சனி, 1 மே, 2010

அது எப்படி?

ஒருநாள் கூட
என் தலைவலிக்காய்
நீ
மருந்து தடவியதில்லை

எனது
கவிதைகளை
வாசித்ததில்லை

“இந்தப் புடவை
உனக்கு நன்றாயிருக்கும்”
என்று சொன்னதில்லை

அலுத்திருக்கும் இரவுகளில்
என் சம்மதம்
கேட்டதில்லை

அழுதிருக்கும் பகல்களில்
என்னை
அணைத்ததில்லை

இருந்தும்
வெளியில்
சொல்லிக் கொள்கிறாய்
நீ என் ‘கணவன்’ என்று!

7 பேரு கிடா வெட்டுறாங்க:

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

அருமையான கவிதை
பாராட்டுக்கள் ராஜாராமன்.
பகிர்வுக்கு நன்றி.....

அமைதிச்சாரல் சொன்னது…

கவிதை நல்லாருக்குப்பா.பாராட்டுக்கள்.

மதுரை சரவணன் சொன்னது…

அநேகக் குடும்பங்களில் அப்படிதான். கவிதை எதார்த்தம். வாழ்த்துக்கள்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இதெல்லாம் நீங்க கல்யாணம் ஆன பின் செய்வீங்களா பாப்போம்

ராசராசசோழன் சொன்னது…

எல்லோரும் செய்கின்ற தவறு...ஆனால் என்ன செய்ய...யோசிக்கவேண்டிய விடயம் தான்...

விந்தைமனிதன் சொன்னது…

@ மணி (ஆயிரத்தில் ஒருவன்)

பாராட்டுக்கு நன்றிங்க

@அமைதிச்சாரல்

நன்றி மேடம் அடிக்கடி எட்டி பாருங்க

@மதுரை சரவணன்

வாழ்த்துக்கு நன்றி

@ கே.ஆர்.பி.செந்தில்

ம்ஹூம் உங்களுக்கு எத்தன விஷயத்துக்குத்தான் நன்ரி சொல்றது???? மொத்தமா கிலோ கணக்குல பர்ச்சேஸ் பண்ணி இப்பவே கொடுத்துடறேன்

@ ராசராசசோழன்
தவறுகள் திருத்தப் படுவதெப்போது ஜி?

அருணகிரி.மு சொன்னது…

அது எப்படி கவிதை மிகவும் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்

Related Posts with Thumbnails