சனி, 16 அக்டோபர், 2010

நீயெல்லாம் ஒரு பதிவரா... ச்சீ!மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. யாரோ உள்ளுக்குள் அமர்ந்து நெஞ்சைப் பிசைகிறார்கள்....கண்கள் பொங்கி வழிகின்றன... வழியும் விழிநீரைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே எழுதுகிறேன்.

(ம்ஹூம்... இப்பிடி எளுதுனா வேலைக்காவாது... மச்சி கொஞ்சம் மசாலாவத் தூவுடா...!)

ஏன்யா... நீயெல்லாம் ஒரு மனுஷனா? உனக்கெல்லாம் பிரபல பதிவர்னு பட்டம் ஒருகேடா? எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு நீயி ஞாய தர்மம் பேசிகிட்டு திரியிற? உங்கூட பேசுனதுக்கும் பழகுனதுக்கும் இப்பிடித்தான் முதுகுல குத்துவியா?

கழுத கெட்டா குட்டிச்செவருங்குறமாரி எப்பவும் உங்கூட சேந்து சுத்திட்டு இருக்கான் அந்த சினிமாக்காரன். அவன் மூஞ்சியப்பாரு! எப்பவும் மொசப் புடிக்கிற கொரங்குமாரி வெச்சிட்டு...

உங்க ரெண்டு பேரையும் நல்லவங்கன்னு நம்பி உங்களோட சேந்தேன் பாரு... என்னை மாட்டுச்சாணியும் மனுசச்சாணியும் கலந்த ஐட்டத்துல முக்கி எடுத்த செருப்பால அடிச்சாலும் தகும்யா!

உன்னையும் நல்லவன்னு நம்பி நாலு பேரு படிச்சிட்டு ஜிஞ்சக்கா போடுறானுவ பாரு அந்த அறிவுசீவியளச் சொல்லணும்யா! ஏதோ ஊருல இவன் மட்டும்தான் அறிவாளி மாரியும், மத்தவங்கள்லாம் மடப்பய மக்க மாரியும் நீ அடிக்கிற கூத்துக்கு ஒருநாள் முடிவு வரும்யா! பாத்துட்டே இரு. நான் சாபம் உட்டா பலிக்கும்யா.

இப்ப நான் எளுதுறத பாத்துட்டு " நீங்களா இப்படி கண்ணியக்குறைவா எழுதுறதுன்னு நாலு அறிஞ்சவுங்க தெரிஞ்சவுங்க வருத்தப்படுவாங்கன்னு எனக்குத் தெரியும். அதனால இப்ப பாரு... உன்னை டீசண்டா திட்டிக்காட்டுறேன்.

நீங்களா... அது நீங்களா? வார்த்தைகளுக்கு வக்கிரத்தில் குழைத்த வர்ணங்களைப்பூசியும் உங்களால் பேசமுடியும் என்பதை என் புத்தி அறியத் துவங்குகையில் விண்டுபோகும் மனச்சிதறல்களின் துணுக்குகள் என் மென்னுடலெங்கும் குருதிபார்க்கும் தருணங்களிலும் உங்களோடான என் உரையாடலைத் தொடர்வதில் எவ்விதத் தடையுமற்றுத் தனித்திருக்கும் இராக்காலப் புலம்பல் கீதங்களின் வலிவழியும் வரிகளைப் பிழைதிருத்தம் செய்யத் துவங்கும் என் விரல்கள் எப்போதும் வழிய விட்டிருக்கும் உன்னதமான அன்பினைக் கொச்சைப்படுத்த நீவிர் இருவரும் துவங்கிய வினாடிப்போதுகளில் உள்ளிருந்து கசிந்த கோபத்தின் வீர்யமடக்கித் தருணம் பார்த்து நான் காத்திருப்பேன் என்பதை நீங்கள் உணராமல் போனபோதிலும்...

