திங்கள், 3 மே, 2010

நிரம்பி வழிகிறதென் கோப்பை

இதோ
நிரம்பி வழிகிறதென் கோப்பை

அருந்திக்கொள்ளலாம்
ஆளுக்கொரு ‘ஸிப்’

எங்கள் வலிகளின்மீதான
நிராகரிப்புக்களுக்காக....

எமது துயரங்களை

செய்தித்தாள் எழுத்துக்களாகவும்
ரயில்பயண அரட்டைகளின்
“த்சொ த்சொ”க்களாகவும்

இரண்டுநிமிட மவுனாஞ்சலிகளாகவும்
மாற்றியமைக்காக...

எமது
முலைச்சீலை உரியப்பட்டபோதும்
நீவிர் நிகழ்த்திய
’பாஞ்சாலி சபத’க் காலட்சேபங்களுக்காக...

எமது கண்ணீரோடு
உங்கள் சிங்காதனக் கனவுகளை
சமப் படுத்தியமைக்காக...

இதோ
நிரம்பி வழிகிறதென் கோப்பை

அறுத்தெறியப்பட்ட
எமது அங்கங்களிலிருந்து
வழியும்
குருதியாலும்

உமது பேடிமையாலும்...

3 பேரு கிடா வெட்டுறாங்க:

மதுரை சரவணன் சொன்னது…

//அறுத்தெறியப்பட்ட
எமது அங்களிலிருந்து
வழியும்
குருதியாலும்//
REALLY SUPER.

KVR சொன்னது…

நல்லா எழுதி இருக்கிங்க. ஆனால், கடைசியிலே இப்படித் தான் சொல்லப் போறிங்கன்னு முதலிலேயே தெரியிற மாதிரி இருக்கு. இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

//அங்களிலிருந்து//

அங்கங்களிலிருந்து?

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

கொஞ்சம் நிறுத்தி நிதானமா எழுதுங்க ...
அப்புறம் சிலிண்டர் பற்றிய எதிர்பார்ப்புகளுடன்..

Related Posts with Thumbnails