புதன், 8 செப்டம்பர், 2010

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு...8/09/10


இந்தவாரம் அரட்டைக் கச்சேரிக்கு மேட்டர் தேடிட்டு இருந்தா.... அடங்கொப்புரான கண்ணுல படறது பூரா அநியாயமா இருக்குய்யா... வரிசையா படிச்சிட்டு நீங்களும் கொஞ்சம் வயித்தெரிஞ்சிட்டு போங்க சாமீ

1) வாயத் தொறந்தா வில்லங்கமா கொட்டுதுய்யா நம்ம மண்ணுமோகனுக்கு.... ஸ்பெக்ட்ரம் வெவகாரத்தைப் பத்தி பெரதமரு பேப்பர் பாத்துத் தான் தெரிஞ்சிகிட்டாராம்.... அதுக்கு மின்னாடி தெரியாதாம்... ஒருவேள மந்திரிசபை மீட்டிங்ல மத்தியான சாப்பாடு அதிகமாயி தூங்கிட்டே இருந்திருப்பாரோ?! கேக்குறவன் கேணையனா இருந்தா கேப்பையில நெய்யி வடியுதுடாம்பாங்க... கஷ்டகாலண்டா சாமீ

மக்கிப் போவப்போற அரிசியயும், கோதுமையயும் கஞ்சிக்கு வழியில்லாத மக்களுக்குக் கொடுத்தா வெவசாயி மனரீதியா பாதிக்கப் படுவானாம்... இது இவரு உதுத்த இன்னொரு முத்து... அடப்பாவியளா... விதர்ப்பாவுலயும், ஆந்திரத்துலயும் நாண்டுகிட்டு செத்த பயலுவ பூரா பொழுதுபோவலன்னு செத்து செத்து வெளையாடுனாங்கன்னு எப்படா சொல்லப் போறீங்க?
An election is coming.  Universal peace is declared, and the foxes have a sincere interest in prolonging the lives of the poultry.  ~George Eliot, Felix Holt,

2) அய்யா வாங்க, அம்மா வாங்க, ஆப்படிக்கறதுக்குன்னே பொறப்பெடுத்த அண்ணாச்சி வாங்கன்னு ஊருலெ வெள்ளவேட்டி கட்டுன முன்னாள், இந்நாள், வருங்கால மாண்புமிகு(?!)க்கள் எல்லாரையும் மாஞ்சி மாஞ்சி பொண்ணு கல்யாணத்துக்கு கூப்டாரு சூப்பர்ஸ்டாரு.ரசிகருங்க வந்தா மட்டும் கூட்டம் அதிகமாவும், போக்குவரத்து நெரிசலாவும்னு புதுசா ஞானம் வந்துடிச்சாம். பாபா படப்பொட்டிய பாமக காரங்ககிட்ட இருந்து காப்பாத்துற போராட்டத்துல வாங்குன அடி ரசிகருங்களுக்கு ஒடம்புல மட்டும்தான் விழுந்துருக்கும்... இப்போ? "மொத பந்திக்கு நானும் மொய்ப்பணத்துக்கு எங்கண்ணனும்"னு எங்கூர்ல ஒரு சொலவடை சொல்வாங்கப்பா.

