில பின்னுரைகள் ஈசல் (spam) என்று குறிக்கப்பட்டு மறைந்துள்ளது போல..பாருங்க !Mar 11

Balloon MaMa - @ Vigneshwari M -

//அரசியல் சாசனம் சொல்லவில்லை.. ஒத்துக்கொள்கிறேன்.. ஆனா மெஜாரிட்டி கிட்ட நாம தோற்கிறோமா இல்லயா?? எந்த மொழியும் மற்றொரு மொழியை விட உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை.. ஆனால் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே அறிந்த காரணத்தினால் உலகம் முழுக்க சுற்றி புகழடைந்த தமிழனால் இந்தியாவின் வட பக்கம் செல்ல முடியவில்லையே!! விதிவிலக்குகளை பற்றி நான் பேசவில்லை!!//

யார் சொன்னார்கள் நாம் தோற்கிறோம் என்று ???

மொழியைக் காத்த ஒரே காரணத்தால்தான் இன்றும் கோலிவுட் உலகள‌வில் பேசப்படுகிறது. இல்லை என்றால் நீங்களும் நானும் எதோ ஒரு பிச்சைக்கார கான்களுக்கு மட்டுமே இரசிகராக இருப்போம். இணையத்தில் சிறப்பாக இருக்கவும் இதே காரணம்.

.

நீங்கள் செய்ய வேண்டியது இந்தியா முழுமைக்கும் இரயில் பஸ் என்று டூர் ஒரு 6 மாத காலத்திற்கு. இந்தியால் சுயமிழந்த மக்களையும் கலாச்சாரங்களையும் நேரில் அறியமுடியும். அதுவரை தமிழகத்தில் தமிழ் செய்யும் சிறப்பு தெரியாது உங்களுக்கு.

.Mar 11 (edited Mar 11)

Balloon MaMa - .

மொழி என்ற அளவில் எதுவும் எங்கேயும் இருக்கட்டும். ஆனால் இதுதான் எல்லாருக்கும் என்று தட்டையாக இந்தியாவில் பேசினால் அவர்கள் இந்திய கலாச்சார கூட்டு அடையாளத்தை உணராதவர்களே.

உங்கள் அம்மாவும் நல்லவர் என் அம்மாவைப் போலவே என்றுதான் என்னால் சொல்லமுடியுமே தவிர. உங்கள் அம்மாதான் சிறந்தவர் அவரே எல்லோரையும்விட உயர்வானவர் பொதுவானவர் என்று சொல்லமுடியாது ஏன் என்றால் எனக்கென்று அம்மா இருக்கிறார்.

அடையாளமற்ற அனாதைகள் வேண்டுமானால் கிந்திதான் எனது அடையாளம் என்று தஞ்சம் புகலாம்.

.Mar 11

குடுகுடுப்பை kudukuduppai -

//மொழியைக் காத்த ஒரே காரணத்தால்தான் இன்றும் கோலிவுட் உலகள‌வில் பேசப்படுகிறது. இல்லை என்றால் நீங்களும் நானும் எதோ ஒரு பிச்சைக்காரகான்களுக்கு மட்டுமே இரசிகராக இருப்போம். இணையத்தில் சிறப்பாக இருக்கவும் இதே காரணம்.

.

நீங்கள் செய்ய வேண்டியது இந்தியா முழுமைக்கும் இரயில் பஸ் என்று டூர் ஒரு 6 மத காலத்திற்கு. இந்தியால் சுயமிழந்த மக்களையும் கலாச்சாரங்களையும் நேரில் அறியமுடியும். அதுவரை தமிழகத்தில் தமிழ் செய்யும் சிறப்பு தெரியாது உங்களுக்கு.//

அப்படியே வழிமொழிகிறேன்.Mar 11

குடுகுடுப்பை kudukuduppai -

என்னுடைய பகடியான பதிவொன்று இதையொட்டி
http://varungalamuthalvar.blogspot.com/2008/11/blog-post_10.htmlMar 11

Balloon MaMa - .@ Vigneshwari M -

// என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் ஹிந்தியில் பேசும் பொழுது நான் மட்டும் ஒன்றும் புரியாமல் என் நண்பர்களிடம் " What does that mean ?" என்று திரும்ப திரும்ப கேட்கும் நிலை எதனால் வந்தது???//


என்ன செய்யலாம் சொல்லுங்கள். என்னைச் சுற்றி உள்ளவர்கள் நரிக்குறவர்மொழில் பேசுகிறார்கள். ஒரு பெருங்கூட்டமே ஹீப்ரு மொழியில் பேசுகிறார்கள் இதை எல்லாம் படிக்கவிடாமல் என்னை யார் செய்தார்கள்?

உங்களுக்கு தேவை என்றால் படித்துக் கொள்ளுங்கள். அதற்காக அரசாங்க வரிப்பணத்தில் வாடிப்பட்டி கோவிந்துக்கும் இந்தி சொலித்தந்து அவன் என்ன மத்தியப்பிரதேசத்தில் மாங்காயா விற்கப்போகிறான்.

பிறக்கும்போது எனக்கு கோபால் , ஜாவா கூடததான் தெரியாது பிழைப்பிற்காக கற்றுக்கொண்டேன். இதற்கும் கலைஞர்தான் காரணமா?
.Mar 11

அரசு பாரி - @விக்னேஸ்வரி

உங்களை போன்ற தனிமனிதர்கள் சில ஆயிரம் பேரின் வட இந்தியர்களின் உடன் தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால் 6 கோடி தமிழர்கள் இந்தி படிக்க வேண்டும் என்று கோருவது நியாயமா?

