வெள்ளி, 10 செப்டம்பர், 2010

மௌனங்களால் செவிடானவனின் புலம்பல்கள்



"கர்ப்பக்கிருகமே கல்லறையாய்
கரைந்துபோன என் மகளே!
பிரபஞ்சத்தின் விளிம்பு தாண்டியும்
வீசுகிறது உன் குருதியின் வீச்சம்
இனி எப்போதும் திறக்கப்பட முடியாத
இமைகளின் வெளிச்சம்
இருளில் அழுந்தியபடி...
உணரப் படாத உன் இதயத் துடிப்பின் கேளா ஒலிகளில்
செவிடாகிப் போகட்டும் தர்ம சாஸ்திரங்களின் செவிகள்
உனைப் புறந்தள்ளிய அசதியில்
தற்காலிகமாய் இறந்துகிடக்கிறாள் உன் தாய்!
இனி என்றும் எழுந்துவிடாது இற்றுப் போகட்டும் என் ஆண்மை
உன் தகப்பனுக்கு ஒன்றுமட்டும் செய்
பிறவாது போன
என் மகளே...
தயவு செய்து....
எப்போதும்...
என்னை மன்னித்துவிடாதே!"




         

15 பேரு கிடா வெட்டுறாங்க:

ஜோதிஜி சொன்னது…

"கர்ப்பக்கிரகத்தில்
கரைந்துபோன என் மகளே!

உதிரம் நிறைந்த பனிக்குடத்தில்
நீ அறிந்த உலகம்
நான் அறியாதது,

உன் குருதியின் நாற்றம்
எல்லைதாண்டி
என்னை வந்தடையும் போது
குற்ற உணர்ச்சிகள் என்னை
கொல்கிறது,

உன்
திறக்கப்பட முடியாத
இமைகளின் வெளிச்சம்
என் மனம்
இருளில் அழுந்தியபடி...
உணரப் பார்க்கிறது,

நான்
உணராத உன் இதயத் துடிப்பு
கேட்காத ஒலிகளாய்
கரைந்து போய்க் கொண்டுருக்கிறது,

மறந்து போன
தர்ம சாஸ்திரங்களின் செவிகள்
புறந்தள்ளிய அசதியில்
தற்காலிகமாய் இறந்துகிடக்கிறாள் உன் தாய்!

உன் தகப்பனுக்கு ஒன்றுமட்டும் செய்
பிறவாது போன என் மகளே...

தயவு செய்து....
எப்போதும்...
என்னை மன்னித்துவிடாதே!"

ஜோதிஜி சொன்னது…

ஹாலிவுட் பாலா எனக்கு இன்னும் ஒன்பது கவித எழுத வாய்ப்பு கொடுத்து இருக்கா.

நக்கலாக வெறுப்பாக எண்ணிவிடாதே ராஜா(?)

பத்மா சொன்னது…

ஐயோ கொடுமையா இருக்குங்க
கண்ணீர்க் கவிதை ..

அக்குழந்தைக்கு அஞ்சலி

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

it is a part 2 of "மௌனமாய் ஒரு கொலை" but it is in poem format.
"உனைப் புறந்தள்ளிய அசதியில்
தற்காலிகமாய் இறந்துகிடக்கிறாள் உன் தாய்!"
ok., well and good.
please., just wait and see.,
your brother krps and your sister rathi will come and abuse you.

ஹேமா சொன்னது…

விந்தையாரே...மனதை நெகிழ வைக்கிறது கவிதை.பெண்ணாய்க் கருவுற்றதால் இந்தக் கொடுமையா !

ஜோதிஜி...கலக்குறீங்க !

என்னது நானு யாரா? சொன்னது…

//தயவு செய்து....
எப்போதும்...
என்னை மன்னித்துவிடாதே!"//

அந்த தந்தையின் தப்பென்ன..விதி அவ்வாறு இருக்கையில். புரியவையுங்க நண்பரே!

Bibiliobibuli சொன்னது…

@enthisai,

"abuse", are you sure this is the right word?? I don't know if you are trying to be funny or sarcastic.

