புதன், 6 அக்டோபர், 2010

சும்மாதான்... நீங்களும் ரசிங்களேன்...இன்னிக்கு ஒண்ணும் மேட்டர் சிக்கல... இருந்தாலும் கை கொஞ்சூண்டு அரிக்க ஆரம்பிச்சிட்டு... ஆனா மூளை வறண்டு போயி கெடக்கு! அதுனால நான் ரசிச்ச செல விஷயங்களை சும்மா சொல்லிட்டு மட்டும் போறேன்.

1) வால்ட் விட்மனுக்கு அவனது காதலி எழுதிய கடிதத்தில் இருந்து...

"அந்த மலையின் உச்சியில் வெட்டவெளியில் நமக்கான குழந்தையை நாம் பெற்றெடுக்க வேண்டும். அதுவரை என் கருவறை வாசலை தேவதைகள் காவல் காப்பார்கள்."

2)விவேக சிந்தாமணி... எளிய எதுகை மோனை, சந்தங்கள்ல கனமான விஷயங்களை ரொம்ப அழகா சொல்லியிருக்குற தமிழ்நூல்... அதுல இருந்து ஒண்ணு... "பசி வந்தா பத்தும் பறந்துபோகும்"னு சொல்லுவோம்ல? அது என்னாங்க அந்த பத்து?

" மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை- தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்"

3) என்னை அவர்களுக்குப் பிடித்திருக்கிறது;
உன்னையும் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது
நம்மைத்தான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை

இது ஆஸ்கார் வைல்ட் சொன்னதுங்க

4) வரிசையா மூணு கவிதையில இருந்து செல வரிங்க மட்டும் சொல்றேன்... ஒவ்வொரு கவிதையையும் யார் எழுதுனதுன்னு நீங்களே தேடிக் கண்டு பிடிங்களேன்! தேடல்தானே வாழ்வை உயிர்ப்போட வெச்சிருக்கு?!

அ) காலுக்குச் செருப்புமில்லை
  கால் வயிற்றுக் கூழுமில்லை
  பாழுக்கு உழைத்தோமடா - என் தோழனே
  பசையற்றுப் போனோமடா
 
 பாலின்றிப் பிள்ளை அழும்
 பட்டினியால் தாய் அழுவாள்
 வேலையின்றி நாமழுவோம் - என் தோழனே
 வீடு முச்சூடும் அழும்

ஆ)முத்தமென்றும் மோகமென்றும்
சத்தமிட்டுச் சத்தமிட்டுப்
புத்திகெட்டுப் போனதொரு காலம்!
இன்று
ரத்தமற்றுப் போனபின்பு ஞானம்!

இ)முகத்தில் முகம் பார்க்கலாம் விரல்
நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்
வகுத்த கருங்குழலை மழைமுகிலெனச் சொன்னால்
மலனினை இதழோடு இணைசேர்க்கலாம் என்முன்
வளைந்து இளந்தென்றலில் மிதந்துவரும் கைகளில்
வளையல் இன்னிசை கேட்கலாம்
இகத்திலிருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் அன்பே
அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்
*********************
பாக்கலாம் எத்தன பேரு சரியா சொல்றாங்கன்னு!
*****************************************************

21 பேரு கிடா வெட்டுறாங்க:

Rathi சொன்னது…

//வால்ட் விட்மனுக்கு, ஆஸ்கார் வைல்ட்//

இவங்க ரெண்டு பேரும் யாரு?

மற்ற கேள்விகளுக்கு multiple choice answers தரப்படவில்லை. எப்படி பதில் சொல்றது?


//காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை..//

ப.ஜீவானந்தம்


//முகத்தில் முகம் பார்க்கலாம் விரல்..//

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


//முத்தமென்றும் மோகமென்றும்...//

இதுக்கு கூகிளுக்கு பதில் தெரியலையாம். Sorry.... :)

ஜோதிஜி சொன்னது…

இதுக்கு கூகிளுக்கு பதில் தெரியலையாம். Sorry.... :)


ரதி உங்களுக்கு அரசியல் தலைவர்களுக்குரிய அத்தனை சாதுர்யமும் இருக்கிறது.

கனடாவில் தான் வாய்ப்பு இருக்குமே?

ஜோதிஜி சொன்னது…

செத்துப்போன எங்க அப்புத்தா மேல சத்தியமா சொல்றேன் ராசா. நீ பல முறை இலக்கியத்திலிருந்து எடுத்து விடுற சமாச்சாரமெல்லாம் அஞ்சு பத்து மார்க்காக மனப்பாடம் செய்தது.

