திங்கள், 11 ஏப்ரல், 2011

வாங்களேன் கொஞ்சம் அரட்டை அடிக்கலாம்...


Merchant of venice


நான் ஒன்றும் நிரம்பப்படித்த மேதாவியோ, படைப்பாற்றல் மிக்க இலக்கியவாதியோ அல்லன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில முத்துச் சிதறல்களைக் கண்டு அவற்றின் மின்னற்கீற்றுகளில் மனதைப் பறிகொடுத்து மயங்கி நிற்கும் எளியவன். எனக்குக் கவிதை பிடிக்கும். காதலியின் முத்தம் போல, கவிதைகளில் கிறங்கப் பிடிக்கும். சின்னச்சின்ன கற்பனைகளில், கவிதைக்கீற்றுகளில் வாழ்வெனும் புதையல் ஒளிந்திருக்கின்றது என்றெண்ணி மகிழப் பிடிக்கும். எனக்குப் பிடித்த, என்னைக் கிறுக்குப் பிடிக்கவைத்த சிற்சில கவிதை வரிகளைப் பகிர்வதுடன் எனது தமிழ்மண நட்சத்திரவாரத்தைத் துவங்கலாம் என்று நினைக்கிறேன்

1) என் எட்டாம் வகுப்புத் தமிழாசிரியர் பக்கிரிசாமி அவர்கள் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது இராமாயணம் பற்றி வேடிக்கையாகச் சொல்வார் "எலேய்! ராமாயணம் ஒண்ணும் பெரிய புண்ணாக்கெல்லாம் இல்ல. அந்தக்காலத்துல பயலுவ நம்மள ஏமாத்த கட்டிவுட்ட கதெதாண்டா அது, சுருக்கமா ரெண்டே வரில சொல்றேம்பாரு ராமாயணக்கதெய... ராமன் பொண்டாட்டிய ராவணன் தூக்கிட்டுப் போனான்; அடிச்சிப்புடிச்சி அனுமாரு கொண்டுவந்தான். அவ்ளோதாண்டா". தீவிர பெரியாரிஸ்ட்டான அவர் வாயில் புகுந்து எழும் புராணப்பாத்திரங்களுக்கு உயிர் மட்டும் இருந்திருந்தால் எத்தனைமுறை வேண்டுமானாலும் 'நாண்டுகிட்டு' செத்துப்போகும்.

கொஞ்சம் விவரம் புரிந்தபிறகு ஒருசில கம்பராமாயணப்பாடல்களைப் படித்தபோது கம்பனில் மயங்கிநின்றேன். "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" என்பது பொய்மொழியன்று!


"அஞ்சிலே ஒன்று" எனத்துவங்கும் பாட்டில்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்  தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றுவைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் "

பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவின் மைந்தனான அனுமன், பஞ்சபூதங்களில் ஒன்றான விசும்பின் வழியே பஞ்சபூதங்களில் ஒன்றான கடலைத்தாவி, பஞ்சபூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாதேவியைக்கண்டு, தென்னிலங்கை நாட்டில் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை வைத்தான். அவன் நம்மைக் காப்பான் என்பது பொருள்.

இந்த வார்த்தைச் சித்துவிளையாட்டு உங்களை மயக்குகிறதா இல்லையா?

இன்னொரு பாடல்! இராம இராவணப்போரின் இறுதிநாள். இராமனது அம்பால் இராவணன் துளைக்கப்பட்டு களத்திலே வீழ்ந்து கிடக்கிறான். இராவணன் மாவீரன். முன்னொரு காலத்தில் அவன் தவம் செய்தபோது சிவன் தன்முன்னே தோன்றவில்லை என்பதற்காக கைலாய மலையையே அப்படியே பெயர்த்து தன் தோள்களில் தூக்கிய பலசாலி. பிறன்மனைமேல் கொண்ட காதலால் வீழ்ந்தவன். அவனை ஊடுருவிச் சென்ற இராமனது அம்பு அவனது உயிரை மட்டும் குடிக்கவில்லையாம்! வேறென்ன செய்கிறது? ஒரு எள் இருக்கின்ற மிகச்சிறிய இடம் கூட மிச்சம் வைக்காமல் அவன் உடலைத் துளைத்திருந்த இராமபாணமானது அவன் உடலின் உட்புகுந்து தேடிப்பார்க்கிறதாம்! எதை? சீதைமேல் அவன்கொண்ட காதல் அவனுக்குள் எங்காவது மிச்சம் இருக்கின்றதா என்று அலசி ஆராய்ந்து பார்க்கிறதாம்!

