வியாழன், 29 ஜூலை, 2010
கரைந்துபோகிறவனின் வரிகள்
கவித்துவ வரிகள் பொங்கிவழியுமந்தப் பின்னிராப்போதிற்றன்னுறக்கம் தேடிச்செல்லும் ஆயத்தத்திலிருந்த மங்கிய நிலாவுடனான சிற்றுரையாடல் ஒரு இனிய இசைப்பாடலாய் அவன் தன்நெஞ்சிலே கசிந்திருக்கத்தன் கோப்பையிலேயிருந்த கடைசி மிடற்றை அடிநாவின் எரிச்சல்வேட்கைக்கு இதமாயிறக்கையில் அவன் காதலொரு மண்புழுவாய் மெல்லூர்ந்துத் தற்புணர்ச்சி செய்து பெற்ற குழந்தையைத் தன் காற்பெருவிரலால் நசுக்கித் தேய்த்த வெறுப்பில் சட்டெனவெழுந்து ஓடத்துவங்கியவன் மனம் ஒரு காற்றாய் மாறி காடுமலை, நாடுநகரம் கடந்து கடிதெனத்தாண்டிப்போய் அங்கே பேரழுகையாய் மாறி வீழ்ந்துகொண்டிருந்ததோர் அருவியிற்கலந்து ஜெபிக்கத் தொடங்கிய மந்திரம் அல்லது கவிதை அல்லது புலம்பல் அல்லது வெற்றுக்கூச்சலின் பொருளென்னவென்றால் '" நீவிர் என்னை நேசிக்காததால், நான் உங்களை நேசிக்காததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்பதாகவும் " என் மரணத்தின் சிலுவையைத் தாங்கவியலாமல் உங்கள் தோள்கள் முறிந்து போவதாகட்டும்" என்பதாகவும் இருந்த அந்த வரிகளின் கனத்தைச் சுமந்து மெல்ல காற்றிலேறிப் பறந்த அந்த அக்கக்காக் குருவி நெடுந்தூரஞ்சென்று அவற்றை அந்தக் கவிஞனிடம் ஒப்படைத்தபின் அவனும் அவ்வரிகளின் துயரமும் கனமும் தாங்கச்சகியாது அவற்றைச் சீர்படுத்தியோர் கவிதையாக்க முயன்று கொண்டிருந்தபோது அக்கவிதையின் முதல்வரியாகப் பிறப்பெடுத்ததிவ்வாறாக...." கவித்துவ வரிகள் பொங்கி வழியுமந்த...."
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 பேரு கிடா வெட்டுறாங்க:
அற்புதமான கவிதை.. பாராட்டுக்கள்....
:) நல்லா இருக்கு
வரிகளை அடிக்கிக் கொண்டே ஓடி விழுந்திருக்கிறது கவிதையாய் !
எனக்கு பயமா இருக்கு
ரொம்ப நன்றி செந்திலண்ணா..
நன்றி நேசன் நீண்ட இடைவேளைக்குப்பிந்தைய 'நல்லாருக்கு'க்கு
நன்றி ஹேமா மேடம் ( ஆமா... உங்களை அக்கானு கூப்புடறதா? இல்ல தங்கைனு கூப்பிடுறதா..??)
அம்புட்டு பயமாவா இருக்கு வாலு?!
சுத்த மாக புரியவில்லை , நீங்களே எழுதி உங்களுக்கு மட்டுமே புரிந்தால் அது கவிதை ஆகாது நண்பர்களே , அற்புதமானது என்று பாராட்டிய நண்பர்கள் தயவுசெய்து அர்த்தத்தை கூறுங்கள்
கருத்துரையிடுக