பழைய பதிவு ஒன்று
ஜப்பானிய மொழி கற்றுதராத... திராவிட ஆட்சியாளர்கள் ஓழிக!
http://pktpariarasu.blogspot.com/2007/08/blog-post_01.htmlMar 11 (edited Mar 11)

டிபிசிடி TBCD -

//பிறக்கும்போது எனக்கு கோபால் , ஜாவா கூடததான் தெரியாது பிழைப்பிற்காக கற்றுக்கொண்டேன். இதற்கும் கலைஞர்தான் காரணமா?// :-))))))Mar 11

குடுகுடுப்பை kudukuduppai - Vigneshwari M -

//ஒரு தலைமுறைக்கே ஹிந்தி என்ற மொழியை அறியக்கூட விடாமல் செய்தது தான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றியா?? சொல்லுங்கள்//

இந்தியை தேவையானவர்கள் கற்றுக்கொள்ளட்டும். மறைமுகமாக இந்தி எதிர்ப்பு , தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடத்தை காப்பாற்றியிருக்கிறது. வட இந்திய மொழிகளை இந்தி அழித்துவிட்டது போகப்போக தெரியும்.Mar 11

Balloon MaMa - @ Vigneshwari M -

 //ஒரு தலைமுறைக்கே ஹிந்தி என்ற மொழியை அறியக்கூட விடாமல் செய்தது தான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றியா?? சொல்லுங்கள்//

ஹலோ ... தமிழைக் காக்கத்தான் போராட்டம். அதனால் தமிழ் வளர்ந்துள்ளது.
தமிழ் நாட்டில் உள்ள எத்தனை பேருக்கு நரிக்குறவர் மொழி தெரியும்? உங்கள் மண்ணில் உங்களோடு வாழும் இவர்களின் மொழிதெரியாமல் போனதற்காக என்றாவது வெட்கப்படுள்ளீர்களா?

உங்கள் ஆபிசில் எல்லாம் கிந்தி பேசுகிரார்கள் என்றால் , உங்கள் முதலாளி அவர்காசில் எல்லாருக்கும் கிந்தி கற்றுக்கொடுக்கட்டும். எங்கள் ஆபிசில் ஜப்பான்காரர் வருமுன் சிலபாடங்களைச் சொல்லித்தருவார்கள்.

இதையும் கருணாநிதிதான் செய்ய வேண்டுமா?

.Mar 11

குடுகுடுப்பை kudukuduppai -

ஆங்கிலம், தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் விரைவில் அழித்துவிடும் என்பதும் உண்மை.Mar 11

Vigneshwari M -

தமிழக அரசாங்கங்களின் தமிழ் பற்றினால் தான் தமிழ் வழியில் படிக்கும் பள்ளிகள் மிக நல்ல முறையில் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன!! only now the government has started to give preference to the ppl who studied in Tamil medium..
Can anybody tell me that how many of your children are studying in Tamil medium schools??Mar 11

குடுகுடுப்பை kudukuduppai -

தமிழ்வழிக்கல்வி முற்றிலும் செயல்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது, காரணம், ஜெர்மனோ, ஜப்பானோ, சீனனோ கண்டுபிடிப்புகள், ஆராய்சிக்கட்டுரைகள் வைத்திருக்கிறான், காலனி ஆதிக்க நாடான நாம் ஆங்கிலக்கூலிகள், எனவே ஆங்கில மீடியம் வருவது தவிர்க்கமுடியாது, இது அனைத்து இந்தியாவிற்கும் பொருந்தும். தமிழை ஒரு மொழியாகவும், வரலாறு , அன்றாட செய்திகள் படிக்கவும் அனைத்து பள்ளிகளிலும் சேர்த்தல் அவசியம். ஆங்கில மீடிய மாணவனுக்கும் வரலாறு தமிழில் போதிக்கப்படவேண்டும்.இதன் மூலம் தமிழின் பயன்பாடு புரியும்.Mar 11 (edited Mar 11)

Balloon MaMa - .

உங்களுக்கு உங்கள் தாய்மொழியில் காதல் இருந்தால் தமிழ் தெரிந்ததற்காக பெருமைப்பட வேண்டுமே தவிர , தனக்கென சொந்த வரிவடிவம்கூட இல்லாத ஒரு மொழி தெரியாமல்போனதற்கு வெட்கப்படக்கூடாது. உலக அளவில் பல்லாயிரம் மொழிகள் உள்ளன. எத்தனை மொழிக்கு வெட்கப்படுவீர்கள்?
.Mar 11

சிவகுமார் மா -

இங்கு பேசிய அகிலன் மற்றும் பேசும் ஸ்ரீராமதாஸ் தமிழ் பயன்பாட்டுக்காக பல் வேறு தளங்களில் போராளிகளாக செயல்படுவதை நான் அறிவேன். ராமதாஸ் வங்கிக் கணக்குத் தொடங்க சாதித்ததை (மேலே அவர் சொல்லியிருப்பது) தமிழ்நாட்டில் வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

விக்னேஷ்வரியும் தமிழ் மொழிப் பற்றுடன் பேசுகிறார். (அவரது கருத்துக்கள் spamல் போய் விடுகின்றன. Not Spam சொன்ன பிறகும் அதே சிக்கல்)

எழுப்பப்படுபவை இரண்டு கேள்விகள்:
1. இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர பிற மக்களால் இந்தி புழக்க மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், நாமும் ஏன் இந்தி கற்றுக் கொண்டு இந்திய அரசியலிலும், வணிகத் துறையிலும் செயல்படும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது?

2. இந்தியை முழு வெறுப்போடு அகற்றிய திராவிட இயக்கங்கள், தமிழை வளர்த்து, தமிழுக்கான இடம் ஏற்படுத்தாமல் அந்த இடத்தில் ஆங்கிலத்தை ஆதிக்கம் செலுத்த விட்டது போலித்தன் இல்லையா?

என்னைப் பொறுத்த வரை, இரண்டாவது கேள்வியை நாம் முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்:

தமிழ்நாட்டை விட இரண்டு மடங்கு மக்கள் தொகையுடைய ஜப்பான், தமிழ்நாட்டுக்குச் சமமான (அல்லது சற்றே அதிகமான) மக்கள் தொகையுடைய தென்கொரியா, ஜெர்மனி, ஃபிரான்சு போன்ற நாடுகளில் அவர்கள் மொழியிலேயே தொழில் நடத்துகிறார்கள், உயர் கல்வி பயில்கிறார்கள், ஐக்கிய நாடுகள் சபையிலும் பேசிக் கொள்கிறார்கள்.

தாய்மொழி வழிக்கல்வி, செயல்பாடுதான் ஒவ்வொருவருடைய சிந்தனைத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் தமிழ்நாட்டில் ஆரம்பக் கல்வி முதல், உயர் ஆராய்ச்சி வரை, வணிக/அரசு செயல்பாடுகள் அனைத்தும் தமிழில் செய்யும் நிலை உருவாக வேண்டும்.

இது சாதிக்க முடியாத ஒன்று இல்லை. 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அரசு இலக்குகள் அமைத்து, நிதி ஒதுக்கிச் செயல்பட்டால், தேவைப்பட்ட வளங்களை தமிழில் மொழிமாற்றி, மொழிமாற்ற வல்லுனர்களை உருவாக்கி, வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று (குத்துமதிப்பான கணக்கு) தோன்றுகிறது.

