வியாழன், 14 ஏப்ரல், 2011

சதுரங்கராணி



நானும் நீயும்
சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தோம்
நெடுங்காலமாகவே
வெள்ளைக்காய்கள் எப்போதும்
உனதாகவே...
சீறிப்பாயும் ராணிக்காயினை
உபயோகப்படுத்த
எப்போதும்
தெரிவதில்லை எனக்கு
குறுக்கில் பாயும் பிஷப் காய்கள்
உன் விரல்களில்...

உன் ஒவ்வொரு முத்தத்திலும்
வெட்டுப்பட்டனர் சிப்பாய் தொடங்கி
ரூக் வரை

நீ செக் சொன்னபோது
உறைந்துபோன
எனது காலத்தின்
உள்ளிருந்து
எழுதிக் கொண்டிருக்கிறேன்
இந்தக்கவிதையினை

கடந்து செல்கிறாய்
மெல்லிய புன்னகையுடன்
சதுரங்கங்களின் ராணியென!

5 பேரு கிடா வெட்டுறாங்க:

க ரா சொன்னது…

நட்சத்திர கவிதை வி.ரா. அற்புதம் :)

Unknown சொன்னது…

சதுரங்கப் பலகையில்
எதிரெதிர் அமரும்போது
நீ கவனமாக
தேர்தெடுக்கும் வெள்ளைக்காய்கள்
ஒரு போதும் ஜெயித்ததில்லை
நான் விரும்பித் தோற்பதை ..
.
குதிரைகள் வீழும்போது
உன் கண்களுக்கு தப்புவதில்லை
எனது பிஷப்புகளும்
ஆமென்..

கொடுத்தாலும் வாங்கினாலும்
முத்தங்களுக்காய் பலியான
சிப்பாயாக மாறியவன்
நான்..

செக் வைத்த இறுமாப்பில்
நீ
வெற்றிச் சிரிப்பை காற்றில் பரவவிட்டபோது
உறைந்துபோன முத்தங்களால்
இந்த கவிதை தன்னையே
இன்னொரு முறை
எழுதத்துவங்கியது ..

அடுத்த ஆட்டம்
இன்னும் சிறிது நேரத்தில்
ஒரு
செவ்வகப் பலகையின் மேல்..

நான் ராஜாவாகவும்
நீ ராணியாகவும்
நான் ஜெயிக்க நீ தோற்க
நீ ஜெயிக்க நான் தோற்க..

சகாதேவன் சொன்னது…

சதுரங்கம் என்றதும் நான் முன்பு படித்த ஒரு இத்தாலிய பழமொழி நினைவு வந்தது.
//After the game is over the king and tha pawns go back into the same box//
சகாதேவன்

Paleo God சொன்னது…

அட ஸ்டாரா? விரா நட்சத்திர வாழ்த்துகள்! :))

கிராமத்து காக்கை சொன்னது…

அன்புடன் ராஜாராம் நண்பர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவி்த்து கொள்கிறேன் பதிஉலகில் நான் புதியவன்
எதுவுமே தெரியாமல் பதிவு எழுத ஆசைப்பட்டேன் நம்மால் முடியுமா என்று கூட தோன்றியது 3மாதம் தேடலுக்கு பின் உங்கள் தளத்தில் உள்ள கைப்பேசியினை தொடர்பு கொண்டேன் பதில் இல்லை
பின்னர் சுமார் 1 மணி நேரம் கழித்து நீ்ங்களே தொடர்பு கொண்டீர்கள் என்னுடைய ஐயத்தை போக்கி உங்களின் தன்னம்பிக்கையான வார்தைகளால் பதிவுலகில் இப்போது நானும் உங்களுடன்

Related Posts with Thumbnails