புதன், 2 மார்ச், 2011

நாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...!

"காற்றைப்புணரும் நடன அசைவுகள்" என்று கமலஹாசன் அவர்கள் ஒரு மேடையில் தமிழ்த் திரைப்படப்பாடல்களைப்பற்றி கேலியாகச் சொல்லியிருப்பார். அந்த அளவுக்கு வக்கிரமாகவும் ஆபாசமாகவும்தான் பெரும்பாலான தமிழ்த் திரைப்படப்பாடல்களும் சரி, காதல் காட்சிகளும் சரி... படமாக்கப் பட்டிருக்கும். அதிலும் நாயகியைக் காதலுக்குச் சம்மதிக்கச் சொல்லி நாயகர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே... எல்லாமே ஈவ் டீஸிங் வழக்கில் பதிவு செய்யப்பட்டால் அந்த நாயகர்களுக்கும் இயக்குனர்களுகளுக்கும் வாழ்நாள் முழுக்க களிதான் ( இப்போது சிக்கன் துண்டுகளும் கூடுதலாகப் போடப்படுவதாகக் கேள்வி!). ரொமான்ஸ் காட்சிகளில் நாயகன்  நாயகியை மோப்பம் பிடிப்பதும், நாயகி கண்கள் கிறங்குவதும் எனக்கு மார்கழி மாசத்து நாய்களை நினைவு படுத்தும்.

ஆக, காலங்காலமாக இம்மாதிரி வெட்கங்கெட்ட காதல்காட்சிகளையும், சதைகள் பிதுங்கும் பாடல்காட்சிகளையும் பார்த்து விசிலடித்துக் கொண்டிருந்த ரசிகமணிக்குஞ்சுகள் பலர் இப்போது வலையுலகில் நுழைந்து 'சமூக அக்கறை' பொங்கி வழிந்து கடப்பாறையும் கையுமாக சமூகத்தைப் புரட்டிப்போட்டுவிடப் புறப்பட்டு பகீரதப் பிரயத்தனம் செய்து வருவதையும் நாம் பார்க்கிறோம். "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?" என்று ஹிட்ஸுக்காகவே அலையும் இந்த இணையப்போராளிகள் ஏதோ பதிவுலகில் 'பொங்கி'ப் புராணிகர்களாக வீறுகொண்டெழுந்து எழுதிவிட்டு, எழுதிய களைப்பு போகக் குப்புறடித்துத் தூங்கிவிடும் வாய்ச்சொல் வீரர்களாகவே இருப்பார்கள்.

இம்மாதிரியான நபர்களுக்கென்று சில பொதுவான குணங்கள் இருக்கின்றன. தன்னை மாதிரியே பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்கும் ஜீவன்களை ஒன்று சேர்த்துக்கொண்டு தமக்குள்ளாகவே கும்மியடித்துக்கொண்டு "மாப்ள, சூப்பரா எளுதி இருக்கேடா, கலக்கல்டா, லொட்டுடா, லொசுக்குடா" போன்ற மகாகனம் பொருந்திய கமெண்டுகளைப் போட்டு ஒருத்தர் முதுகை ஒருத்தர் மாற்றிமாற்றி சொறிந்து கொள்வார்கள்.  "நம்ம எவ்ளோ எழுதினாலும் நம்மாளுங்களைத் தவிர வேற எந்த நாதியும் கண்டுக்க மாட்டேங்குதே" என்கிற நமைச்சலும் குமைச்சலும் இவர்களுக்குள் இருந்துகொண்டே இருக்கும்.

வந்து வசமாகச் சிக்குவான் யாராவது ஒரு பிரபலப் பதிவன்.... அவ்வளவுதான்! "கையப் புடிச்சி இழுத்துட்டான்" என்று நவீன கண்ணகி அவதாரம் எடுத்து கூச்சல் போட ஆரம்பித்து விடுவார்கள். இந்த மாதிரி அவ்வப்போது 'பிரபலோமேனியா' பிடித்துத் திரியும் சிலருக்கு அடிக்கடி இலக்காகி நிற்பார் ஜாக்கி சேகர். இப்போது கடைசியாகச் சிக்கி இருப்பவர் கூடுதலாக கேஆர்பி.செந்தில்.

கேஆர்பியைத் திட்டி எழுதுவதாக நினைத்துக் கொண்டு அவரது பெயரையே தமது பதிவுக்குத் தலைப்பாகவும் வைத்துக்கொண்டு விளம்பரம் தேடிப் பிழைப்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது நாகரீகமாகச் செய்து பிழைக்கலாம். இவர்களை நினைக்கும்போது, பிரபலங்களைப்பற்றி கிசுகிசு எழுதிப்பிழைத்த 'இந்துநேசன்' பத்திரிகை லஷ்மிகாந்தன் நினைவுதான் வருகின்றது.

