புதன், 15 செப்டம்பர், 2010

கிண்ணத்தில் தேன்வடித்துக் கைகளில் ஏந்துகிறேன்!




"கிண்ணத்தில் தேன்வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதைவர எங்கெங்கோ நீந்துகிறேன்
"

தங்கநிறத்தில் அசையும் அமுதத்தில் அசைந்தாடும் சிறு பனிக்கட்டிகள்.... இளங்கன்னியின் கண்களில் மிதக்கும் கருவிழிகள்போல! சில்லிட்ட கண்ணாடிக்கோப்பையின் விளிம்புகளை உணரும் உதடுகளில் ஓடும் சுழிப்பில் மெலிதாய் ஓடுகிறது ஒரு கர்வப் புன்னகை... இப்போது என் நொடிகளுக்கு நானே ராஜா!

அந்தக்கோப்பையின் விளிம்புகள் எப்போதும் பெண்ணின் இதழ்களை நினைவுபடுத்தும். மேனி நோகுமென மெல்லத்தொட்டு, நாவினால் வருடி மூச்சை உள்ளிழுத்து ஓர்மைப்படுத்தி இமைகள் கிறங்கக் கிறங்க, மெதுவாய் உள்ளிறக்கு அமிழ்தத்தை... சட்டென்று பற்றிக்கொள்ளும் தீ.....எரியாத பெருநெருப்பு... உச்சந்தலை துவங்கி ஒவ்வொரு நரம்பிலும் பற்றிப் படரும் ஒரு சிலிர்ப்பு.... உலகெலாம் அழிந்து ஒருவராய் உணரும் ஏகாந்தப் பெருவெளி!

ஆ...! மதுக்கோப்பையும், இதழ்க்கோப்பையும் வேறா என்ன?! வேறென்பவன் வீணன்... இரண்டையுமே கையாளத் தெரியாதவன்!

மது அருந்தும் தருணங்கள் என் மனதிற்புகுந்து ஒட்டடை அடிக்கும் பொழுதுகள்.... கண்ணாடித் திரவம் காட்டும் பிம்பம் நான் என்கிற நானா... இல்லை இதுவரை நான் உணராத நானா?  நான் நானாக இருக்கும் பொழுதுகளை மீட்டுக்கொடுக்கும் தேவ ஊற்றே! எனை மீட்டும் இரவுகளில் சுருதிதப்பாது இசைமீட்டும் அமுதே! வாழி!

"ஒரு கோப்பை ஒயினும், ஒரு புத்தகமும், தங்குவதற்கு தாஜ்மகாலும்" மட்டும் கேட்ட கலீல் கிப்ரன் பாக்யவான். நானும் கேட்கிறேன் உறிஞ்சக் கொஞ்சம் மதுவும், உறங்க என் காதலியின் இதழ்களும்! ஆம்... நானும் பாக்யவான் தானே?

"சிறிது கள் கிடைத்தால் எனக்குக் கொடுத்து நான் அருந்த மகிழ்ந்திருக்கும் என் மன்னா!" என்று அதியமானின் திறம் போற்றிய அவ்வையின் பேரன் நான்!

மதுவை 'அருந்துவது' தொல்தமிழ்க் கலாச்சாரத்தின் வாழ்வியல் கூறு... மதுவைக் 'குடிப்பது'' மானுடம் நீக்கி, மதிபோக்கி புழுக்களாக்கி நெளியவிடும் நோய்க்கூறு! 'செவியுள்ளவன் கேட்கக் கடவது!'

தினம் கொஞ்சம் மது இதயம் வலுப்படுத்துமாம். மாரடைப்பைத் தடுக்குமாம்! வார்த்தைகளில் நஞ்சுதடவி முதுகில் அம்புவீசப்படும் தருணங்களின் வலியையும் தடவிக்கொடுத்து ஆற்றுமாம்.

ஒருமரத்துக் கள் ஒருமண்டலம் அருந்த உடம்பு பொன்னாகுமாம்... 'தென்னம்பாலும் இன்னொரு தாய்ப்பால் போலத்தான் தனக்கு' என்பார் கருத்து மினுமினுக்கும் ஓங்குதாங்கான ஆகிருதியான மீசைத்தாத்தா.... குடித்து வளர்ந்த குதூகலம் உடல்மொழியில் வழிய வழிய.

