வியாழன், 12 ஆகஸ்ட், 2010

மேன்ஷன்வாசியாய் இருப்பது....

சனி இரவு
குவார்ட்டரில் தெரியும்
முப்பதை நெருங்கும் தங்கை
முகம்

மறுநாள் ரத்னாகபே
டிபனிலும் மேட்னி ஷோவிலும்
மறைந்து போகும்

மாலை பீச்சின்
இருட்டுக்குள்
இருவது ரூவா கேப்பா...
சலித்து ஒதுக்கி விலகும்போது
"பாவம்! என்ன கஷ்டமோ!"

திங்கள் முதல் வெள்ளி வரை
தினம் ஒரு காட்சி
மேனேஜரின் வசவிலும்
டைப்பிஸ்டின் புன்னகையிலும்
மூன்றாம் இருக்கை கிளிவேஜிலும்...

பேருந்தில் உரசும்
புட்டங்களின் அருவருப்பு
பொதுக் கழிப்பறையில் வாந்தியாய்

'எனக்குன்னு ஒருத்தி
இனியா பொறக்கணும்'
மிச்சமிருக்கும் கனவுகள்
கரையானுக்குப் பாதி
கட்டிலுக்கு மீதி

நடு இரவில்
மண்டைக்குள் ஒலிக்கும்
"கரப்பழக்கம்... துரிதஸ்கலிதம்
மூணு மாசத்துல முழுக் குணம்"

திடுக்குன்னு எந்திரிச்சா
'சே!பவர்கட்'

அடப்போய்யா!
அனுபவிச்சா தெரியும்
மேன்ஷன்வாசியின்
அவஸ்தை.

10 பேரு கிடா வெட்டுறாங்க:

vinthaimanithan சொன்னது…

யப்பூ! சத்தியமா இது கவிதன்னு நெனச்சுக்கிடாதீங்க

vinthaimanithan சொன்னது…

நான் போஸ்ட் போடுறப்ப பாத்தாய்யா தமிழ்மணம் சர்வருக்கு சனி புடிக்கணும்? சே! அம்பத்தஞ்சு ஹிட்ஸ் போச்சே!

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்கு ராஜா..
நானும் நாலு வருஷம் மேன்சன் வாசியா இருந்தேன்,
அப்போ பதினெட்டின் தொடக்கத்துல இருந்ததால இவ்ளோ பீலிங்க்ஸ் இல்ல..
கூட தங்கி இருந்த அண்ணன்களின் பீலிங்க்ஸ் இப்போ புரியுது :)

Unknown சொன்னது…

மேன்சன் வாசியா கலக்குறீங்க... எதிர் கவிதையெலாம் என்னால் எழுத முடியாது...

சௌந்தர் சொன்னது…

மேன்சன் வாசியை பற்றி உண்மையான வரிகள்...

சௌந்தர் சொன்னது…

விந்தைமனிதன் said...
யப்பூ! சத்தியமா இது கவிதன்னு நெனச்சுக்கிடாதீங்க///

@@@விந்தைமனிதன் said...நாங்க கவிதைன்னு சொல்லவே இல்லையே...

மணிஜி சொன்னது…

சேவல் பண்ணை

தனி காட்டு ராஜா சொன்னது…

நல்லா இருக்கு ...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

கலக்கல்

ஜோதிஜி சொன்னது…

ரொம்பவே அற்புதம்

Related Posts with Thumbnails