இப்போது இந்தப்பாடலைப் படித்துப் பாருங்கள்!

"வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி - இழைத்தவாறோ !
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி "

2) எனக்கும் வாழ்க்கைக்கும் எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது ஒரு சூதாட்டம். அவ்வப்போது வெல்வதும், தோற்பதுவுமாக நடக்கும் இந்த ஆட்டத்தின் ருசியில் ஊறிப்போய்க் கிடக்கிறது மனது. சூதாட்டத்தின் ஜோக்கராக என்னையே மாற்றிக் கொள்கிறது வாழ்க்கை சில பொழுதுகளில். எதனைப் பெறுவதற்காக இந்த ஆட்டத்தை நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்? என் எல்லா உடைமைகளையும் பணயம் வைக்கச்சொல்லி என்னைத் தூண்டுவது எது? "ஆட்டக்களத்தில் கேள்விகளுக்கு இடமில்லை. யுத்தம் செய் அல்லது செத்துப்போ" என்று கொக்கரிக்கிறது வாழ்க்கை. நானும் அதையே வேண்டுகிறேன் "வெற்றியின் ருசி தெரியாமல் வெறுமனே மூச்சு விடுவதால் மட்டுமே என் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. எனக்குத் தேவை வெற்றியின்பின் மகுடம் சூட்டும் கரங்களே! கண்ணீர் துடைக்க அல்ல!" என்று யுத்தபேரிகை முழக்குகிறேன்.

மனுஷ்யபுத்திரனின் இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்! உங்கள் நாடி நரம்புகளில் எதோ ஒரு உத்வேகம் பாய்கிறதல்லவா?

உரியதைக் கொடு
************************

நான் வெற்றி பெற இயலாது
என்பதே
உன் முடிவானால்

வாழ்க்கையே
என்னைத் தோற்கடித்து விடு

திட்டவட்டமாக
யாவரும் அறியும்படி
என் தோல்வியை உரத்துச் சொல்

ஒரு மூட்டைப் பூச்சியை
நசுக்குவது போல
நசுக்கித் தடவு

விழுங்கி
வாயைத் துடைத்துக் கொண்டு போ
உன்னிடம் எனக்கென்ன வருத்தம்?

ஆனால்
தயவு செய்து கொடுக்காதே
ஆறுதல் பரிசுகளை மட்டும்

ஏதோ கிடைத்ததே
என்று போக
இது பிரார்த்தனையல்ல
சண்டை

3) பல வருடங்களுக்கு முன்னர் என் ஆங்கில ஆசிரியர் செல்வராஜ் அவர்கள் ஷேக்ஸ்பியரின் 'மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்' நாடகத்தின் ஆங்கிலம், தமிழ் இரண்டு பதிப்புகளையும் கொடுத்து என்னைப் படிக்கச் சொல்லி இருந்தார். தமிழாக்கத்தில் ஒரு கவிதை என்னை கட்டிப்போட்டது.

ஷைலாக் என்னும் வட்டித்தொழில் செய்யும் யூதன் தனது எதிரியான ஆண்டனியோ என்பவன் தனக்குத்தர வேண்டிய தொகைக்குத் தாமதமானதால் வழக்குமன்றம் செல்கிறான். அவனது வாதங்களாக அவன் சொல்லும் வசனம் அது. வில்லன் பாத்திரமாக இருக்கும் ஷைலாக் தனது தரப்பு நியாயங்களைப் பட்டியலிடும்போது ஒரு யூதனாக தான் எவ்வாறெல்லாம் , அவமானப் படுத்தப் படுகிறேன், எவ்வாறெல்லாம் ஒடுக்கப்படுகிறேன் என்று அடுக்குகிறான்:

"நானொரு யூதன். ஒரு யூதனுக்கு கண்கள் இல்லையா? எனக்கும் உம்மைப்போல கைகளும், கால்களும், அங்கங்களும், உணர்ச்சிகளும், விருப்புவெறுப்புகளும், பந்தபாசங்களும் இல்லையா? நீங்கள் உண்ணும் அதே உணவைத்தான் நானும் உண்கிறேன். உங்களைக் காயப்படுத்தும் அதே ஆயுதங்கள் என்னையும் காயப்படுத்தும். உங்களைப்போலவே எனக்கும் நோய்களும் வரும். உங்களைக் குணப்படுத்தும் மருந்து என்னையும் குணப்படுத்தும். உங்களுக்காக வருகின்ற வசந்தகாலமும், கோடையும் எனக்கும் சேர்த்தே வருகின்றன. என் உடலைக் குத்தினால் உம்மைப்போலவே எனக்கும் ரத்தம் கசியும். உம்மைச் சிரிக்கச் செய்பவை என்னையும் சிரிக்கச் செய்யும். நீவிர் விஷம் ஊட்டினால் நான் சாகத்தான் செய்வேன். ஏனெனில் நானும் உம்மைப்போலவே மனிதப்பிறவியே! நீங்கள் எம்மைத் துன்புறுத்தினால் நான் பழிவாங்கக்கூடாதா? நானும் உம்மைப்போல் ஒரு மனிதனே! உமக்குப் பொதுவான எல்லாம் எனக்கும் பொதுவாகவே இருக்கின்றன..." என்று ஷைலாக்கின் வாதங்கள் நீள்கின்றன.

"Hath
not a Jew eyes? hath not a Jew hands, organs,
dimensions, senses, affections, passions? fed with
the same food, hurt with the same weapons, subject
to the same diseases, healed by the same means,
warmed and cooled by the same winter and summer, as
a Christian is? If you prick us, do we not bleed?
if you tickle us, do we not laugh? if you poison
us, do we not die? and if you wrong us, shall we not
revenge? If we are like you in the rest, we will
resemble you in that. If a Jew wrong a Christian,
what is his humility? Revenge. If a Christian
wrong a Jew, what should his sufferance be by
Christian example? Why, revenge. The villany you
teach me, I will execute, and it shall go hard but I
will better the instruction"

அன்று யூத இனம்! இன்று தமிழினம்! இனத்தால், மொழியால் தமிழனாய் இருக்கும் ஒரே பாவத்துக்காக ஈழத்தில் அழிக்கப்படும் தமிழினத்திற்கு இந்த வரிகளைப் பொருத்திப் பாருங்கள்! தானாடாவிட்டாலும் தன் சதையாடவில்லையா நமக்கு? வாழ்வுரிமை அனைத்தும் அழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட ஓர் இனத்துக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?

குறைந்தபட்சம் நம்மால் ஆகக்கூடியது சிங்களப்பேரினவாதத்தின் இனப்படுகொலைகளுக்குப் பங்காளியாய் நின்றிருந்த காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து வேரறுப்போம். பதவி சுகத்தில், அதிகாரப் பசியில் , ஆனிப்பொன் மஞ்சத்தில் மல்லாந்திருப்பதற்காய் இன அழித்தொழிப்புக்கு காங்கிரஸின் காலை நக்கித் துணைநின்ற திமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்!

29 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள் தம்பி..

Unknown சொன்னது…

//ஆனால்
தயவு செய்து கொடுக்காதே
ஆறுதல் பரிசுகளை மட்டும்

ஏதோ கிடைத்ததே
என்று போக
இது பிரார்த்தனையல்ல
சண்டை//

மனுஷ்யபுத்திரனை என்ன சொல்லி பாராட்ட...

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

இந்த வாரமாவது ஒழுங்கா தினம் ஒரு பதிவு எழுதுய்யா!!!

Unknown சொன்னது…

குறைந்தபட்சம் நம்மால் ஆகக்கூடியது சிங்களப்பேரினவாதத்தின் இனப்படுகொலைகளுக்குப் பங்காளியாய் நின்றிருந்த காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து வேரறுப்போம். பதவி சுகத்தில், அதிகாரப் பசியில் , ஆனிப்பொன் மஞ்சத்தில் மல்லாந்திருப்பதற்காய் இன அழித்தொழிப்புக்கு காங்கிரஸின் காலை நக்கித் துணைநின்ற திமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்!

அஞ்சா சிங்கம் சொன்னது…

அன்று யூத இனம்! இன்று தமிழினம்! இனத்தால், மொழியால் தமிழனாய் இருக்கும் ஒரே பாவத்துக்காக ஈழத்தில் அழிக்கப்படும் தமிழினத்திற்கு இந்த வரிகளைப் பொருத்திப் பாருங்கள்! தானாடாவிட்டாலும் தன் சதையாடவில்லையா..........////////////////

////////////////

ஆடத்தான் செய்கிறது ........