(யோவ் புரியிற மாதிரி திட்டுய்யா அப்டீன்னு யாரும் திட்டவேணாம்! அவ்ளோ வலி...!)

நீங்கள் என்னோடு நட்பாக இருந்த காலகட்டங்களில் என்னுடனான சாட்களில் நீங்கள் எத்தனை பேரைத் திட்டி இருக்கிறீர்கள் ( அஃப்கோர்ஸ்... நானும்கூடத்தான்), எத்தனை விஷயங்களைப் பற்றிக் நக்கலாகவும், கிண்டலாகவும், புனைவாகவும் கருத்துச் சொல்லி இருக்கிறீர்கள் என்றெல்லாம் சாட் ஹிஸ்டரியை வெளியிட்டு எனக்கு நானே இழிவை ஏற்படுத்திக் கொள்ளமாட்டேன் என்றபோதிலும், நீங்கள் அந்த சாட் ஹிஸ்டரிகளை வெளியிடும்பட்சத்தில் நானும் 'வெளிக்குப்'போவேன்... சீச்சீ... நானும் வெளியிடுவேன் என்பதனைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை எப்போதும் தங்களுடன் திரியும் அந்த மரணமொக்கையிடமும் தாங்களே தெரிவித்துவிடவும். இல்லையெனில் நான் எனது வழக்கறிஞரை ஆலோசித்து இது தொடர்பான நோட்டீஸ் விடுவதைப்பற்றி யோசிக்க நேரிடும்.

டிஸ்கி 1: யாரைத் திட்டுகிறேன், எதற்குத் திட்டுகிறேன் என்று தெரிந்தால்தான் பின்னூட்டமிடுவேன் என்பவர்களுக்கு..... கே.ஆர்.பி.செந்திலையும், அவருடன் எப்போதும் உலகத்திலேயே தான்தான் யூத் என்று மிதப்பில் திரியும் சினிமாக்காரரையும் தான்  திட்டுகிறேன். ஏன் என்றால் போன ஏப்ரல் மாதம் நாங்கள் மூன்றுபேரும் நுங்கம்பாக்கம் ஒருசோறு ஹோட்டலில் பிரியாணி சாப்பிடப்போனோம். பிரியாணி மிகவும் ருசியாக இருந்தாலும் என்னால் முழுதும் சாப்பிட முடியாமல் மீந்ததை பார்சல் கட்டுமாறு கேட்டபோது "மீந்தத ஏன்யா கட்டச் சொல்லுற? புதுசா பார்சல் வாங்கிக்கலாம்" என்று சொல்லி என்னை இழிவு படுத்தினார் கே.ஆர்.பி செந்தில். எல்லாம் பணக்கொழுப்பு இல்லையா? அவர்தான் அப்படி என்றால் அந்த சினிமாக்காரர் இன்னொருமுறை "வாய்யா! பஃபேக்குப் போலாம் என்று சொல்லி ஒரு சைவ உணவகத்தில் ப்ஃபே என்று சொல்லி வழங்கப்பட்ட இட்டிலியையும், ஊத்தாப்பத்தையும், ஒரு வாய் ஜிகர்தண்டாவையும் சாப்பிட வற்புறுத்தி என்னைக் கேவலப் படுத்தியதற்காகத்தான் திட்டுகிறேன்.

ஏன் அப்போதே திட்டவில்லை என்று கேட்க வேண்டாம். என் இஷ்டம்... நான் எப்போது வேண்டுமானாலும் திட்டுவேன். எப்படி வேண்டுமானாலும் திட்டுவேன். எனக்கு இன்றுதான் ரோஷம் வந்தது... நான் என்ன செய்ய?

டிஸ்கி 2 : எனக்கும் கே.ஆர்.பிக்கும் இருந்த உறவு இன்றுடன் ரத்தானதால் ஜூலைமாதம் தேவி தியேட்டர் சென்றபோது கூட்டநெரிசலில் சிக்கி அறுந்துபோன அவரது செருப்பைத் தைக்க நான் கொடுத்த பதினைந்து ரூபாவை உடனடியாக அவர் எனக்கு மணியார்டர் செய்யவேண்டும்.

