ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு...

 படத்துக்கு நன்றி http://southasiarev.wordpress.com

1) யப்பாடா! அந்தா இந்தான்னு மூச்ச இழுத்துட்டு இருந்த காங்கிரஸு 'இந்தாப்பா! ஆட்டத்துல நானும் இருக்கேன்'ன்னு முண்டா தட்டுதுய்யா. அறுவத்தி ஏழுல வாங்குன அடி தெளியறதுக்குள்ளதான் எவ்வளவு நடந்து முடிஞ்சிடிச்சி! திராவிடம் பேசுன எல்லாரும் தேசியம் பாட ஆரமிச்ச பொறவு 'செக்கென்ன சிவலிங்கம் என்ன?' எல்லா கழுதையும் ஒண்ணுதானன்னு நெனச்சிட்டாங்க போல. 13 பர்சண்ட் ஓட்டுக்கு 100  சீட்டு கேக்குறாங்களாம்பா... ஹ்ம்ம்... 'எடுப்பாரும் கொடுப்பாரும் இருந்தா எட்டுன மட்டும்'பாங்க... பத்தாக்கொறைக்கு கோயமுத்தூர்ல மாநாடாம்... 'சிவகங்கை கண்ணாடி'யெல்லாம் கதைக்காவாதுன்னு கழட்டுப்போட்டுட்டு 'வேதாந்தா' பிராண்ட் லென்ஸ் மாட்டிக்கிட்டு நம்ம செதம்பரம் அய்யா வர்றாராம்... எப்டியாவது கூட்டம் சேத்து படம்காட்ட வேண்டியதுதான் பாக்கி... 'அடுத்த வூட்டுக்காரி புள்ள பெத்துக்கிட்டான்னு அம்மிக் கொழவிய தூக்கி வயத்துல குத்திக்கிட்டாளாம்'

2) இருந்தாலுஞ்சரி, செத்தாலுஞ்சரி மனுசன் நெசமாவே புலியாத்தான்யா வாழ்ந்துருக்கான்.... பிரபாகரனப் பத்தி பேசாட்டி ஒரு பயலுக்கும் தூக்கம் வராதுபோல... கண்ட கருமாந்திரத்தையும் உள்ள எறக்கிட்டு செம சுதியில கொடுக்குறாங்கப்பா டீடெயிலு... 'ஹெலிகாப்டர் ஏற்பாடு பண்ணினேன்... ஆனா அவருக்கு புஷ்பக விமானம்தான் வாய்ச்சுது'ன்னு சொம்மா கண்டமேனிக்கு அடிச்சு விடுறாரு கே.பி அண்ணன்...'To where you go, do the things you see' அப்டீம்பாங்க.. ராஜபக்ஷே அண்ட் கோவுல ஐக்கியம் ஆனவொடனே எப்டில்லாம் திரைக்கதை வசனம் எழுத ஆரம்பிச்சிடுறாங்க பாருங்க.. திரைக்கதை வசனம்னு சொன்னவொடனே கலைஞர் ஞாவகம் வந்து தொலையுது...பக்கம்பக்கமா பைந்தமிழ்ல வசனம் எழுதுன மனுஷன்... 'ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா என்ன?' விடாம வெதவெதமா எழுதுறாருய்யா டெல்லிக்கு லெட்டர.. TNPL உற்பத்தி பண்ற A4 சைஸ் பேப்பருக்கு மொத்தமா குத்தகை எடுத்தாச்சு போல...ம்ம்ம்ம் நடக்கட்டும் கச்சேரி!

3) இந்தவார ஹாட் டாபிக்ல இளங்கோவன் கறுப்பு எம்சியாருக்கு கேக் ஊட்டுன கதைதான் ஓடிட்டு இருக்கு... பாவம் காங்கிரஸுக்காரங்க... அவங்களும் எத்தன வருசம்தான் சும்மாவே இருப்பாங்க? சீக்கிரம் சட்டுபுட்டுனு நாலு காசு சம்பாரிச்சு கவுரதையா வீட்டக் காப்பாத்த (வீடு சின்னதா பெருசான்னெல்லாம் கேக்கப்படாது சொல்லிட்டேன்) வேண்டாம்?அப்போ மக்கள்?! மக்கள பத்தி கவலப்பட்டா நாங்கல்லாம் எப்பய்யா அம்பானிக்கு பங்காளி ஆவுறது! வீணா மக்கிப்போற கோதுமைய கடல்லகொட்டுனாலும் கொட்டுவோமே தவிர ஏழைகளுக்குக் கொடுக்கமாட்டோம்னு தில்லா ஆம்புள சிங்கம் கணக்கா மொழங்கியிருக்காரே சரத்பவாரு... அதிலருந்தே தெரிஞ்சிக்கவேணாம்? (வாடி வா...அய்யா போடுங்க... அம்மா போடுங்கன்னு கும்புட்டுட்டே வருவீல்ல! அப்ப வெக்கிறோம் கச்சேரிய.... அப்டீன்னு சொல்றீங்களா? கிழிச்சீங்க!) We always want the best man to win an election. Unfortunately, he never runs. ம்ம்ம்... என்னத்தச் சொல்ல!