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்

மணிஜி சொன்னது…

வாழ்த்துக்கள் ராஜாராமன்..ஆரம்பம் அமர்க்களம்... தொடரட்டும் அதகளம்..இந்த வாரம் லகூன் போகலாமா?

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

present

ராஜ நடராஜன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

அஞ்சிலே... மெய்யாலுமே கம்பனின் சித்துவிளையாட்டுத்தான்!

dheva சொன்னது…

தம்பி அட்டகாசமான துவக்கம் ஒரு வாரம்...........முழுசா உன் தளத்திலேயே இருக்கிறேன்...!

நட்சத்திர வாழ்த்துக்கள் பா!

பெயரில்லா சொன்னது…

க‌ம்ப‌ர், ம‌னுஷ்ய‌புத்திர‌ன் ம‌ற்றும் செக‌ப்பிரிய‌ர் ‍ மூவ‌ரைக் கையாண்டிருக்கிறீர்க‌ள்.

க‌ம்ப‌ர் ச‌ரிதான். எவ‌ரும் ஏற்றுக்கொள்ளும் ர‌ச‌னை உங்க‌ளுடைய‌து.

ம‌னுஷ்ய‌புத்திர‌ன் ச‌ரிய‌ல்ல‌.

வாழ்க்கை ஒரு போராட்ட‌ம் என்ப‌தும் அதை வெற்றி தோல்விக‌ளே நிர்ண‌யிக்கின்ற‌ன‌ என்ப‌தும் ம‌னித‌ன் க‌ட்டுவித்த‌வை. அப்ப‌டியெல்லாம் கிடையாது. போராட்ட‌ம் என‌ நினைத்த‌வ‌னுக்கு வாழ்க்கை என்றும் பிர‌ச்னைதான். அப்ப‌டி வாழ‌க்கூடாது.

Life is not a bitter competition. Life can be lived in peace and harmony. Man in his perversion has made it into a bitter competition; and it is the duty of every right thinking person to undo the mischief done by Man.

Manushyapuththiran continues the mischief and justifies it.

ம‌னுஷ்ய‌புத்திர‌ன் ஒரு ந‌ல்ல‌ டாக்ட‌ரிட‌ம் செக்கப‌ ப‌ண்ணிக்கொள்ள‌லாம்.

யூத‌ர்க‌ள் வாழ்க்கையை ஈழ‌த்த‌மிழ‌ர் வாழ்க்கையோடு ஒப்பிட‌ முடியாது. செக‌ப்பிரிய‌ர் சைல‌க்கை ஆத‌ரித்து எழுத‌வில்லை. நாட‌க‌த்தில் ஒரு ப‌குதியை ம‌ட்டும் வைத்துப்பார்க்க‌க்கூடாது. செக‌ப்பிரிய‌ர் சொல்வ‌தென்றால், த‌ன்னை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ ம‌னித‌ன் எதையும் செய்வான்; எப்ப‌டியும் பேசுவான் என்ப‌தே. நாட‌க‌த்தை முழுவ‌தும் ப‌டிக்கவும்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்.. ஓப்பனிங்க்லயே.. கலக்கறீங்க.. ம் ம்

vinthaimanithan சொன்னது…

கேஆர்பி.செந்தில்,அஞ்சாசிங்கம்,டி.வி.ராதாகிருஷ்ணன் அய்யா, மணிஜி,ரஹீம் கஸாலி, ராஜ.நடாராஜன், தேவா,சி.பி.செந்திகுமார் ஆகிய நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

பெயரிலி நண்பருக்கு,

ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று மொழிபெயர்த்தது ஏனோ?!

மனுஷ்யபுத்திரனின் கவிதை யதார்த்தநிலையைப் பிரதிபலிப்பதாகவே உணர்கிறேன். life should be lived in peace and harmony என்பது இன்றைய பொருளியல் உலகில் utopian dream என்பதே உண்மை. உள்ளீடற்ற ஆன்மீக வியாபாரச்சந்தையின் கருதுகோள் இது.

ஷேக்ஸ்பியரின் இந்த வசனம் ஷைலாக் என்கிற வில்லனின் வசனம் என்பதைக் குறிப்பிட்டுள்ளேன். நான் மேற்கோள் காட்டியது அந்த வசனம் சொல்லப்படும் சூழலை வைத்தல்ல. அந்தக் கவிதை வெளிப்படுத்தும் ஒரு இனத்தின் வலியையே! மற்றபடி யூத இனத்துக்கும், தமிழினத்துக்குமான பாரிய வேறுபாடுகளை நான் உணர்ந்தே இருக்கிறேன்.

