வெள்ளி, 3 செப்டம்பர், 2010

...எனவே எழுதுகிறேன்


'இன்று எப்படியாவது செத்துவிடுவது'  சங்கல்பம் பூண்டிருக்கின்றது மனது. நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்ஸின் வேகங்காட்டிமுள் தொண்ணூறைத் தாண்டி உதறிக்கொண்டிருக்கிறது.ஆல்கஹாலின் எரிச்சல், மனதின் நெருப்பை மேலும் விசிறிவிட்டுக்கொண்டே இருக்கிறது.

''ஏய்! வலிக்குதுடி! ஏண்டி இப்படி கடிக்கிற உதட்ட..."

"உன் உதட்ட கடிச்சாத்தான் எனக்கு முழுசா கிஸ் பண்ண திருப்தியே வருதுடா"

லேசாக ரத்தம் கட்டியிருந்த உதடுகளை மீண்டும் கவ்வினாள்.


இதற்குமேல் முறுக்கினால் அறுந்துபோய்விடுவேன்...ப்ளீஸ்... ஆக்ஸிலேட்டர் வயர் கெஞ்சுவதை முகத்தில் அறைந்தபடி சத்தமிட்டது காற்று. 'நிறுத்தி ஒரு சிகரெட் பிடிக்கலாமா?'. தீக்குச்சியின் ஜோதி ஆனந்தமாய் சிகரெட்டைத் தழுவ 'ஆகா!'

"ப்ளீஸ்டி... சாப்பிடாம இருந்தா ரொம்பவும் முடியாம போகும்டி. இந்த ஓட்ஸையாவது மெல்லமா குடிடா செல்லம்"

"ஏண்டா கொல்ற என்னை... கொஞ்ச நேரம் என்னை தனியாத்தான் விடேன்"

வயிறுமுட்டக் குடித்தபின் ஏதும் சாப்பிடாமலேயே கிளம்பியது நினைவுக்கு வந்து பசியைக் கிளப்பியது. 'ச்சே! இந்த சனியனைக் குடிக்காமலேயே வந்திருக்கலாம்... என்ன எழவுடா இது?'

எந்தப்புள்ளியிலோ கிளைக்கும் நினைவுகள் சட்சடாரென எவ்வளவு வேகமாக மாறிச்செல்கின்றன! மனதை  வேடிக்கை பார்க்கும்போது 'நியூரான், எலக்ட்ரான், எலெக்ட்ரிகல் பல்ஸ்' ... பயாலஜி வாத்தியாரின் கறுப்புச்சட்டை..... தாவிக்கொண்டே.... 'எந்த எலக்ட்ரிகல் பல்ஸ் அவளை தாலிக்கயிற்றுக்குள் தலைநுழைக்கச் சொல்லியது?'

"வயிறு ரொம்ப வலிக்குதுடா... ப்ளீடிங்கும் இந்தவாட்டி அதிகம்... நீ வந்து தடவி விட்டா நல்லாருக்கும்ணு தோணுதுடா...."

"அடிப்பாவி! ஈவினிங்கே மாத்திரை வாங்கித் தரேன்னு சொன்னேனே... ஏதாவது நான் சொல்லி கேக்குறியா நீ? இப்ப என்னடி பண்ணுவேன்?

இருட்டில் திறந்திருக்கும் கடை தேடி வாங்கிவந்த பவண்டோவைக் குடித்தாளா இல்லையா?

"ஹாஸ்டல் தாத்தா திட்டிக்கிட்டே எழுப்பிக் கொண்டாந்து குடுத்தாரு... எனக்கு பிடிக்கவே இல்ல... சீக்கிரம் வீடு பாருன்னு சொன்னா ஏண்டா கேக்க மாட்ற?"

ம்ம்ம்... நேற்றிரவு படித்த வரிகள் மனதில் ஏனோ ரீங்கரிக்கத் தொடங்கின... புத்தகங்கள் திறக்கும் உலகம் நிஜமாகவே அலாதியானதுதான்... ஆங்...! என்ன வரிகள் அவை...? மூளையின் நரம்புகள் லேசாகச் சிணுங்கிக் கொண்டே பிறாண்ட...

"வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கைதான்... என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு மனிதனாக இருப்பதும்...."

'சைபீரியச் சிறைவாசத்தின் கொடுங்கரங்களுக்கிடையிலும் எப்படி முடிந்தது தாஸ்தாயெவ்ஸ்கியால் இவ்வரிகளை எழுத! என்னாலும் தாஸ்தாயெவ்ஸ்கியாய் மாறமுடிந்தால்?' கொடுத்து வைத்தவன்! காதல் உயிரோடு இருக்கும்போதே செத்துப்போய் விட்டான்.. ஏன் எழுதமாட்டான்?

ஹெட்லைட் வெளிச்சத்தைக் குறைக்காமலேயே கடந்துசென்ற சக்கரங்கள் ஏக்கத்துடன் கடக்கின்றன. 'இன்னும் கொஞ்சம் குடித்திருந்தால் நன்றாயிருந்திருக்குமோ?'

"ஏண்டி.. உன் போர்வைய மட்டும் துவச்சி வச்சிட்டு என் போர்வைய தூக்கி குப்பைக் கூடையில போட்ருக்கே? என்ன நெனச்சிட்டு இருக்கே?"

"கத்தாதேடா அழுக்குப்பயலே! அவ்ளோ நாறுது.... எவ தொவப்பா? பேசாம மூடிட்டு என் போர்வைக்குள்ள வந்து படு"

காதுக்குள் கிச்சுக்கிச்சு மூட்டியபடி கிசுகிசுத்தது மூச்சுக்காற்று... "ஏன் நாயே! நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு போர்வை பத்தாது?"


எதிர்க்காற்றின் வேகத்தில் குளிர்கிறது. 'எங்கே எனது போர்வை?  ப்ச்... செத்துப்போனால் குளிருமா என்ன?'

'என்ன செய்வேன் இனி? மனங்களிலிருந்து வழியும் சாக்கடையின் அருவருப்பில் தோல் கூசுகிறதே! ஏன் என் வண்டியும் எனக்கு ஒத்துழைக்க மறுக்கிறது? எவ்வளவு ஒடித்தும் சாகஸமாய் சக்கரங்களுக்குத் தப்பிப் பாய்கிறதே! ச்சே... உயிர்வாழும் ஆசை அதற்குமா?'

ஆமாம் என்று ஆமோதிக்கிறது காலிவயிற்றின் ஏக்கம்... 'ஏதாவது போடேன்'... 'ச்சை... சும்மா கெட சனியனே'

"அதான் ஐ-பில் வாங்கி வெச்சிருக்கேல்ல... அப்புறம் ஏண்டா கவலைப்படுறே? நீ கண்டினியூ பண்ணு"

"இல்லடா செல்லம்.... நீ போன தடவை அழுதது எனக்கு இப்பவும் பயமா இருக்கு" "இப்ப நீயா  வர்றியா.. இல்ல நானே....."

"ஹை! அப்டீன்னா சீக்கிரம் வாடி...

கிறங்கத் துவங்கும் இமைகளில் மென்மையாய்ப் பதிந்தது முத்தம்...:"எப்பவும் என்கூடவே இருடா"


வண்டியை சைட்லாக் செய்து அறைக்கதவைத் திறக்கையில்

"பீப்...பீப்"

"உனக்கு நான் பண்ணினது எல்லாமே ரொம்பக் கொடுமைடா... இன்னும் உன் லைஃப்ல நான் இருக்கணும்னு நெனக்கிறியா... ப்ளீஸ்டா... ரிப்ளை அனுப்பு"

'ச்சே! இன்னிக்கும் சாகாம தப்பிச்சிட்டேனே!'

கம்ப்யூட்டரைத் திறந்து '...எனவே எழுதுகிறேன்,' தலைப்பிட்டு எழுதிச் சரிபார்த்து கோப்பினைச் சேமித்துவிட்டு எல்லா ஆடைகளையும் களைந்து படுக்கையில் விழுந்த பத்தாம் நிமிடம்...

அவன்  செ...த்.....து........ப்...........போ.................
சொல்லடி சிவசக்தி- எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
....................
....................
....................
நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் .....


