செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஒற்றையடிப்பாதை





சீரியல் பல்புகளின் வெளிச்சச்சிதறல்களில்  
மேய்ந்து கொண்டிருக்கும்
சுடிதார் மகளிரின் புன்னகைகள் 
பர்ஸ் பிரித்து அலைபாயும் 
டக்-இன் கணவர்கள் 
பாசத்தோடு காத்திருக்கும் கல்லாக்கள் 
பாதையெங்கும் சிதறி இருக்கும் 
ஐஸ்க்ரீம் துளிகள்
வறிய புன்னகையோடு 
கடந்து செல்கிறேன் 
பெறுவதற்கும் தருவதற்கும் 
ஏதுமின்றி!
***************************************

17 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

இப்ப தி. நகர் இப்படித்தான் இருக்கும் ... காலா காலத்துல கல்யாணம் பண்ணுங்கப்பு.. அப்புறம் புலம்பல் வேற மாதிரி மாறும்...

dheva சொன்னது…

தம்பி.. செந்தில் சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணு அப்புறம்... தெரியும்.. ச்சே.. முன்னால எவ்ளோ ஜாலியா இருந்தோம்னு...!!!!

ஜெயந்தி சொன்னது…

மொத ரெண்டு பின்னூட்டம் போட்ட ரெண்டு பேரு வீட்டுலயும் சொல்றேன்.

ஜோதிஜி சொன்னது…

போனவுடன் பார்க்க வேண்டிய வேலையை பார்க்காமல் இதென்ன வேடிக்கை படலம்? ஆனா சும்மா சொல்லக்கூடாது? நல்லாயிருக்கு. எழுதத் தெரிந்தவனுக்கு காணும் காட்சிகளை எத்தனை சுவராஸ்யமாக மாற்ற முடியும் என்பதை உணர்த்தி விட்டாய் ராசா?

பாதையெங்கும் சிதறி இருக்கும்
ஐஸ்க்ரீம் துளிகள்

மேலே எந்த இடத்திலேயும் என்னால் கை வைக்கமுடியல. ஆனால் இந்த வரிக்குப் பின்னால் கொஞ்சம் முயற்சி பண்ணிப் பார்க்கின்றேன்.

பாதையெங்கும் பராக்கு பார்த்துக்கொண்டு வரும் குழந்தைகளை இழுத்துக்கொண்டு செல்ல வாயில் ஒட்டிய ஜஸ்கிரீம்..........

கடைசி நான்கு வரிகள் வெகு அற்புதம்.

சௌந்தர் சொன்னது…

ஆமா இதே கவிதை கல்யாணதிற்கு பிறகு வந்தால் வேறு மாதிரி இருக்கும்

கடந்து செல்கிறேன்
பெறுவதற்கும் தருவதற்கும்
ஏதுமின்றி////


ரொம்ப தான் வருத்தப் படுகிறார்

வால்பையன் சொன்னது…

பெறவதற்கு ஒண்ணுமில்லையேன்னு சொல்லுங்க, தருவதற்கு தான் புன்னகை இருக்கே!

rajasundararajan சொன்னது…

//வறிய புன்னகையோடு
கடந்து செல்கிறேன்
பெறுவதற்கும் தருவதற்கும்
ஏதுமின்றி!//

'வறிய' மட்டும் நீக்கப்படவேண்டும் என்று உணர்கிறேன்.

சிவராம்குமார் சொன்னது…

கண்ணில் படுவது எல்லாம் கவிதையாக்குவது சிலரால் மட்டுமே சாத்தியம்!

எஸ்.கே சொன்னது…

நல்ல ரசனை! சிறந்த வர்ணனை! அருமையான கவிதை!

Bibiliobibuli சொன்னது…

//காலா காலத்துல கல்யாணம் பண்ணுங்கப்பு.. அப்புறம் புலம்பல் வேற மாதிரி மாறும்..//

:)).சீக்கிரமே திருமணமாக வாழ்த்துக்கள்.

ராஜாராமன் முதல் இரண்டு பின்னூட்டம் போட்டவர்களும் நல்ல குடும்ப அனுபவஸ்தர்கள் போல, சொல்வதை கவனியுங்கள்.

கவிதை பற்றி எதுவும் சொல்லத்தோன்றவில்லை.

காமராஜ் சொன்னது…

அதானே. ஒரு தரம் அந்த நெரிசலில் காணாமல் போய் மீண்டு வருவது எவ்ளோ சுகம்.பர்ஸ் எதுக்கு இப்போ.தூரத்துப்பச்சை.

vinthaimanithan சொன்னது…

@கே.ஆர்.பி.செந்தில்

கல்யாணம்...???!!! பாக்கலாம் அண்ணா!
இப்போதைக்கு ஒரு ஸ்பிலிட் பெர்சனாலிட்டியா திரிஞ்சிட்டு இருக்கேன்.

@dheva

சரி சரி இந்த பின்னூட்ட மேட்டர் அண்ணிக்குத் தெரியுமா?!

@Dhosai

தாங்க்ஸ்

@ஜெயந்தி

சீக்கிரம் சொல்லுங்க ஜெயந்தி மேடம்... நான் வேணா போன் நம்பர் வாங்கித் தரேன்.

@ஜோதிஜி

அட வழக்கம்போல பின்னூட்டத்தில உங்க அன்பும் முத்திரையும் தெரியுது ஜோதிஜி.


@சௌந்தர்

//ரொம்ப தான் வருத்தப் படுகிறார் //
ஆமா சௌந்தர்...

@வால்பையன்

தருவதற்கு புன்னகை இருக்கு வாலு... ஆனா வெறும் காத்துக்குத் தான் போவுது

@rajasundararajan

ஆஹா! வாங்கையா வாங்க. இத்தன நாளா நீங்க வருவீங்கன்னு காத்துட்டு இருந்தேன்

@சிவா

நன்றி சிவா

@எஸ்.கே

நன்றி எஸ்.கே... பின்னூட்ட அரசியல்லாம் பாக்காம ரெகுலரா வர்றிங்க! ரொம்ப நன்றி!

@Rathi

என்ன ரதியக்கா... உங்களுக்கு சொல்லாமலா கல்யாணம் பண்ணிப்பேன்?!

@காமராஜ்

நன்றி தோழர்! பர்ஸ் இல்லாம இன்னிக்கு சுத்திப் பாக்குறேன்! :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செருப்பு பஞ்சாயத்து முடிஞ்சதா இல்லியா?

ஜோதிஜி சொன்னது…

ஆனா வெறும் காத்துக்குத் தான் போவுது

இதையும் யாரோ களவாடிவிடப் போறாங்க.............

மங்குனி அமைச்சர் சொன்னது…

பொழைக்க தெரியாத ஆளு சார் நீங்க

Anbu சொன்னது…

கல்யாணம் ஆனாலும் இல்லைன்னாலும் நமக்கு தி. நகர்ல ஒன்னும் வேலை இல்ல பராக்கு பார்ப்பதை தவிர....
நல்லா இருக்கு, எழுதுங்க.

Bibiliobibuli சொன்னது…

// ஸ்பிலிட் பெர்சனாலிட்டியா//

Hmmmmm... is it Role Conflict or split personality??

Related Posts with Thumbnails