தங்கள் வருகைக்கும், மேலான விமர்சனத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

பெயரில்லா சொன்னது…

இங்கே பிராமணன்! ஜெயா?
நான்கு நாட்களாக நெஞ்சில் குமுறிக்கொண்டிருந்த நெருப்பை வார்த்தைகளாக வார்க்கும் திறனின்றித் தவித்துக் கொண்டிருந்தேன்.

இத்தனை நாளாய் எங்கே பிராமணன் என்று நீட்டி முழக்கிக்கொண்டிருந்த சோ, சுப்ரமணியசாமி,டோண்டு கும்பலுக்கு ஜல்லியடித்துக் கொண்டிருப்போருக்கு (”நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்... இல்லையா டோண்டு சார்) “இங்கே பிராமணன், இங்கே பிராமணன்” என்று பூணூலைப் பிடித்து கையில் பிடித்து ஆட்டி நிரூபித்திருக்கிறார் திருவாளர் டோண்டு.

அன்று சம்புகனின் ரத்தத்தை ருசி பார்த்த அதே நாக்குகள் முள்ளிவாய்க்காலிலும் தாகம் அடங்காமல் இன்று பார்வதியம்மாளின் ரத்தத்துக்காக நாக்கைச் சுழற்றியிருக்கின்றன.

வரதராஜப் பெருமாளுக்கு வால் பிடித்தபோது ஆகாத செலவும், ஜெயேந்திரனுக்கு கழிவதற்கு வாழையிலை வாங்கியபோது ஆகாத செலவும், ராஜபட்சேவுக்கு விளக்கு பிடித்தபோது ஆகாத செலவும் இந்தக் கிழவியின் பாதுகாப்புக்கு ஆகிறதாம்... அணுவிபத்து நேர்ந்தால் பன்னாட்டுக்கம்பெனிகள் சார்பாக 2000 கோடி ரூபாய் எலும்புத்துண்டுகளை வீசியெறியத் தயாராயிருக்கும் இருபத்தியோராம் நூற்றாண்டின் வல்லரசுக்கு...

கழுகின் நிழலைக் கண்டால் கூட நடுநடுங்கி நத்தையாய்ச் சுருண்டுகொள்ளுமாம் நாகப்பாம்புகள்... இந்த மனித உருக்கொண்ட பாம்புகள் பிரபாகரனின் மூச்சுக்காற்று பட்ட தூசினைக் கண்டால் கூட நடுங்குவதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்? பின்னே!! பூணூல்கள் குறிகளாய் நீளும்போது முதுகெலும்பை முன்புறமாக வளைத்து வளைத்து உயரம் குன்றிப்போன தமிழன் காலம்தாழ்த்தியாவது நிமிர்ந்து விட்டானென்றால் என்ன செய்வது? பார்வதியம்மாளைப் பார்த்து பயம் வரத்தான் செய்யும்!!!

பார்ப்பனத்துவேஷம், பார்ப்பனத்துவேஷம் என்று நீலிக்கண்ணீர் வடித்ததைப் பார்த்து ஏமாந்து நின்ற இளிச்சவாயர்களே! இதோ நிர்வாணமாக நிற்கிறது பார்ப்பனர்களின் துவேஷம்!!!

“அவா மணியத்தான் ஆட்டுறா... இல்லை ........த்தான் ஆட்டுறா... நமக்கென்ன”னு போகாம வீடியோ போட்டு நாறடிச்சப்போ வந்த துவேஷமா இருக்குமோ!!!

கருவறையைக் காட்டி இரைப்பையை நிரப்பியது போதாதென்று கருப்பைகளையும் நிரப்பிய கூட்டம் ஓலமிடுகிறது நாட்டின் நலனையும்,இறையாண்மையையும் பற்றி...(ஒருவேளை இறையின் முன்பு ஆண்மையைக் காட்டுவதுதான் இறையாண்மையோ!!! ஒரு எழவும் புரியல... அவா சொன்னா சரியாத்தான் இருக்கும்)

பார்வதியம்மாளின்மேல் விஷநாக்கை நீட்டியதற்கு பார்ப்பனவெறியைத்தவிர வேறென்னவாக இருக்க முடியும்...