டிஸ்கி 3 : இந்தப்பதிவின் ஹிட்ஸ் சரசரவென எகிறினால் தமிழ் இணையப் பதிவுகளை வாசிப்பவர்களின் மனநிலையைப்பற்றிய என் சந்தேகம் மேலும் வலுக்கும். இந்த எச்சரிக்கையையும் மீறி ஹிட்ஸ் க்ராஃப் ஏறினால் சுழற்சி முறையில் மாதம் ஒரு பதிவரை நான் திட்டிப் பதிவு போடுவேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(இவ்விடம் சாட் ஹிஸ்டரிகளின் ஸ்க்ரீன்ஷாட்டுகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் நியாயவிலையில் விற்கப்படும்)

33 பேரு கிடா வெட்டுறாங்க:

philosophy prabhakaran சொன்னது…

நான் கூட சீரியசா தான் திட்டுறீங்களோ நெனச்சு பயந்துட்டேன்...

Rathi சொன்னது…

ஆஹா, இன்னொருத்தரு கெளம்பிட்டாருய்யா.. செரி, செரி, கும்மியடிக்கிறவிக, எதிர்பதிவு போடுறவியன்னு எல்லாப்பயலுவளும் , பொண்டுவளும் ...(செம்மொழி ராஜாராமனின் பதிவு படிப்பவர்களுக்கு இந்த "syndrome" இருக்கலாம், பெயர் தெரியவில்லை)... ஸ்ராட் மூஜிக்.....!!!!

வால்பையன் சொன்னது…

மிஸ்ஸாகி போச்சே தல, பதிவுலகம் பெண் பதிவர்களுக்கு மட்டும் தான் ஆதரவா நிக்கும், ஆண் என்றால் எட்டிக்கூட பார்க்க மாட்டார்களே!, இருப்பினும் உங்க பக்கம் நான் இருக்கேன்!

செந்தில் 15 ருபாயை உடனே மனியார்டர் பண்ணனும், இல்லைனா 150 செலவு பண்ணி நான் அங்கே வருவேன் சண்டை போட!

யூத்தை ஒன்னும் பண்றதுகில்ல, வேணும்னா அவரோட தொப்பையை குளோசப்பில் போட்டோ எடுத்து ப்ளாக்கில் போட்டு மானத்தை வாங்கலாம்!

(யாரப்பா, என் தொப்பையை பத்தி பேசுறது)

ஜோதிஜி சொன்னது…

விந்ததையான பதிவுலகத்தில் விந்தை மனிதனின் தேவையில்லாத பதிவு.

ரதி ஏற்கனவே இந்த மியூசிக் பன்னிக்குட்டி ராமசாமி தளத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுருக்கிறது. ஒரு முறை அவர் தளத்தை படித்துப் பாருங்கள்.

மனிதா எழுத எத்தனையோ விசயங்கள் இருக்குப்பா.

DrPKandaswamyPhD சொன்னது…

தம்பி, என்னையும் கொஞ்சம் கவனிங்க, எனக்கும் பிரபல பதிவர் ஆகோணும்னுங்கற ஆசை ரொம்ப நாளா இருக்குது. என்னைத்திட்டியும் ஒரு நாலு பதிவு போட்டீங்கன்னா நானும் பிரபலமாகி அப்புறம் உங்களைத்திட்டி பதிவு போடறேன். நீங்களும் பிரபலமாகீடலாம். சரீங்களா?

LK சொன்னது…

//தம்பி, என்னையும் கொஞ்சம் கவனிங்க, எனக்கும் பிரபல பதிவர் ஆகோணும்னுங்கற ஆசை ரொம்ப நாளா இருக்குது. என்னைத்திட்டியும் ஒரு நாலு பதிவு போட்டீங்கன்னா///

ரைடு பண்ணிடலாம்

GSV சொன்னது…

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா !!!!

