தன்னுடைய 'அரசியல்' என்ற புத்தகத்தில் அரிஸ்டாட்டில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
"Hence it is evident that the state is a creation of nature and that man by nature is a political animal."
மனிதன் எப்போதும் ஒரு சமூகவிலங்காகவே தன் இருப்பை உறுதி செய்கிறான். சமூகத்தின் ஏனைய உறுப்புகளில் இருந்து அவன் என்ன பெறுகிறான்; அவன் என்ன திருப்பித் தருகிறான் என்பதில் இருந்தே அவனது இருப்பு அர்த்தமுள்ளதாகிறது. மேலும் வரலாற்றின் பக்கங்களில் அவனது வாழ்வும் இந்தக் கொடுக்கல் வாங்கல்களாலேயே பதிவு செய்யப் படுகிறது.
நாம் ஒவ்வொரு வகையிலும் சுற்றியிருப்போரை இறைஞ்சிக் கொண்டே இருக்கிறோம்; அவர்களது அன்பை, நமக்கான அங்கீகாரத்தை, காதலை, மெல்லிய அழுத்தத்தில் ஆறுதல் தரும் விரல்களை... என நம் ஏக்கங்களின் பட்டியல் மிக நீளமானது இல்லையா?
என்னைப்பார்! என் அழுகையை, ஆனந்தத்தை,வெற்றிக்களிப்பை, வெறுமையின் துயரத்தைப் பார்! என ஒவ்வோர் உயிரும் புலம்பிக் கொண்டே இருக்கின்றது.... பல சமயங்களில் மௌனமாகவே!
நம் இலக்கியங்களின் ஊடுபொருளாய் உறைந்திருப்பது எல்லாமே இந்த இறைஞ்சுதலாகவே இருப்பதாக எண்ணுகிறேன் நான்.
என் கவிதையொன்றில் இதைத்தான் நான் வடிக்க முயன்றேன்....
"உற்றுக் கேட்கிறேன்
யாரோ யாரையோ அழைக்கிறார்கள்
மௌனமாக...
ஆனால்
பலமாக...
யாரும் யாரையும்
கவனிக்கவில்லை
அவரவர் கவனம்
அவரவர் அழைப்பில்...
அவரவர் அழுகையில்...
இருந்தும் யாரோ யாரையோ
அழைத்துக்கொண்டே
இருக்கிறார்கள்"
பெறுவதும், தருவதுமாய் இருக்கும் உறவுகளில் காதல் எப்போதுமே தன் தனித்துவத்தை நிறுவிக்கொண்டே இருக்கிறது.
காதலின் கணங்கள் நம் வாழ்வில் கடக்கும் தருணங்கள்....
அவனுக்குள்ளிருக்கும் பெண்ணை அவளும், அவளுக்குள்ளிருக்கும் ஆணை அவளும் பரிமாறிக்கொள்ளும் அற்புதப்பொழுதுகள்...
புதையலைப்போல நம்முள் புதைந்திருக்கும் காதல் தோண்டியெடுக்கப்படும் காலத்திற்காய் காத்திருக்கும் கணங்கள்...
காதல்கொடி ஒரு சிறு தளிராய் நம்மீது படரத்துவங்கினாலும் மின்னற்பொழுதில் அது நம்மை முழுதாய் மூடிக்கொள்கிறது. நம்மைப் புசித்து நமக்கே பசியாற்றுகிறது!
"எப்போதும்போல
பத்து விரல்கள்தான்
ஆனால் எப்போது
என் வலது கையும்
உன் இடது கையும்" ( பூமா.ஈஸ்வரமூர்த்தி)
பத்து விரல்களால் பயணக்கட்டுரை வடிக்கும் காதலில் ஐந்து விரல்கள் அறுபட்டுப்போனால் எஞ்சுவது வெறுமை மட்டுமே!
காதலை இழந்தவனது கனவுகளில் இருள்கூட இல்லாத சூன்யத்தை எப்படி விளக்கலாம்?
பாலருந்தும் குழந்தையை இழந்து, முலைப்பால் கட்டி வலியில் துடிக்கும் தாயின் வேதனையைப் பார்த்திருக்கிறீர்களா?
இழந்துபோய் இருப்பவனிடம் இந்த உலகம் எதைப் பெற முடியும்? எதை வேண்டிக்கேட்க முடியும்? இந்தக் கவிதையைத் தவிர?!
( கவிதையைப் பரிசளித்தவர் செந்தூரம் ஜெகதீஷ் )
இருப்பதைக் கேட்டால்...