மதுகுடித்துச் சலம்புவது பன்றிகளின் செயல்.... மது உள்ளிறங்க உள்ளிறங்க உள்மனம் ஒடுங்கவேண்டும்... மெல்ல மெல்ல நினைவின் அலைகள் ஓய்ந்து வருமே ஒரு பரவச உணர்வு..... ஒரு நிஜமான குடிகாரன் அப்போதுதான் ஆன்மீக அனுபூதி எய்துகிறான்.

"மதுநமக்கு மதுநமக்கு மதுநமக்கு உலகெலாம்" என்று கணீர்க் குரலெடுத்துப் பாடுகிறான் பாரதி!

'கிண்ணத்தில் தேன்வடித்துக் கைகளில் ஏந்துகிறேன்' நான்! 






பின்குறிப்பு:

ஆச்...ஊச்... எப்படி நீ குடிப்பதை நியாயப்படுத்தி எழுதலாம் என்று திட்டத் தயாராகும் நண்பர்களுக்கு.... 1) எழுதும் எல்லாம் எழுதுபவனின் அனுபவமாக இருக்க வேண்டுமா என்ன? ( நான் குடிப்பேன் என்பது வேறு விஷயம்!) 2) அப்படியே பிரபஞ்சனின் இந்தப் பக்கத்தையும் கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டுப் போங்களேன். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளன். காதுக்குள் வந்து கதைபேசும் சித்துக்காரன்! இதுவரை பிரபஞ்சனை வாசிக்காதவர் யாரேனும் இருந்தால் தயவுசெய்து உடனே தாவுங்கள் பிரபஞ்சனின் தளத்திற்கு.

20 பேரு கிடா வெட்டுறாங்க:

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

பிரபஞ்சன் அவர்களின் தளம் பற்றிய தகவல் எனக்கு புதிது தோழர்!நன்றி!

//மது உள்ளிறங்க உள்ளிறங்க உள்மனம் ஒடுங்கவேண்டும்... மெல்ல மெல்ல நினைவின் அலைகள் ஓய்ந்து வருமே ஒரு பரவச உணர்வு..... ஒரு நிஜமான குடிகாரன் அப்போதுதான் ஆன்மீக அனுபூதி எய்துகிறான்.//

.... ... தற்கொலை கூடாதென அறிவுறுத்தும் தோழர் 'தற்காலிக தற்கொலை' யை நியாயப் படுத்தலாமா!..ஆனாலும் உங்களை நான் புரிந்து கொள்கிறேன்... இந்த பின்னூட்டத்திற்கு பதிலளிக்காமல் தாங்களும் என்னை புரிந்து கொள்ளுங்கள் ...

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

தோழர் ரதி!
நம்ப தோழரிடம் கொஞ்சம் அலை பேசுங்களேன்!

vinthaimanithan சொன்னது…

இன்னிக்கு என் ஃபீட்ஜெட் விண்டோவை ரொம்ப ஆர்வமா பாத்துட்டு இருக்கேன். பதிவுபோட்ட ஒரு மணி நேரத்துல நாலு பேரு பிரபஞ்சன் தளத்துக்கு ஜம்ப் ஆயிருக்காங்க ( ரதியக்காவும் ஒருத்தர்னு நெனக்கிறேன். கரெக்டா?) . ரொம்ப சந்தோஷமா இருக்கு... 'சூரியனுக்கு டார்ச்' அடிக்கிறோமோன்னு பயந்துட்டு இருந்தேன். சில பேருக்காவது பிரபஞ்சனைக் காட்டியதுல ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

Bibiliobibuli சொன்னது…

நியோ,

உங்கள் அக்கறைக்கும், என் மீது கொண்ட நம்பிக்கைக்கும் நன்றி.

Bibiliobibuli சொன்னது…

//ரொம்ப சந்தோஷமா இருக்கு...//

What makes you happy?? Please, tell me.

vinthaimanithan சொன்னது…

என் தளம் மூலமா 4 பேரு பிரபஞ்சனுக்கு ஜம்ப் ஆயிருக்காங்கன்றதில எனக்கு ஒரு குழந்தைத் தனமான சந்தோஷம்... அவ்ளோதான்க்கா... பிரபஞ்சன் அற்புதமான எழுத்துக்காரர். ஆனால் இன்னைக்கு வலைப்பதிவு படிக்கிற எல்லாரும் பிரஞ்சனைப் படிச்சிருக்க மாட்டாங்க இல்லையா?

