வியாழன், 23 செப்டம்பர், 2010
நான் மட்டுமா தின்னேன்... ஒங்கண்ணனும்தான்...!
இன்னிக்கி வினவு தோழர்கள் நேபாள அரசியல்ல இந்திய மேலாதிக்கத்தோட குறுக்கீடு பத்தி அருமையான் ஒரு பதிவு போட்டுருந்தாங்க (link : http://www.vinavu.com/2010/09/23/nepal-india/ ) படிச்சுட்டு பின்னூட்டம் போடலாம்னு போனா அங்க ரெண்டு பேரு சீனா பண்ணாததையா இந்தியா பண்ணிச்சுன்னு ஒரே குதி... கடுப்பு தாங்கல எனக்கு.. என் பின்னூட்டத்துல ஒரு வரிய.. அதான் இந்தத் தலைப்பை... போட்டு, இந்தக் கதை யாருக்காவது தெரியுமான்னு ஒரு கேள்விய போட்டுட்டு வந்துட்டேன்.
கேஆர்பி.செந்திலண்ணன் மொதல்ல ஃபோனப்போட்டாரு..." யோவ்! அது என்னய்யா ஒரு வரிய மட்டும் சொல்லிட்டு வந்துட்ட? கதைய ஒங்க தாத்தாவா வந்து சொல்லுவாரு?"ன்னு...
வரிசையா ரெண்டு மூணு பேரு இதே மாதிரி...
நம்மகிட்ட ஒரு விஷயம். ஏதாச்சும் ஒரு விஷயம் நல்லாருக்குன்னா அத நாலு பேருகிட்ட சொல்லாட்டி தல வெடிச்சிடும். வினவுல அவ்ளோ பெரிய கதைய பின்னூட்டமாவும் போட முடியாது... சரி இங்கனயாச்சும் போட்ருவோம்னு தான்...
சின்னப் பசங்கள பாத்தீங்கன்னா நெறய விஷயம் சுவாரஸ்யமா இருக்கும்... நாமளும் அதே மாதிரி இருந்தவங்கதானே!
ஒருநா ரெண்டு பயலுவ பள்ளிக்கோட செவத்தோரமா நின்னு ஒண்ணுக்கடிச்சிட்டு இருந்தானுவோ.... என்னப் பாத்தவொடனே ஒருத்தன் ஓடிட்டான். இன்னொருத்தன புடிச்சி "ஏண்டா... அந்தப்பக்கம்தான் கக்கூஸு இருக்குல்ல... இங்க ஏண்டா ஒண்ணுக்கு அடிக்கிற?"ன்னு கேட்டா " உடுங்கண்ணே! நான் மட்டுமா அடிச்சேன்? அவனும்தான் அடிச்சான்"ன்னு கேட்டாம் பாருங்க!
சின்னப்புள்ளைங்க புத்தி இன்னும் நம்மாளுவகிட்ட நெறைய இருக்கு!
அதுக்காவ ஒரு கத!
ஒரு ஊர்ல.... சரி வேண்டாம் உதைக்க வருவீங்க!
ரெண்டு பேரு... மச்சானும் மச்சானும். பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்தவங்க. ( அது வேற ஒண்ணுமில்லீங்க.... இவங்க ஊட்டுல அவன் பொண்ணெடுத்து கட்டி இருப்பான்... அவன் ஊட்டுல இவன் கல்யாணம் கட்டி இருப்பான்... அதான் பொண்ணு குடுத்து பொண்ணெடுக்குறது!). ரெண்டு பேருமே தரகு யாவாரம் பண்ணி பொழக்கிறவங்க.
ஒருநா ரெண்டுபேரும் பக்கத்து ஊரு வாரச்சந்தைக்கி போயிருந்தாங்க. நல்ல யாவாரம்! பயலுவளுக்கு சந்தோசம் தாங்கல! சந்த முடிஞ்ச பொறவு சாராயக்கடைக்குப் போயி மூக்குமுட்டக் குடிச்சிட்டு பொடிநடையா நடந்தே போயிடலாம்னு முடிவு பண்ணி நடக்க ஆரமிச்சாங்க. நல்ல நெலா! கதையடிச்சிகிட்டே நடந்தாங்க.
போற வழியில ரெண்டு பேருக்குமே வயத்துல கடாமுடா! சுத்திமுத்தி பாத்தானுவோ! வசமா பக்கத்துல ஒரு வெள்ளரித்தோட்டம். அப்புறம்? குந்திட்டானுவோ!
பாதி போயிட்டு இருக்குறப்பவே கொல்லைக்காரன் பாத்துட்டான்.
"எலே! யார்ராவன் கிராதகப் பயலுவோள! ஏன்கொல்லையில பேளுறவனுவோ?"ன்னு கத்திகிட்டே வந்தவன் ரெண்டு பயலுவளயும் புடிச்சிட்டான்.
ரெண்டு பயலும் அவனவன் 'பேண்டத' அவனவன் தின்னுட்டுத்தான் போவணும்னு உத்தரவும் போட்டுட்டான். வேற வழி?! பயலுவ ரெண்டுபேரும் மூக்கப் பொத்திகிட்டே சோலிய முடிச்சானுவோ! முடிஞ்சாப்புல நடைக்கட்டுங்கடான்னு வெரட்டி விட்டான் கொல்லைக்காரன்.
ரெண்டு பயலுவளும் தலைய தொங்க போட்டுட்டே நடந்தானுவ. ஒருத்தன் சொன்னான் "மச்சான்! மறந்தாப்புல கூட எங்கயும் ஒளறிடாத... ஊரு பயளுவ, பொண்டுவோ எல்லாம் இதச் சொல்லியே மானத்த வாங்கிடுவாங்க.. சாக்கிரத மச்சான்" அப்டின்னான். அடுத்தவனும் தலைய ஆட்டுனான். இப்பிடியா ரெண்டு பேரும் ஒடம்பாட்டுக்கு வந்து அவனவன் ஊட்டுக்குப் போனானுவ.