இருப்பதைக் கேட்டால்
அதில் ஒரு சிறு பகுதியைப் பகிரலாம்
இருப்பதோ கனவுகள்
கண்களிலிருந்து அதை
கடத்துவது எப்படி?
இன்னும் உள்ளன
சில ஆறாத ரணங்கள்
மறவாத நினைவுகள்
சில துளிகளாவது கண்ணீர்
அதிலிருந்து உனக்கு என்ன கிடைக்கும்?
வானவில்லின் ஒரு நிறம்
மலரின் ஒரு மென் இதழ்
அதன் நறுமணத்தின் சிறுநுகர்வு
காற்றின் ஒரு அசைவு
நதியின் சிறு சுழல்
மலையின் மௌனங்களில்
எப்போதோ கேட்கும்
ஓர் எதிரொலி
தனிமையின் தவிப்பில்
எழுதிய கவிதையின் வரி
இழந்த காதலின் ஒரு கணம்
இவைதான் என்னிடமிருப்பவை
அதிலிருந்து உன்னுடைய உலகை வர்ணம்
தீட்டவோ
அதை மணக்கச் செய்யவோ
தென்றலில் ஊஞ்சலாட வைக்கவோ
புதுவெள்ளப் பெருக்காக்கவோ
உன் கேள்விக்கெல்லாம்
பதிலுரைக்கவோ
இயலாது என்னால்.
தரலாம்
என் துயரங்களை
உருகவும் நெகிழவும் நீ தயார் எனில்.

10 பேரு கிடா வெட்டுறாங்க:
வாழ்வின் துயரம் காதல்தால்,
நட்போ, உறவோ இனைந்தாலும், பிரிந்தாலும் வலி மறக்கும் மனது, காதலில் மட்டும் ஏன் இப்படி உடைந்த கண்ணாடி துண்டுகளாக பல முகங்களை துயரமாய் காட்டுகிறது..
பிரமாதமான எழுத்து... என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை ...
மன்னிக்கவும் வாழ்வின் துயரம் காதல்தான் என்று வந்திருக்க வேண்டும்...
முழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/
வாழ்க்கையின் வெறுமையின் பக்கங்களை கணநேர காதலின் நினைவுகளால் நிரப்பியிருக்கிறது கவிதையும், எழுத்தும்.
காதலே ஆனாலும், அதை எப்போதும் இறைஞ்சிக்கொண்டே இருந்து சுயம் தொலைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
தமிழை தமிழாய் தட்டச்சு செய்பவர் ராஜாராமன் தான் என்பது தமிழ் வலையுலகில் நான் கவனித்தது.
@கே.ஆர்.பி.செந்தில்
வழக்கம்போல என் கிரியா ஊக்கியாய் இருக்கும் அண்ணனுக்கு நன்றி சொன்னால் போதுமா?
@Rathi
நீங்கள் என் பதிவைப் படிக்கிறீர்கள் என்ற மகிழ்ச்சியை என்னால் எப்படி விவரிப்பதென்று எனக்குத் தெரியவில்லை... நன்றி
//காதலே ஆனாலும், அதை எப்போதும் இறைஞ்சிக்கொண்டே இருந்து சுயம் தொலைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. //
இது இறைஞ்சுதலை அல்ல... இழந்துபோனதன் வலியை எழுதும் முயற்சி என்றே கருதுகிறேன்... காலப்போக்கில் வலி நீங்கி தழும்புகள் எஞ்சலாம் அல்லவா?
//தமிழை தமிழாய் தட்டச்சு செய்பவர் ராஜாராமன் தான்//
மிக்க நன்றி சகோதரி
//நீங்கள் என் பதிவைப் படிக்கிறீர்கள் என்ற மகிழ்ச்சியை என்னால் எப்படி விவரிப்பதென்று எனக்குத் தெரியவில்லை... நன்றி//
I feel honoured.
//இது இறைஞ்சுதலை அல்ல... இழந்துபோனதன் வலியை எழுதும் முயற்சி என்றே கருதுகிறேன்... காலப்போக்கில் வலி நீங்கி தழும்புகள் எஞ்சலாம் அல்லவா?//
வலியும், தழும்புகளும் மட்டுமே வாழ்க்கை என்றாகி விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் சொன்னேன், ராஜாராமன்.
எழுத்து மெருகேறிட்டே போகுது .
வாழ்த்துகள்
காதலும் தந்து
பறக்கும் தட்டும் தந்துள்ளதுபோல ஒரு பதிவு !
last kavithai super
கடவுளும் நானும் என்ற தலைப்பில் உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்...
http://rasikan-soundarapandian.blogspot.com/2010/08/blog-post_09.html
கருத்துரையிடுக