3) சிந்து சமவெளின்னு ஒரு படம் வெளிவந்து சக்கப் போடு போடுதுப்பா. மாமனாரு மருமவ கள்ளக்காதல ரொம்ப 'அழகா' காட்டி கடேசில நீதி வேற சொல்றாராம் டேரக்டரு 'சரோஜாதேவி' கதைப் புஸ்தகம் மாதிரி! ஊருல ஒலகத்துல நடக்காததயா நாஞ்சொல்லிட்டேன்னு  டேரக்டரு அனல்பறக்க பேட்டியெல்லாம் குடிக்குறாரு... ஹ்ம்ம்... காமத்தையும் காதலையும் ஒரு கலையா, முறையா அணுகப்படவேண்டிய விஷயமா பாத்த ஒரு பழம்பெரும் நாகரீகம் எப்டியெல்லாம் பாலியல்வறுமைல சிக்கிச் சீரழியுது பாருங்க. பெண்ணுடல் சுவைக்கப்படமட்டுமே.. அது மூடிவைத்துப்பொத்திப்பாதுகாக்கப் படவேண்டியது அப்டீன்ற விக்டோரியன் கலாச்சாரத்துல சிக்கி இன்னிக்கு ஜட்டி வெளம்பரத்துல இருந்து பாடிஸ்ப்ரே வரைக்கும் பொம்பளப்புள்ளய அரகொறையா ஆடவுட்டுத் தான் வெளம்பரப் படுத்துறாங்க... ஆபாசப் பாட்டுக்கு பள்ளிக்கோடத்துல டான்ஸ் ஆடறதுல ஆரம்பிச்சி... ஹீரோ ஹீரோயின கிண்டல் பண்றப்ப விசிலடிக்கறதுல வளந்து எல்லா இளைய தலைமுறையும் காமச்சேத்துல மூழ்க ஆரம்பிச்சி மூணாவது தலைமுறை ஆயிடிச்சு அநேகமா. இந்த லட்சணத்துல பாலியல் கல்வியப் பத்தி பேசுறப்ப மட்டும் கலாச்சாரம் ஞாவகத்துக்கு வந்துடுது நம்ம பெற்றோர்களுக்கும், பெரிய மனுஷங்களுக்கும்.
A widespread taste for pornography means that nature is alerting us to some threat of extinction.  ~J.G. Ballard,

4) நெட்ல மேஞ்சுகிட்டு இருந்தப்ப "எலக்கியம் படைக்கிறது எப்டி"ன்னு செம நக்கலா நம்ம அண்ணன் பாலபாரதி ஒரு பதிவுல கலாய்ச்சிருக்காரு பாருங்க! அவரு 'சமைச்சி'ருக்குற ஒரு கவித...அடடா... எலக்கியத்தரம்னா இதாண்டான்னு நெத்தில அடிக்கிறாருய்யா. நீங்களும் படிச்சிப் பாருங்க

http://blog.balabharathi.net/?p=669

"கலையும் இலக்கியமும் மக்கள் தங்களோட அறிவுத் தேடலை விரித்துக் கொள்ளவும் பிரச்சினைகளுக்குத் தீர்வை நாடிச் செல்லவும், ஆசுவாசப் படுத்திக் கொள்ளவும் மட்டுமே" அப்டீன்னு எங்கியோ படிச்சேன். சுருக்கமாச் சொன்னா "கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே" அப்டீங்குற முழக்கத்த ஆதரிக்கிறவன் நான். மக்கள வுட்டுப் புட்டு என்ன மயித்துல எலக்கியம் வாழுது? தூய இலக்கியம், புண்ணாக்குன்னு ஜல்லியடிக்கிற எலக்கியவியாதிகளுக்கு சொம்படிச்சாத்தான் இண்டலக்சுவல் குரூப் மெம்பரா காட்டிக்க முடியும்னு இணையத்துல நெறய மக்கள் சொறிஞ்சிகிட்டே திரியிறாங்க... வாய்ப்பிருக்குறவங்க எப்பவாச்சும் கல்யாண்ஜியோட "இவனைப்போன்ற கவிதை" அப்டீங்கிற கவிதைய வாசிச்சிப் பாருங்க... மத்தவுங்களுக்கு.. கூடியசீக்கிரம் "கவிதைப்பார்வை"யில அந்தக்கவிதைய எழுதலாம்னு இருக்கேன். இந்தமாதிரி உணர்வுப்பூர்வமா அழகியலோட  இருக்குற கவிதையெல்லாம் பாக்குறப்ப நானும் கவிதைங்குற பேர்ல கிறுக்கிட்டு இருக்கேனேன்னு வெக்கமா இருக்கு சாமீ! என்ன பண்றது... "சீமான் வூட்டு நாயி சிம்மாசனம் ஏறுதுன்னு வண்ணான் வூட்டு நாயி வெள்ளாவியில ஏறிச்சாம்!"

