வெள்ளி, 4 மார்ச், 2011

காமராசரு ஆ(வ்வ்வ்வ்)ட்சியும் காங்கிரசூ கருமாந்திரங்களும்!

"வித்தாரக்கள்ளி விறகொடிக்கப் போனாளாம் கத்தாழ முள்ளு வந்து கொத்தோட குத்திச்சாம்" என்றான் தங்கராசு திடீரென்று. வழக்கம்போல நான் முழிக்க ஆரம்பித்தேன். காலையில் அவனோடு கிளம்பியதிலிருந்தே பயல் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். அடிக்கடி திடீர் திடீரெனத் தலையை குறுக்கு நெடுக்கு, மேல்கீழ் என்று ஆட்டிக்கொண்டும், விரல்களை நீட்டியபடி, மடக்கியபடியும் என்று கோணங்கிச்சேட்டைகள் செய்தபடியே இருந்து கொண்டிருந்தான். எனக்கு ஓரளவு விஷயம் புரியத் தொடங்கி விட்டபடியால் பேஸ்தடித்து நின்றேன். சரிதான்... பயலுக்கு தேர்தல் ஜுரம் ஆரம்பித்துவிட்டது என்று.

"என்ன பங்காளி? திடீர்னு பழமொழியெல்லாஞ்சொல்ற!" என்றேன்.

"எலேய் முட்டாப்பயலே! இந்த ராகுல்காந்தியப் பத்தி நெனச்சேண்டா. அதான் பழமொழி ஞாவகத்துக்கு வந்திரிச்சி" அப்டீன்னான் தங்கராசு.

"இந்தமாரிக்க வாலும் இல்லாம தலையும் இல்லாம சொன்னா என்ன எழவுடா புரியும்? தெளிவாச் சொல்லுடா" என்றேன் நான்.

காலையில் அவரச அவசரமாக பழையசோத்துடன் சின்ன வெங்காயத்தைக் கடித்து முழுங்கிவிட்டு டவுனுக்குப்போய் ப்ளாக்கிலும், பஸ்ஸிலும் எழுதிக் கிழிக்கும் வெட்டி ஆபீசர் வேலையை செவ்வனே செய்யலாம் என்ற நினைப்பில் மண்ணள்ளிப் போட்டான் தங்கராசு. "நீங்கல்லாம் எழுதிக் கிழிக்கிற வேலயவிட, எருமமாடு மேய்க்கிறது உருப்படியான வேலடா" என்று சொல்லி, மாடுகளோடு சேர்த்து என்னையும் ஓட்டிக் கொண்டு வந்துவிட்டான்.

"பங்காளி! நண்டு கொழுத்தா வளையில தங்காதுன்னு சொல்லுவாங்கடா. சும்மா இருந்த காங்கிரசுகாரப்பயலுவள ஊதிக்கெடுத்தமாரி கலைஞரு ஏத்திவுட்டு ஏத்திவுட்டே இன்னிக்கு பாத்தியா. ஆட்சில பங்கு கேக்குற அளவுக்கு வந்துட்டானுவ. அறுவத்தி ஏழுலயே இவனுங்க கால ஒடிச்சி போட்டாரு அண்ணா. அவரோட தம்பின்னு சொல்லி ஆட்சில இருக்குறவரு மறுவடி செத்துப்போன சவத்துக்கு உசுரு கொடுக்குற வேலைய நல்லா பண்ணிட்டு இருக்காருடா. இப்ப பாரு...  அத்தைக்கி மீச மொளச்சா சித்தப்பாங்குற கதையா 90 தொகுதியில சீட்டு கேக்குறானுவ. ஆனா நம்மாளு இருக்காரே, வெசமம் புடிச்ச மனுசண்டா. திருமா, குருமா எல்லாத்துக்கும் பிச்சிப்பிச்சி குடுத்துட்டு மிச்சத்த கையில வெச்சிக்கிட்டு என்னா அருமயா டகால்டி வேல காட்டுறாரு. அந்தா இந்தான்னு இப்ப அறுவது வந்தாக்கா போதும்னு நெனக்கிறானுவ. கடேசி வரைக்கும் பூச்சாண்டி காட்டிட்டு கட்டக்கடேசிய இவனுங்கள தண்ணிதெளிச்சி வெரட்டி உட்டா எத்தினி தொகுதியில டெபாசிட்டு வாங்குவானுவோன்னு தெரியலடா பங்காளி. ஒத்தையா நின்னா டெபாசிட்டுக்கே சிங்கியடிக்கிற பயலுவோளுக்கு கூட்டணி ஆட்சி வேணுமாம். அத நெனச்சித்தாண்டா அந்த பழபொழியச் சொன்னேன்"ன்னான் தங்கராசு.