உனக்கு மட்டும் எப்படி இந்த தீராக்காதல்,

ம்ம்ம்

Rathi சொன்னது…

//ரதி உங்களுக்கு அரசியல் தலைவர்களுக்குரிய அத்தனை சாதுர்யமும் இருக்கிறது//

ஜோதிஜி,

errrrrrrrrrrrrrrrrrr.... என்னை கிண்டல் செய்கிறீர்களா? ஏன் ஏன் மேல் இவ்வளோ காண்டு? :)))). ஜோதிஜி, காலங்காத்தேலேயவா???

அது சரி, "காண்டு" என்றால் என்ன அர்த்தம்? சும்மா எல்லாரும் சொல்றாங்களேன்னுட்டு சொன்னேன்.

விந்தைமனிதன் சொன்னது…

ஹை!!! என் ப்ளாக்ல கும்மியா?! ஜாலியாத்தான் இருக்கு....

ஜோதிஜி... கிட்டவந்து காதக் கொடுங்க... யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. நானும் அப்பப்போ சில பாட்டை கூகிள்லதான் தேடுவேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்!
என்ன கொஞ்சநாளா பிஸியாயிட்டீங்கபோல!

யாராவது "காண்டு"ங்குற அழகான சென்னைத்தமிழ் வார்த்தையோட வேர் என்னன்னு சொல்லுங்களேன்!

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

கருவக்காட்டுல திரிஞ்ச பய நான் எங்க இலக்கியத்த படிக்கிறது?இப்பதானே படிக்க ஆரம்பிதிருக்கோம். பார்க்கலாம்.நல்ல விஷயங்கள்.

ஜோதிஜி சொன்னது…

காண்டு? :)))).

வாம்மா மின்னலு. நம்ம உறவுக்காரங்க வந்து இருக்காக, மற்றும் சுற்றும் முற்றும் பாக்கம போற நம்ம மயாண்டி வந்துருக்காக............

வந்து இந்த காண்டுக்கு என்னன்னு சொல்லிட்டு போயிடு தாயீ..........

காண்டு என்ற வார்த்தையை இரண்டு விதமாக பிரித்துப் பார்க்கலாம்.

கண்டவர்களை காணாத மக்களையும் கூட்டு சேர்த்து வைத்துக் கொண்டு கோர்த்து சேர்த்து டூடூடூ விட்டுக் கொண்டு எட்டிப் பார்க்காமலே இருப்பது.........

அப்ப உண்மையான அர்த்தம்?

கும்மின்னு ஆரம்பிச்சா அதெல்லாம் கேட்கப்புடாது.............

சரியா ராசா....

ரதி அடுத்து நீங்க..........

பிசியெல்லாம் இல்ல ராசா....... இப்பத்தான் பள்ளிக்கொடம் போயிருக்காக.... இனிமே கணினி கண்ணீர் விடாது........

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

பழைய இலக்கியங்களை மீண்டும் பதிவாக எழுதும் விந்தைமனிதன் வாழ்க...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இலக்கிய ஆர்வலரே,உமக்கு எங்கள் சிவப்புக்கம்பள வரவேற்பு

விந்தைமனிதன் சொன்னது…

ஆகா! எல்லாரும் சேந்து முத்திரை குத்தி ஒதுக்கிடுவாய்ங்க போல இருக்கே! இலக்கியமா.... அப்டீன்னா...??? எஸ்கேஏஏஏஏஏப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

கும்மி சொன்னது…

//முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்//

பாடல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
படம்: தங்கப்பதுமை
தகவல்: கூகிளாண்டவர்.
Copy-Paste: கும்மி

விந்தைமனிதன் சொன்னது…

காண்ட் (can't) அப்டீங்குற இங்கிலீசு வார்த்தயே இங்கேருந்துதான் போயிருக்கணும்... ஏன்னா நம்மகிட்ட யாராவது 'முடியாது, i can't அப்டீன்னு சொன்னா ஒரு காண்டு வருதுல்ல!!!! இந்த காண்டுதான் அந்த காண்ட்டாம்!!!

(அடடா...அடடா! நீ எங்கியோ போயிட்டேடா!)

எஸ்.கே சொன்னது…

நானும் காண்டுக்கான அர்த்தத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்.

என் தம்பியிடம் ஏண்டா இப்படி செய்யற என சில சமயம் கேட்பேன். உனக்கேன் காண்டு என்பான் (இங்கே பொறாமை என பொருள்படுகிறது!)

சிலசமயம் மனுஷன் காண்டுல இருக்கான் கம்முனு இரு அப்படினுவான்! (இங்கே கோப என பொருள்படுகிறது!)

காண்டுக்கான அர்த்தம் பொறாமையா? கோபமா?

