புதன், 26 மே, 2010

ஒரு கவிதை...

ஒரு கவிதை...

காலத்தில் மங்கிப்போன
சில
பதிவுகளை
எழுப்பிச் செல்கிறது

ஒரு கவிதை...

பூக்களோடு
சில
முட்களையும்
நம்மீது தூவிச்
செல்கிறது

ஒரு கவிதை...

கண்ணீர் துடைத்து
சில
முத்தங்களை
விட்டுச் செல்கிறது

ஒரு கவிதை...

நம்மைக்
குழந்தையாக்கிக்
கொஞ்சிச் செல்கிறது

ஒரு கவிதை...

புணர்தலின் உச்சத்தை
யுகங்களுக்கு
நீட்டித்துச் செல்கிறது

ஒரு கவிதை...

குழந்தையாய் மாறித்
தன்
மழலையைப்
புரிந்து கொள்ள
இறைஞ்சுகிறது

ஒரு கவிதை...

5 பேரு கிடா வெட்டுறாங்க:

நேசமித்ரன் சொன்னது…

நல்லா இருக்கு :)

padma சொன்னது…

மனதில் புகுந்து
சபாஷ்
சொல்ல வைக்கிறது
ஒரு கவிதை

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ஒரு கவிதை ..

அருமை ...

மணிஜீ...... சொன்னது…

உள்ளே எதோ ஒரு மூடியை திறக்கிறது ஒரு கவிதை

சோத்து மூட்டை சொன்னது…

வெற்றுப்பக்கங்களை விரகத்துடன் பார்க்கிறது
விரல்களுக்கிடையில் வேசியாகிறது
பேனா குடித்த போதை ஆகிறது
புரியாதவன் நாக்கில் முளைத்த மயிராகிறது

Related Posts with Thumbnails