ஒரு கண்ணாடியைக் கையாளும் கவனத்தில்
அழகாய்த் தேர்ந்தெடுக்கிறாய்
மிக மெலிதானதொரு கத்தியை...
பொறு... அவசரப்படாதே!
கொல்வது மட்டும் நோக்கமல்ல
அதன் தருணங்கள் உனக்கு
உவகைகூட்ட வேண்டும்
முதலில் என்னை நம்பவை
நீயே என் இறை என்று...
நீதான் என் ரட்சகி என்று...
நீதான் என் எல்லாம் என்று...
இதில்தான் இருக்கிறது
இதயமறுக்கும் சூட்சுமம்...
பிறிதொருபொழுதில்
நீ என்னுடன் இழையத் தொடங்கவேண்டும்...
புலன்கள் கிறங்கும் வேளையில்....
மென்மையாய்த் துவங்கு செயலை
குரல்வளையை அறுத்துவிடாதே
சீக்கிரம் செத்துப்போவேன்...
மெலிதாய் வழியும் குருதியில்
காதலின் வாசம் நுகர்
பிதுங்கத் துவங்கும் கண்களில்
துரோகத்தின் வலி உணர்
நாசித் துவாரங்களின்
விடைப்பில் தெரிகிறதா
மூச்சுக்கான ஏக்கத்தின் தீவிரம்?
காதலினுடையதும் அஃகதே!
இனி நீ துவங்கலாம்
இதே விளையாட்டை
இன்னொரு இனிய பொழுதில்...
அழகான புன்னகையுடன்
உன் காதல் சொல்லி!
9 பேரு கிடா வெட்டுறாங்க:
நல்ல படைப்பு
nice
நல்லா இருக்கு
அதிர்ஷ்டம் சில நேரங்களில் காப்பாற்றிவிடுகிறது சாத்தான்களை கைப்பிடிப்பதிலிருந்து...
ம்... ம்ஹூம்...
ம்ம்ம்...பயமாத்தான் இருக்கு.
ஆரம்பம் முதல் முடியும் வரை
ஒரு விறுவிறுப்பு.
ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே.
aaam naanum enn kazuthinai orumurai kodutthu aRubattirukkirean
@VELU.G
நன்றிங்க
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
நன்றி ரமேஷ்
@...........enthisai..........
வாங்க வக்கீல்சார்... மொதொமொதோல்ல நம்ம சைட் வந்துருக்கீங்க
@கே.ஆர்.பி.செந்தில்
இவ்ளோதானா.... இது தப்பாட்டம்
@ஹேமா
நன்றி மேடம்
@செ.சரவணக்குமார்
நன்றிங்க
@vinu
என்னத்த சொல்லி..... என்னமோ போங்க
கருத்துரையிடுக