வியாழன், 19 ஆகஸ்ட், 2010

கொஞ்சம் காத்தாட... மனசு விட்டு...


இப்போ பாத்தீங்கன்னா, வரவர நம்ம பெரபல பதிவருங்கள்ளாம் அவுங்கவுங்க ப்ளாக்க திங்க கெழமன்னா ஒரு தொடர், செவ்வா கெழமன்னா இன்னொரு தொடர் அப்றம் ஞாயித்து கெழமன்னா "குருமா, சட்னி, பொரியல், கூட்டு, மண்ணாங்கட்டி, தெருப்புழுதி" அப்டீன்னு தலப்பு வெச்சு ஒரு ஸ்பெஷல் தொடர்னு எழுதி வார இதழ் மாதிரி ஆக்கிட்டாங்க. அதுனால நம்மளும் ஏதாவது "புண்ணாக்கு,பொடலங்கா"ன்னு ஸ்டார்ட் பண்ணினா சீக்கிரம் பெரபலமாயிடலாம்னு மனசுக்குள்ள ஒரு கொறளி சொல்ல ரெடி,ஸ்டார்ட்... ("யப்பாடா!வாரத்துல ஒருநாளாவது இவன் செந்தமிள்ள கொல்றதுலேருந்து தப்பிச்சாச்சு"ன்னு மொனவுறது யாருப்பா? கே.ஆர்.பி யா?!)

அப்புறம் ஒண்ணு! நமக்கு இந்தந்த மாதிரி குட்டி குட்டியா உபதலைப்பெல்லாம் வெச்சு எழுத வராது. ஒரு ஃப்ளோல போயிட்டே இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!

ஆகையால் தாய்மார்களே! பெரியோர்களே! இளஞ்சிங்கங்களே! கலாரசிகப் பெருமக்களே! அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

1) இன்னிக்கு வலையுலகத்துலயும், வெளியுலகத்துலயும் ஹாட் டாபிக் யாருன்னா உமாசங்கர்தான். ஆனாலும் மனுஷனுக்கு இந்த தில்லு இருக்கப்படாது. வந்தமா,சீட்ட தேச்சமா, அப்டியே ரெண்டு தென்னங்கன்ன ஊனி ஃபோட்டாவுக்கு போஸ் குடுத்தமான்னு போவ வேண்டியதுதானே? சும்மா ஊழல கண்டுபுடிக்கிறேன், ஊறல கண்டுபுடிக்கிறேன்னு திரிஞ்சா...?

Jokes Apart, உமாசங்கர் முதலுமில்ல, கடேசியுமில்ல! நாளைக்கு வேற ஒரு நேர்மையான அதிகாரி, கருணாநிதிக்குப் பதிலா ஜெயலலிதா! கொஞ்ச வருஷம் முன்னாடி ரோமன் மகசேசே அவார்டு வாங்குன கிரண்பேடி பட்ட அவஸ்தை எத்தன பேருக்கு ஞாபகம் இருக்கு? தீர்வு? அட போங்கப்பா... இப்டி ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு கண்டுபுடிக்கிறேன் பேர்வழின்னு திரிஞ்சா அப்றம் நாப்பது வயசுலயே ப்ரஷர் ஜாஸ்தியாயி புட்டுக்க வேண்டியது தான்! Call him Dog and Law him னு ஒரு பிரிட்டிஷ் பழமொழி ஞாவகம் வருது... கவுருமெண்டு கரெக்டா ஃபாலோ பண்ணுதுய்யா...

2) "போங்கடா, போயி புள்ளகுட்டியள படிக்க வைங்கடா!"ன்னு தேவர்மகன்ல கமல் சொல்லுவாருல்ல... இனி அது நடக்காதுபோல. தோழர் பைத்தியக்காரன் எழுதுன இந்த இடுகைய படிச்சப்போ அடிவயறு பக்குன்னு ஆயிடிச்சு. ஏற்கனவே கல்விய தனியார்மயமாக்குனப்பவே அவனவன் புள்ளைங்கள படிக்கவெக்க பிச்சையெடுக்காத கொறையா திரியிறான். இந்த லட்சணத்துல பன்னாட்டு கார்ப்பொரேட் கம்பெனியெல்லாம் வரப்போவுதாம் இஸ்கோலும், காலேஜும் கட்றதுக்கு! மொத்த GDP ல முழுசா 6 சதம்கூட கல்விக்கு ஒதுக்க முடியாத கவுருமெண்டுக்கு வக்கணையப் பாரு! சர்வசிக்ஷ அபிமான் வந்தப்பவே நெனச்சேன் "எலி ஏண்டா கோவணம் கட்டி ஓடுது"ன்னு. பயபுள்ளைங்க பத்தாங்கிளாஸ் தாண்டுனாத்தானே கலகம் பண்றேன், கருமாதி பண்றேன்னு கெளம்புவாங்க... போடு நடுமண்டையில நச்சுன்னு! "IGNORANCE IS BLISS"னு சும்மாவா சொன்னாங்க?!