ஒருத்தன் பொண்டாட்டி கொஞ்சம் கோவக்காரி... இவன் தண்ணி போட்டுட்டு போறன்னிக்கெல்லாம் திண்ணையிலதான் படுக்கணும். பயலும் கமுக்கமா போயி திண்ணையில படுத்துட்டான்.
காலையில சூரியன் சுள்ளுனு அடிச்சும் தூக்கம் முழுசா கலையல.
பொண்டாட்டிக்காரி முத்தம்கூட்டி சாணிகரைச்சி போட்டு கோலம் போடலாம்னு வந்தா. நட்டநடு முத்தத்துல ஒரு நாயி படுத்திருந்திச்சி. இவ ஒடனே "பீயத் தின்ன நாயே! செருப்பால அடிப்பேன்... ஓடு அந்தாண்ட"ன்னு வெரட்டுனா.
அரத்தூக்கத்துல இருந்த நம்ம பயலுக்கு பொண்டாட்டி நம்மளத்தான் திட்டுறான்னு கோவம்! சடார்னு துள்ளி எந்திரிச்சி கேட்டானாம்...
" ஏட்டி! நான் மட்டுமா தின்னேன்? ஒங்கண்ணனும்தான் தின்னான்...."
******************************************************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
14 பேரு கிடா வெட்டுறாங்க:
எப்டி உலகப்புகழ் பெற்ற இந்த படம் கிடைத்தது?
சீனப் பூச்சாண்டிகள் இந்தக் கதைய படித்தாவது "தானும் திங்கறதை" உணர்வார்களா?
நல்ல உவமைக்கதை!
இவ ஒடனே "பீயத் தின்ன நாயே! செருப்பால அடிப்பேன்... ஓடு அந்தாண்ட"ன்னு வெரட்டுனா.
அரத்தூக்கத்துல இருந்த நம்ம பயலுக்கு பொண்டாட்டி நம்மளத்தான் திட்டுறான்னு கோவம்! சடார்னு துள்ளி எந்திரிச்சி கேட்டானாம்...
" ஏட்டி! நான் மட்டுமா தின்னேன்? ஒங்கண்ணனும்தான் தின்னான்...."///
இது தான் சூப்பர் இன்னும் சிரிப்பை அடக்க முடியலை
நல்ல கதை!
இன்னும் சிரிப்பை அடக்க முடியலை
இந்த படம் எங்க கிடைத்தது?
:)).
இரண்டு மேற்கோள் கதைகளும் நல்லா இருக்கு. ஊருக்கு திரும்பிப்போனமாதிரி இருக்கு. மெயின் கத என்னான்னு தெர்ல.இருக்கட்டும்.
குமட்டிகிட்டே சிரிச்சேன்.....உவேவே....
விந்தைமனிதா நீ எழுதிய பதிவுகளில் உருப்படியான பதிவு இதுதான்...
ஈழப் பிரச்சினை ஆகட்டும்.. மாவோயிஸ்டுகள் பிரச்சினை ஆகட்டும் .. சொகுசா ஏசி ரூமுக்குள்ள உக்காந்துட்டு வியாக்யானம் பேசும் மலந்தின்னிகள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது....
முதல்ல நம்ம உள்துறை அண்ணாச்சிக்கும், வெளியுறவு அண்ணாச்சிக்கும் இதனை அனுப்பி வைக்கோணும்....
விந்தை மனிதரே.. எனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லே. இப்பொ சாப்பிட்டுக்கிட்டே உங்க பதிவப் படிச்சேன். போட்டோவ பாத்தாவது நகர்ந்திருக்கலாம். பில்டப்பப் பார்த்து உள்ள இறங்கிட்டேன் சாமி.. உவ்வே.. நாளைக்கு நமக்கு சாப்பிடாம மிச்சம் வச்ச பழையது தான் டோய்!
விந்தையாரே....நாத்தம் தாங்கல.இந்தப் படத்துக்காகவே வினவைச் சாட்டி பதிவு எழுதிட்டீங்க.நாறடிப்பவர்களின் மனதிலும் நாறும் இந்தப் பதிவு .
நல்ல கதை படமும் யதார்த்தம்
இந்தியாவில் இன்றைக்கு கம்யூனிஸ்ட்களை விட்டால் வேறு ஆட்கள் இல்லை.
எதற்கு தெரியுமா?
இன்றைய புழுத்துபோன ஜனநாயகத்தில் பாராளுமன்ற சட்டமன்றங்களில் உள்ளே நடக்கும் கொள்ளையை வெளிகொனற இடதுகள் தேவை.
சீனாவை எதிர்த்தால்தான் உண்மையான கம்யூனிஸ்ட் என்று சொல்லி கொள்ளும் வினவின் கருத்தில் எமக்கு உடன்பாடு இல்லை
தமிழ் உதயன் said...
இந்தியாவில் இன்றைக்கு கம்யூனிஸ்ட்களை விட்டால் வேறு ஆட்கள் இல்லை.
எதற்கு தெரியுமா?
இன்றைய புழுத்துபோன ஜனநாயகத்தில் பாராளுமன்ற சட்டமன்றங்களில் உள்ளே நடக்கும் கொள்ளையை வெளிகொனற இடதுகள் தேவை.
சீனாவை எதிர்த்தால்தான் (இந்தியாவில்) உண்மையான கம்யூனிஸ்ட் என்று சொல்லி கொள்ளும் வினவின் கருத்தில் எமக்கு உடன்பாடு இல்லை
கருத்துரையிடுக