அப்புறம் அக்கா...ஒரு லிங்க் தரேன் பாருங்க...பிரபஞ்சன் கதைதான்.... 'மரி என்கிற ஆட்டுக்குட்டி' http://azhiyasudargal.blogspot.com/2010/09/blog-post_04.html

என்னது நானு யாரா? சொன்னது…

குடிப்பதை ஒரு காலமும் நியாயபடுத்தவே முடியாது! அது மனிதனை கீழ்நிலையான விலங்கு நிலைக்கே கொண்டு செல்கிறது.

மனிதன் உயர்ந்து தெய்வ நிலை அடையவேண்டும் என்பது மனித சமூகத்தின் ஒட்டுமொத்த கனவாக இருக்கிறது. அதற்காக தான் பல பகிரத பிரயத்தணங்கள் செய்யபடுகிறது.

குடிப்பது உங்களின் விருப்பம்! ஆனால் அதையேன் நியாயபடுத்த முயல்கின்றீர்கள் பொது வெளியில்?

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

தோழர் 'என்னது நான் யார்'!
எவ்வளவு அருமையான பெயர் உங்களது!
தந்த்ரா வில் உடலுறவையும் ஆன்மீக அனுபவமாக மடை மாற்றம் செய்பார்களாம்! அதைப் போன்ற அனுபவமாகத் தான் குடிப்பதையும் நமது விந்தை தோழர் பயன் படுத்துகிறார்! தாங்கள் மொடாக் குடியர்களை நினைத்து விந்தையாருடன் விவாதிக்க அவசியமில்லை தோழர்! அவர் 'நான் கடவுள்' ஆர்யா!?

Bibiliobibuli சொன்னது…

உங்கள் விநோத இலக்கியப்படைப்புக்கு, ( rhetorical extravaganza -"சொற்சித்திரம்" ) இத்தோடு ஏழு தடவைகள் பதில் எழுதி அழித்து விட்டேன். சுயமாய் முடிவெடுக்கும் வயதும் பக்குவமும் உள்ள ஒருவர் மதுவுக்கு அடிமையாவது அவர் சொந்த முடிவு. ஒவ்வொருவரும் தன் வரையில் அதை நியாயப்படுத்தலாம். ஆனால், முதன்முதல் உங்கள் தளத்தில் ஓர் பதிவைப் படித்து மனம் வருந்தினேன். கடுமையாக ஏதும் சொல்ல வேண்டாம் என்றுதான் இதுவரை எழுதிய பதிலெல்லாம் அழித்துவிட்டேன். இது கூட நீங்கள், "அக்கா" என்று என்னை உரிமையோடு மதிப்பதால் எழுதுகிறேன்.

மனதில் ஒன்று வைத்து வெளியில் வேறு பேசப் பிடிக்கவில்லை. அதனால் உண்மையை எழுதினேன். உண்மை கசந்தால் என்னை தாரளமாக திட்டலாம், தம்பி.

என் கோபம் உங்கள் பதிவு பற்றியதல்ல. நான் மதிப்பு வைத்திருக்கும் ஒருவர் மதுவுக்கு ஆட்பட்டவரா என்கிற ஆதங்கம். //மொடாக் குடியர்களை நினைத்து விந்தையாருடன் விவாதிக்க அவசியமில்லை//நியோவின் இந்த வரிகள் சற்றே நிறைவைத்தருகிறது.

vinthaimanithan சொன்னது…

அக்கா, i'm not a regular drinker; only occationally and socially. அதை மறுத்து வேடமிட விரும்பவில்லை. நான் குடிக்கு அடிமையானவனும் இல்லை...குடி சமூகத்தை எவ்வளவு சீரழிக்கும் என்பது மிகத் தெளிவாகவே எனக்குப் புரியும். குடிப்பதை விதந்தோதி எழுதவேண்டும் என்று திட்டமிட்டு நான் எழுதவில்லை. குடியையும் ஒரு அனுபவமாக எழுதினால் நன்றாக இருக்குமே என்றுதான் எழுதினேன். நீண்ட நாட்களாகவே பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் 'சிதம்பர நினைவுகள்' புத்தகத்தில் சிவாஜிகணேசனுடன் குடித்த அனுபவத்தை மிக அழகாக எழுத்தாக்கியதுபோல எழுதவேண்டும் என்று நினைத்தேன். அதை இன்று நிறைவேற்றி இருக்கிறேன்.

மேலும் மொத்தமாக மதுவருந்துதல் என்பதே தவறானது என்ற கருத்தாக்கத்தை நான் மறுக்கிறேன்.