5) இந்த "அரட்டைக்கச்சேரி" தொடர்ல அரசியல் பத்தி நெறைய எழுதலாம்னு ஒரு நெனப்புல தான் மொதல்ல ஆரம்பிச்சேன்... ஆனா அரசியலப் பத்தி விமர்சனம் மட்டும் பண்ணிட்டு "நானும் பெர்ரீய தேசநேசன்"னு சீனப் போட மனச்சாட்சி எடம் கொடுக்கல. தமிழ்நாட்டுல திமுக, அண்ணா திமுக, பாமக, மதிமுக, காங்கிரசு, பாசக வகையறாக்களைத் தவிரவும் வேற தீவிர அரசியல் இயக்கங்கள் இருக்குங்குற விஷயம் நெறய இளம் தலைமுறையினருக்குத் தெரியல. தெரிஞ்சு வெச்சுக்கிட்டு சும்மா வெட்டி ஞாயம் மட்டுமே பேசிட்டு இருக்குற ஜந்துக்கள்ள நானும் ஒருத்தனா இருக்கேன்.  எத்தன பேருக்கு ம.க.இ.க, பெரியார் தி.க, தமிழர் தன்மான இயக்கம், தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சி மாதிரியான இயக்கங்களோட செயல்பாடு தெரியும்? இவங்கமேல எவ்வளவோ விமர்சனம் இருக்கலாம்... அவங்க கொள்கைகளோட நமக்கு உடன்பாடு இல்லாம இருக்கலாம்... ஆனா இப்படியும் ஒருவிதமான அரசியல் இருக்கு.. இதே மாதிரி ஒரு குடிமகனா நாமும் நம்மோட அரசியல்கடமைய பண்ண வக்கில்லாம இருக்கோமேன்னு என்னிக்காவது யோசிச்சிருக்கோமா?

'எவனும் சரியில்லப்பா'ன்னு வக்கணை பேசிட்டே தேர்தலன்னக்கி ஓட்டு மட்டும் போட்டுட்டு ( காசு வாங்கிட்டோ வாங்காமலோ), 'விடுமுறைநாள் சிறப்புதின' நிகழ்ச்சியில குட்டைப்பாவாடை டான்ஸ் பாத்துட்டு கவுந்தடிச்சி தூங்குற வழிய பாக்காம ஏண்டா இங்க வந்து இந்த நொண்ணை ஞாயம் பேசிக் கொல்ற?ன்னு கேக்குறீயளா? அதுவும் சரிதான். "Democracy is being allowed to vote for the candidate you dislike least."

6) வழக்கம்போல க்ளைமாக்ஸ்ல கவிதை சொல்றது நம்ம ஸ்டைலாச்சே! அதான் பழைய டைரில பீராய்ஞ்சிட்டு இருந்தப்போ கெடச்சிது இது. கவிக்கோ அப்துல் ரகுமானோட "ஐந்தாண்டுக்கு ஒருமுறை"ங்குற கவிதை

"புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி"

17 பேரு கிடா வெட்டுறாங்க:

ராஜவம்சம் சொன்னது…

பிரிச்சி மேஞ்சிறுக்கீங்ணா.

கலாநேசன் சொன்னது…

//"மொத பந்திக்கு நானும் மொய்ப்பணத்துக்கு எங்கண்ணனும்"//
Super

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

நானும் ஒரு கிடா வேட்டுறேன். அதான் அந்த கிடாவை.

படியுங்கள்:

http://tamilkadu.blogspot.com

என்னது நானு யாரா? சொன்னது…

//An election is coming. Universal peace is declared, and the foxes have a sincere interest in prolonging the lives of the poultry. ~George Eliot, Felix Holt, //

நல்லாத்தான் புடிக்கறீங்க மேட்டரு! எல்லாம் அருமை தான் பங்காளி!

