புதன், 1 செப்டம்பர், 2010

எழுத நினைக்கும் காதல்கடிதம்...


உனக்கு ஒரு கடிதம் எழுத ஆசை தோழீ!
அதன் வார்த்தைகளில் வழியவேண்டும்
உலகின் மொத்தக் காதலும்...
உன் மனதின் எளிமையான அழகும்...

கடிதத்தை நீ வாசிக்கையில்
"அட! திருட்டுப்பயலே!"
முறுவலிப்பும் முணுமுணுப்பும்
என் வார்த்தைக் குழந்தைகளுக்கு
நீ வார்க்கும் முலைப்பாலாய் வேண்டும்

வார்த்தைகள் காதலிடமும்
காதல் உன்னிடமும்
சரணடைவதாய் இருக்கவேண்டும்

எப்போதாவது உரசிச்செல்லும்
உன் கூந்தலின் ஒற்றைமுடியைப்போல்
மென்மையானதாகவும்...

என் பேனா முனையின் முதற்புள்ளியோ
எப்போதும் ஆர்ப்பாட்டங்களுடனேயே
முனைமுறிந்து விடுகின்றது...

இடுக்குகளில் எப்படியோ நுழைந்து விடுகின்றன
என் பகட்டும் அறிவின் திமிரும்....

பேசாமல்...

உனக்கான என் கடிதத்தை நீயே
எழுதிவிடேன்!

5 பேரு கிடா வெட்டுறாங்க:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

எனக்கும் ஆரம்பத்துல இப்படிதான் இருந்துச்சு.. போகப் போக என் கடிதம் எதிர் பார்த்து காத்திருக்க வைத்தேன். எப்படின்னு உங்களுக்கு வகுப்பு எடுக்கவா?

என்னது நானு யாரா? சொன்னது…

//கடிதத்தை நீ வாசிக்கையில்
"அட! திருட்டுப்பயலே!"
முறுவலிப்பும் முணுமுணுப்பும்
என் வார்த்தைக் குழந்தைகளுக்கு
நீ வார்க்கும் முலைப்பாலாய் வேண்டும்//

அப்படி ஒரு ஆளுமையை தான் பெண்கள் விரும்புகின்றார்கள் என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

--------------------------------------------

புதுசா இயற்கை மருத்துவ செய்திகளை எழுதி இருக்கேனே. நம்ப பககம் வருவீங்க இல்ல?

parthasarathy சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிவராம்குமார் சொன்னது…

ரசனைப்பா.... நல்லா இருக்கு...

...........enthisai.......... சொன்னது…

வார்த்தைகள் காதலிடமும்
காதல் உன்னிடமும்
சரணடைவதாய் இருக்கவேண்டும்
.....excellent

Related Posts with Thumbnails