வியாழன், 24 மார்ச், 2011

கொஞ்சம் ரசிக்க... கவிதை, எதிர்க்கவிதை, எதிருக்கு எதிர்....


கவிதை எழுதி ரொம்பநாளாச்சேன்னு கை அரிச்சி ஒக்காந்திருந்தேன். இன்னிக்குன்னு பாத்து கூகிள் பஸ்ஸுல கவிதை மழையா பொழிஞ்சிட்டு இருந்தாரு அண்ணன் கேஆர்பி.செந்தில். அவரோட கவிதைய பாத்தவொடனே அப்பிடியே எதிர்க்கவிதை பொங்கிடுச்சி! எதிர்க்கவிதை போட்டுட்டு பொசுக்குன்னு வந்துரலாம்னு பாத்தா "என்ன கைய புடிச்சி இழுத்தியா"ன்னு இழுத்து வெச்சி வம்பளந்தாரு நண்பர் பலாபட்டறை சங்கர். மனுசன் பின்னி பெடலெடுத்துட்டாரு. கவிதை, எதிர்க்கவிதை, எதிருக்கு எதிர் அப்டீன்னு மூணுமணி நேரம் போனதே தெரியல

நண்பர்களும் நாங்க அடிச்ச கூத்தை ரசிக்கணும்ல! அதான் இந்தப் பதிவு

krpsenthil kumar - Buzz - Public

சொல்லிவிட்டு பெய்வதில்லை
எப்போதும் மழை ..
அது காதலைப்போல்
வரமாய் வரும் ..

இப்போதும் பெய்கிறது
பெருமழை அவ்வப்போது,
உடன் நனைய
நீதான் இல்லை...

உடைந்து அழும் கண்களின்
உப்பு
மழையில் கலந்து
கடலெல்லாம் உப்பாச்சு..

10 people liked this - subramanian rajaraman, Karthik L (LK), ४१ தோழி १४, எஸ். கே, ஓம் அருணையடி ஓம் and 5 others

nesamitran online - ஆஹா ...

இந்த நரகத்தில் நான் மட்டும் உழலுவதோன்னு கடலெல்லாம் உப்பாக்குறான்யா/கடலளவு அழுகுறான்யா கவிஞன் :)11:54 am

subramanian rajaraman -

எதிர்கவுஜ எழுதி நாளாச்சு... அதுனால

கண்ணு ரெண்டும் கொளமாச்சு
கடலெல்லாம் உப்பாச்சு
காஞ்சி போன நெலமெல்லாம்
கழனியா மாறிப்போச்சு

கொஞ்ச மழை பேஞ்சாலும்
கூதலில ஒன் நெனப்பு
கோரமழை பேயிறப்போ
கொமரி உன்னை காங்கலியேEdit12:42 pm

ஷங்கர் Shankar - எதிருக்கு எதிர்

வானம் பார்த்த பூமியிலே
பெஞ்ச மழை ஈரத்துல
விளைச்ச கீர காசக் கொண்டு
பெத்த புள்ளை பட்டணம் போயி
காதலிக்கான கண்ணீருல
கடலெல்லாம் உப்பாச்சுன்னு
கவித ஒன்னு எழுதினானே
பாடுபட்டு அனுப்பிவெச்ச
ஆத்தாளோட வேர்வை
கரிக்காத காரணமென்ன
ராஜாராமா கரிக்காத காரணமென்ன?12:56 pm

subramanian rajaraman -

ஆத்தாவோட வேர்வையெல்லாம்
ஆனிப்பொன் தங்கமய்யா
அவ மனசு பூக்கணும்னு
அச்சுவெல்ல மருமவன்னு
ஆறு கொளம் ஏரி கரை
அத்தனையும் வல போட்டு
ஆப்புட்டுது கன்னிமீனு
அசந்திருக்கும் நேரத்துல
வலையறுத்து பாஞ்சதென்ன
வாழ்க்கையெல்லாம் மாஞ்சதென்ன