"சரிடா பங்காளி. தமிழ்நாட்டுல எல்லா பயலுவளும் ஆட்சின்னு வந்தாக்க திருடத்தாண்டா செய்யிறானுவ. இவனுங்க மட்டும் என்னடா பாவம் செஞ்சானுவோ? ஒரு தடவ அவங்களும் ஆட்சிக்கு வந்துதான் பாக்கட்டுமே. அவனுவோளும்  காமராசர் ஆட்சி, காமராசர் ஆட்சின்னு ரொம்பநாளா பொலம்பிக்கிட்டு இருக்கானுவோ. காமராசர் ஆட்சி மாதிரி வந்தா நல்லாத்தானேடா இருக்கும்" என்று அவன் வாயைக் கிண்டத் தொடங்கினேன்.

மனுசச்சாணியவிட என்னைக் கேவலமாகப் பார்த்தவ்ன் சொன்னான் " காமராசரையே கடேசிக் காலத்துல கதறக்கதற அடிச்சவனுவோடா இவனுவோ. மொதல்ல இவனுவோ தனியா நின்னாக்கா அவனவன் பொண்டாட்டி புள்ளகுட்டிகூட ஓட்டுப்போடாது தெரிஞ்சிக்க"

"சரி பங்காளி. நாமளும் மாத்திமாத்தி திமுகா, அதிமுகான்னு ஒக்காரவெச்சி பாத்துட்டம். ஒரு தடவ இவனுவோளுக்கும் வாய்ப்பு கொடுக்கலாமேடா? எல்லாருக்கும் ஒரு தடவ வாய்ப்பு கொடுக்கறதுதானேடா மொற?" என்றேன்.

"எல்லாருக்கும் ஒரு தடவ வாய்ப்பு கொடுக்கிறதுக்கு நம்ம என்ன தேவிடியா மடமாடா நடத்துறோம் வெளங்காதவனே. இவனுவோ ஏன் வரக்கூடாதுன்னு சொல்றேன் தெரிஞ்சிக்க மொதல்ல" என்றவன் தொடர்ந்தான்...

"மொதல்ல நம்ம சாதிசனத்துவள ஈழத்துல தொரத்தி தொரத்தி கொன்னது இவனுவதான். அடுத்தாப்புல வரிசையா சொல்றேன் பாத்துக்க. சொதந்தரம் வாங்குனதுலேருந்து இன்னிய வரைக்கும் இவனுவதான் இந்தியாபூரா ஒரே மாதிரி இருக்கணும்னு சொல்லி தேசிய இனங்களோட தனித்தன்மைய ஒடுக்குற வேலைய பாத்துட்டு இருக்கானுவ. தெளிவா சொல்றம்பாரு. வடகிழக்கு மாகாணங்கள்ல இன்னம் தீவிரவாதம் தீவிரவாதம்னு சொல்லிக்கிட்டு காக்காகுருவிய சுடுறமாரி மக்கள சுட்டுக்கிட்டு பொட்டப்புள்ளயள கற்பழிக்கிறதுக்கு லைசென்சு குடுக்கிறமாரி ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை கொண்டுவந்தவனுவ. காஷ்மீர்ல அந்த மக்களோட உரிமைய எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பறிச்சி அவங்களையும் துப்பாக்கி தூக்க வெச்சவனுவ. இந்தா இப்ப பாரு, எவனோ ஒரு நாதாரி சம்பாரிக்கறதுக்காவ மத்திய இந்தியாவுல இருக்குற கனிமவளத்தையெல்லாம் அடிமாட்டு ரேட்டுக்கு வெளிநாட்டுக்கு வெல பேசிட்டு அங்க இருக்குற அப்பாவி சனங்களை சொந்த எடத்த உட்டு வெரட்டுறவனுவ. அங்கங்க கெடக்குற தரிசு நெலம்போவ பாக்கிய எல்லாம் அடமானம் வெச்சி நம்ம நாட்டு மக்கள எல்லாம் அம்பது வருசம் ஆட்சில இருந்துகிட்டு கடங்காரங்களா ஆக்குனவனுவ.".... தொடர்ந்தான்...

