வியாழன், 21 அக்டோபர், 2010

இலையுதிர்காலம்சுத்தம் செய்யத் திறந்த
டிராயரில்
சேமித்துவைத்த உதிர்ந்த பூக்களும்
உடைந்த வளையல்களும்
எச்சிலின் ஈரம் சுமந்த சாக்லேட் காகிதங்களும்

ஒரு காதல் வாழ்ந்திருந்ததின்
தொல்லெச்சங்களாய்

கன்னத்தில் படிந்த
கண்ணீர்க் கோடுகளில்
மரித்துக் கொண்டிருக்கும் ஒருவனின்
விதிரேகை

மேகம் தொலைத்து ஒற்றையாய்
அலையும் சோகை நிலா

மெல்லக் காற்றில் கரையும்
விம்மலின் ஓசை

எங்கிருக்கிறாய் நீ?
*****************************************************

15 பேரு கிடா வெட்டுறாங்க:

பார்வையாளன் சொன்னது…

நல்ல கவிதை

எஸ்.கே சொன்னது…

காதல் வலி?
நன்றாக உள்ளது!

Raja சொன்னது…

இந்த கவிதை பிரமாதமாக இருக்கிறது...
ஒரு காதல் வாழ்ந்திருந்ததின்
தொல்லெச்சங்களாய்...
இந்த வரியை ரொம்பவும் ரசித்தேன்...

dheva சொன்னது…

கொஞ்சம் முரண்பட்டு கொஞ்சம் ஒத்துப் போகிறேன்.

காதல் என்ற உணர்வுக்கு காதலி என்ற பெண்தான் காரணம் என்று மட்டுப் பட்டுப்போகும் போது விரக்தியில் குளு குளு நிலா கூடா சோகையாய் போகிறது.


காதல் என்பது ஒரு உணர்வாய் விரவிக் உள்ளுக்குள் ஊடுருவி காதலி என்ற மட்டு அறு பட.. விரக்திகளும், விட்டுப் போதலும் ஒரு வேளை உதவும் என்றே நினைக்கிறேன் தம்பி!

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

நன்று,வழக்கமான கடமைக்கு இடும் பின்னூட்டம் அல்ல

vazhipokanknr சொன்னது…

'தொல்லெச்சங்களாய்
'விதிரேகை'
'சோகை நிலா'
ரொம்ப பிரமாதம்ங்க விந்தைமனிதன் ...

வெறும்பய சொன்னது…

எங்கிருக்கிறாய் ??
எங்கிருக்கிறாய் ??
எங்கிருக்கிறாய் ??

நேசமித்ரன் சொன்னது…

ம்ம்

வானம்பாடிகள் சொன்னது…

இந்தக் கவிதையில்:)

kamaraj சொன்னது…

//ஒரு காதல் வாழ்ந்திருந்ததின்
தொல்லெச்சங்களாய்//

ஓஹோ....
அப்படிப்போகுதா கதை.

இருந்தாலும் காதல் சொல்லும்போது எழுத்தில் இன்னும் கூடுதல் வண்ணங்கள் சேர்கிறது.

Anbu சொன்னது…

எழுதுங்க, எழுதுங்க, நல்லாத்தானிருக்கு !

சிவா சொன்னது…

காதல்ல வலி அனுபவிக்கிறது கூட சுகமான வார்த்தைகளை வெளி வருது... அருமை!!!

விமலன் சொன்னது…

கவிதையைப் படித்தவுடன் இதோ இங்கிருக்கிறேன்.என வந்து விடமாட்டாளா என ஏங்க வைக்கிற உணர்வைதருகிற வரிகள்.

ஜோதிஜி சொன்னது…

காதலென்பது இது போன்ற கவிதைகளை உருவாக்க மட்டுமே உதவுவது. நீண்ட பின்னூட்டத்தை தவிர்க்க சுருக்கமாக..........

ஒரு வகையில் வைராக்கியத்தை நமக்கு உறுதிப்படுத்தும். வளர்ந்து நின்று எதிரே சந்திக்கும் போது ஐயோ இவனை நாம் தவற விட்டு விட்டோமே என்று அவள் யோசிக்கும் அளவுக்கு வாழ்ந்து பழி வாங்கிவிடு ராசா.......

Rathi சொன்னது…

//வளர்ந்து நின்று எதிரே சந்திக்கும் போது ஐயோ இவனை நாம் தவற விட்டு விட்டோமே என்று அவள் யோசிக்கும் அளவுக்கு வாழ்ந்து பழி வாங்கிவிடு ராசா....//

இது.....இது......இது...... வாஸ்தவமான பேச்சு.

வாழ்ந்து பழி வாங்கிவிடு ராசா.... I repeat this hundred thousand times.

Related Posts with Thumbnails