வானமெல்லாம் பூத்திருக்க
வறண்ட நெஞ்சு இருட்டடிக்க
எசப்பாட்டு நாம்படிக்க
எதிர்ப்பாட்டு ஏதுக்கய்யா
சங்கரனே
எதிர்ப்பாட்டு ஏதுக்கய்யா?Edit1:09 pm (edited 1:10 pm)

ஷங்கர் Shankar -

Yes Sir
Yes Sir
Three Bags Full! :))1:11 pm

subramanian rajaraman -

 புரியலயே?Edit1:15 pm

ஷங்கர் Shankar -

இக்கட்டான நிலைமைல மாட்டிக்கிட்டா இப்படி சொல்லிட்டு எஸ்கேப்பாகறது என் ஃபார்முலா! :))))))1:16 pm

subramanian rajaraman -

அடடா.. அப்பிடியே கொஞ்சநேரம் கண்டினியூ பண்ணினா எடுத்து பதிவா போட்ரலாம்னு பாத்தேனே? :)Edit1:17 pm

ஷங்கர் Shankar -

பத்து மாசம்தான் சொமந்து
ரத்தம் வத்தப் பால் கொடுத்து
குத்தம் கொற இல்லாம
நான் வளத்த என் புள்ள

பத்து நாளு முன்னாடி
பளபளன்னு சேலகட்டி
பல்லக் காட்டி வந்தவ
பறிச்சிட்டுத்தான் போனாளே

சுள்ளி சொமந்த தலையிலே
கள்ளி வந்து போட்ட மண்ணு
கொள்ளி வரை மறக்காதே

என்ன செய்வேன் ராஜாராமா
யார் தடுப்பா ராஜாராமா1:36 pm

subramanian rajaraman -

பெத்ததொரு தாயாரு
சித்தமெல்லாம் கலங்கி நிக்க
குத்தமென்ன நாஞ்செஞ்சேன்
சத்தமாக சொல்லுமய்யா

வாழக் குருத்தாட்டம்
வளந்திருக்கும் பொண்ணொருத்தி
வாக்கப்பட்டு வந்து நின்னா
வாண்டாமுன்னா சொல்லப் போறா

செல்ல மவன் வாழ்க்கையில
செல்வமெல்லாம் நெறஞ்சிருக்க
குத்து வெளக்கு ஒண்ணை
கொண்டுவந்தா கோவமென்ன

மாமியாரும் மருமவளும்
மனம் நெறஞ்சி கதைபேச
கொணவதியா வரணுமின்னு
கொண்டிருந்தேன் கனவு ஒண்ணு

கனவுல வெதச்ச வெத
கருகித்தான் போகுமின்னு
கண்டேனா பாவிமவன்
கசங்கித்தான் போனேனய்யா
சங்கரரே
கசங்கித்தான் போனேனய்யாEdit1:50 pm

ஷங்கர் Shankar -

அடியாத்தீ என்று சொல்லி
நாலு வெரலு மடக்கி
மோவாயி தாங்க நாம் பாத்த
படமொன்னு டிவியிலே
வந்துச்சே குடும்ப கொடுமையெல்லாம்
சொல்லிச்சே,

மரம்போல நாங்கிடந்து
மந்திகத கண்ட நேரம்
புத்தியில ஏறலியே
புள்ள இப்படி பண்ணுமின்னு

அந்திசாயும் நேரம்தானே
என் புள்ளையும் வந்தானே
கண்ணீரத் தொடச்சி
சொன்னானே குத்திக் கொன்னானே

பக்கத்து வீட்டு கோவால நான்
கட்டிக்கிட்டா போதுமம்மா
மருமவ தொல்லை ஏது
நீ கவலப்படவேணாம்மா

என்ன செய்வேன் ராசா ராமா
சொல்லு என்ன செய்வேன் ராசாராமா?2:12 pm

subramanian rajaraman -

அய்யய்யோ சங்கரரே
அபச்சாரம் அபச்சாரம்
ஆம்பளையும் ஆம்பளையும்
அணைச்சிக்கிடும் குடித்தனமும்
அடுக்குமா சாமிக்கும்?

