செவ்வாய், 12 ஏப்ரல், 2011

புணர்தலும் புணர்தல் நிமித்தமும்புணர்ச்சியைவிட சுவாரஸ்யமானவை
அது பற்றிய கற்பனைகள்

பதின்பருவச்
சுயமைதுனங்களின் இறுதியில்
எப்போதும்
எட்டிப் பார்க்கும்
துளி கண்ணீர்

"படத்தோட இருவது ரூவா"
"படமில்லாம பத்து ரூவா"
ரோட்டுப் புத்தகங்கள்...
கதைகளின் நீதி
"தவறுக்கு வருந்துகிறேன்"...

"புள்ளிராஜா"க்களின்
பயமுறுத்தல்களிலும்
ஆணுறை வாங்க அச்சத்திலும்
காற்றில் பீய்ச்சப்பட்டு
கழிந்துபோயின கல்லூரிக்காலங்கள்

'வாலிப வயோதிக
அன்பர்களை'த் தேடும்
விடுதி வைத்தியர்களும்

'அது மிகப் புனிதமானது'
கட்டுரைகளின் நாயகர்களும்

காம்புகள் மட்டும் மூடப்பட்ட
"கவர்ச்சி தப்பில்லை" பேட்டிகளும்

கனவுகளின் சன்னல்களைத்
திறப்பதுவும் மூடுவதுமாய்....

பிறிதொருநாள்...

அரையிருட்டின் ஐந்தாம் நிமிட
இறுதியில்
தோன்றியது

இந்தக் கவிதையை எழுத...

புணர்ச்சியைவிட சுவாரஸ்யமானவை
அது பற்றிய கற்பனைகள்...

12 பேரு கிடா வெட்டுறாங்க:

காமராஜ் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் விந்தைமனிதன்.

ஜோதிஜி சொன்னது…

க்ளாஸ்ப்பா. ஒரு வேளை உன் அருகில் இருந்தால்............. ம்ம்........ நான் கொடுக்கும் பரிசு...................


வெட்கம் + கூச்சம் =

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ஹெஹ்ஹே....ஹே

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

கன்னியாகுமரி வாசிச்சு பாருங்க தலைவரே..:-))

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்.

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்லாருக்குங்க விந்தை. கா.பா சொன்ன மாதிரி ஜெயமோகனோட கன்னியாகுமரி அவசியம் வாசிங்க. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஹி ஹி ஹி

kashyapan சொன்னது…

எந்தக் கோடையைப் பிடிக்க இந்தக் கவிதை ஐயா! ---காஸ்யபன்

cheena (சீனா) சொன்னது…

தமிழ் மண நட்சத்திரப் பதிவர் நல்வாழ்த்துகள் -கவிதையும் படமும் அருமை. நட்புடன் சீனா

Ponchandar சொன்னது…

"படத்தோட இருவது ரூவா"
"படமில்லாம பத்து ரூவா"
ரோட்டுப் புத்தகங்கள்...

பத்து வருஷத்துக்கு முன்னால இப்படித்தான்..... இபோ 1 ஜிபி கார்டுல அசையும் படைதையே பார்க்கிறான்(ள்)...

சுந்தர் (காங்கோ) சொன்னது…

கவிதை ரொம்ப நல்லா இருக்கு சார்... எத்தனையோ உணர்வுகள், சிந்தனைகளைக் கிளறுகிறது...

babulal madavan சொன்னது…

அருமையான மீள் எண்ணங்கள்... அழகான அவதானிப்பு.... சிலிர்க்கும் முடிவு.... கல்கி விட்டீர்கள் விந்தை மனிதரே.

Related Posts with Thumbnails