புதன், 4 ஆகஸ்ட், 2010

கவிதைப்பார்வை-4: தீராக்காமம் (18+)

மலரினும் மெல்லியது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார். (குறள் :1289)


மலரைவிட மென்மையானதா காமம்?! அட...! ஆனால் ஏன் அது பலபொழுதுகளிலும் மின்னும் வைர ஊசி போலக் கூர்மையாய் இருக்கிறது.....? குத்திக்கிழிக்கப் படுவது மனங்களும் உறவுகளுமாய் இருக்கின்றனவே!

இல்லை... மெய்யாகவே காமம் மலரைவிட மெல்லியதுதான்..... அது முகிழ்க்கும் மனக்குளங்கள் சாக்கடையால் நிரம்பாதிருக்கும்போதும்..... நேருக்குநேர் வாள்கொண்டு மோதும் 'நீயா.. நானா?' போட்டியாக மாறாதிருக்கும்போதும்...... இமயமல்ல தாம் ஏறப்போவது; சின்னஞ்சிறு இதயம்... எனவே நுழைதலில் நுணுக்கம் தேவை என்ற புரிதலால் புலன்கள் விழிக்கும்போதும்...

உலகம் காமத்தால்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று நிறுவுகிறார் ஃப்ராய்டு.

தவறான திசையில் செலுத்தப்படும் அம்புபோல, கரைகடந்து நிலமழித்துப்போடும் புயல்போல காமம் கட்டற்றுப் பாய்வதினால்தான் பூவுலகு போருலகாகிறது. மறுபக்கம் மதங்களின் மயக்கத்தில் காமம் என்பது களைந்தெறியப்படவேண்டிய கந்தல்துணி என்ற கருத்தாக்கத்தில் சிறையில் பூட்டப் படும் காமம் சமூகம் மீறி, மானுடத்தின் மகத்தான அறமான பரஸ்பர நம்பிக்கைமீறி எரிமலையாய் வெடித்துச் சிதறுகின்றது.

"கற்பெனப்படுவது சொல்திறம்பாமை"- என்கிறாள் அவ்வை!

காமம் காதலோடு சாத்தியப்படும்போதுதான் அது தன் எண்ணற்ற வாசல்களைத் திறந்து வைக்கிறது. அல்லாமல் வெறுமனே உறுப்புக்குள் உறுப்பு நுழைத்து, உடலுக்குள் உடல்புதைத்து இயங்கிக் களைப்பது கழிப்பறைக்குள் சென்றுவருவதைப் போலத்தான்! அது காமம் துய்த்தல் அல்ல;காமம் கழித்தல்.

காமக்கிணற்றில் காதலமுது சுரக்கும்போதுதான் அது தாகம் தணிப்பதோடன்றி நம் விரல்பிடித்து சில விசித்திர உலகங்களுக்குள் அழைத்துப்போகிறது.

காமக்கலையினை கவிதையொழுக்கில் இசைத்துச்செல்கிறது வாத்ஸாயனம்:

இதழ்பொருத்தி, எச்சில் மாற்றி, கன்னமும், கழுத்தும், கழுத்துமுடிகளும், அக்குளும், அமுதகலசங்களும், உட்குழிந்த தொப்புளும், உட்புறத்தொடைகளும் ஏங்க ஏங்க முத்தமிட்டு, அல்குல் வாசம் பிடித்து, அங்கங்கள் மீதமின்றித்தழுவி, அரவங்களைப்போலப் பிண்ணிப்பிணைந்துப் புணரச் சொல்கிறார் வாத்ஸாயனர்.

அங்கங்கள் குழைய, அதரங்கள் துடிக்க, இமைகள் இழுத்துக் கிறங்க, நாசிகள் அனல்காற்றை வெளித்தள்ள புணர்தலின் நிலைகளை காட்சிப் படுத்துகிறார் மேலும் அவர்.

காமந்தீர்த்தல் என்பது வெறும் கடமையாகச் செய்யப் படும்போதும், துணையின் உணர்வுகள் துச்சமாக எண்ணப்படும்போதும், ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அங்கு கட்டுமீறுதலுக்கான விதையொன்று முளைவிடத்துவங்குகின்றது.

"வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?"


என்று கேள்வியெழுப்புகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

ஆயினும் இன்னும் இருக்கிறார்கள் இன்னொரு வகையினர்! காமத்தை வெறும் உறுப்புக்களின் இணைதலாகவும், விதவிதமான உணவுகளும் உடல்களின் சங்கமிப்பும் ஒன்றுதான் என்றும் கருதுவோரில் ஆணும் உண்டு; சில பெண்டிரும் உண்டு. அவர்களுக்கு உணவு மட்டுமல்ல; உடல்களும் வெவ்வேறு வகையினதாய் இருக்க வேண்டும்.