பல விஷய்ங்களை சொல்லி இருக்கீங்க! சந்தோஷமுங்க!

ஜாக்கி சேகர் சொன்னது…

நல்லா இருந்துச்சி...

சிவராம்குமார் சொன்னது…

வறுத்து எடுத்திட்டீங்க!

ஹேமா சொன்னது…

நிறைவான அலசல்.
முடிவுக் கவிதை சூப்பர் விந்தையாரே !

ஜோதிஜி சொன்னது…

பாலபாரதியோட பதிவு படித்தேன். ஆனால் விட மாட்டேன், லேகிய வாந்தியகளைப் பற்றி ஒன்றும் தெரியாத காரணத்தால் என்னால் ஒன்றும் சொல்லத் தெரியாமல் மறுபடியும் இங்கே வந்து விட்டேன்,

மண்ணு மோகன்,

ஒலக வங்கியில வேல பார்த்தபோது கூட இப்படியெல்லாம் கும்முவாங்கன்னு நெனச்சுருப்பாரா?

குட்டைப்பாவாடை டான்ஸ் பாத்துட்டு கவுந்தடிச்சி தூங்குற வழிய பாக்காம ஏண்டா இங்க வந்து இந்த நொண்ணை ஞாயம் பேசி.......

சென்ற தேர்தலில் ரவி பெர்ணார்ட் பேட்டி எடுத்துக் கொண்டுருந்தார், திடீர் என்று பேட்டி கொடுத்துக் கொண்டுருந்தவர் அதெல்லாம் சரிங்க,,, நீங்க எத்தனை தேர்தலில் ஓட்டு போட்டுருக்கீங்கன்னு கேட்க மனிதன் பேய் முழி முழித்துவிட்டார்..

"மொத பந்திக்கு நானும் மொய்ப்பணத்துக்கு எங்கண்ணனும்,,,,,,,,,,,,,

மொத்தத்தில் கலக்க ஆரம்பிச்சுட்டிங்க ராசா,,,,

ஜோதிஜி சொன்னது…

மேலே பட்ட மூச்சு வாங்குது, கொஞ்சம் பாருங்களேன்,

vasan சொன்னது…

(வி)வேக‌மான ப‌திவு. KRP செந்தில் பெருமை கொள்ள‌லாம்.

Rathi சொன்னது…

இந்தியாவின் மன்மோகன் சிங் "Time" பத்திரிகையால் சிறந்த தலைவர்களில் ஒருவராய் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிறாரே. இந்தியர்களுக்கு சந்தோசமில்லையா?

அப்புறமா, தொலைக்காட்சி செய்திகளில் அதிகம் குறிப்பிடப்படாத சில சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். ஓர் ஜனநாயக நாட்டில் இப்படியான வளர்ந்துவரும் அமைப்புகள் பற்றியோ அல்லது அவர்கள் செயற்பாடுகள் பற்றியோ பொது ஊடகங்கள் அதிகம் கண்டுகொள்ளாத அரசியல் புரிந்தாலும், அது சற்றே வேதனைப்பட வேண்டிய விடயம்.

தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் சில ஆக்கங்களை படித்திருக்கிறேன். தமிழ்நாட்டு தமிழனுக்கு எது முக்கியத்தேவை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் என்று எனக்கு படுகிறது.

பதிவுலகில் சிலபேர் இன்னும் எழுதமாட்டார்களா என்று ஏங்க வைப்பார்கள். அப்படி எனக்கு பிடித்த ஒரு தளம் இது. மனிதர் நன்றாகவே எழுதுவார். ஆனால், அதிகம் எழுதுவதில்லை. நேரமிருந்தால் படித்துப்பாருங்கள் ராஜாராமன்.

http://tamizhanban.wordpress.com/

அர. பார்த்தசாரதி சொன்னது…

இன்னும் அலசுங்கள்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தம்பி ரொம்ப நாயம் பேசுறீங்க.. இது தப்பாச்சே ...

