கூர்த்த நாசியுடன் சாக்லேட் கலரில்
உதடு சுழிக்கும் புன்னகையும்
குட்டிப் பூனையாய்ச் சுருண்டிருந்த
கழுத்து முடிகளுமாய்
வாசம் வீசும்
எதிர் சீட்டுப் பெண்
அறிந்திருக்கவில்லை
நான் அவளை ரகஸியமாய்ப்
புணர்ந்து கொண்டிருப்பதை!
************************
காற்றில் முடிபறக்க
துப்பட்டா சரிசெய்தபடி கடப்பவளும்
உதடுகளில் ஐஸ்க்ரீம் வழிய
தோழியிடம் கண்ணடிப்பவளும்
முத்தமிடும் ஆசையைக் கிளர்ந்தெழச் செய்யும்
மினுமினுக்கும் கரிய கன்னங்களையுடைய
விற்பனைப் பெண்ணுமாய்
நிறைத்துக் கொள்கின்றனர்
இந்த ஞாயிற்றுக் கிழமையின்
கனவுகளை!
**************************************************
9 பேரு கிடா வெட்டுறாங்க:
வழிந்தோடும் கற்பனையில் தீர்த்துக் கொள்ளப்படுகிறது ததும்பி வழியும் காமம்....! நிறைத்துக் கொள்ளும் பொழுதுகளிலுல் தீறமால் அத்துமீறும்.. நினைவுகளுக்கு யார் இடுவார் தடுப்பு....!
தம்பி.. நான் ரசித்தேன் பா....கவிதையை...!
//எதிர் சீட்டுப் பெண்
அறிந்திருக்கவில்லை
நான் அவளை ரகஸியமாய்ப்
புணர்ந்து கொண்டிருப்பதை!//
டீன் ஏன் ஞாபகம் வருது தல!
தமிழ்10 வோட்டு பட்டை மால்வேர் என்கிறது ஆண்ட்டிவைரஸ் சாஃப்ட்வேர்! முக்கியமில்லைனா அதை எடுத்துருங்க தல! வர்றதுக்கு பயமுறுத்துது அது
விந்தையாரே அழகான ஞாயிற்றுக்கிழமையாய் அமையட்டும்.சந்தோஷமாயிருக்கீங்கபோல !
இப்பதான் பழய வாசனை அடிக்குது ...
உள்ளது உள்ளபடி சொல்லும்.கண்ணாடிக் கவிதை.இலக்கியம் காலத்தின் கண்ணாடி.இது கலர்க்கண்ணாடி.
//எதிர் சீட்டுப் பெண்
அறிந்திருக்கவில்லை
நான் அவளை ரகஸியமாய்ப்
புணர்ந்து கொண்டிருப்பதை!//
எதா இருந்தாலும் பையன் பிராங்கா பெசாரன் பா ....
அந்தப் பெண் நினைத்துக் கொண்டிருக்கலாம், 'முட்டாள், நானும்தான் உன்னைப் புணர்ந்து கொண்டிருக்கிறேன். ஏதோ ஆண்களுக்கு மட்டும்தான் காமம் என்று நினைத்துக் கொண்டு கழிவிரக்கத்துடன் கவிதை புனைந்து கொண்டிருக்கிறாயே' என்று:-)
இந்த பஸ் கவிதைல கொஞ்சம் கலாப்ரியா வாசனை இருக்கா இல்லியா ?
காற்றில் பரவும் அவளின் வாசத்தை வன்புணர்ந்துவிட்டன எனது நாசிகள் !!!
மாற்ற வேண்டும் இந்தக் கொடும் பழக்கத்தை இல்லாவிட்டால் எனக்கு இருக்கு சிறைத்தண்டனை !!!
தண்டனைக்கு பெயர் கலியாணமாம் !!!
---- எப்பூடி
கருத்துரையிடுக