திங்கள், 26 ஜூலை, 2010

அர்த்தமற்றவனின் புலம்பல்கள்

1)ஒரு சருகைப்போல
காற்றில் அலைகிறது
என் காதல்

பறவைகள் சென்றபின்
யாருக்காய்க் காத்திருக்கிறது
வெறுமையான கூடு


2)தழுவலுக்கும் புணர்தலுக்கும்
காதல் என்று
பெயரிட்டாய்

காதல் கசிந்த
என் முத்தங்களை
என்னவெனப் பெயரிடுவாய்?


3)கிளர்ந்தாய்
புணர்ந்தாய்
கொஞ்சினாய்

அது இருக்கட்டும்....
ஒரு முறையாவது
காதலித்துப் பாரேன்!

5 பேரு கிடா வெட்டுறாங்க:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ரொம்ப கஷ்டம்...

ஹேமா சொன்னது…

காதல் மனசில இருக்கணும் !

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
parthasarathy சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
parthasarathy சொன்னது…

இன்னும் எதிர்பார்க்கிறேன் உங்களிடம்
இது நீங்க 10th படிக்கும் போது எழுதுனதா
உங்களோட மற்ற படைப்ப பார்க்கும்போது இது கொஞ்சம் கம்மிதான்
தலைப்பு நல்லா இருக்கு

Related Posts with Thumbnails