I don't find it funny.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமை

vinthaimanithan சொன்னது…

ரதியக்கா, எண்திசை வேண்டுமென்றே 'abuse' என்ற வார்த்தையைக் குறிப்பிடவில்லை என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சொல்ல வந்ததைத் தவறாக சொல்லிவிட்டார் என்பதுதான் சரியாக இருக்கும். நான் அவரது பின்னூட்டம் பார்த்தவுடனேயே சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைத்தேன். வேறு ஒரு மண்டையிடிக்குள் மாட்டிக்கொண்டிருந்ததால் இயலவில்லை.

அநேகமாக 'செந்திலண்ணனும் நீங்களும் என்னைக் காய்ச்சியெடுக்க வரப்போகிறீர்கள்' என்ற அர்த்தத்தில்தான் சொல்லி இருக்கக்கூடும்....

அப்படிக் காய்ச்சப்படுவது எனக்கு உவப்பானதே என்று எண்திசைக்கு இங்கு கூறவிரும்புகிறேன். ஏனெனில் அவர்கள் இருவரும் என்னைச் செதுக்கிக் கொண்டிருப்பவர்கள்.....

அது இருக்கட்டும் ரதியக்கா... என்றும் இல்லாமல் இன்று என்ன ஆங்கிலத்தில் பின்னூட்டம்?!

"i don't find it funny".... புரியவில்லை அக்கா.

இன்று என் பல பதிவுகளையும் பொறுமையாகப் படித்து பின்னூட்டிய 'எண்திசை'க்கு நன்றி....

ரதியக்கா, உங்களுடையது க்ரோம் ப்ரவுசர், விண்டோஸ் செவன், டொரண்டோ, கனடா தானே... என் ஃபீட்ஜெட் விஸிட்டர்ஸில் க்ரோம், செவன், டொரண்டோவையும், க்ரோம்,செவன், சென்னையையும்(செந்திலண்ணன்) எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்

Bibiliobibuli சொன்னது…

Rajaraman, I am at work. I will right later. Thanks.

Bibiliobibuli சொன்னது…

"right" (write) sorry. Spelling mistake.

Bibiliobibuli சொன்னது…

வேலைத்தளத்தில் இருந்ததால் தமிழில் விலாவாரியாக பின்னூட்டமிட நேரமிருக்கவில்லை, முடியவில்லை. நான், I don't find it funny" என்று சொன்னதன் அர்த்தம் எண்திசை சொன்னது எனக்கு தமாஷ் ஆக தெரியவில்லை என்பது தான், வேறொன்றுமில்லை.

ராஜாராமன், ரதி என்ற பெயர் கொண்ட வேறு ஒருவர் அல்லது என் பெயரைப் பயன்படுத்தி யாராவது நான் உலாவும் தளங்களில் பின்னூட்டமிட்டால் நிச்சயம் தெரியப்படுத்துவேன்.

ராஜாராமன் என்ற ஓர் சகமனிதனுக்காக ஒரு துரும்பைக்கூட நான் தூக்கிப்போடாவிட்டாலும் என் மீது நீங்க கொண்ட மரியாதை ஆச்சரியத்தையும் கொஞ்சம் சந்தோசம் கலந்த பயத்தையும் கொடுக்கிறது.

மற்றப்படி நான் யாருடைய பதிவுக்கும் இடும் பின்னூட்டங்கள் என் புரிதலின் அல்லது அறியாமையின் வெளிப்பாடே அன்றி யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல.

Unknown சொன்னது…

இன்னொரு காதலும் வரும், இன்னொரு கவிதையும் வரும்.

Ashok D சொன்னது…

எனக்கும் நேர்ந்திருக்கிறது... என்ன பண்றது... எல்லாவற்றையும் கடந்துபோயாக வேண்டும்..

இருந்தாலும் புத்திர சோகத்திற்கு வலுவான கரமுண்டு :(

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

தோழர் ... என்ன சொல்வதென தெரியவில்லை ... மனம் தளராதிருங்கள் ... வழக்கமாய் நீங்கள் எனக்கு சொல்வீர்கள் ... நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் தோழர் ... மனம் தளராதிருங்கள் தோழர் .....

Related Posts with Thumbnails