சனி, 30 அக்டோபர், 2010

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்...! பதிவுலகில் அடியெடுத்து வைக்கும் ரதியக்காவுக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும்!

"ஈழத்தின் நினைவுகள்" என்ற பெயரில் நெஞ்சை உலுக்கும் கட்டுரைத் தொடரை வினவு பக்கங்களில் எழுதிவந்த ரதியக்கா அந்த தொடருக்குப்பின் தனக்கென தனி வலைப்பூ ஒன்று துவங்காமலேயே இருந்து வந்தார். நான் சிலமுறை கேட்டும் அவர் வலைப்பூ துவங்குவதில் ஆர்வம் இல்லாமலேயே இருந்து வந்தார்.

இன்று எனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்த உடன் எனக்கு இன்ப அதிர்ச்சி! நானும் பதிவராயிட்டேன் என்று அக்கா மகிழ்ச்சியுடன் அனுப்பி இருந்த மின்னஞ்சல் பார்த்தேன்.

வாழ்த்துக்களும் நன்றிகளும் சமர்ப்பணம் அக்கா! ஈழத்தின் வலியை, இன்னும் உயிர்ப்போடிருக்கும் கனவுகளை, தொல்தமிழ் பண்பாட்டின் விழுமியங்களை... இன்னும் இன்னும் ஏராளமாய் உங்கள் ஈரம் சுமந்த எழுத்துகளில் காண ஆவலாக இருக்கின்றோம்.

மொக்கைகளும், சிறுமைப் புத்திக்காரர்களும் மலிந்திருக்கும் தமிழ் வலையுலகில் ரதியக்கா போன்றோரின் வருகை இன்னும் ஏராளமாக நிகழவேண்டும். எப்படி தமிழ் எழுத்துலகில் சிறுபத்திரிகைகள் ஒரு புதிய சகாப்தத்தைத் துவங்கினவோ, அதே போல இன்று வலையுலகம் திகழ்கின்றது. தமிழின், தமிழரின், தமிழ் தேசியத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலை நிகழ்த்த ரதியக்கா போன்றோர் விளங்கிட...

வாருங்கள் அக்கா! உங்களையும் ஒரு பாடலோடு வரவேற்கிறேன்!

அக்காவின் வலைப்பூ முகவரி:    http://lulurathi.blogspot.com/



16 பேரு கிடா வெட்டுறாங்க:

THOPPITHOPPI சொன்னது…

வளர வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நானும் வாழ்த்துகிறேன்..

dheva சொன்னது…

சகோதரி ரதி அவர்களுக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்.....!

சௌந்தர் சொன்னது…

ரதி அக்காவை நானும் வரவேற்கிறேன்

ஜோதிஜி சொன்னது…

அட அடா தலைவா பின்னிட்டே.

சரித்திர புகழ்பெறப் போகும் ரதியை வரவேற்ப்பதில் தேவியர் இல்லம் பெருமிதம் அடைகிறது.

Unknown சொன்னது…

வரவேற்ப்போம்.அவர்களின் வரவில் நானும் பெருமிதம் அடைகிறேன்

Bibiliobibuli சொன்னது…

எனக்கு வாழ்த்துச்சொல்லி வரவேற்ற அனைவருக்கும் நன்றி. அப்பிடியே என் தளத்தில் "A9 Memories" என்பதற்கு கீழேயுள்ள "ராவணன் வெட்டு" படத்தில் அழுத்தி ஈழம் உயிர்ப்போடிருந்த போது எடுக்கப்பட்ட படங்களைப் பாருங்கள்.

சகோதரம், இது நான் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.

Unknown சொன்னது…

நல்லா காமெடி பண்றீங்க தம்பி .. அரசியல்வாதிக்கும் உங்களுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியல..

// எப்படி தமிழ் எழுத்துலகில் சிறுபத்திரிகைகள் ஒரு புதிய சகாப்தத்தைத் துவங்கினவோ, அதே போல இன்று வலையுலகம் திகழ்கின்றது.//என்பதை படித்தபின் எனக்கு சிரிச்சு மாளல..

ரதி மாதிரி ஒரு தேர்ந்த பார்வையாளருக்கு இம்மாதிரியான விளம்பரம் செய்வது சிறுபிள்ளைத்தனமானது..

ரதிக்கு என் வாழ்த்தும், வரவேற்பும்...

Bibiliobibuli சொன்னது…

//சரித்திர புகழ்பெறப் போகும் ரதியை....//

ஜோதிஜி, இது ரொம்ப ஓவர். பிறகு அழுதிடுவன்.

ஜோதிஜி சொன்னது…

செந்தில் ரதி இருவருக்கும்.

சரித்திரப் புகழ் பெறப்போகும் என்பதற்கு முழுமையான அர்த்தம் அல்லது ராசா கொடுத்த விளம்பரத்தின் தாக்கம் குறித்து.

விமர்சனம் குறித்து எதுவும் தெரியாத போதும், வராத போதும், விரும்பாத போதும் என்று ஒவ்வொரு காலகட்ட எழுத்தின் போது அவ்வப்போது வந்தவர்கள் கொடுத்த தாக்கம் தான் பல விசயங்களையும் எழுத உதவியது. அதில் முக்கிய இடத்தில் உள்ளவர்களின் ரதியும் ஒருவர்.

இணையத் தொடர்பு இருக்கும் வரையிலும் இந்த வலைபதிவுகள் இருக்கும். பலரின் சரித்திரிம் முடிந்தாலும் இதில் உள்ள எழுத்துக்கள் அச்சு ஊடகங்கள் தாண்டியும் இருக்கத்தானே செய்யும்.

இப்போ படிங்க ரதி


//சரித்திர புகழ்பெறப் போகும் ரதியை....//


எப்படி சரியா கோர்த்து முடிச்சேனா ரதி?

காமராஜ் சொன்னது…

வலையுலகில் காலடி வைக்கும் தோழர் ரதி அவர்களுக்கு வணக்கம்.வாருங்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

எப்ப விந்தை மனிதனுக்கு ஒரு பின்னூட்டம் போடுவது என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்:)

வலைப்பக்கம் இல்லாமலே ரதி என்ற பெயர் பல பக்கங்களில் பின்னூட்டமாக உலாவும் பிரபல பெயரல்லவா!

pichaikaaran சொன்னது…

ரதி மாதிரி ஒரு தேர்ந்த பார்வையாளருக்கு இம்மாதிரியான விளம்பரம் செய்வது சிறுபிள்ளைத்தனமானது..”

என் போன்ற சிறுபிள்ளைகளுக்கு இந்த பாணி பிடித்து இருக்கிறது..
வருக வருக என வரவேற்கிறேன்

vimalanperali சொன்னது…

வாழ்த்தி வரவேற்போம்.

ஜோதிஜி சொன்னது…

வலைப்பக்கம் இல்லாமலே ரதி என்ற பெயர் பல பக்கங்களில் பின்னூட்டமாக உலாவும் பிரபல பெயரல்லவா!


உலாவிக் கொண்டுருந்தவர் இப்போது உள்வாங்க வைத்துக் கொண்டுருக்கிறார். நடராஜன்.

ஜோதிஜி சொன்னது…

என்ன ராசா தீபாவளி சென்னையா? ஊரா?

Related Posts with Thumbnails