3) திருச்சில செம கூட்டமாமில்ல! போயிட்டு வந்த சித்தப்பு பொளகாங்கிதப்பட்டுப் போனாரு. அடுத்தாப்ல நேரா செயிண்ட் ஜார்ஜ் கோட்டைதானாம் ( புது சட்டசபையில் ஆட்சிபண்ண மாட்டேன்னு அம்மா சபதம் போட்டுருக்காங்களாம்ல!). மேடையில ஒறவுக்கு 'கை' கொடுக்கறதப் பத்தியும் பேசுனாங்களாமே! எனக்கு 'ஆண்டனியோ நைனா... ச்சீ... மைனா', 'பதிபக்தி' கதையெல்லாம் மைண்ட்ல ஓரமா ஓட ஆரம்பிச்சிடிச்சு. ஒடனே யாருய்யா அது "நேருவின் மகளே வருக!நிலையான ஆட்சி தருக!" கோஷத்த சொல்லிக்காட்டி எதிர்ப்பாட்டு படுறது? கம்னு கெடக்கணும். நம்ம மருத்துவர் கூடத்தான் கொஞ்ச வருசம் முன்னாடி ஜெயலலிதாகூட கூட்டணி வெக்கிறது எதுவோ ஒண்ணுக்குச் சமம்னு ( என்னது! டீடெயிலா சொல்லணுமா? அப்புறம் நான் அடல்ட்ஸ் ஒன்லி போர்டுதான்யா மாட்டணும்) சொல்லிட்டு திரிஞ்சாரு... அதையெல்லாம் நாங்க கேக்குறோமா என்ன? All is fair in love and war... politics too...

4) கொஞ்சநாள் முன்னாடி போபால் பத்தி வரிஞ்சிகட்டின பொறவு அடுத்த மேட்டரா உமாசங்கர் கெடச்சிட்டாரு. நாமளும் பொட்டிய தட்டி பதிவுபோட ஆரம்பிச்சாச்சு. ஆனா ஆகஸ்டு 15 அன்னிக்கு "டௌ" முற்றுகைப்போராட்டம் நடத்தியிருக்காங்க ம.க.இ.க தோழர்கள். சொதந்திர தெனத்துக்கு முட்டாய் கொடுக்குறதுதான் வழக்கம். இவங்க ஒரு சேஞ்சுக்கு பேதிமாத்திரை கொடுத்துருக்காங்க அரசாங்கத்துக்கு! அன்னிக்கு மட்டும் களவாணிப் பயபுள்ள ஆண்டர்சன் சிக்கி இருந்தான்.. செதச்சிருப்பாங்க போல. நானும் நெனச்சிப்பாத்தேன்.. போபால்ல மட்டும் அன்னைய தேதிக்கு என் அப்பனோ, தாத்தனோ, கட்டிக்கொடுத்து அனுப்புன அக்காவோ இருந்துருந்தா...? ஆப்பு அவனவன் குண்டிக்கு வந்தாத்தான் வலிக்கும்போல!

5)பெரியாரோட எழுத்துக்களை வெளியிடுறது சம்பந்தமான வழக்குல ஹைகோர்ட் தீர்ப்பு "பெரியார் தன்னோட அறிவுசார் சொத்துக்களை எந்த ஒரு தனிநபருக்கோ, நிறுவனத்துக்கோ எழுத்துப்பூர்வமா எழுதிவைக்காத நிலையில, அவை மக்கள் சொத்து ஆகும்"னு சொல்லிடிச்சு. பெரியார் தி.க காரங்க ஒடனே ஒரு ரூம்போட்டு யோசிச்சிருப்பாங்க போலருக்கு! அறிவுசார் சொத்துரிமைக்கான தீர்ப்பு அசையாச்சொத்துக்களுக்கும் பொருந்தும்தானே அப்டீன்னு குண்டக்க மண்டக்க யோசிச்சு அசையா சொத்துக்களும் மக்களுக்குத்தான் சொந்தம்னு மறுபடியும் கோர்ட்டு படியேறுறாங்க. தேவையா தி.க வுக்கு? ஆரம்பத்துலயே விட்டுக் கொடுத்திருந்தா....? "சனியன் புடிச்ச நாரை கெளுத்திய போட்டு முழுங்கிச்சாம்"

6) கடேசியா ஒரு கவிதை சி.கே.ராஜாசந்திரசேகரோடது

மழை
மழையாகவும் இருக்கிறது
கவிதையாகவும் இருக்கிறது
மனங்களுக்குத் தக்கபடி...