விந்தைமனிதன் சொன்னது…

நண்பர்கள் ராஜவம்சம், கலாநேசன், ஆட்டையாம்பட்டி அம்பி, என்னது நானு யாரா?, சிவராம்குமார், vasan, அர. பார்த்தசாரதி ஆகியோருக்கு நன்றிகள்.

மொதோ மொறையா எட்டிப் பாத்த ஜாக்கிக்கும்....

தோழி ஹேமாவுக்கும் நன்றிகள்

கேஆர்பி..... சொல்லணுமா என்ன?!

@ஜோதிஜி

ம்ம்ம்.... ரபி பெர்னார்ட் மட்டுமில்ல தலிவரே... நெறைய பெர்ய மனுசனுவோ அப்பிடித்தான்.... "ஊருக்குத்தான் உபதேசம்"....

அப்புறம் சின்னதா ஒரு வேண்டுகோள்...

ஏதாவது கிராமிய சொலவடைகள் ஸ்டாக் இருந்தா அனுப்பி வைங்க... தேடிட்டு இருக்கேன்...

@ ரதியக்கா

//இந்தியாவின் மன்மோகன் சிங் "Time" பத்திரிகையால் சிறந்த தலைவர்களில் ஒருவராய் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிறாரே. இந்தியர்களுக்கு சந்தோசமில்லையா? //

அக்கா குஷிமூட்ல இருக்கீங்க போல... கிண்டல், நையாண்டி சுளுவா போறபோக்குல பண்றீங்க...

//தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் சில ஆக்கங்களை படித்திருக்கிறேன். தமிழ்நாட்டு தமிழனுக்கு எது முக்கியத்தேவை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் என்று எனக்கு படுகிறது//

கூட்டுக்குடும்பத்துல மானம்,மருவாதி கொறையறப்ப தனிக்குடித்தனம் போறதுதானேக்கா ஒலகவழக்கம்... நெஜமாவே தமிழ்தேசிய பொதுவுடைமைக் கட்சி அந்த விஷயத்துல தெளிவா இருந்தா ரொம்ப சந்தோஷம்க்கா...

அப்புறம் நீங்க அறிமுகப்படுத்திய லிங்க் அருமை.... என்மேல் உங்கள் அக்கறை நெகிழவெக்கிது.... நன்றிக்கா ( நன்றியெல்லாம் இனிமே உங்களுக்கு சொல்லமாட்டேன்னு சொல்லி இருந்தேன்... இந்த ஒரு தடவ மட்டும் சொல்லிக்கிறேன்)

Rathi சொன்னது…

////நெஜமாவே தமிழ்தேசிய பொதுவுடைமைக் கட்சி அந்த விஷயத்துல தெளிவா இருந்தா ரொம்ப சந்தோஷம்க்கா...//

என்ன இப்படி சொல்றீங்கள்?

தமிழ்நாடு இறையாண்மையோடு கூடிய ஓர் தேசமாக இருந்திருந்தால் ஈழத்தில் நாங்கள் அழிந்திருக்கவோ,இன்னும் அழிந்துகொண்டிருக்கவோ மாட்டோம் இல்லையா?

விந்தைமனிதன் சொன்னது…

ஆமாம் அக்கா... தமிழ்நாடு ஒரு தேசமாய் இருந்திருந்தால் நீங்களும் இவ்வளவு பாடுபடத் தேவையில்லை.

தமிழீழம் இருந்திருந்தால் தமிழ்நாட்டுத் தமிழனும் உலகின் எல்லா மூலைகளிலும் உதைவாங்கிக் கொண்டிருக்க மாட்டான்.

...........enthisai.......... சொன்னது…

"மக்கிப் போவப்போற அரிசியயும், கோதுமையயும் கஞ்சிக்கு வழியில்லாத மக்களுக்குக் கொடுத்தா வெவசாயி மனரீதியா பாதிக்கப் படுவானாம்"

he is a prime minister? what a nonsense

Related Posts with Thumbnails