சமூகம் சார்ந்த, தன் வாழ்வனுபங்கள் சார்ந்த பதிவுகளை மட்டுமே எழுதிவரும் கேஆர்பி.செந்தில் மற்ற 'பப்ளிகுட்டி' பதிவர்கள் போல மட்டமாக விளம்பரம் தேடும் வழக்கம் இல்லாதவர். சிலநாட்கள் முன்னர் நான் அவருடன் பதிவர்களின் மட்டமான பாலிடிக்ஸ் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது அவர் உடனேயே ஒரு கவிதையை எழுதினார். அவர் அந்தக் கவிதையை "சீப் பப்ளிசிட்டி" தேடும் பதிவரசியல் செய்யும் அனைவரையும் பற்றி பொதுவாகத்தான் எழுதினார். மேலும் அவர் இதுவரையிலும் வலையுலகில் எவ்விதத்திலும் தனிமனிதத் தாக்குதலில் இறங்கியதும் இல்லை; அநாகரீகமாகப் பேசியதுமில்லை. இது அவருடன் நெருங்கிப் பழகும் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

அவரது தளத்தில் அந்தக் கவிதை வெளியானவுடன் "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்" என்று சொல்வதுபோல சிலருக்கு உறுத்த உடனே "கையப்புடிச்சி இழுத்துட்டான்"  பல்லவியை, தேய்ந்துபோன ரெக்கார்டாக அடுத்த ரவுண்டு கச்சேரியை ஆரம்பித்து விட்டனர்.

"எல்லாத்தையும் மேல இருக்கறவன் பாத்துக்குவான்" என்கிற கவுண்டமணி காமெடி உங்களுக்கு நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல :)))

தன் முகத்தையும் சுய அடையாளத்தையும் காட்டத் துப்பில்லாமல், வெறுமனே காற்றில் வாள்வீசும் 'கைப்புள்ளை'ங்களைப் பார்த்துத்தான் பட்டுக்கோட்டையார் பாடிவைத்தார் போல "இந்த திண்ணைப்பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி" என்று!

கடைசியாக,

கேஆர்பியின் கவிதைப் பதிவில்

//அன்லிமிட்டெட் இண்டர்நெட் கனெக்க்ஷனும், கம்ப்யூட்டரும் இருந்தால் 'பொங்கலாம்' என்று ப்ரொஃபைல் இல்லாமலும், முகம்காட்டும் ஆண்மையில்லாமலும், வெறுமனே நானும் 'பொங்கி'தான் என வீராப்பு பேசும் வெத்துவேட்டுக்களும், சும்மானாச்சுக்குத் தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் நிற்க வேண்டும் என 'பொங்கி'ப் பதிவெழுதி, பொட்டியை அணைத்தவுடன், களப்பணியாவது கருமாந்திரமாவது என ஓடி ஒளியும் ப்ரொஃபைல் இருக்கும் புண்ணாக்குகளும்....

அண்ணன் கவுஜயை ரவுண்டு கட்டி கும்முமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...//

என்று பின்னூட்டம் போட்டிருந்தேன். கரெக்டாகப் புரிந்துகொண்டு அவரை 'ரவுண்டு' கட்டியமைக்கு நன்றி! :))))


பின்குறிப்பு :

1) "நீ என்ன யோக்கியமா?" என்ற கேள்வியை நாக்குநுனியில் வைத்துக்கொண்டு நிற்பவர்களுக்கு....

  நான் இதுவரை எந்த ஒரு சமயத்திலும், ஓட்டுப்பிச்சை எடுத்ததோ, கமெண்டு கொடுத்து கமெண்டு வாங்கும் மொய்வைக்கும் பழக்கத்தையோ பின்பற்றியவனல்லன். இனியும் அப்படியே! அடுத்து சும்மா சமூகத்தைப்பற்றி 'பொங்கி', "நாட்டுல எவனும் சரியில்ல" என்ற ரேஞ்சுக்கு நவீன ஏசுநாதராக அவதரித்து, புண்ணாக்குப் பதிவுகள் எழுதிவிட்டு ஒளிந்துவிடும் ப்ரொஃபைலும், அடையாளமும் இல்லாத முண்டங்களைப் ( தலை இல்லாததை முண்டம் என்றுதானே சொல்வோம்?!) போல இல்லாமல், "காஷ்மீர் : விடுதலையைப் பெற உரிமையுள்ள தேசம்" என்று நெஞ்சு நிமிர்த்தி எனது தொலைபேசி எண்ணுடன் பதிவெழுதியவன் நான்.