4) நக்ஸல்கள் பெண்போராளிகளை செக்ஸ் அடிமையா உபயோகப்படுத்துறாங்க! நக்ஸல் தலைவர் கிஷண்ஜி கூட பொண்ணுங்களை தப்பாத்தான் யூஸ் பண்றாங்க அப்டீன்னு சொல்லி கார்கிராம் பகுதி கமாண்டர் உமா (எ) ஷோபாமண்டி போலீஸ்ல சரண்டர் ஆயிருக்கார்.அப்டீன்னா இவரு  கமாண்டர் பொஸிஷன் வரைக்கும் எப்டி வந்தாரு? 'தெறம'காட்டித்தானா? போராளிகள்மேல இப்டி அபாண்டமா பழிசுமத்தியாவது அவங்க செல்வாக்கைக் கொறைக்கலாம்னு பாக்குறாங்களோ?! இந்த மாதிரி அழுகுணி ஆட்டம் ஆடுறதுக்கு பதிலா பேசாம கையில வெத்திலைச் செல்லமும், ஒடம்புல ஜிப்பாவும் போட்டுட்டு கெளம்பிடலாம்யா! அப்புறம் தண்டகாரண்யத்துல பாதுகாப்புப்படை, சல்வா ஜூடும் இவங்கல்லாம் பண்ற திருவிளையாடல் பத்தியும் எழுதுனா பத்திரிகைக்காரங்களுக்கு புண்ணியமா போவும்...Crime is contagious. If the government becomes a law breaker, it breeds contempt for the law.

5) காஷ்மீர் ராணுவத் தளபதிக்கு சீனா விசா கொடுக்க முடியாதுன்னு சொன்ன விஷயமும் இந்த வாரம் ஹாட் டாபிக்.... ஏற்கனவே அருணாச்சல பிரதேசத்துல ஒரு கலெக்டர் உத்தியோகவிசயமா சீனா விசா அப்ளை பண்ணப்போ அருணாச்சலப் பிரதேசம் சீனாவைச் சேர்ந்ததுதான், அதுனால அவரு விசா இல்லாமலேயே வரலாம்னு சீனா அழும்பு புடிச்சது எத்தன பேருக்கு ஞாவகம் இருக்கு? தெற்காசியாவுல தாதா ஆகுறதுக்கு மட்டும் ஆசை இருக்கு இந்தியாவுக்கு; வாய்க்காத் தகறாறைத் தீக்க முடியலயே? "ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க"ன்னானாம்.

6) ரொம்ப சூடா, காரமா அரசியல் பேசியாச்சு... கடைசியா ஒரு கப் காபி சாப்பிடலாமா?

ம.செந்தில்குமார் எழுதின ஒரு கவிதை

தொட்டிச் செடிகள்
மரங்களைக் கனவு
காண்கின்றன
பெருமரங்களோ
வனங்களை நினைந்து
பெருமூச்சு விடுகின்றன
நட்டநடு நிசியில்...

10 பேரு கிடா வெட்டுறாங்க:

சிவராம்குமார் சொன்னது…

எனக்குதான் கப்.... me the first..

vasu balaji சொன்னது…

நல்ல மிக்ஸ்:)

dheva சொன்னது…

காரசார அரசியலக்கு அப்புறம்...சூடான காபி...சூப்பர் தம்பி!

Jey சொன்னது…

//அடுத்த வூட்டுக்காரி புள்ள பெத்துக்கிட்டான்னு அம்மிக் கொழவிய தூக்கி வயத்துல குத்திக்கிட்டாளாம்'//

சொலவடை சூப்பர்

என்னது நானு யாரா? சொன்னது…

உங்கள போல மனசாட்சி இருக்கிறவங்க, எல்லாம் அரசியலுக்கு வரணும். ஆனா நிங்க சொன்ன மாதிரி We always want the best man to win an election. Unfortunately, he never runs...

மக்கள் எந்த மாதிரி விரும்பறாங்களோ, அந்த மாதிர் அரசு அமையுது

சரி விடுங்க! தனிமனித ஒழுக்கம் தான் இப்போ நம்ப கையில இருக்கிற சாவி!

நண்பா! நீங்க நம்ப பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சுதே! எப்போ வர்றீங்க?

http://uravukaaran.blogspot.com/

புது பதிவுகளை போட்டிருக்கேன். வந்து பாருங்க!

ஜோதிஜி சொன்னது…

நன்றி. மற்றொருமொரு சந்தித்த நல்ல (விந்தை) மனிதன்.

வெறேன்ன சொல்லமுடியும்,

பத்மா சொன்னது…

கவிதையே நெத்தியடிதான்

சௌந்தர் சொன்னது…

அருணாச்சலப் பிரதேசம் சீனாவைச் சேர்ந்ததுதான், அதுனால அவரு விசா இல்லாமலேயே வரலாம்னு சீனா அழும்பு புடிச்சது எத்தன பேருக்கு ஞாவகம் இருக்கு?///

எனக்கு ஞாபகம் இருக்கு அண்ணே

Bibiliobibuli சொன்னது…

எத சொல்ல? எத விட? எல்லாமே நல்லாருக்கு. ஆங்கிலத்தில் தத்துவமும், தமிழில் பழமொழியும் சிறப்பு. Keep writing.

vasan சொன்னது…

காங்கிரஸு 'இந்தாப்பா! ஆட்டத்துல நானும் இருக்கேன்'ன்னு முண்டா தட்டுதுய்யா. அறுவத்தி ஒம்போதுல வாங்குன அடி தெளியறதுக்குள்ளதான்//
காங்கிர‌ஸ் அடிவாங்கிய‌து 1967ல். (ச‌ரித்திர‌ம்..ச‌ரித்திர‌ம்,ச‌ரியாயிருக்க‌னும்)

Related Posts with Thumbnails