வியாழன், 16 செப்டம்பர், 2010

உடுக்கை இழந்தவன் கைபோல...என் முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் "எனக்கான மனிதர்கள் இல்லாமல் போய்விடவில்லை எனும் நம்பிக்கை ஊற்றெடுக்கின்றது" என்று எழுதியிருந்தேன். எழுதி இருபத்திநாலு மணி நேரத்துக்குள் என் வாழ்வில் இதுவரை சந்திக்க நேரிடாத ஒரு பிரச்சினையை சந்திக்க நேர்ந்தது. அவமானத்திலும், வேறேதும் உதவிகளற்ற நிலையிலும் குறுகிப்போயிருந்த நேரத்தில் தமிழ் வலையுலகின் இரண்டு முக்கியப் பதிவர்களைத் தொடர்பு கொண்டேன், கிடைத்த ஓரிரு நிமிட இடைவெளியில்.

அதில் ஒருவர் தமிழ்சினிமாவின் நாளைய நட்சத்திரம். மற்றொருவர் தமிழக அரசியலில் செல்வாக்குப் பொருந்திய மனிதர். நான் இதுவரை ஒரே முறை மட்டுமே சந்தித்தவர்.

நானோ எனது வாழ்வில் அடுத்தடுத்து பல இழப்புக்களைச் சந்தித்து மனவலிமையும், பணவலிமையும், உடல்வலிமையும் குன்றி கண்ணீரோடும், மிச்சமிருக்கும் நம்பிக்கையோடும் எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு சராசரி மனிதன்.

அவர்கள் உதவி மட்டும் எனக்கு அந்த சமயத்தில் கிடைத்திராவிட்டால்... கற்பனை செய்யவே நெஞ்சம் பதறுகின்றது. இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போது என் விரல்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

என் பிரச்சினை என்னவென்றும், அந்தப் பதிவர் நண்பர்களுக்கு நன்றி கூறியும் எழுதவேண்டும் என்று என்னுள்ளம் பொங்குகின்றது. 'வலக்கை கொடுப்பது இடக்கை அறியக்கூடாது' என்ற பெருந்தன்மை கொண்ட இருவரும் மறுத்துவிட்ட காரணத்தால் விரிவாக தற்போது எழுத இயலவில்லை. நிச்சயம் ஒருநாள் எழுதுவேன்.

வெறுமனே நன்றி என்ற வார்த்தையின் போதாமையை நான் என் வாழ்வில் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நேற்று மிகவும் அதிகமாகவே... 'நன்றி' என்பதைவிட தமிழில் அடர்த்தியான வார்த்தை ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்.

"அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்
அல்லல் உழப்பதாம் நட்பு"- குறள்  (787)

10 பேரு கிடா வெட்டுறாங்க:

Rathi சொன்னது…

காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்.

வெறும்பய சொன்னது…

எல்லா காயங்களுக்கும் மருந்துகள் உண்டு...

என்னது நானு யாரா? சொன்னது…

தெய்வம் எல்லோருக்கும் நல்ல வழி காட்டும்! மனம் தளாராதீர்கள் நண்பரே!

காலம் ஒரு நாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்!!

மனதில் இந்த வரிகளை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்

ஹேமா சொன்னது…

விந்தையாரே...வாழ்க்கை என்பதே நிறைந்த பிரச்சனையும் கொஞ்சமான சந்தோஷமும்தான்.
எதிர்க்கும் தைரியம் மட்டும் இருந்துவிட்டால் எதுவுமே பாதிக்காது.தைரியமாயிருங்கள்.

விந்தைமனிதன் சொன்னது…

நண்பர்களே! நன்றி... ஒரு விஷயம்... இந்த இடுகையின் நோக்கம் ஆறுதல் பெறுவதல்ல. வலையுலக நட்பு எந்த அளவு பிரதிபலன் எதிர்பார்க்காமல் தோள்கொடுக்கின்றது என்பதைக் காட்டவும், எனக்கு சரியான சமயத்தில் கைகொடுத்த அந்த நண்பர்களின் நல்லுள்ளங்களை அடையாளம் காட்டவும்தான்.

உங்கள் ஆறுதல் வார்த்தைகள் எனக்கு கூச்சத்தைத் தருகின்றன. வேறொன்றுமில்லை நண்பர்களே!

அரபுத்தமிழன் சொன்னது…

முஸ்லிம்கள், இறைவன் உமக்கு நற்கிருபை செய்வான் (ஜஸாக்கல்லாஹு கைரன்), அதாவது இதற்குக் கைமாறாக உமக்குத் தேவையான உதவியை இறைவன் செய்ய வேண்டும் ஆமீன் என்று சொல்லுவோம்.வெறும் நன்றி அல்லது Thanks சொல்வது எதிராளியை திருப்தி படுத்துமேயன்றி வெறொன்றும் அதனால் பய‌னில்லை

அர. பார்த்தசாரதி சொன்னது…

கண்ணு , நீ அட்டகாசமான வியாபாரி , கொஞ்சம் பிளான் பண்ணு , எல்லோரையும் நம்பாத , எத்தனை வருசமா சொல்றேன் , உன்னோட தனித்துவத்த எப்பவும் விடாத , வருவோம்டா ,ங்கொய்யால

வால்பையன் சொன்னது…

அந்த நண்பர்களுக்கு என் நன்றிகளும்!
சக மனிதர்கள் மேல் அக்கறை உள்ள மனிதம் உள்ள வரை உலகம் இருக்கும்!

சிவராம்குமார் சொன்னது…

நமக்கு உதவி செய்ய தெய்வம் நேரா வர்றது இல்லை! மனுஷங்க ரூபத்திலே வருவாங்கன்னு சொல்லுவாங்க!

பெயரில்லா சொன்னது…

// அதில் ஒருவர் தமிழ்சினிமாவின் நாளைய நட்சத்திரம். மற்றொருவர் தமிழக அரசியலில் செல்வாக்குப் பொருந்திய மனிதர்

//

ஜாக்கி சேகரும்,அப்துல்லா அண்ணனுமா??

Related Posts with Thumbnails