22 பேரு கிடா வெட்டுறாங்க:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

என் ஆழ்ந்த அஞ்சலிகள்...

என்னது நானு யாரா? சொன்னது…

சாவுகிற அவசரத்தில முழுசா எழுதல போல இருக்கு நம்ப ஹீரோ! ஏன் அவன் சாகணும்? ஒன்னுமே புரியலையே நண்பரே!

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

எனது ஆழ்ந்த அஞ்சலிகள்

மணிஜீ...... சொன்னது…

நல்ல முயற்சிதான் ..இது என்ன பாணி?

வானம்பாடிகள் சொன்னது…

க்ளாஸ். இப்படி ஒருத்திய இழந்துட்டு என்ன வாழ்க்கை.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நல்லாருக்கு பாஸ்

பச்சைவரிகளில் குடி கொண்டிருக்கும் காதல் நீங்கள் காதல் பற்றி எழுதலாம் என்ற க்ரீன்லைட் போடப்பட்டதாவே சொல்லுது நல்லாருக்கு!

ஜோதிஜி சொன்னது…

இது என்ன பாணி?

நீங்கள் காதல் பற்றி எழுதலாம் (!!!!!!!!!!!!!)

அர. பார்த்தசாரதி சொன்னது…

ஆளு செத்துட்டாரோ ! நல்லா இருக்கு , ஆனா நாங்கல்லாம் பாசிடிவ் கிளைமாக்ஸ் விரும்புரவுக

ஹேமா சொன்னது…

வித்தியாசாமா இருக்கு பதிவு.ஆனா நல்லாயிருக்கு !

இராமசாமி கண்ணண் சொன்னது…

பிரமிப்பா இருக்கு படிச்சு முடிக்கறப்ப.. அபாரமான எழுத்து நடை :)

Rathi சொன்னது…

//என் ஆழ்ந்த அஞ்சலிகள்...//

சபாஷ் சரியான பின்னூட்டம். :)

காதலின் நினைவு பாதி, கனவுபாதி நிலையில் அல்லாடும் மனம். சில இடங்களில் காதலுக்கு தன்னை நேர்ந்துவிட்ட ஒருவரின் "euphoria" போல் தெரிகிறது.

விந்தைமனிதன் சொன்னது…

euphoria!!! ஏதும் மாயக்கண்ணாடி வைத்திருக்கிறீர்களா அக்கா? மிகச்சரியான கணிப்பு... உண்மைதான்....

Rathi சொன்னது…

NO மாயக்கண்ணாடி. A crystal ball. :))

Cable Sankar சொன்னது…

இந்தகதையை உணர.. காதலிலும், காமத்திலும் மூழ்கியவனால்தான் உணர முடியும் போலிருக்கிறதே..

எஸ்.கே சொன்னது…

விந்தை மனிதனின் விந்தை எழுத்துக்கள். வியப்பாக உள்ளது.

dheva சொன்னது…

அசாத்தியமான பதிவு....கதையைத் தாண்டி அதை எழுதியவரின் திறமை எல்லா வரிகளிலும் பளிச்சிடுவது தவிர்க்க முடிதாதது...

காதல்...மரணம் வரையும் கொண்டு வந்து விட்டது... எதிர்மறையான முடிவில் எதார்த்தம்.......இருக்கிறது....!

தம்பி.... U have great future pa! Best wishes.....!

ஜெய்லானி சொன்னது…

@@@Cable Sankar

இந்தகதையை உணர.. காதலிலும், காமத்திலும் மூழ்கியவனால்தான் உணர முடியும் போலிருக்கிறதே..//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

நீங்கள் நிஜமாகவே விந்தை மனிதர் தான்...

anbu சொன்னது…

ANNA COMENT ELLAM PARTHA COMEDY AH IRRUKKU

PRINCENRSAMA சொன்னது…

சிறப்பு!

...........enthisai.......... சொன்னது…

rajaraman, you did what you realised.
superb.,
best wishes., keep it up

♥ RomeO ♥ சொன்னது…

ஏதோ ஒண்ணு குறையுது பாஸ் .. அதீத பாசம் ஆளை கொள்ளுமோ ?? புரியல முடியு சரியாக அமையவில்லை.

Related Posts with Thumbnails