வியாழன், 9 செப்டம்பர், 2010

என் மரண அறிவிப்பு


என்றோ ஒருநாள்
நான் மரித்துப் போவேன்

பூக்கள் மொய்க்கும்
என் உடலத்தின் ஏக்கம்
உள்ளிருந்து வடியும் சில துளிகளை நோக்கி....

இறுதி 'மரியாதை'யின் போதாவது
கழற்றி வையுங்கள் உங்கள்
முகமூடிகளை

உமது விமர்சனங்களுக்குக் கையளிக்கிறேன்
சில கவிதைகளையும்
ஒரு டைரிக் குறிப்பையும்

என் மரண அறிவித்தலில்
உரக்கச் சொல்லுங்கள்
கம்பீரமாகவும்...
"மனிதர்களைத் தேடி அலைந்தவன்
களைத்து உறங்கிப் போய்விட்டான்"
என

16 பேரு கிடா வெட்டுறாங்க:

என்னது நானு யாரா? சொன்னது…

//என் மரண அறிவித்தலில்
உரக்கச் சொல்லுங்கள்
கம்பீரமாகவும்...
"மனிதர்களைத் தேடி அலைந்தவன்
களைத்து உறங்கிப் போய்விட்டான்"//

இது அருமை! இதை விட்டுபோட்டு, பின்நவினத்துவம், முன்நவினத்துவம்னு மண்டையை காயவைக்கிற கவிதைகளை சொல்றீங்களே! அப்பத்தான் ஏண்டா இந்த கொடுமைன்னு ஆகிபோகுது...

இப்படியே எளிமையா எழுதி பழகுங்க...
நம்ப கடைக்கு நேரம் இருக்கும் போது வாங்க தல!!!

பெயரில்லா சொன்னது…

நன்றாயிருக்கிறது.
“எனது மரண அழைப்பிதழ்” எனும் பெயரில் வந்திருக்கும் இந்தத்தளமும் உங்களுடையதா?
http://chummaah.blogspot.com/2009/06/blog-post_10.html

movithan சொன்னது…

இந்த உணர்வு உள்ளவனே மனிதனாய் வாழ்வான்.அருமையான வரிகள்.

vinthaimanithan சொன்னது…

இல்லை அநானி.... அது என்னுடையதல்ல. இப்போதுதான் அதனைப் பார்க்கிறேன். உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ளலாமா?

தமிழ் உதயம் சொன்னது…

இறுதி 'மரியாதை'யின் போதாவது
கழற்றி வையுங்கள் உங்கள்
முகமூடிகளை

அருமையான கவிதை.

vasu balaji சொன்னது…

"மனிதர்களைத் தேடி அலைந்தவன்
களைத்து உறங்கிப் போய்விட்டான்"

பிடித்த வரிகள்:)

ஹேமா சொன்னது…

அருமையான கவிதை.நானும் இதன் ஜாடையில் இன்னும் மரண அறிவித்தல் கொடுக்கப்படவில்லை என்கிற மாதிரி எழுதினேன்.

ஆதங்கம் அய்யாசாமி சொன்னது…

ஏம்ப்பா, தலைக்கு எலுமிச்சை தேச்சி பார்க்கிறதுதானே, அல்லது இந்த ருத்ரன் கிட்டவாவது போவ வேண்டியதுதானே.

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

கொஞ்சம் விட்டா கண்ணதாசன் மாதிரி யார்?யார்? தன் மரணத்திற்கு வருகிறார்கள் என்று ஒத்திகை பார்ப்பீர்கள் போலும்.

ஜோதிஜி சொன்னது…

என்றோ ஒரு நாள்
மரித்துப் போவேன்,

உடல் மேல்
பூக்கள் சிதறியிருக்கும்,
பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் கூட
வரிசை கட்டி நிற்பார்பார்கள்,

கடன் கொடுத்தவனும்
எதிர்பார்த்து
காத்து இருந்தவன்
பேசும் பேச்சுகளை
ஊர்வல்த்தில் முழங்கும்
தப்பாட்டம் மறைத்து விடும்,

அவர்களின்
"கண்ணீர்" அஞ்சலி
காண என் கண்கள்
திறந்து இருக்கப் போவதில்லை,

எப்பூடி?

வால்பையன் சொன்னது…

"மனிதர்களைத் தேடி அலைந்தவன்


“கடைசி வரை கண்டடையாமல்”


களைத்து உறங்கிப் போய்விட்டான்"

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

நல்ல கவிதை , நீ எட்டாவது படிக்கையில் எழுதிய கவிதை தானே இது

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

நான் உங்களையும் தாங்கள் என்னையும் பலரை நாமும் நம்மை பலரும் கண்டடைந்திருக்கின்றனர் ... களைத்துப் போனது உண்மை என்றாலும் முழுவதுமாய் ஏமாந்து விடவில்லை தான் மனிதம் ... உங்களை போன்றவர்கள் இருப்பதால்தோழர் ...

pichaikaaran சொன்னது…

எதையோ படித்து விட்டு போலி இலக்கியம் படைக்க முயலும் எழுத்தாளர்களை படித்து அலுத்து போனவன் நான்.
நல்ல எழுத்து யாருக்கும் தெரியாமல் மறைந்து இருந்து போக்கு காட்டுகிறது. பதிவுலகம் சில நல்ல எழுத்தை அடையாளம் காட்டுகிறது...
பதிவுலகம் இல்லை என்றால், இந்த கவிதையை நான் படித்து இருக்க வாய்ப்பில்லை...
பளிச் என்று பக்காவாக அமைந்த கவிதை இது.. மிகவும் ரசித்தேன்

Raja சொன்னது…

nice one... i too have written something on the same concept under the title ' marana payam'

Damien சொன்னது…

Im goin to use this concept for my school Project! Hope you wont ask for copyrights! :) Great piece of work

Related Posts with Thumbnails