2) இந்தமாதிரி சில்லறைத்தனமாக விளம்பரம் தேடும் பதிவர்களைப்பற்றி எனது கிராமத்து நண்பன் தங்கராசுவிடம் பேசிக் கொண்டிருந்தேன். விழுந்து விழுந்து சிரித்தவன் நிதானமாகச் சொன்னான்...

"டேய்... இப்ப நான் சிரிச்சது வாயால இல்ல......."


********************************************************

15 பேரு கிடா வெட்டுறாங்க:

எல் கே சொன்னது…

ராசா நீ அம்புட்டு ப்ரீயா இருக்கியா ??? கண்டுக்காம போவியா

sathishsangkavi.blogspot.com சொன்னது…

என்ன செய்வது இது தான் உலகம்...

Unknown சொன்னது…

அட..திரும்பவும் ஆரம்பிச்சுட்டாங்களா..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நண்பரே மறுமடியுமா...

Enathu Ennangal சொன்னது…

Boss Ithuku munna pinnadi kavithai yethavathu padichiirukingala? Athuku Peru Kavithaiya..?
Vaiku vanthathuku Peru ellam kavithaiya..?
Mobile no : 9789337895.

phone numberum, photovum pottathan neengalam aambalanu othukiringa....

Unknown சொன்னது…

அந்தக் கவிதைக்கான நோக்கம் வேறு திசையில் காற்றடிக்கும் என நினைக்கவில்லை..

போகட்டும் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...

மாயாவி சொன்னது…

விடமாட்டிங்க போல இருக்கு?

பதினஞ்சு பேரு மூத்திர சந்தில வைச்சு அடி அடின்னு அடிச்சாங்க....கடைசில நான் ரொம்ப நல்லவனு சொல்லி அனுப்பிட்டாங்க....இப்படிதான் இந்த விஷயம் முடிய போகிறது

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

விந்தை அண்ணே ... என்ன நடக்குதுன்னு தெரியல(அதிக நேரம் இணையத்துல இருக்க தற்சமயம் வாய்ப்பில்லை) ... ரொம்ப மனம் உடைஞ்சு போயிருந்த அன்னைக்கு செந்தில் அண்ணன் ஒரு மணி நேரமா என்னோட அலைபேசியில் பேசி தேத்தினது தான் மனசில வர்றது ... வரேன் தோழர் ...

Unknown சொன்னது…

நீங்கள் சொல்வது சரிதான்..நாலு பேரு அப்படித்தான் இருப்பாங்க...விடுங்கண்ணே

ஜோதிஜி சொன்னது…

அரசியலில் தனி மனித துதி புகழ்ச்சி வெறுப்பு என்று பார்த்தால் வலையுலகிலும் இதே தானோ? குத்திய புண்ணில் நம்மவர்களைப் போல கிண்டி கிழங்கெடுப்பதில் நமக்கு நாமே சூரர்கள் என்று பட்டம் கொடுத்துக் கொள்ளலாம்.

கருத்துகள் காற்றில் அலைய
கருமாந்திரங்கள் இடுகை என்ற வீட்டை நிரப்பட்டும்.

Jackiesekar சொன்னது…

டேய்... இப்ப நான் சிரிச்சது வாயால இல்ல......."--//

இது ஒன்னு போதும்...

பெயரில்லா சொன்னது…

இங்கேயும் அரசியலா ? ஆளைவிடுங்கடா சாமியோவ் !!!

K.MURALI சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Bibiliobibuli சொன்னது…

நியோ போல் எனக்கும் என்ன நடந்தது என்று புரியவில்லை. பதிவுலகப்பக்கம் தொடர்ந்து வராததால் தான் எதுவும் புரியவில்லை.

அப்புறமா, நான் உங்க நண்பர் 'தங்கராசு'வோட விசிறியாயிட்டேன். :))

K.MURALI சொன்னது…

///ஜோதிஜி சொன்னது…

அரசியலில் தனி மனித துதி புகழ்ச்சி வெறுப்பு என்று பார்த்தால் வலையுலகிலும் இதே தானோ? குத்திய புண்ணில் நம்மவர்களைப் போல கிண்டி கிழங்கெடுப்பதில் நமக்கு நாமே சூரர்கள் என்று பட்டம் கொடுத்துக் கொள்ளலாம்.//

வழிமொழிகிறேன்.

Related Posts with Thumbnails