" எலேய் ஒனக்கு ஒண்ணு தெரியுமா? காங்கிரசு கட்சிதான் சொதந்தரம் வாங்கி குடுத்தின்னு காலங்காலமா புளுவிக்கிட்டு இருக்கானுவளே, அந்த காங்கிரசு கட்சிய ஆரமிச்சது ரெண்டு வெள்ளைக் காரனுவதான் தெரியுமா?"

"சரிதான் பங்காளி! அந்த ரெண்டு வெள்ளைக்காரனுவளும் நம்ம சனங்கமேல அக்கறை வெச்சிக்கூட கட்சிய ஆரமிச்சி இருக்கலாம்லடா?"

"ஒன்னமாரி நெறைய புண்ணாக்குங்க அப்பிடித்தாண்டா நம்பிகிட்டு இருக்கானுவ. அது இல்லடா சங்கதி. அன்னிக்கு நெலமையில நாட்டுல இருந்த கொதிப்ப அடக்குறதுக்காவயும், நம்மளமாரி வக்கத்த சனங்க பாட்டுக்கு சமதர்மம், சமத்துவம்னு கெளம்பிரக்கூடாதுன்னு வெளிநாட்டு கொள்ளக்காரனுவ உள்நாட்டு கொள்ளக்காரனுவகூட சேந்து படம் காட்டுறதுக்கு ஆரமிச்ச கட்சிதாண்டா அந்தக் கட்சி. அப்ப ஆரமிச்ச கள்ளக்கூட்டு இப்ப வரைக்கிம் தொடருதுடா. அணு ஒப்பந்தம் போடுறேன் பேர்வழின்னு அமெரிக்காக்காரங்கிட்ட நாட்ட அடமானம் வெச்ச பயலுவடா. இன்னொன்னு யோசிச்சிப் பாரு. உ.பி, ம.பி, ராஜஸ்தான், அப்டீன்னு இந்தி பெல்ட்டு மாகாணம்பூரா இந்தப் பயலுவளும், நம்ம கலைஞரு ஒருவாட்டி சொன்னாரே 'பண்டாரம் பரதேசிங்க'ன்னு அந்த பிஜேபிகாரனுவளுந்தான் ஆட்சி நடத்துனானுவ. எந்த மாகாணமாச்சும் வெளங்கி இருக்காடா? தமிழ்நாட்டை விட முப்பது வருசம் பின்னுக்கு நிக்கிதுங்களாம் அனாதப்புள்ள மாரி."

"சரிடா நீ என்னதான் சொல்ல வார கடேசியா? காங்கிரசுக்காரனுவள வர உடலாமா வேண்டாமா? ஒத்த வார்த்த சொன்னாலும் நெத்தியடியாச் சொல்லு"

"எலேய் கூமுட்ட! இவனுவ தமிழ்நாட்டுல கொஞ்சூண்டு கைய ஊனி எந்திரிச்சானுவன்னு வைய்யி, தமிழ்நாட்டுல ஒவ்வொருத்தனும் காலையில பேளப்போவணுமா வேண்டாமான்னுகூட டெல்லிக்கு தந்தியடிச்சித்தான் கேக்கணும்பானுவ. இருக்குற எரநூத்தி முப்பத்துநாலு கோஷ்டியும் ஆளாளுக்கு நாந்தான் மொதலமைச்சருங்கிறமாதிரி நாட்டாமை பண்ணுவானுவ. எவன் நாட்டாம பண்றதுன்னு யாருக்கும் புரியாம இருந்தா அந்த ஊரு வெளங்குங்கிற? கெடச்ச கேப்புல அறுவது சீட்டு கேக்குறப்பயே அதுக்கு எனக்கு பத்து, ஒனக்கு பதினஞ்சின்னு கொரங்கு அப்பம் பிரிச்ச கதையா ஒவ்வொரு கோஷ்டியும் அடிச்சிக்கிறானுவ. இவனுவளுக்கு ஓட்டுப்போட்டு ஒக்காரவெச்சி செதம்பரம் பத்துநாளு, வாசன் இருவது நாளு, எளங்கோவன் ஏழரை நாளு, தங்கவாலு மூனேமுக்கா நாளுன்னு வெதவெதமா மொதலமைச்சர பாக்கணும்னு நமக்கு தலையெழுத்தா என்ன?"

"ம்ம்ம்ம்....." என்றேன்.

"அவளத் தொடுவானேன் கவலப் படுவானேன் கச்சேரி வாசல்ல கைகட்டி நிப்பானேன்! போடா வேலைய பாத்துக்கிட்டு" என்றவன் எருமை மாடுகளை ஓட்டிச்செல்ல  ஆரம்பித்தான்.