பார்வையாளன் சொன்னது…

"செந்தில் 15 ருபாயை உடனே மனியார்டர் பண்ணனும், இல்லைனா 150 செலவு பண்ணி நான் அங்கே வருவேன் சண்டை போட!"

உங்க சண்டைல நான் கொடுத்த ஐனூறு ரூபாயை மறந்துறாதீங்க

சௌந்தர் சொன்னது…

நீங்கள் என்னோடு நட்பாக இருந்த காலகட்டங்களில் என்னுடனான சாட்களில் நீங்கள் எத்தனை பேரைத் திட்டி இருக்கிறீர்கள் ( அஃப்கோர்ஸ்... நானும்கூடத்தான்), எத்தனை விஷயங்களைப் பற்றிக் நக்கலாகவும், கிண்டலாகவும், புனைவாகவும் கருத்துச் சொல்லி இருக்கிறீர்கள் என்றெல்லாம் சாட் ஹிஸ்டரியை வெளியிட்டு எனக்கு நானே இழிவை ஏற்படுத்திக் கொள்ளமாட்டேன்////

ஆமா ஆமா இந்த விந்தைமனிதன் கூட ராஜாராமன் என்ற பதிவரை திட்டி கொண்டே இருப்பார் அந்த சாட் லிஸ்ட் என்னிடம் இருக்கிறது அதை நான் தேவை பட்டால் வெளியிடுகிறேன்

சௌந்தர் சொன்னது…

ப்ஃபே என்று சொல்லி வழங்கப்பட்ட இட்டிலியையும், ஊத்தாப்பத்தையும், ஒரு வாய் ஜிகர்தண்டாவையும் சாப்பிட வற்புறுத்தி என்னைக் கேவலப் படுத்தியதற்காகத்தான் திட்டுகிறேன்.///

என்ன பஃபே ஆயிட்டதில் இட்லி ஊத்தாப்பம் சாப்டிங்களா எங்க போனிங்க கையேந்திபவன் போயிட்டு அதுக்கு பெயர் பஃபே வா

சௌந்தர் சொன்னது…

க்ராஃப் ஏறினால் சுழற்சி முறையில் மாதம் ஒரு பதிவரை நான் திட்டிப் பதிவு போடுவேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.////

அட அட அருமையான திட்டம் சுழற்சி திட்டம் கண்ட ராஜா வாழ்க... வாழ்க...

சௌந்தர் சொன்னது…

ஏன் அப்போதே திட்டவில்லை என்று கேட்க வேண்டாம். என் இஷ்டம்... நான் எப்போது வேண்டுமானாலும் திட்டுவேன். எப்படி வேண்டுமானாலும் திட்டுவேன். எனக்கு இன்றுதான் ரோஷம் வந்தது... நான் என்ன செய்ய?////

நேத்து கொஞ்சம் அதிகம் ஆகி இருக்கும் அதான் இப்போது ரோஷம் வருது...

சௌந்தர் சொன்னது…

எனக்கும் கே.ஆர்.பிக்கும் இருந்த உறவு இன்றுடன் ரத்தானதால் ஜூலைமாதம் தேவி தியேட்டர் சென்றபோது கூட்டநெரிசலில் சிக்கி அறுந்துபோன அவரது செருப்பைத் தைக்க நான் கொடுத்த பதினைந்து ரூபாவை உடனடியாக அவர் எனக்கு மணியார்டர் செய்யவேண்டும்.////

இப்போது நான் கே.ஆர்.பி அண்ணனுக்கு போன் பண்ணி கேட்டேன் அவர் (ராஜா) அந்த செருப்பை எடுத்து கொண்டு நீங்க ஓடிவிட்டதா சொல்றார் செந்தில் அண்ணன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செந்தில் அண்ணன் 15 ரூபாய் கொடுக்குற வரைக்கும், சுறா படம் பார்க்கும் போராட்டாம் நடக்கும் என்பதை கூறி கொள்கிறேன். நடு ரோட்டுல சட்டைய பிடிச்சி கேளுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இவ்விடம் சாட் ஹிஸ்டரிகளின் ஸ்க்ரீன்ஷாட்டுகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் நியாயவிலையில் விற்கப்படும்//