வாலைக் கொமரிப்பொண்ணு
வரிசைகட்டி நின்னிருக்க
வந்த பொண்ணு போனா என்ன
வந்திடுவா அடுத்தொருத்தி

வாழ்க்கையில காதலெல்லாம்
வாசல் தாண்டிப் போனாலும்
வசந்தங் கெட்டு போவாதின்னு
வந்திடுச்சி புத்தி அய்யா

செவத்த தோலு பொண்ணொருத்தி
சிங்காரிச்சி வந்துநின்னா
சிலுத்துக்கிட்டு காதலிச்சேன்
செருப்படியும் வாங்கி நின்னேன்

அத்தமவ ஒருத்தி அழகான கருப்பட்டி
சித்தமதிர வைக்கும் செலமாரி நின்னிருக்கா
கத்துங் குயிலோச கானம் சொக்கவைக்கும்
கருத்த பொண்ணுகூட வாழ்க்க இனிச்சிருக்கும்Edit2:30 pm (edited 2:31 pm)

ஷங்கர் Shankar -

தேலிக்கை சொல்லாலே
மனம் கேளிக்கை அடையும் நேரம்
துடுப்பாட்ட காணொளியை
காண மனம் விழையுதே

அன்பான கேஆர்பி
இனி கவித எழுதலேன்னு
முடிவேதும் எடுக்கும் முன்னே

இம்புட்டு நேரமா இழுத்திழுத்த
இந்தக் கத முடிச்சிக்கலாம்
நான் ஆவறேன் அப்பீட்டு
அதுவே நீங்களும் ரிப்பீட்டு!
யப்பா சாமி முடியல!
வெளிலதான் என்னா வெயிலு!
:)))))))))))2:32 pm (edited 2:33 pm)

subramanian rajaraman -

இழுத்துவெச்சி கதையளந்த
இனிய நண்பர் சங்கரரே
இப்போ போயி நாளைவாரும்
எசப்பாட்டு பாடிடலாம்

எசப்பாட்டு தான் கேக்க
இங்க வந்து காது தந்த
எல்லாரும் நலம்வாழ
எஞ்சாமி காத்திருக்கும்

18 பேரு கிடா வெட்டுறாங்க:

பாட்டு ரசிகன் சொன்னது…

இது எதிர் பதிவு இல்ல பெரிய பதிவு..


ஆனாலும் ரசிக்கும் படி இருந்தது....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அடேங்கப்பா.. நீங்க நமீதா ரசிகரா?

Paleo God சொன்னது…

பயங்கரமா கருப்பா இருக்கும்னு பார்த்தா
கருப்பா பயங்கரமா இருக்கே தல! :))

vasu balaji சொன்னது…

செம செம=))

க ரா சொன்னது…

அருமை ரா.ரா :) ... அருமை பபஷா :)

Unknown சொன்னது…

ஆஹா ... பிரமாதம் ..

பின்றீங்க....

பெயரில்லா சொன்னது…

போட்டுத் தாக்குங்க !!! எவ்வளவு உட்கார்ந்து யோசிச்சாலும் வராத கவிதைகள் சில நேரங்களில் பஸ் ஸ்டாப்பிலும், மெட்ரோ இரயில் பயணத்திலும், கையேந்திப் பவனிலும், ஆளரவமற்ற இருட்டு தெருவில் இருக்கும் போஸ்ட் கம்பத்தைப் பார்க்கும் போதும் வருகிறது !!!

அய்யய்யோ உங்க வியாதி எனக்கு தொத்திகிச்சி ..