உங்கள் பின்னூட்டம் எனக்கு ஏதோ ஒருவகையில் நிறைவைத் தந்திருக்கிறது. என்னைக் கடுமையாகத் திட்டும் உரிமையும் உங்களுக்கு உண்டு அக்கா. ஒரு விஷயம்... நான் மது அடிமை என்ற ஆதங்கம் வேண்டாம். "எனக்கு எப்போதும் குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமோ, பெரு விருப்போ இருந்ததில்லை. நான் குடிப்பது பெரும்பாலும் என்னுடன் அமரும் நண்பர்களைப் பொறுத்தது." என்ற பிரபஞ்சனின் வார்த்தைகளே எனதும்.

நன்றி அக்கா. மிகவும் நேரம் ஒதுக்கி எழுதிய அக்கறைக்கும் அன்புக்கும்.

vinthaimanithan சொன்னது…

//அதைப் போன்ற அனுபவமாகத் தான் குடிப்பதையும் நமது விந்தை தோழர் பயன் படுத்துகிறார்! தாங்கள் மொடாக் குடியர்களை நினைத்து விந்தையாருடன் விவாதிக்க அவசியமில்லை தோழர்!//

புரிதலுக்கு நன்றி நியோ!

ரதியக்கா.... முகமறியா ஒருவனுக்காக ஏழு முறை அழித்து எழுதினீர்களா?! நெகிழ்வாய் இருக்கின்றது. செந்திலண்ணனுக்கு அடுத்து பதிவுலகம் எனக்குத் தந்த விலைமதிப்பில்லா பரிசு ரதியக்கா, நியோ!

எனக்கான மனிதர்கள் இல்லாமல் போய்விடவில்லை எனும் நம்பிக்கை ஊற்றெடுக்கின்றது

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

பெரும் நன்றிகள் தோழர்! உங்கள் குறித்து நான் தான் என்றென்றும் பெருமிதம் கொள்ள வேண்டும்.தாங்களோ என்னையும் சொல்கிறீர்கள்.என்ன தவம் செய்தனை நான்!

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

தோழர்! நம்ப செந்தில் அண்ணனை நேற்றும் இன்றும் வலையில் காண இயலவில்லை ... வெளியூர் சென்றிருக்கிறாரா தோழர்!?

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

நான் பி ...... யை நக்க மட்டும் தான் செய்வேன் , திங்க மாட்டேன் , நல்லா இருக்குடா உன் கதை !
ஒத்துக்கடே ! நானும் குடிகாரன்தான் , ஆனா தைரியமான குடிகாரன்
உண்மை கூட ஒரு போதை , குடித்துப்பார்

ஹேமா சொன்னது…

என்ன விந்தையாரே...இப்படி ஒரு பதிவு.
உங்களையும் கெடுத்துக்கிட்டு
ஊரையும் கெடுக்கிறதா இருக்கு !
சும்மா ஒரு ஜாலிக்குத்தானே எழுதினீங்க !

Bibiliobibuli சொன்னது…

//எனக்கான மனிதர்கள் இல்லாமல் போய்விடவில்லை எனும் நம்பிக்கை ஊற்றெடுக்கின்றது//

So,Yeah..! Rajaraman,your sister is always there for you to cry, laugh with you and of course to yell at you as well.

So, can you add my name in your "Will" only if you don't have debt. OK vaa? Just Kidding. :)

அன்பரசன் சொன்னது…

பிரபஞ்சன் அவர்களின் லிங்க் அருமைங்க

pichaikaaran சொன்னது…

" பதிவுபோட்ட ஒரு மணி நேரத்துல நாலு பேரு பிரபஞ்சன் தளத்துக்கு ஜம்ப் ஆயிருக்காங்க"

me too jumped now.... I like him so much.. read him lot.. but come to know about his website now only... thanks

நேசமித்ரன் சொன்னது…

என்ன நடக்குது இங்க ?

:)

vinthaimanithan சொன்னது…

@நியோ
ஆமாம் நியோ, செந்திலண்ணன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருக்கிறார்.

@ரதியக்கா

//your sister is always there for you to cry// அதான் எனக்கு முன்னாடியே தெரியுமேக்கா... :)

@ஹேமா
ஆமாம் சகோதரி.... சும்மா சும்மா புத்தர் மாதிரியே எழுதிட்டு இருக்கக்கூடாதில்லையா!!! அதான்.....

@ அன்பரசன்
நன்றி அன்பரசன்

@ பார்வையாளன்
இத.. இத... இதத்தான் எதிர்பார்த்தேன்

@நேசமித்ரன்
ம்ம்ம்.... கொழந்த அழுவுது :)

Related Posts with Thumbnails