இதற்குத் தேவையான அரசியல் உறுதி, குடும்ப/வியாபார அரசியலைத் தவிர்த்தால் தமிழ்நாட்டு ஆட்சியாளருக்கு நிச்சயம் கிடைத்து விடும்.

தமிழில் இல்லாதது இல்லை என்று சாதித்து தொடர்ந்து அதை நிலைநாட்ட வழி ஏற்படுத்திய பிறகு தமிழ்நாட்டு மக்கள் ஆங்கிலத்தை உலகத் தொடர்புக்காகவும், இந்தியை இந்தியத் தொடர்புக்காகவும், வங்காள மொழியை பங்களாதேசத்துடன் தொடர்புக்காகவும், ஜப்பானிய மொழியை ஜப்பானுடன் தொடர்புக்காகவும் (இன்னும் சேர்த்துக் கொள்ளுங்கள் :-) கற்கும் வசதிகளை சூழலை நிச்சயமாக ஏற்படுத்த வேண்டும்.

இது என்னுடைய கருத்து.Mar 11 (edited Mar 11)


அரசு பாரி - @ஆமாச்சு
//
Not to mention, it was the Brahmin community that adopted English in its life, at the earliest stages of post East India Company, British India's history, when they took the opportunity of jobs offered under them on a large scale, qualifying themselves for it, which Justice party & others followed followed ;-)
//

கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருவதற்கு முன்பே... ஐரோப்பியர்களுடன் செட்டியார்கள் (நகரத்தார்) வணிக தொடர்பில் இருந்தார்கள்.

நகரத்தாரின் இரட்டை பேரேடு முறையே double entry system -த்தின் அடித்தளம்.

அதோடு ஆங்கில ஆட்சி எங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் செட்டியார்கள்... பரவியிருந்தார்கள்.

ஆங்கிலேயர்களுடன் வணிக மற்றும் பொருளாதார தொடர்பில் இருந்த செட்டியார்களின் ஆங்கில அறிவு தான் நீதிகட்சியின் ஆங்கில சார்ப்புக்கு காரணமேயொழிய... ஏனென்றால் அப்போதைய பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதிகளான பிள்ளைமார், செட்டியார், முதலியார் போன்றோர் தான் நீதிகட்சியின் அடித்தளம்.

செட்டியார்கள் (நகரத்தார்கள்) ... பார்ப்பனர்களை மிக கடுமையாக எதிர்த்தவர்கள்... அவர்களுடைய எந்த கோயிலும்... பார்ப்பனர்கள் வைத்து வழிபாடு செய்யமாட்டார்கள். பண்டாரத்தை வைத்தே வழிபாடு செய்வார்கள்.

பார்ப்பன சமூகத்தை பார்த்து நீதிகட்சியும் மற்றவர்களும் ஆங்கிலத்தை கற்றுகொண்டார்கள் அல்லது கடைப்பிடித்தார்கள் என்பது வரலாற்று திரிபு.Mar 11

அரசு பாரி - @மா.சி

தமிழ் மொழி மட்டுமே இனி தனித்த அடையாளத்துடன் இருக்கபோவதில்லை! அவ்வாறான ஒன்றை உருவாக்கவும் இன்றைய உலக மயமாக்கல் சூழலில் இயலாது!

ஜப்பானிய மொழி எவ்வாறு ஆங்கில மொழியுடன் கலந்து ... தற்பொழுது ஒரு புதிய வடிவத்தை முன்னெடுத்து செல்கிறதோ... அதுபோல தமிழையும் தன்னியல்பான மொழி கலத்தல் மூலம் முன்னகர்த்தி செல்ல வேண்டும்.

ஆனால் இந்திய ஆதிக்க சூழலானது தமிழ் பரிணாமம் அடைவதை தடுக்கிறது. இந்திய ஆதிக்க சூழல் கிட்டதட்ட அனைத்து பிராந்திய மொழிகளையும் இல்லாதொழித்து... 'இந்தி' (அ) சமஸ்கிருத அடையாளத்துடன்... உலக மொழிகளுடன் கலக்க முனைகிறது.Mar 11

Balloon MaMa - @சிவகுமார் மா

சிவா,
யாருடைய தமிழ் உணர்வையும் , அவர்களின் பங்களிப்பையும் குறைசொல்வது நோக்கம் அல்ல.

அகிலன் , ஸ்ரீராமதாஸ் மற்றும் விக்னேஷ்வரி தமிழ் பயன்பாட்டுக்காக பல் வேறு தளங்களில் போராளிகளாக இருக்கலாம்.

இங்கு பேசப்படுவது (குறைந்த பட்சம் நான்) ....

1.இந்தி தெரியாமல் போனதால் ஆபிசில் பேசமுடியவில்லை.
2.இந்தியைவிரட்டியதால் சல்மான்கானுடன் பேசமுடியவில்லை.
3.இந்தியைவிரட்டியதால் தமிழகம் என்ன பலன் அடைந்தது. எனது மருமகன் மும்பையில் "சப்பாத்தி இருக்கா?" என்று கேட்க ரொம்ப கஸ்டப்படுகிறார்.
4. இந்திதான் தேசியமொழி

....
போன்ற பொதுப்புத்தியில் உறைந்து இருக்கும் எண்ணங்களை நோக்கியே
எனது பதில்கள்.

தினமலர்கூட தமிழில்தான் பத்திரிக்கை நடத்துகிறது. அதற்காக அது தமிழ் உணர்வுள்ள பத்திரிக்கை என்று சொல்லமுடியாது. அது முழுக்க முழுக்க சனாதனத்தை பரப்ப தமிழைப் பயன்படுத்தும் பத்திரிக்கை.

.Mar 12

டிபிசிடி TBCD -

இந்தி தேவையா இல்லையா என்று தீர்மானிக்காதவர்கள் கூட, இது போன்ற விவாதங்களை கவனிக்கும் பொழுது இந்தி தெரிந்திருந்தால் நான் அதுவாக ஆகியிருப்பேன், இதுவாக ஆகியிருப்பேன் என்று சிலர் சொல்வதை கேட்டு தவறான எண்ணத்துடன் செல்லக்கூடும்.

