செவ்வாய், 29 மார்ச், 2011

திசைமறந்து திரியும் பறவையொன்றின் புலம்பல்கள்...


அலங்காரங்களின்றி 
எழுத நினைத்தேன்
ஒரு கவிதையை
கண்ணீராலும் துக்கத்தாலும்...
வழியும் கண்ணீரில்
காகிதக் கப்பலாய் என் காதல்...


வரிகளைத் தேடும் 
வலிமையில்லை


பின்னொரு பொழுதில்


திசைமறந்து திரியும் 
பறவையொன்றின் புலம்பல்களைக்
கோர்த்து
எழுதத் துவங்கினேன்
ஒரு கவிதையை.
குஞ்சுகளைத் தொலைத்த 
குருவியொன்று
ஒப்பாரி வரிகளுக்கு
ஒப்பனை செய்ய முன்வந்தது...


எழுதி முடித்த கவிதையில்
மிதந்து கொண்டிருந்தன
கனவுகளின் சடலங்கள்

7 பேரு கிடா வெட்டுறாங்க:

ஜோதிஜி சொன்னது…

வினோதமாக வித்யாசமாக விரும்பக்கூடிய வகையில்

நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வித்தியாசமான சிந்தனை..
வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கவிதை வீதியில் இன்றைய பதிவு...

கோமாளி செல்வாவும் விண்டோசும்...!

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_29.html

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

கவிதை அருமை நன்பரே

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Anbu சொன்னது…

ஜி,

//அலங்காரங்களின்றி
எழுத நினைத்தேன்
ஒரு கவிதையை
கண்ணீராலும் துக்கத்தாலும்...
வழியும் கண்ணீரில்
காகிதக் கப்பலாய் என் காதல்...// என்ற வரிகளில் "கண்ணீராலும்" என்பது "இயலாமையாலும்" என்றும், "என் காதல்" என்பது "என் கவிதை" என்றும் இருந்தால் நன்றாயிருக்கும் என் எண்ணுகிறேன், மற்றபடி கவிதை நன்று.

Unknown சொன்னது…

கடைசி பத்தி மட்டும்...

Related Posts with Thumbnails