ஜாஸ்மின்- ப்ரியா சொன்னது…

செவந்து துடிச்ச உதட்டிலே யுத்த முத்தம்
நடத்திய மச்சான்...
வருஷம் சில ஆனதும் எனக்குன்னு என்னத்த
மிச்சம் வச்சான்.

கூப்பாடு போட்டு உலக அரசியல் பேசுறான்.
சாப்பாட்டு அரிசியில் கல் இருந்தா ஏசுறான்.

வயசுப்பொண்ணு வளந்து நின்னும் கல்யாணம் செய்ய வக்கில்லே.
ரோட்ல இளசா போறவ உடம்ப வெறிக்க பாக்குறது மட்டும் நிக்கல்லே.

எல்லாரும் நலம் வாழ எஞ்சாமி காத்திருக்கும்னு ...சொன்ன மவராசு ராசாராமா.
கோடைவெயில் கொளுத்தும் சமயம் மழையை பத்தி எழுதலாமா?

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

நல்லா இருக்குடே

vinthaimanithan சொன்னது…

@ பாட்டு ரசிகன்

ந்ன்றி சகா

@ சி.பி.செந்தில்குமார்

புரியலியே?!

@ பலாபட்டறை சங்கர்

ரொம்ப நன்றி தல. உங்க புண்ணியத்துல இன்னிக்கு ஒரு பதிவு கெடச்சிது :)

@ வானம்பாடிகள்

நன்றிங்க ஐயா

@ராமசாமி

நன்றி சகா

@ கேஆர்பி

வாங்க சூத்ரதாரியே!

@இக்பால் செல்வன்

தொத்திக்கிச்சா? உட்றாதீங்க அப்டியே அந்த நூலை புடிச்சிக்கிட்டு போங்க :))

@ ஜாஸ்மின் பிரியா

பின்றீங்க பிரியா. அப்டியே கண்டினியூ பண்ணுங்க

@அர.பார்த்தசாரதி

நன்றிடா மாப்ளே

Bibiliobibuli சொன்னது…

நீங்க சொன்ன மாதிரி, "கூத்தடிச்சீங்க". பெரும்பாலும் ஆண்கள் தானே எதிர்கவுய சொல்லியிருக்கீங்க. அதுக்கேன் பெண்கள் துவைக்கும் படம்?

superlinks சொன்னது…

வணக்கம் உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

நன்றி

தோழமையுடன்
சூப்பர்லிங்ஸ்

அப்பாதுரை சொன்னது…

ஆகா! இப்படி ஒரு கூட்டத்துல கலக்க வாய்ப்பில்லாம போயிருச்சே! ரசித்துப் படித்தேன்.
'தேலிக்கை' என்றால் என்ன?

அப்பாதுரை சொன்னது…

படமும் பிரமாதம்.

vinthaimanithan சொன்னது…

@அப்பாதுரை

நான் உங்கள் விசிறி!

வசிட்டர் வாயால் பட்டம் வாங்கியது போல உணர்கிறேன்.

'தேலிக்கை' என்றால் இலகுவான,லேசான, காற்றைப்போன்று எடையற்ற என்ற பொருள்கள் வழக்கிலுண்டு.

மிக்க நன்றி உங்களது முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

vinthaimanithan சொன்னது…

@ரதி

கிராமத்துக்கவிதை, அதுவும் பெண்ணைப் பற்றியது என்பதால் பெண்கள் படம் அக்கா.

@சூப்பர்லிங்க்ஸ்

மிக்க நன்றி தோழர்

கமலேஷ் சொன்னது…

இரண்டு பானனையும் ஒன்னு செஞ்சிக்க முடியாது போலருக்கே..
பெருங்கவிகளா இருப்பாங்க போல

பகிர்வுக்கு நன்றி தோழரே.

கமலேஷ் சொன்னது…

எடுத்து போட்ட படம்
அட்டகாசம்.

Related Posts with Thumbnails