இம்மாதிரியானவர்களின் புணர்ச்சியில் உயிரும் இருக்காது; உள்ளத்திலிருந்து கசியும் அன்பின் ஈரமும் இருக்காது

உளவியல் இவர்களை மனநோய்க்கூறு கொண்டோர் எனக்கூறி ஆணின் நோய்க்கூறை satyriasis என்றும், பெண்ணின் நோய்க்கூறை nymphomania என்றும் வகைப்படுத்துகின்றது.

ஆனால் தன்னுச்சம் மட்டுமெண்ணி துணையுச்சம் துச்சமாக்கித் துயிலும் கணவனைப் பார்த்து ஒரு அபாக்கியவதி விடும் ஏக்கப்பெருமூச்சின் மிச்சத்தைக் கவிதையாக்குகிறார் "இன்றைய காட்சி" என்ற தலைப்பில் உமா மகேஸ்வரி:

"நிராசைகள் கொப்பளிக்கும்
நம் படுக்கையில் நிகழ்த்துவோம் இன்றும்
திரைநியமங்கள் விலகாத,
எண்ணிக்கையுள் வராத இன்றைய காட்சியை;
நீயே நிர்மாணித்த சுலபப்பாதையை
நிறுவிக் கொள்கிறாய் நீயாகவே;
இறுதி நிறுத்தத்தை வெற்றிப்புள்ளியென்று.
அணுசரணைகள், பூசிமெழுகல்கள்
சம்பிரதாயங்கள், சமரசங்கள்
மூடிய புதைகுழிகளினூடாக
அடைய முடியாது நாம் என்றைக்குமே
ஆதிக்காதலின் பாதாள வனத்தை;
புதர்கள் தாண்டிப் பூத்த அந்த
ஒரே ஒரு உச்சி மலரை;
செய்வதொன்றுமில்லை இனி.
திரும்பிய முதுகோடு உன் ஒரே நொடி உறக்கம்;
சில்லிடும் தரை; ஒண்டிய சுவர்;
சுருண்ட பூனையாக என் உளைச்சல்கள்"

9 பேரு கிடா வெட்டுறாங்க:

Cable சங்கர் சொன்னது…

நல்ல ரைட்டப். தலைவரே..

நேசமித்ரன் சொன்னது…

நல்லா எழுதியிருக்கீங்க பாஸ் !

Unknown சொன்னது…

வாழ்வின் அந்தரங்கம் புனிதமானவை
பூட்டிய கதவுகளுக்கு வெளியே ...!

இது ஒரு நல்ல விமர்சன தொகுப்பு .. இன்னும் நிறைய எழுதுங்கள்..

ஹேமா சொன்னது…

வந்தேன்.....வாசிச்சேன்.

Sweatha Sanjana சொன்னது…

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

மலரினும் மெல்லிய காமமாம்.. குறளை போலவே ஒவ்வொரு முறை தீண்டும்போதும் புதிய ராகங்களோடு மணமும் வீசும் மலர் காமம். அதன் ஆரம்பபுள்ளி உடல்களின் அதிர்வு கொண்டு ஆனாலும் அந்த பயணத்தின் நிறைவு மலரினும் மெல்லிய மனங்களில் அன்பாய்....திசைமாறி உருமாறும். அது.,நீளும் தொடர்ச்சியில் உடல் இன்றியும் உயிர் வாழும். அது எளிதில் விளங்கா காமம்., அந்த மலர் கசங்க முரட்டு கரங்கள் வேண்டாம்., முரட்டு வார்த்தைகள் போதும் .



நல்ல எழுத்து... தொடர்க.... மலர்கொண்டு வரவேற்கிறோம்...

அன்புடன்.,

இரா. சா.

பனித்துளி சங்கர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பனித்துளி சங்கர் சொன்னது…

///மலரினும் மெல்லியது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார். (குறள் :1289)///////

இந்த குறளை படித்திருக்கிறேன் ஆனால் இதற்குள் இவளவு அர்த்தங்கள் புதைந்திருக்கும் என்று அறிந்ததே இல்லை . நேர்த்தியான எழுத்து நடை சிறந்த விளக்கங்களுடன்
அறிய தந்தமைக்கு நன்றிகள் . தொடர்ந்து எழுதுங்கள் . வாழ்த்துக்கள்

ஜோதிஜி சொன்னது…

வந்தேன்.....வாசிச்சேன்.

பொய் சொல்றாங்க மனிதா.

வந்தேன் வாசிச்சேன். ரசித்தேன் ன்னு வரனும்.

சரிதானே?

Related Posts with Thumbnails