அண்ணே மிக குறைந்த விலைல யார் திட்டின சாட் இருக்கு? எனக்கு கொடுங்க. ப்ளீஸ்

பெயரில்லா சொன்னது…

wasted my time by reading this blog unnecessarily!!

dheva சொன்னது…

மசாலா படம் எடுக்க ஆளுக இருக்கங்கப்பா....

நீ படைப்பாளி....!!!

ஜெயந்தி சொன்னது…

சின்னப்புள்ளத்தனமாத்தான் இருக்கு.

என்.ஆர்.சிபி சொன்னது…

வருந்துகிறேன்!

தஞ்சாவூரான் சொன்னது…

அட, உங்களோட நானும் சேந்துக்குறேன். எனக்குக் குடுக்கவேண்டிய ரூ2.45 வட்டியுடன் சேர்த்து எனக்கு அனுப்பலேன்னா, நானும் ஒரு பதிவு போடவேண்டியிருக்கும்னு இது மூலமா எச்சரிக்கை விடுக்கிறேன்.

பதிவர் யூத்து 'பிரபா' விடுதியில் 'சாப்பிட்டபோது' அக்வாஃபினா அரை பாட்டில் எடுத்துகொண்டு ஓடிட்டாரு. அதையும் மரியாதையாக சமர்ப்பிக்கும்படி எச்சரிக்கிறேன்.

ரெண்டு பேரும் என்ன நெனச்சுகிட்டு இருக்காங்க மனசுல??

Rathi சொன்னது…

//மசாலா படம் எடுக்க ஆளுக இருக்கங்கப்பா....

நீ படைப்பாளி....!!//

இதையே தான் நானும் நினைக்கிறேன், தேவா. நன்றி. நன்றி. நன்றி.

அபி அப்பா சொன்னது…

15ரூபாய்க்கு ஒரு போரா??? சரியான அக்கபோரா இருக்கே:-))

எஸ்.கே சொன்னது…

எப்படியோ நல்லா சிரிச்சேன்!

S.Sudharshan சொன்னது…

நன்றாக இருந்திச்சு .. நான் கூட திட்டிறீன்களோ எண்டு நினைச்சு சீரியஸா வாசிச்சுட்டேன் ..கலக்கீடீங்க ....:D

Gopi Ramamoorthy சொன்னது…

:)

ஈரோடு தங்கதுரை சொன்னது…

நல்ல காமெடி போங்கள்...

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

Anbu சொன்னது…

வணக்கம் ஐய்யா,
இதுக்கு நான் ஒரு ஓட்டும் போட்டு கிடாவும் வெட்டனுமா?

நளினா லாவண்யா சொன்னது…

ஹ ஹா ஹி ஹீ ஹு ஹூ!!!

நாஞ்சில் மனோ சொன்னது…

பேச்சு பேச்சாத்தான் இருக்கோணும், கல்லெல்லாம் எடுக்கபூடாது,
எலே மக்கா, அடுத்த விமானத்தை பிடிச்சு வர்றேம்லே நானும் சென்னைக்கு........,சண்டை போட்டு ரொம்ப நாளாச்சு, எடுறா அரிவாளை.....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இங்கே என்ன நடக்குது?

Raja சொன்னது…

செம நக்கலா இருக்குங்க...உள்குத்து ஏதும் இருக்கா?

vazhipokanknr சொன்னது…

கலக்கலா இருக்கு விந்தை மனிதன், பிச்சுட்டிங்க

Cable Sankar சொன்னது…

yaarukum ethuvum kodukka maateen.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ..

Related Posts with Thumbnails