செவ்வாய், 19 ஏப்ரல், 2011

நாய்வாய் எச்சில்


தனித்த வெய்யிற்பொழுதில்
கருகிப்போன புற்களை
மென்று தீர்க்கிறது பசு...

காசுகள் குலுங்கா
திருவோட்டுடன்
காலணிகள் தேவையற்ற
கட்டைக்கால் பிச்சைக்காரன்
பசிமரத்த வயிற்றோடு...

வலியைப் பிடுங்கிப்போடும்
பிரயத்தனத்தில்
நாய்வாய் எச்சிலாய்
வழிகிறதென் காதல்

6 பேரு கிடா வெட்டுறாங்க:

Rathnavel சொன்னது…

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Rathi சொன்னது…

அவரவர்க்கு அவரவர் வலி!

வானம்பாடிகள் சொன்னது…

நாய் வாய் எச்சில்!!! க்ளாஸ் ராஜாராமன்:)

நியோ(அ.முத்து பிரகாஷ்) சொன்னது…

வழியும் எச்சில் துடைத்து முன்னகர்த்தும் வரிகள் ...

அப்பாதுரை சொன்னது…

அருமை

shortfilmindia.com சொன்னது…

ada cablesankar

Related Posts with Thumbnails