இங்கே போய் இன்னொரு தேர்தல் 2011 ஸ்பெஷலைப் பாருங்கள். அக்மார்க் கேஆர்பி குசும்பு...!

11 பேரு கிடா வெட்டுறாங்க:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இன்னைக்கு கெடாவெட்டு சூப்பருங்கோ!!!

ஜோதிஜி சொன்னது…

நம்மாளு இருக்காரே, வெசமம் புடிச்ச மனுசண்டா. திருமா, குருமா எல்லாத்துக்கும் பிச்சிப்பிச்சி குடுத்துட்டு மிச்சத்த கையில வெச்சிக்கிட்டு என்னா அருமயா டகால்டி வேல காட்டுறாரு. அந்தா இந்தான்னு இப்ப அறுவது வந்தாக்கா போதும்னு நெனக்கிறானுவ. கடேசி வரைக்கும் பூச்சாண்டி காட்டிட்டு கட்டக்கடேசிய இவனுங்கள தண்ணிதெளிச்சி வெரட்டி உட்டா எத்தினி தொகுதியில டெபாசிட்டு வாங்குவானுவோன்னு தெரியலடா

இவ்வளவு திறமையை இத்தனை நாளாய் ஏன் ராசா ஒழித்து வைத்திருந்தாய்?

ஜோதிஜி சொன்னது…

இவனுவ தமிழ்நாட்டுல கொஞ்சூண்டு கைய ஊனி எந்திரிச்சானுவன்னு வைய்யி, தமிழ்நாட்டுல ஒவ்வொருத்தனும் காலையில பேளப்போவணுமா வேண்டாமான்னுகூட டெல்லிக்கு தந்தியடிச்சித்தான் கேக்கணும்பானுவ. இருக்குற எரநூத்தி முப்பத்துநாலு கோஷ்டியும் ஆளாளுக்கு நாந்தான் மொதலமைச்சருங்கிறமாதிரி நாட்டாமை பண்ணுவானுவ. எவன் நாட்டாம பண்றதுன்னு யாருக்கும் புரியாம இருந்தா அந்த ஊரு வெளங்குங்கிற?

%%ஜுஜ% வாயில கெட்ட வார்த்தையா வருதுப்பா..

ராஜ நடராஜன் சொன்னது…

தங்கராசு வெவரமான ஆளு போல தெரியுதே.தெறம பளிச்சுடுது.

வானம்பாடிகள் சொன்னது…

பலே தங்ராசு.

பெயரில்லா சொன்னது…

தே.. மடம் போன்ற சாடல் சொற்களை பெண்ணிய நோக்கில் தவிர்த்திருக்கலாம்!

ராஜவம்சம் சொன்னது…

எத்தனையோ தியாகிகள் உண்மையாக உளைத்துப்பெற்ற சுதந்திரம் இன்று ஒரு குடும்பத்துக்கு மட்டும் உபயோகமாக இருக்கு என்றால் அது காங்கிரஸ் குடும்பம் மட்டும் தான்.

நேரு குடும்பம் சுதந்திரத்திரத்துக்காக இழந்தது என்ன என்ற கேள்விக்கு யாராவது பதில் சொல்வார்களா?

பெற்றது என்னன்னு கேட்டா பெரிய பட்டியலே போடலாம்.

இராமசாமி சொன்னது…

நல்ல பேசுறாங்கப்பா டிடெயிலு... செம செம‌

பெயரில்லா சொன்னது…

கலக்கல்.

பொதுவாக திராவிட கட்சி ஆட்சிகளை விமர்சிப்பவர்கள், ஏனைய இந்திய மாநிலங்கலுடன் ஒப்பிட்டால், தமிழகத்தின் இன்றைய முன்னேற்றத்திற்கு இந்தக் ஆட்சிகளின் பங்களிப்பை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். இவர்களின் ஊழல் மறுக்க முடியாத ஒன்றுதான். ஆனால் தேசிய கட்சிகளும் ஊழ்ல் செய்வதில் குறைந்தவர்கள் அல்லவே

விக்கி உலகம் சொன்னது…

ok ok

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

நண்ப...
உங்கள் எழுத்து எல்லாத் தடங்களிலும் நன்கு பயணிக்கிறது...தொடர வாழ்த்துக்கள்.

டெல்லி மாடுகளுக்கு சவுக்கடி.
உள்ளூர் பன்றிகளையும் விடாதீர்கள்.

Related Posts with Thumbnails