அதை தெளிவுப்படுத்தவுமே ஒவ்வொரு முறை இதை யார் பேசினாலும், கல்வெட்டு (எ) பலூன் மாமா, பாரி.அரசு போன்றவர்கள் உண்மையயை/கருத்தை முன் வைக்கிறார்கள்.

இத்தனை காலம் இணையத்தில் பல் வேறு விவாதக்களத்தில் பலர் பேசி வந்தாலும், இந்தி தேசிய மொழி என்று அறிந்தோ அறியாமலோ, பாடம் சொல்ல மட்டும் அணி அணியாய் வந்த வண்ணம் இருக்கின்றனர். அத்தகைய கட்டமைப்பு நம் கண்ணுக்கு எட்டாமல் நடந்த வண்ணமே இருக்கின்றது.

இந்தி கற்க முடியாமல் செய்துவிட்டனர் என்று பேசுவதெல்லாம் வெட்டிப் பேச்சாக மட்டுமே நான் கருதுவேன். நிச்சமயாக நம்மில் 50% பேரேனும் தனியார் பள்ளிகளில் படித்திருக்ககூடும். தனியார் பள்ளிகள் அனைத்திலும் இந்தி கற்க வேண்டுமென்பவர்கள் கற்க வசதியுண்டு. அது போக, ஊருக்கு ஊர் இந்தி பிரச்சார சபா என்று ஒன்றில் இன்றும் பலர் இந்தி கற்றே வருகின்றனர்.

இந்தியை தமிழகத்தில் கற்றாலும், பேச்ச மொழியாக இல்லாத வரை அதை பயன்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் அரை குறையான மொழியயையே கற்க முடியும். அதனாலேயே இந்தி கற்றவர்கள் கூட நாளாவட்டத்தில் அந்த மொழியயை மறக்கின்றனர்.

இந்தி கற்க விடாமல் செய்துவிட்டனர் என்று சொல்பவர்களின் அடுத்த குற்றச்சாட்டு, இந்தி பேச முடியாதபடி அனைவருமே தமிழில் பேசுகிறார்கள் என்பதாகவும் வரும். இதை தான் வடநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் சொல்கின்றனர்.

வடநாட்டினர் சென்னையில் தானி பிடிப்பதற்காக அனைத்து ஓட்டுனர்களுக்கும் இந்தி ஏன் சொல்லிக்கொடுக்கவில்லை என்று கேட்கின்றனர். அந்த தானி ஓட்டுனர் படிப்பறியில்லாதவராக இருந்தால் அவர் எப்படி இந்தி கற்றியிருப்பார். எப்படி பேசுவார் என்று ஒரு அடிப்படை சிந்தனை கூட அவர்களுக்கு ஏற்படாது.

அவர்கள் வீட்டு கொல்லையில் அனைவருமே இந்தி பேசுவது போல உலகம் முழுவதும் இந்தி பேசுவதாக அவர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள்.

இந்தி கற்றவர்கள் அனைவருமே வாழ்வில் சிறந்து விளங்கக்கூடும் என்றால் பெங்களூரில் இருக்கும் இந்தி மட்டுமே பேசும் கூர்க்காக்களும், பானி பூரி விற்பவர்களும் ஏன் சிறந்து விளங்கவில்லை என்ற கேள்விக்கு பதில் எனக்கு இது வரை கிடைக்கவில்லை.

இவர்கள் அனைவரும் வடக்கே பீகார், உ.பி, போன்ற இடங்களிலிருந்து வருகின்றனர். இது முழுக்க முழுக்க இந்தி பேசும் மக்கள் கொண்ட இடம்.

நம்மவர்கள் இந்தி கற்க வேண்டுமென்பது வடக்கே போய் தொழில் செய்து சிறக்க வேண்டுமென்பதற்காக என்று நான் நம்பவில்லை.

அலுவலகத்தில் ”இந்தி”யர்களின் அரட்டையில் தனித்து விடப்பட்டதாக உணரும் பொழுது இந்த உணர்வு இவர்களுக்கும் வரக்கூடும்.

பல மொழி பேசுபவர்கள் இருக்குமிடத்தில், பிறரை மதியாமல், பொதுவான இணைப்பு மொழியான ஆங்கிலத்தை பேசாமல், சிலருக்கு மட்டுமே புரியும், இந்தியில் பேசும், நபர்களுடன் பேச இந்தி கற்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக நினைக்கிறேன். இது போன்ற நபர்களுக்கு இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. ஒரு மொழி, ஒரு மதம், என்பது ஒரு போதும் நடக்காது என்று எடுத்து சொல்லி, பொது மொழியில் பேசுங்கள்.Mar 12

Akilan R -

 இங்கு பதிலளிக்க வேண்டாம் என இருந்தேன். ஆனால் சில வரலாற்று தவறுகளையும் குறைகளுடைய வாதங்களையும்(logical fallacies) சுட்டிக்காட்ட வேண்டும் என்று தோன்றியதால் மீண்டும்.
முதலில் மா.சி அவர்களது கடைசி பதிலீடை வழிமொழிகிறேன். உடனே தமிழில் அறிவியல் வளர்க்க அரசு முனைய வேண்டும்.
இரண்டு: நான் தமிழை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். தமிழை ஒழித்து இந்தியை கொண்டு வர வேண்டும் என்பது என் வாதமல்ல. தற்போதைய போலி அரசியல்வாதிகளின் நிலையை உரைப்பதே என்னுடைய நிலைப்பாடு.

@பலூன் மாமா

//வீரமணி என்பவர் திராவிடம் என்பது அவரின் கல்லூரி மற்றும் அறக்கட்டளையைக் காக்க என்ற அளவில் பயன்படுத்தி வருகிறார்.
கருணாநிதி அவரின் குடும்ப நன்மைக்காகப் பயண்படுத்தி வருகிறார்
ஜெயலலிதா , கேப்டன் காந்த் ...அது என்ன என்றே தெரியாமல் அப்படிப்பெயர் கொண்ட கட்சிக்குத் தலைமை தாங்குகிறார்கள்.
....
மொழி என்பது அடையாளம் மட்டுமல்ல வரலாறு. அதை இழக்கமுடியாது.//
அதே நான் சொல்வது. :-)

//உங்களுக்கு தேவை என்றால் படித்துக் கொள்ளுங்கள். அதற்காக அரசாங்க வரிப்பணத்தில் வாடிப்பட்டி கோவிந்துக்கும் இந்தி சொலித்தந்து அவன் என்ன மத்தியப்பிரதேசத்தில் மாங்காயா விற்கப்போகிறான்.//

ஆமோதிக்கிறேன். கூட இதையும் கேட்கிறேன்: பிறகு ஏன் ஆங்கிலத்தை மட்டும் விழுந்து விழுந்து கற்றுத்தருகிறார்கள்? (ஆங்கில மொழியோடு நிற்கவில்லை இது; அனைத்து பாடங்களையுமே அதில்தான் சொல்லித்தருகிறார்கள்.)

