காதல் என்ற மாயவித்தையில் எல்லாமே அதனதன் உச்சநிலையில் கொழுந்துவிட்டெரிகின்றன. மகிழ்ச்சி என்றாலும் சரி, துயரம் என்றாலும் சரி.... அவற்றின் அளவு தாங்கவியலாததாய்த்தான் இருக்கின்றது
காதல் என்பது என்ன என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் சொல்லலாம்.
"ஒண்ணுமில்லய்யா... வெங்காயம்" என்பார் பெரியார்
"ஹார்மோன்களின் சித்துவிளையாட்டு" என்பர் அறிவியலார்.
"அதுதான் சுவர்க்கம்... அதுதான் புனிதம்" என்று புளகாங்கிதம் அடைவார்கள் கவிஞர்கள்.
காதல் என்பது என்னவென்று காதலர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியவித்தையாயிருக்கின்றது போல!
தம் காதல் மட்டுமே உலகில் மிக விசேஷமானது என்ற மிதப்பும் அவர்களுக்கு மட்டுமே சொந்தம்
தமது காதலின் சந்தோஷங்களை ஊரே கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கும் காதலர்கள் துயரம் உச்சத்தில் இருக்கும்போதுமட்டும் முடங்கி ஊமையாய்ப் போய்விடுகிறார்கள்
காதலில் தோல்வி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி...
சூழ்நிலையில் விலகநேர்வது ஒருவிதம்
பார்வைகளில் கோளாறு ஏற்பட்டு புரிதல் என்ற பிணைப்பு முறிந்துபோவது ஒருவிதம்
காதல் என்பதை வெறும் உடல்விளையாட்டாய் நிகழ்த்தி சலித்தபின் விட்டுவிட்டோடுவது ஒருவிதம்
எவ்விதமாயினும் சரி... காதல் காட்டிய வர்ணஜால மாயாலோகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு வெறுமையான கறுப்புவெள்ளை உலகிற்குள் வந்துவிழும்போது அவர்கள் விழிகள் குருடாகிப் போவதென்னவோ பரிதாபநிஜம்...
சூழலில் பிரிந்த காதலர்களின் துயரத்தை இதோ வித்யாஷங்கரின் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன
"ஓங்கி ஒலிக்கும்
கெட்டிமேளத்தில்
அமுங்கிப் போகிறது
யாரோ ஒருத்தரின்
விசும்பல் சத்தம்
எப்போதும்"
எல்லா மனிதர்களும் காதல் என்கிற கட்டுக்கடங்காத காட்டாற்றில் நீந்தித்தான் கரையேறி இருக்கிறார்கள் இல்லையா?
சமூகச்சூழலில் வரலாறு காதலின் வலிமிகுந்த வரிகளைத்தானே அதிகம் பதிவு செய்து வந்திருக்கின்றது!
சூழ்நிலையால் பிரிந்த காதலர்களின் நிலை என்பதை பற்றியெரியும் காட்டுத்தீக்குள் கருகிப்போன மென்மலர்களோடு ஒப்பிடலாமா?
இதோ காதலர்களின் மனதுக்குள் புகுந்து அவர்களின் மனவோட்டத்தைப் பிரசவிக்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்
"ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியாக
வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்டு
அணைந்ததும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக் கொண்டிருக்கட்டும்"
5 பேரு கிடா வெட்டுறாங்க:
இன்னொரு கவிஞர் கிடைசுட்டாறு...
ஒ.. பாப்பா ... லாலி.. கண்மணி லாலி...
காதல் அலசலா...ம்ம் !
ஓங்கி ஒலிக்கும்
கெட்டிமேளத்தில்
அமுங்கிப் போகிறது
யாரோ ஒருத்தரின்
விசும்பல் சத்தம்
எப்போதும்"
யதார்த்தமான உண்மை .
ஒண்ணுமில்லய்யா... வெங்காயம்" என்பார் பெரியார்//
பெரியார் இதுக்கு கூட விளக்கம் சொல்றாரா...அது சரி
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியாக///
எது சீக்கிரம் கரைந்து போகும்
கருத்துரையிடுக