வெள்ளி, 30 ஜூலை, 2010

களவுபோன பௌருஷங்கள்

நிணக்குழம்பின் மணம் நுரைக்க நுரைக்கத் ததும்பிக் கொண்டிருக்கும் கோப்பையிற்பொருந்திய உதடுகளின் வழியே கசிந்து வழியுமந்தக் கந்தக நீரூற்றின் கொடுங்கசந்த சாரங்களே அமுதமெனக் கண்ட கனாக்களினிடையே விழித்தெழுந்தயென் ஆத்மாவின் களவாடப்பட்ட பௌருஷங்களையெண்ணி விம்மியழும் கண்ணீராற்றின்கண் மிதந்து செல்லும் உறிஞ்சிப்பின் உமிழப்பட்ட இந்திரியங்களின் மாமிச நாற்றங்கள் ஒன்றாய்ச்சேர்ந்தொரு பேய்க்குழந்தையாய் மாறித்தன் அந்தகாரக் கரங்களால் நட்சத்திரங்களைப் பெயர்த்துச் செய்த கருந்துளைக்கூட்டுக்குள் அடைபட்டும் அல்குல் வாசம் தேடி இறைஞ்சும் நாசித்துவாரங்களின்மீது சபித்தபடிக்குத் தன் கூடுடைக்கக்போராடி வென்ற மனக்குரங்கின் கற்பனைகளிலலையும் சிதைக்கப்பட்ட யோனிகளைக் குதூகலித்துக் கெக்கலித்தபின்னெழும் குற்றப் புலம்பல்களெல்லாம் மலையெனச்சேர்வதில் பீதியுற்றுப் பகிரவியலா அவஸ்தையில் தன்னைக்கீறிக் குருதி சுவைத்து நாசுழற்றும் அவலச்சுவைமிகுந்ததொரு நாடகக் காட்சிதனைப் பரிகசிக்கும் மாந்தர்தம் கண்பார்க்கக்கூசி ஒளிந்து ஒளிந்தென் பயணம் தொடர்கிறேன் என்னை ஸ்வீகரித்து என்னைக் கரைத்து என்னின் என்னைத் தனதாக்கி என்காதல் அள்ளித் தன் நயனங்களில் தேக்கியெனக்கான நயனதீட்சையளிக்கும் கன்னியினை....

3 பேரு கிடா வெட்டுறாங்க:

ஹேமா சொன்னது…

இது முற்றுப்பெறாது உங்கள் வரிகளைப்போலவே !

Unknown சொன்னது…

அவலசுவையை ரசிக்கும் மனநிலை டேஞ்சரான விசயம்

parthasarathy சொன்னது…

நண்பா
உன் திறமை பற்றி எனக்குத்தெரியும். வரிகளை தேர்ந்தெடு ,வார்த்தைகளை (புரியாத வார்த்தைகள் ) அல்ல
ஒரு முறைக்கு மூன்று முறை படித்தால்தான் புரியும் என்றால்,நீ எழுத்தாளன் என்று சான்று அளிக்கிறாய் ஒழிய , நல்ல படைப்பை அல்ல
பாமர தமிழன் புரியும்படி எழுது,உன்னால் முடியும் ஒரு உத்வேகத்தை உண்டாக்க

Related Posts with Thumbnails