@குகுடுப்பை:
//தமிழ்வழிக்கல்வி முற்றிலும் செயல்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது, காரணம், ஜெர்மனோ, ஜப்பானோ, சீனனோ கண்டுபிடிப்புகள், ஆராய்சிக்கட்டுரைகள் வைத்திருக்கிறான், காலனி ஆதிக்க நாடான நாம் ஆங்கிலக்கூலிகள், எனவே ஆங்கில மீடியம் வருவது தவிர்க்கமுடியாது,//

சீனாவும் நம்மை போன்றே முன்னாளில் நன்றாக இருந்து பிறகு ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து சிதைந்து விடுபட்ட நாடே. அறுபதுகளில் இந்தியாவும் சோவியத்தும் சேர்ந்துதான் சீனாவின் முதல் ஆராய்ச்சி பல்கலைகழகங்களை நிறுவின. (அப்போது சீனா இன்னும் படையெடுக்கவில்லை. IIT போன்று அமைக்க வேண்டும் என்று சீனா ஆசைப்பட்டது.) அவர்கள் அதன் பின்னர் தங்கள் மொழியிலேயே பாடங்களை பயின்று இன்று தாங்கள் சொல்லிய நிலைக்கு வந்துள்ளார்கள். அப்படியெனில் தமிழ் அந்த நிலையை அடையாமல் எங்கும் ஆங்கிலம் வந்ததற்கு யார் காரணம் என்பதே எனது கேள்வி. நம்மை ஆண்ட ஆண்டு கொண்டிருக்கும் நல்லவர்கள் என்பது எனது பதில். அது தவறெனில் யார் காரணம் என்பதை கூறுங்கள்.

@அரசு பாரி:
//தமிழ் மொழி மட்டுமே இனி தனித்த அடையாளத்துடன் இருக்கபோவதில்லை! அவ்வாறான ஒன்றை உருவாக்கவும் இன்றைய உலக மயமாக்கல் சூழலில் இயலாது!

ஜப்பானிய மொழி எவ்வாறு ஆங்கில மொழியுடன் கலந்து ... தற்பொழுது ஒரு புதிய வடிவத்தை முன்னெடுத்து செல்கிறதோ... அதுபோல தமிழையும் தன்னியல்பான மொழி கலத்தல் மூலம் முன்னகர்த்தி செல்ல வேண்டும்.

ஆனால் இந்திய ஆதிக்க சூழலானது தமிழ் பரிணாமம் அடைவதை தடுக்கிறது. இந்திய ஆதிக்க சூழல் கிட்டதட்ட அனைத்து பிராந்திய மொழிகளையும் இல்லாதொழித்து... 'இந்தி' (அ) சமஸ்கிருத அடையாளத்துடன்... உலக மொழிகளுடன் கலக்க முனைகிறது.//

அதாகப்பட்டது தமிழ் தனித்த அடையாளத்துடன் இருக்க வேண்டியதில்லை (அது முடியாது.) தமிழ் ஆங்கிலத்துடந்தான் கலந்து(என்ன வார்த்தை அது? ஆங்..பரிணாமம்) செல்ல வேண்டும். இந்தி அதை தடுக்கிறது.
தடுக்கிறது எப்படின்னு எனக்கு புரியல. எனக்கு புரியறது என்னன்னா தமிழும் ஆங்கிலமும் கலந்து தமிழ் சாவறது பேர் பரிணாமம்; பள்ளிகளில் இந்தி கத்து கொடுத்து நாலு இந்தி வார்த்தை தமிழோட கலந்தா அது இந்தி திணிப்பு.

அதோட மட்டும் இல்ல. ஆங்கிலமும் வேண்டாம் இந்தியும் வேண்டாம் தமிழை வளருங்கள், ஆங்கிலத்தை வளர்த்த போலிகளை நம்பாதீர் னு சொல்றவங்க தமிழ் பண்பாடு தெரியாதவங்க, ஆனா இந்தி எதிர்ப்புன்னு சும்மா ஓட்டுக்காக மட்டும் பேசிட்டு தமிழ் வழி அறிவியலையும் கல்வியையும் வளர்க்காத போலிகள் நல்லவர்களாம். நான் என்ன சொல்ல??Mar 12 (edited Mar 12)

Akilan R -

இங்கு நிலவும் இன்னொரு கருத்து இந்திக்காரர்கள் இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் ஏன் பேச மறுக்கிறார்கள் என்பதும் அரசியல் சாசனப்படி ஆங்கிலமும் ஒரு இணைப்பு மொழிதான் என்பதும்.
//மாநில அரசுகளில் அலவல் மொழியாக ஆங்கிலமும், அந்த மாநில மொழியும் இருக்கு.//
அதைதான் நான் ஏன் என்று கேட்கிறேன். நமது நாட்டை சேர்ந்த இன்னொரு மாநிலத்தின் மொழியை இணைப்பு மொழியாக ஒப்புக்கொள்ள மனம் வராத இந்த அரசியல்வாதிகள் ஆங்கிலத்தை மட்டும் ஒப்புக்கொல்வதேன்? ஒட்டு அரசியல் என்கிறேன். இவர்கள் தமிழை வளர்க்கவில்லை. அழிக்கத்தான் செய்தார்கள்.Mar 12

சிவகுமார் மா -

1. தமிழில் அறிவியல் மட்டுமில்லை, மேலாண்மை, சட்டம், பொருளாதாரம், வரலாறு போன்ற எல்லா துறைகளிலும் புத்தகங்கள் மொழிபெயர்க்க/உருவாக்க வேண்டும்.

2. மொழியை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், மொழிக்கொள்கையை காலத்துக்கு ஏற்ப வளர்க்காமல், மக்களை ஏமாற்றி தமது வியாபரத்தை வளர்ப்பதிலேயே நேரம் செலவழித்ததன் விளைவுதான் தமிழகமெங்கும் பரவி நிற்கும் ஆங்கிலக் கல்வி மோகம், ஆங்கில வழி வங்கி/நிறுவன செயல்பாடுகள்.

