வெள்ளி, 31 டிசம்பர், 2010

கவி

அழகான கவிதை
ஒன்றெழுத விரும்பினேன்
கவிதை எழுத எனக்கு
அமைதியும் தனிமையும் வேண்டும்
கதவுகளையும் சன்னல்களையும்
சாத்தியாயிற்று
வேறென்ன..ம்ம்ம்...
கவிமனம் வேண்டும்
தளவாடங்களைச் சேகரிக்கத் துவங்கினேன்
சன்னமாய்க் கசியும் மெல்லிசை
வழவழப்பும் புதுமணமும் நிறைந்த‌
வெள்ளைக்காகிதங்கள்
மென்மையாய் வழுக்கிச் செல்லும்
பந்துமுனைப்பேனா
ஆ...அதென்ன...
கோப்பையில் ததும்பும்
மதுவின் விளிம்பில் மிதக்கும்
ஐஸ்கட்டிகள்
அவள் கருவிழிகளைப் போலவே...
மற...எழுது...
மதுபோதைக்கு ஊறுகாயும்
மனபோதைக்கு கைதட்டல்களும்
எதிர்பார்ப்பில்...
ஒருவழியாய்...
பிரசவத்தில்
செத்துப் பிறந்தது கவிதை...
பின்னொருநாள் புரிந்தது
மனத் தெறிப்பின்
மின்னல்களில்
உணர்வொழுக்கின்
சிதறல்களில்
ஒளிந்திருப்பதே கவிதை
என்று...

13 பேரு கிடா வெட்டுறாங்க:

வானம்பாடிகள் சொன்னது…

சபாஷ்.

ராஜவம்சம் சொன்னது…

சூப்பர்.

Rathi சொன்னது…

கவிதை எழுத இவ்வளவு முன்னேற்பாடா, முஸ்தீபுகளா!! றூம் போட்டு அல்ல ரூமை மூடிவிட்டு யோசித்திருக்கிறீர்கள்.


வருடப்பிறப்புக்கு இன்னும் கொஞ்சம் சிறப்பாக ஏதாவது எழுதியிருக்கலாமோ!!

ஜோதிஜி சொன்னது…

உண்மைத்தமிழனின் அண்ணன் இந்த கவிதைக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.

அர. பார்த்தசாரதி சொன்னது…

குடித்த போதெல்லாம் குட்டியிட்ட உளறல்கள் கவிதை என்றால் , குடிப்பது நியாயம் அல்லது கவிஞன் குடிகாரன் அல்லது உங்களுக்கு குடியில் போதை சி சீ கவிதை வரும் அல்லது ........
நல்லா இருக்கு டே உன் குடி சி சீ கவிதை

அரசன் சொன்னது…

அருமை.. அசத்தல்....

சர்வோத்தமன் சொன்னது…

பிரமளின் கவிதை

பிறவாத கவிதை

மீண்டும் மீண்டும்
நோக்காடு வந்தும்
பிள்ளை பிறக்கவில்லை
'வாடா' என்றழைத்த
ரிஷித்தகப்பன் குரலுக்கும்
சுகப்பிரம்மமாக
வந்துதிக்கவில்லை.
இதயத்தின்
பட்டுத் துரும்புக்
கூட்டுக்குள்
புழுவாய் நெளிந்து
கிடக்கிறது இது.

துரும்பென்ன தூணென்ன?
கூவி அழைத்தவுடன்
கல்த்தூண்
அசுர சேனை
அக்குரோணி ஆயிரத்தோடு
ஹிரண்யக் கொடுநெஞ்சம்
பிரகலாத தாபம்
மூன்றையும்
ஒரே கணத்தில்
கிழித்து
காலத் துரும்பை
எற்றி எடுத்து
எரித்து நீறாக்கி
நிற்க வேண்டாமா
கவிதை?

யோவ் சொன்னது…

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பார்வையாளன் சொன்னது…

இனிய வாழ்த்துக்கள்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

கன்னத்தில் முத்தமிட்டால் கண்ணம்மா நெஞ்சம் கள்வெறி 'கொல்'லுதடி..

//கோப்பையில் ததும்பும்
மதுவின் விளிம்பில் மிதக்கும்
ஐஸ்கட்டிகள்
அவள் கருவிழிகளைப் போலவே...//

போதையில் காட்சிப்பிழையோ?

ஹேமா சொன்னது…

தெறிப்புகள் கவிதையாகி அருமையாயிருக்கு.வாழ்த்துகள் !

எஸ்.கே சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

மன்னிக்கவும்...இதில் இல்லை விந்தைமனிதன்

Related Posts with Thumbnails