அவரென்ன கோவணத்தை அவிழ்த்து தண்டத்தில் மாட்டிவிட்டு அம்மாமிகளோடு ஓடிப்போன அந்தர்யாமியா? போயும் போயும் தமிழ்த்தேசியத்தைத் தலையில் தூக்கிவைத்து ஆடிய அசட்டுப் பிரபாகரனின் அம்மாதானே? ’அப்போது’ காணாமல்போன சாஸ்திரங்களெல்லாம் இப்போது சதங்கை கட்டி ஆடத்தான் செய்யும்.

ஆனந்தபுரத்துச் சமரோடு சாம்பலாக்கிவிட்டோம் என்ற மமதையில் ஆடும் கூட்டமே!!! அந்த சத்ரியர்களின் சாம்பலிலிருந்து புதிய ஃபீனிக்ஸ் பறவைகள் சிறகு விரிக்கத்தான் செய்யும்.

நேசமித்ரன். சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் :)

vinthaimanithan சொன்னது…

மிக்க நன்றி நேசன்!

நண்பர் 'பெயரில்லா' அவர்களே!

'இங்கே பிராமணன்' என்ற தலைப்பில் நான் எழுதிய பழைய இடுகையை அப்படியே எடுத்துப் பின்னூட்டியதன் நோக்கமென்னவோ?! எனினும் ரசித்தேன்! :))

ஜோதிஜி சொன்னது…

த‌ன்னை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ ம‌னித‌ன் எதையும் செய்வான்; எப்ப‌டியும் பேசுவான் என்ப‌தே.

பெயரிலி

பலபேர்கள் தங்களை சரியான முறையில் இந்த வலையுலகில் வெளிக்காட்டிக் கொள்ள விருப்பம் இல்லாமலே விமர்சனத்தின் மூலம் தங்களின் அற்புத பங்களிப்பை செய்து கொண்டிருப்பதற்கு இவரும் ஒரு உதாரணம். ராஜா உனக்கு வந்துள்ள விமர்சனம் தமிழ்மண நட்சத்திரம் போலவே ஜொலிக்கின்றது.

எங்கோ ஆரம்பித்து எங்கோ தொடங்கி எங்கு கொண்டு வந்து முடித்துள்ளாய்? ம்ம்ம்....

அப்புறம் அனுமனை வணங்கும் போது அல்லது ராமர் கோவிலுக்குச் செல்லும் போது இந்த பாடல்தான் முக்கியமாம்.

இலக்கியவாதிகளுக்கு பயன்படுவது போல பக்திமான்களுக்கு இந்த பாடல் பல வகையிலும் பயன்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

இரண்டாவது வாழ்த்துகள் ராசா.

பெயரில்லா சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் ராஜா! :)

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வாழ்த்துக்கள்... நண்பா..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இந்த நட்சத்திரம் நீங்க என்றும் ஜொலிக்க விரும்புகிறேன்..

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

வாழ்த்துகள் விந்தையாரே.கவிதை அற்புதம் ரசித்தேன் !

ராஜவம்சம் சொன்னது…

நட்சத்திரவாழ்த்துக்கள் நண்பா.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

நட்சத்திரவாழ்த்துக்கள் நண்பா

அப்பாதுரை சொன்னது…

வாழ்த்துக்கள் அன்பரே.
கம்பன் வரிகள் கரும்புச்சாறு தான். நன்றி.
யூதனில் புலம்பலுக்கும் பிராமணனின் புலம்பலுக்கும் - for that matter, தமிழனின் புலம்பலுக்கும் நிறைய அடிப்படை வேறுபாடு உண்டே? எனக்குச் சரியாகப் புரியவில்லையோ என்னவோ, பொருத்தமாகத் தோன்றவில்லையே? சேக்ஸ்பியரின் வரிகள் out of context என்று படுகிறது. இருப்பினும், நசுக்கப்படும் கனவுகளை எதிர்த்து 'எந்த இனமானால் என்ன?' என்று குரல் கொடுக்கத் தோன்றுகிறது.
சிந்திக்க வைத்த பதிவு.

செ.சரவணக்குமார் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள் நண்பா.

vinthaimanithan சொன்னது…

@ ஜோதிஜி, பாலாஜி சரவணா, சௌந்தர், ரத்னவேல், ஹேமா, ராஜவம்சம், ராம்ஜி யாஹூ, அப்பாதுரை, செ.சரவணக்குமார்

மிக்க நன்றி நண்பர்களே! உங்கள் அன்பில் என் விழிகள் ஈரமாகின்றன

Related Posts with Thumbnails