3. விக்னேஷ்வரி ஒரு கேள்வி கேட்டிருந்தார் - எத்தனை பேரின் குழந்தைகள் தமிழ் வழிக் கல்வி பயில்கிறார்கள்? இன்றைய சூழலில் இணையத்தில் செயல்படும் பெரும்பாலானோரின் குழந்தைகள் ஆங்கில வழிக் கல்விதான் பயில்கிறார்கள்.

நடுத்தர/படித்த பெண்களிடையே (குழந்தைகளின் அம்மாக்கள்) ஆங்கில வழிக்கல்விதான் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் (இந்தி இரண்டாவது மொழியாகப் படித்தால்தான் அதிக மதிப்பெண் எடுக்க முடியும்) என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. அதை தவறு என்று சொல்வதால் மனம் மாறி விடப் போவதில்லை. 'ஆரம்பப் பள்ளி முதல் உயர் ஆராய்ச்சி வரை தமிழ் வழிக் கல்வி சாத்தியம், அதன் மூலம் குழந்தைகள் சாதிக்கிறார்கள்' என்று வருவது வரை ஆங்கில வழிக் கல்வி மோகம் மாறப் போவதில்லை.

4. நாம் ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் விவாதிப்பதை விட ஆமாச்சு ஒரு சூழலில் உறுதியாக நின்று தமிழுக்கு இடம் ஏற்படுத்திக் கொடுப்பதன் மதிப்பு பல மடங்கு அதிகம்.Mar 12

Akilan R - @விக்னேஸ்வரி:

நன்றி. :)
@மா சி:
உங்கள் பதிலை முழுவதும் ஆமோதிக்கிறேன்.Mar 12

சிவகுமார் மா -

வசதி இல்லாத ஏழைக் குழந்தைகளை தமிழ்வழி அரசு பள்ளிகளில் படிக்க வைத்து விட்டு, தமிழ் மொழியில் வளங்களை வளர்க்கப் போராடாமல்/முயற்சிக்காமல், இருப்பது போன்ற அயோக்கியத் தனம் இருக்க முடியாது.

'தயாநிதி மாறனுக்கு இந்தியும் ஆங்கிலமும் பேசத் தெரிந்ததால், கட்சியில் மற்ற தொண்டர்களைத் தாண்டி அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்பும், அமைச்சர் பதவியும் கொடுத்தோம்' என்று அயோக்கியத்தனம் திமுக தலைவர் கருணாநிதியிடமிருந்து வந்தது நினைவிருக்கலாம்.

இன்றைக்கு ஓரளவு வசதியுள்ளவர்கள் எப்படியாவது தங்கள் குழந்தைகளை 'மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அனுப்பி விட வேண்டும்' என்ற ஆயிரமாயிரம் ரூபாய்கள் செலவழிப்பதற்குக் காரணம் 'தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு எதிர்காலம் இல்லை' என்ற அவர்கள் நம்பிக்கை. அப்படிப்பட்டச் சூழல்தான் இருக்கிறது. அதற்கு பொறுப்பு 'தமிழ் உணர்வாளர்கள்' என்று காகிதப் புலிகளாக உறுமிக் கொண்டிருப்பவர்கள்தான்.Mar 12

Balloon MaMa - @அகிலன்

//ஆனா இந்தி எதிர்ப்புன்னு சும்மா ஓட்டுக்காக மட்டும் பேசிட்டு தமிழ் வழி அறிவியலையும் கல்வியையும் வளர்க்காத போலிகள் நல்லவர்களாம். நான் என்ன சொல்ல??//

இந்தி எதிர்ப்பு என்பது உணர்வுபூர்வமான போராட்டம்.
இப்போது இருக்கும் கழக பிரியாணிக்குஞ்சுகளை வைத்து முன்னோர்கள் நடத்திய ஒன்றினை எடைபோடக்கூடாது.

தமிழ் வழி அறிவியலையும் கல்வியையும் வளர்க்காத போலிகளை நல்லவர்கள் என்று இங்கு யார் சொல்லியுள்ளார்கள்? பெயருடன் சொல்லுங்கள்

தயவுசெய்து திராவிடம் என்றால் கழக பிரியாணிக்குஞ்சுகளையும் அதன் சுயநலத்தலைமையயும் வைத்துமட்டும் எடைபோடாதீர்கள். குஸ்பூகூடத்தான் கழகத்தில் இருக்கிறார். :-))

**
தமிழ் வழி அறிவியலையும் கல்வியையும் வளர்க்க எந்த முயற்சியும் எடுக்காத இதுவரை ஆண்ட எல்லாக் கழக அரசுகளையும் நான் குற்றம் சுமத்துகிறேன்.

*

நீங்கள் கேட்டுள்ள அடுத்த கேள்வி
//பிறகு ஏன் ஆங்கிலத்தை மட்டும் விழுந்து விழுந்து கற்றுத்தருகிறார்கள்?//

கிந்தி என்பது சனாதன சமச்கிரக மொழியின் ஒன்றுவிட்ட தம்பி.
கிந்தியை ஏற்பது என்பது, சனாதன ஒட்டகத்தின் தலையை கூடாரத்தில் அனுமதிப்பது போன்றது. அதன்பின்னால் சனாதன வர்ணாசிரம முழு ஒட்டகம் உள்ளே வந்துவிடும்.

கர்நாடகம் வரை ஆடும் காவிக்கட்சி ஏன் தமிழ்நாட்டில் காலூன்றமுடியவில்லை?

இது மொழி தாண்டிய பேரரசியல் அகிலன். இதில் உங்களின் நிலை எனக்குத் தெரியாது. சொன்னாலும் எந்த அளவுக்கு உங்களுக்குப் புரியும் என்று தெரியவில்லை. (இது உங்களை நான் உரையாடல்கள்மூலம் அரியாததால் மட்டுமே)

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்:
------------------------------------------
சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏன் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து கிறித்துவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மாறினார்கள்? அவர்கள் ஏன் இந்தியாவிலேயே சைவ, வைணவ மதங்களுக்கு மாறியிருக்கக்கூடாது?

