செவ்வாய், 5 அக்டோபர், 2010

நான் இறந்துபோயிருந்தேன்நான் இறந்துபோயிருந்தேன்

முதன்முறை இதழொற்றி நீ
காதல் சொன்னபோதும்

இறுதிமுறை மென்மையாக
பிரிவின் பிரகடனம் வாசித்தபோதும்

காலம் அசைவற்றுப் போயிருந்தது
நான் இறந்து போயிருந்தேன்

ஆதூரமாய் வருடி
மிதந்துசெல்லும்
உதிர்ந்த சிறகும்

கண்ணீர் குடித்துக்
காற்றில் உப்பின் வாசம்
பரப்பும் தென்றலும்

இந்தக்கவிதையை வாசிக்கநேரும்
யாரோ ஒருவரின் ஏளனப்புன்னகையும்
ஒரு இரங்குதலும்
இரங்கப் படும் வலியும்

என்றேனும்
எதிர்கொள்ள நேரிடலாம்
உனது வழியிலும்

அப்போது
வாசிக்கத் துவங்கு
இவ்வாறு துவங்கும்
என் கவிதையை...

"நான் இறந்து போயிருந்தேன்..."

( ரோஜாப்பூந்தோட்டம் அறிவித்திருந்த சவால் கவிதைக்காக எழுதியது)
*******************************************

15 பேரு கிடா வெட்டுறாங்க:

nis (Ravana) சொன்னது…

கவிதை நல்லா இருக்கு

Balaji saravana சொன்னது…

இத்தலைப்பில் நான் வாசித்த கவிதைகளில் ஆகச்சிறந்ததாக எனக்குத் தோன்றியது இக்கவிதைதான் நண்பரே!
வாழ்த்துக்கள்!

Rathi சொன்னது…

//இந்தக்கவிதையை வாசிக்கநேரும்
யாரோ ஒருவரின் ஏளனப்புன்னகையும்
ஒரு இரங்குதலும்
இரங்கப் படும் வலியும்//

மனதை கஷ்டப்படுத்திய வரிகள்.

கவிதை நல்லாயிருக்கு.

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

கவிதை நல்லா இருக்கு நண்பரே

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

மரித்தலின் பின் நீயிருப்பாய் ..
நானுமிருப்பேன் உன் நினைவுகளாய் .....

...........enthisai.......... சொன்னது…

"இறுதிமுறை மென்மையாக
பிரிவின் பிரகடனம் வாசித்தபோதும்

காலம் அசைவற்றுப் போயிருந்தது
நான் இறந்து போயிருந்தேன்"

100%

Anbu சொன்னது…

//இந்தக்கவிதையை வாசிக்கநேரும்
யாரோ ஒருவரின் ஏளனப்புன்னகையும்//

எனக்கு புன்னகை வந்தது... (ஏளன அல்ல)

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நல்ல கவிதை,எனக்கு பிடித்த வரிகள் >>>

என்றேனும்
எதிர்கொள்ள நேரிடலாம்
உனது வழியிலும்>>>

வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

இந்தத் தலைப்புக்கான ஒவ்வொருவரின் சிந்தனையும் அபாரம்.வெற்றி நிச்சயம் விந்தையாரே !

காமராஜ் சொன்னது…

//இந்தக்கவிதையை வாசிக்கநேரும்
யாரோ ஒருவரின் ஏளனப்புன்னகையும்
ஒரு இரங்குதலும்
இரங்கப் படும் வலியும்//

இது புதுசு.அழகு.

ம்ம்ம்ம்...எல்லார்க்கும்
அந்த நேரம் மட்டும் பேனாவில் பதினாகுக்கும் மேற்பட்ட வண்ணங்கள் கசியும். அது உலகைச் சுழற்றும் ஒரே அச்சாணி.இல்லையா விந்தை கவிஞா.

நிலாமதி சொன்னது…

உணர்வுகள் சொல்லும் கவிதை அருமை.

மோகன்ஜி சொன்னது…

//கண்ணீர் குடித்துக்
காற்றில் உப்பின் வாசம்
பரப்பும் தென்றலும்//
என்ன வளமான வார்த்தைகள்...
காதல் தரும் கண்ணீர் தான் கடல்களாய் நம்மை சூழ்ந்திருக்கிறதோ? சிறந்த கவிதை இது.விந்தை மனிதனுக்கு வானவில் மனிதனின் வாழ்த்துக்கள்..

சிவா சொன்னது…

//முதன்முறை இதழொற்றி நீ
காதல் சொன்னபோதும்

இறுதிமுறை மென்மையாக
பிரிவின் பிரகடனம் வாசித்தபோதும்//

சூப்பர் கவிஞரே!

Kousalya சொன்னது…

முடிவில் மறுபடியும் ஒரு தொடக்கம்....

இந்த தலைப்பில் உங்களின் சிந்தனை ரொம்பவே வித்தியாசம்...!

ஜோதிஜி சொன்னது…

ராசா என்னால எந்த இடத்திலும் உள்ளே நுழைந்து உன்னை கலாய்க்க முடியல.

ஹேமா சொன்னது நிச்சயம்.

நடத்துப்பா நடத்து....

Related Posts with Thumbnails