நல்லாருக்குல்ல....?

                          மறுபடியும் காத்தாடுவோம்...

16 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

நல்லாருக்கு. தொடர்ந்து வீசட்டும்....

குழலி / Kuzhali சொன்னது…

//மழை
மழையாகவும் இருக்கிறது
கவிதையாகவும் இருக்கிறது
மனங்களுக்குத் தக்கபடி...
//
மழை கீழே உள்ளபடியும் இருக்கு பலருக்கு.. இது ஆதவன் தீட்சண்யாவின் கவிதை

சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
------------------------------------
(அ) வேறு மழை
-----------------
- ஆதவன் தீட்சன்யாவின் கவிதை

மிஞ்சிப்போனா என்ன
சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும்
குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா
பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு
உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட
சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.

vasu balaji சொன்னது…

ஆஹா! நல்லாத்தானிருக்கு. குழலியின் போனஸ் அருமை.

Unknown சொன்னது…

பிரமாதம்... அசத்திடீங்க.. இதுக்கு டெம்ப்ளேட் பின்னூட்டம்தான் போடமுடியும்..

காரணம் நீங்களும், குழலியும் இந்தப் பதிவை இருமுறை படிக்க வைத்து விட்டீர்கள் ... உங்களுக்கு மேல் வேறென்ன சொல்ல முடியும்

மணிஜி சொன்னது…

அ..ஆ வன்னாவை மட்டுமே கேட்டேன்
அதற்குள் மழை நின்று விட்டது

சௌந்தர் சொன்னது…

முதல் பத்தி படிக்கும் வரை முழித்து கொண்டு இருந்தேன் என்னடா இவர் இப்படி எழுதி இருக்காரே...

யாரு இந்த கே.ஆர்.பி?

அருண் பிரசாத் சொன்னது…

கவிதை அருமை

சௌந்தர் சொன்னது…

யாரு இந்த கே.ஆர்.பி///

செந்தில் அண்ணன் பார்த்தால் உதைக்க வருவார் அவ்வவ்..

ஜீவன்பென்னி சொன்னது…

கவிதைகள் அருமை.

வால்பையன் சொன்னது…

//மழை
மழையாகவும் இருக்கிறது
கவிதையாகவும் இருக்கிறது
மனங்களுக்குத் தக்கபடி...//


அருமை தல!

மனசுவிட்டதும் சூப்பர்!

ஹேமா சொன்னது…

அரட்டைக் கச்சேரி அடைமழைதான்.அருமை.
குழலியின் இடைச்செருகலும் அபாரம்!

vasan சொன்னது…

'கொஞ்ச‌ம் காத்தாட...'ன்னு சொல்லீட்டு,
பெரிய‌,பெரிய‌ விஷ‌ய‌த்தைக் கிள‌ப்பி புய‌லைக் கெழப்பீட்டீகளே.
பின்னோட்ட‌ம் ப‌க்க‌ம் வ‌ந்தா, உள்ம‌ழை ந‌டுக்க‌ம் கொடுத்திருச்சு.
(நாங்க‌ளும் ம‌ழையை உள்ளேயும்/வெளியேயும் அனுப‌விச்சிருக்க‌ம்ல‌‌)

என்னது நானு யாரா? சொன்னது…

///ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.///

ஆ..ஹா... என்ன ஆக்ரோஷமான வரிகள்!!! விஷயங்கள் டாப்பு! அந்த பழமொழிகள் எல்லாம் நல்லா இருந்ததுங்க!!! புதுசாவும் இருந்ததுங்க!!!

vinthaimanithan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
vinthaimanithan சொன்னது…

தோழர்களுக்கு நன்றியும் நெகிழ்ச்சியும்...

குழலிக்கு...

நீங்கள் குறிப்பிட்ட ஆதவன் தீட்சண்யாவின் கவிதை ஏற்கனவே என்னைக் கட்டிப்போட்ட கவிதை.... இந்த இடத்தில் பொருத்தமானதாய்த்தானிருக்கின்றது. குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி.

எஸ்.கே சொன்னது…

கவிதை மிக மிக நன்றாக உள்ளது!

Related Posts with Thumbnails