*
அதே நிலைதான் ஆங்கிலத்தை ஆதரிப்பதற்கும். சனாதனக் கருமாந்திரங்களில் இருந்து விட்டுவிடுதலையாக வேண்டும் என்றால் அந்த வாடையே இல்லாத ஒன்றைத்தான் ஆதரிக்க வேண்டுமே தவிர , பேயின் சித்தப்பா பிசாசை ஆதரிக்கக்கூடாது. சரி ஏன் ஆங்கிலம் ஹீப்ருவை ஆதரிக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். ஏற்கனவே அறிமுகமான ஒன்று என்பதால் மட்டுமே.
.Mar 12

Balloon MaMa - @சிவகுமார் மா

// 'தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு எதிர்காலம் இல்லை' என்ற அவர்கள் நம்பிக்கை. அப்படிப்பட்டச் சூழல்தான் இருக்கிறது. அதற்கு பொறுப்பு 'தமிழ் உணர்வாளர்கள்' என்று காகிதப் புலிகளாக உறுமிக் கொண்டிருப்பவர்கள்தான்.//

உண்மை மறுத்துச் சொல்ல ஏதும் இல்லை.

தமிழுக்கான மொழிப்பங்கை ஆற்றும் ஒரு கடமையும் உள்ளது. அதே நேரத்தில் "கிந்தி படிக்காமல் ரொம்ப கஸ்டாமாயிருக்கு" என்று சொல்லி மற்றவர்களை தவறான சிந்தனைக்கு இட்டுச்செல்லும் உரையாடல்களையும் எதிர்கொள்ளவேண்டும்.
,Mar 12

Balloon MaMa - சிவகுமார் மா

//4. நாம் ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் விவாதிப்பதை விட ஆமாச்சு ஒரு சூழலில் உறுதியாக நின்று தமிழுக்கு இடம் ஏற்படுத்திக் கொடுப்பதன் மதிப்பு பல மடங்கு அதிகம்.//

தமிழுக்கான மொழிப்பங்கை ஆற்றிய ஆமாச்சுவிற்கு (அகிலன் ?) சலாம் (கிந்தி சலாம்)

**
அவர் அங்கேயும் போராடியது ஆங்கிலத்தை எதிர்த்து என்று நினைக்கிறேன். ஒருவேளை கிந்தியாய் இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பாரா? :‍-))) கிந்தி ப்ரியராய் இருப்பதால் கேட்கிறேன். #doubt
.Mar 12

சிவகுமார் மா -

//அவர் அங்கேயும் போராடியது ஆங்கிலத்தை எதிர்த்து என்று நினைக்கிறேன். ஒருவேளை கிந்தியாய் இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பாரா? :‍-))) கிந்தி ப்ரியராய் இருப்பதால் கேட்கிறேன். #doubt //

ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். இன்றைய தேதியில் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் பயன்பாட்டுக்கும் பலனுள்ள வகையில் உழைக்கும் முதல் 10 பேர் பெயர்களை பட்டியல் போட்டால் அதில் ஆமாச்சு என்று ஸ்ரீராமதாஸ் பெயர் தவறாமல் இருக்கும்.

இந்தியை வெறுக்கத் தேவையில்லை, இந்தியை நேசிப்பது குற்றமில்லை. என் தாய் வாழ வேண்டும் என்றால் மற்ற தாய்களை வெறுக்க வேண்டும் என்று பொருளில்லை.Mar 12 (edited Mar 12)

Balloon MaMa - @சிவகுமார் மா -

//இந்தியை வெறுக்கத் தேவையில்லை, இந்தியை நேசிப்பது குற்றமில்லை. என் தாய் வாழ வேண்டும் என்றால் மற்ற தாய்களை வெறுக்க வேண்டும் என்று பொருளில்லை.//

உங்கள் அம்மாவும் நல்லவர் என் அம்மாவைப் போலவே என்றுதான் என்னால் சொல்லமுடியுமே தவிர. உங்கள் அம்மாதான் சிறந்தவர் அவரே எல்லோரையும்விட உயர்வானவர் பொதுவானவர் என்று சொல்லமுடியாது ஏன் என்றால் எனக்கென்று அம்மா இருக்கிறார்.

அடையாளமற்ற அனாதைகள் வேண்டுமானால் கிந்திதான் எனது அடையாளம் என்று தஞ்சம் புகலாம்.

மொழி என்ற அளவில் எதுவும் எங்கேயும் இருக்கட்டும். ஆனால் இதுதான் எல்லாருக்கும் என்று தட்டையாக இந்தியாவில் பேசினால் அவர்கள் இந்திய கலாச்சார கூட்டு அடையாளத்தை உணராதவர்களே.
.Mar 12

Gopalakrishnan (Gopi) T -

//இந்தி தெரியாமல் போனதால் ஆபிசில் பேசமுடியவில்லை//

இந்தி அலுவல் மொழியாக கொண்ட அலுவலகத்தில் இந்தி தெரியாமல் போனால் குறை உங்களிடம். யாரும் உங்களை இந்தி கற்க தடை விதிப்பதில்லை.

ஆங்கிலத்தை அலுவல் மொழியாக கொண்ட நிறுவனங்களில் குழுவினர் ஆங்கிலமற்ற வேற்று மொழியில் அலுவல் பணிகளை பேசுவதால் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதை மனிதவளத்துறையில் எடுத்துச் சொல்லி நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு (தொடர்புடையோர் பணிநீக்கம் வரை கடுமையான தண்டனைகள் கொண்ட) சட்டங்களை பெரும்பாலான நிறுவனங்கள் வைத்துள்ளன.

இந்நிறுவனங்களில் அலுவல் ரீதியாய் இல்லாமல் தனிப்பட்ட சேதிகளை வேற்று மொழியில் சிலர் பேசினால் நமக்கென்ன? நமக்கு புரிந்த மொழியில் தனிப்பட்ட சேதிகளைப் பேசுவோரிடம் நட்பு பாராட்டவே நேரம் போதவில்லை.

"க்யா ஆல் ஹே யார்" அப்படின்னு என்னை ஒருத்தன் கேட்டா "அருமையா இருக்கேன். நீ நல்லாயிருக்கியா"ன்னு தான் நான் பதில் சொல்வேன். "படியா ஹை"ன்னு பதில் சொல்வேன்னு எதிர்பார்த்தா அது அவன் தப்பு. அலுவல் தவிர அவன் கிட்ட எனக்கென்ன வெறென்ன உறவு?Mar 12

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் - @Balloon MaMa

எமது செயல் ஆங்கிலத்திற்கு எதிரானது அல்ல.Mar 12

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் -

வடமொழி பார்ப்பனர் மொழி மட்டும் அல்ல. தேய்ந்து தேய்ந்து அது கடைசியாக அதிகமாக பார்ப்பனர் வசம் எஞ்சியிருந்தது. அதுவும் கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளில் போய்விட்டது. வடமொழியறியாது சமண பவுத்த கருத்துக்களையும் முழுமையாக அறிந்துணர்தல் கடினம்.