கும்மி சொன்னது…

காண்டு

காந்து > காந்தல் > சூடு என்றும் வந்திருக்கலாம்.

சென்னை செந்தமிழ் அகராதி இங்கே உள்ளது

ஹேமா சொன்னது…

விந்தையாரே...தமிழோடு விளையாட்டா.இதுக்கு நிறையம் நேரம் வேணுமே.கஸ்டமாயிருக்கு !

காண்டுன்னா...கோபம்ன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.
எங்கள் நாட்டில் ஏதோ ஒரு பிரதேசத்து வழக்குமொழியில் "நல்லா காண்டு வருது"ன்னு கதைக்கக் கேட்டிருக்கிறேன்.

Rathi சொன்னது…

//இந்த காண்டுதான் அந்த காண்ட்டாம்!!!//

எப்பிடி ராசா!! (நன்றி ஜோதிஜி) இப்பிடியெல்லாம்..... முடியலப்பா. இப்பிடியெல்லாம் விளக்கம் சொன்னா "எலக்கியவாதின்னு" பட்டம் குடுத்திடுவோம்.

காண்டுவுக்கு விளக்கம் கண்டு சொன்ன எல்லோருக்கும் நன்றி.

//முத்தமென்றும் மோகமென்றும்...//

பதில் வரலையே இன்னும்.

விந்தைமனிதன் சொன்னது…

என்ன ஜோதிஜி.... அப்புறம் ஆளையே காணோம்???

@ நந்தா

எல்லாருமே கருவக்காட்டுல திரிஞ்ச பயபுள்ளைங்கதான்.

@ கேஆர்பி

வாழ்த்துச் சொன்ன அண்ணன் வாழ்க! வருங்கால அமெரிக்க சனாதிபதி அண்ணன்...
(கொஞ்சம் ஓவராத்தான் போறமோ?!)

@சி.பி.செந்தில்குமார்

நன்றி சிபி செந்தில்

@கும்மி

என்னங்காணும் ஓய்! சாதுவா வந்துட்டுப் போறீர்?! உம்ம ப்ளாக்ல மட்டும் அவனவனும் நீங்க பின்ற பின்னுல சேதுவா ஓடுறான்....

@ எஸ்.கே

காண்டுக்கு அர்த்தம் சொன்ன நடமாடும் டிக்க்ஷனரியே! வாழ்க!

@ ஹேமா

விளையாட தமிழைவிடத் தோதான ஒண்ணு இருக்கா என்ன?

@ ரதியக்கா

திரியப் பத்தவெச்சிட்டுப் போறீங்களே அக்கா!
'எலக்கியவியாதி' பட்டமெல்லாம் குடுத்தா அப்புறம் எனக்கு அழுவாச்சியா வரும்... சொல்லிப்பிட்டேன்...

யப்பாடா யாருமே ரெண்டாவது பாட்டை எழுதினது யாருண்ணே கண்டுபிடிக்கல....
அதுனால இதன்மூலம் எல்லோருக்கும் அறிவிப்பது என்னவென்றால்....

முத்தமென்றும் மோகமென்றும்.... பாட்டை எழுதினது நம்ம கண்ணதாசனேதான்

கும்மி சொன்னது…

@விந்தைமனிதன்

தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றேன் நண்பா. இன்று பின்னூட்டமிட நேரமும் இருந்தது.

பெயரில்லா சொன்னது…

Enakku oru unma therinjaaganum saami ukkaandhu irukkuravaru jatti pottirukiraara illaiya ?

shanmuga sundharamkg சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
shanmuga sundharamkg சொன்னது…

-கவிஞர் கண்ணதாசன்
அவர் ஆடாத ஆட்டம் இல்லை.அவர் ஊரெல்லாம் சுற்றி மது மற்றும் மாதுவில் சரணடைத்து கடைசியில் நோயுற்று எழுதிய வரிகள்.

கட்டிலும் மெத்தையிலும் காலமறியாதிருந்து
கற்பனைகள் கொண்டதொரு காலம்
இன்று நோய்வழியில் வந்ததடி ஞானம்...

முத்தமென்றும் மோகமென்றும் சத்தமென்றும்
சத்தமிட்டு சத்தமிட்டு புத்திகெட்டு போனது -ஒருகாலம்
இன்று ரத்தமற்று போனபின்பு ஞானம்...

பொன்னிநதி அவ்வளவும் போனரத்தம் போனபின்பு
கன்னியரை யேசுதடி நெஞ்சம் இது
காலிடறி யானை விழும் பள்ளம் ....
http://tamilaavanam.blogspot.in/2012/11/Oldage-Love.html

Related Posts with Thumbnails