அதில் எண்ணற்ற பல உன்னதவிஷயங்கள் பொதிந்துள்ளதென்பதை ஓரளவிற்காவது கற்றுத் தேர்ந்து உணர்ந்து ஏற்கிறேன். அதுவும் தமிழ் நாட்டுச் சான்றோர்கள் பலர் கொண்ட உயர்ந்த கருத்தும் நிகரானவையே.

நிகரான உயர்கருத்துக்களையும் வழக்கங்களையும் உலகின் எல்லாச் சமூகங்களும் எல்லா காலத்திலும் கொண்டிருந்திருக்கின்றன. எமது சமுதாயமும் கொண்டிருந்தது என்று சொல்வது சரி. எமது சமுதாயம் மட்டும்தான் உயர்ந்த பண்பாட்டின் உறைவிடமாய் இருந்தது எனச் சொல்வது அநாகரிகம்.Mar 12 (edited Mar 12)

அரசு பாரி - @அகிலன்
//
அதாகப்பட்டது தமிழ் தனித்த அடையாளத்துடன் இருக்க வேண்டியதில்லை (அது முடியாது.) தமிழ் ஆங்கிலத்துடந்தான் கலந்து(என்ன வார்த்தை அது? ஆங்..பரிணாமம்) செல்ல வேண்டும். இந்தி அதை தடுக்கிறது.
தடுக்கிறது எப்படின்னு எனக்கு புரியல. எனக்கு புரியறது என்னன்னா தமிழும் ஆங்கிலமும் கலந்து தமிழ் சாவறது பேர் பரிணாமம்; பள்ளிகளில் இந்தி கத்து கொடுத்து நாலு இந்தி வார்த்தை தமிழோட கலந்தா அது இந்தி திணிப்பு.
//

இந்த மாதிரியான எகனை, மொகனை பேச்சுகளை 5 வருடமாக இணையத்தில் நிறைய பார்த்தாச்சு! :)

சமூகங்களுக்கிடையிலான மொழி, பண்பாடு ஊடாடல், கலத்தல் மற்றும் தாக்கம் பற்றி கொஞ்சம் வாசித்து அறிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

ஆங்கிலத்தின் தேவையை பற்றிய நேரு மற்றும் அண்ணா இடையிலான கடிதங்கள், உரையாடல்களை படித்தாலே ஓரளவு தெளிவு கிட்டும்.

அதிகாரத்தின் வழியிலான மொழி, பண்பாட்டு ஆதிக்கதிற்கும்..
தேவையின் அடிப்படையிலான மொழி, பண்பாட்டு கலத்தலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கு! முந்தையது சமூகத்தை அடிமையாக்கும் செயல்... பிந்தையது சமூகத்தை வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்வது.

அப்புறம் இந்தி தடுக்கிறது.... இதை விளக்குவதற்கு இங்கே நேரமும், பொறுமையும் இல்லை... சிறிய அறிமுகம் மட்டும்....

மொழி சார்ந்த ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது... 6 கோடி பேருக்கு தமிழ் தாய்மொழி என்பது 8கோடி பேருக்கு தமிழ் தாய்மொழி என்று மாறுவதல்ல... மொழி வளர்ப்பதன் நோக்கமே சமூகத்தை முன் நகர்த்துவதற்காக தான்!

மொழியை உரம் போட்டு வளர்க்க முடியாது.... பிற சமூகங்களுடன் மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், தத்துவம் மற்றும் சிந்தனை போன்றவற்றை பறிமாற்றம் செய்வதன் மூலம் மட்டுமே வளர்ச்சி காண முடியும்.

உலகின் பிற சமூகங்களுடன் மொழி, பண்பாட்டு தாக்கதிற்கு 'இந்தி' அரசாங்கம் மிக பெரிய தடையாக இருக்கிறது.

'இந்தி' அரசாங்கம் சமஸ்கிருதத்தை உலகின் பிற அரசாங்களுடன் பறிமாற்றம் செய்கிறது. ஆனால் இந்தியாவின் பிராந்திய மொழிகள் மற்றும் பண்பாடுகள் பறிமாற்றம் செய்யப்படுவதில்லை..

மிகச்சிறந்த எடுத்துகாட்டு வங்காள மொழி.. தமிழுக்கு நிகரான தொன்மையும்... கலை, இலக்கிய செல்வம் நிறைந்த வங்காள மொழி 'இந்தி' அரசாஙகத்தால் சிதைவடைந்துள்ளது.Mar 12 (edited Mar 12)
அரசு பாரி - இந்தி தேசிய இனிப்பு
அதை தின்றால் இனிக்காதோ!?
அந்தோ...
அது இனிப்பல்ல...
சமூகத்தை மெல்ல கொல்லும்...
'இந்து' தேசிய கனவின் நஞ்சு!Mar 12 (edited Mar 12)

ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் -

//கர்நாடகம் வரை ஆடும் காவிக்கட்சி ஏன் தமிழ்நாட்டில் காலூன்றமுடியவில்லை? //

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற திருமூல வாசகம் இன்று தமிழகத்து மூல மந்திரமாய் ஒலிப்பதாலோ என்னவோ ;-)

அது சரி, அன்றைய மொத்த மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸி(+)யையும் கணக்கு பண்ணி தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் கும்மிடிப்பூண்டிக்கும் குமரிக்கும் இடையில் திராவிட மானம் திராவிட பண்பாடு என்பதிலிருந்தெல்லாம் கூனிக் குறுகி தமிழ் மானம் தமிழ் இனம் என்று பட்டம் பறக்கவிட்டு நூலறுந்து கொண்டிருப்பது ஏன்?Mar 12 (edited Mar 12)

பின்குறிப்பு : இந்தக் கட்டுரைக்கு அதிகபட்சம் பத்து வாசகர்களையும், மூன்று பின்னூட்டங்களையும், மூன்று தமிழ்மணம் வாக்குகளையும் எதிர்பார்க்கிறேன். :))))))
Related Posts with Thumbnails