புதன், 5 மே, 2010

புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

புணர்ச்சியைவிட சுவாரஸ்யமானவை
அது பற்றிய கற்பனைகள்

பதின்பருவச்
சுயமைதுனங்களின் இறுதியில்
எப்போதும்
எட்டிப் பார்க்கும்
துளி கண்ணீர்

"படத்தோட இருவது ரூவா"
"படமில்லாம பத்து ரூவா"
ரோட்டுப் புத்தகங்கள்...
கதைகளின் நீதி
"தவறுக்கு வருந்துகிறேன்"...

"புள்ளிராஜா"க்களின்
பயமுறுத்தல்களிலும்
ஆணுறை வாங்க அச்சத்திலும்
காற்றில் பீய்ச்சப்பட்டு
கழிந்துபோயின கல்லூரிக்காலங்கள்

'வாலிப வயோதிக
அன்பர்களை'த் தேடும்
விடுதி வைத்தியர்களும்

'அது மிகப் புனிதமானது'
கட்டுரைகளின் நாயகர்களும்

காம்புகள் மட்டும் மூடப்பட்ட
"கவர்ச்சி தப்பில்லை" பேட்டிகளும்

கனவுகளின் சன்னல்களைத்
திறப்பதுவும் மூடுவதுமாய்....

பிறிதொருநாள்...

அரையிருட்டின் ஐந்தாம் நிமிட
இறுதியில்
தோன்றியது

இந்தக் கவிதையை எழுத...

புணர்ச்சியைவிட சுவாரஸ்யமானவை
அது பற்றிய கற்பனைகள்...

14 பேரு கிடா வெட்டுறாங்க:

இராகவன் நைஜிரியா சொன்னது…

புணர்ச்சிகளுக்கு மட்டுமல்ல... நிறைய விஷயங்களுக்கு கற்பனைகள் சுவாரஸ்மானவை தாங்க..

வேங்கை சொன்னது…

உணர்வுகள்
எதார்த்தம் நண்பரே !!!


// புணர்ச்சியைவிட சுவாரஸ்யமானவை
அது பற்றிய கற்பனைகள்... //

இந்த தலைப்புக்குஅதிகம் சம்மந்தம் இல்லை போல தோன்றுகிறது ஆனால் உண்மை வரி இது // காம்புகள் மட்டும் மூடப்பட்ட
"கவர்ச்சி தப்பில்லை" பேட்டிகளும் // - சம்மட்டி

வாழ்த்துக்கள்

நேசமித்ரன் சொன்னது…

ஜி

அருமை .குறையற்ற கவிதை

இதே டெம்போ மெயிண்டைன் பண்ணுங்க

சப்ஜெக்ட் மட்டும் புதுசா இருக்கட்டும்

நண்பர்களிடம் சொல்றேன் புது வரவுகளை எதிர் பாருங்க !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நச்

ராகவ் சொன்னது…

ஆண் மையப்பார்வையில் எழுதப்பட்டிருப்பது சிறப்பு. எவ்வளவு காலம் தான் லீனாவைப் படித்துக்கொண்டிருப்பது.

குகன் சொன்னது…

// "படத்தோட இருவது ரூவா"
"படமில்லாம பத்து ரூவா"
ரோட்டுப் புத்தகங்கள்...
கதைகளின் நீதி
"தவறுக்கு வருந்துகிறேன்"... //

அது எல்லாம் ஒரு காலம் :)

Unknown சொன்னது…

இந்த கவிதையை விகடனுக்கு அல்லது தீராநதிக்கு அனுப்பிவையுங்க,
மிக நல்ல கவிதை.

Prabu M சொன்னது…

//புணர்ச்சியைவிட சுவாரஸ்யமானவை
அது பற்றிய கற்பனைகள்//

சிந்தையின் அத்தனை சேனல்களும் ஒருங்கே வந்து நின்றுவிட்டது, உங்கள் கவிதையை வாசித்துமுடிக்க, இந்த இருவரிகளைப் பார்த்த மாத்திரத்தில்.... :)

அடுத்தடுத்த வரிகளில் அழகாக ஒரு க்விக் ரவுண்ட் அப் கவிதை வடிவில்...

ஸ்கூல்களின் ஆங்கிலப் பரிட்சையில் வருமே காம்ப்ளக்ஸ் சென்டன்ஸை சிம்பிள் சென்டன்ஸாக மாற்றி எழுதச்சொல்லி....... அதுபோல பல்லாயிரம் "காம்ப்ளக்ஸ்" வரிகளை ரொம்ப சிம்பிளாக சொல்லிவிட்டன துவக்கமும் முடிவுமான இந்த இருவரிகள்.....

நல்ல அறிமுகம் கொடுத்ததற்கு நேசமித்திரன் அவர்களுக்கு நன்றிகள் பல :)

Prabu M சொன்னது…

//புணர்ச்சியைவிட சுவாரஸ்யமானவை
அது பற்றிய கற்பனைகள்//

சிந்தையின் அத்தனை சேனல்களும் ஒருங்கே வந்து நின்றுவிட்டது, உங்கள் கவிதையை வாசித்துமுடிக்க, இந்த இருவரிகளைப் பார்த்த மாத்திரத்தில்.... :)

அடுத்தடுத்த வரிகளில் அழகாக ஒரு க்விக் ரவுண்ட் அப் கவிதை வடிவில்...

ஸ்கூல்களின் ஆங்கிலப் பரிட்சையில் வருமே காம்ப்ளக்ஸ் சென்டன்ஸை சிம்பிள் சென்டன்ஸாக மாற்றி எழுதச்சொல்லி....... அதுபோல பல்லாயிரம் "காம்ப்ளக்ஸ்" வரிகளை ரொம்ப சிம்பிளாக சொல்லிவிட்டன துவக்கமும் முடிவுமான இந்த இருவரிகள்.....

நல்ல அறிமுகம் கொடுத்ததற்கு நேசமித்திரன் அவர்களுக்கு நன்றிகள் பல :)

vinthaimanithan சொன்னது…

நன்றி ராகவன் சார்....
நீங்கள் சொல்வது சத்தியமான வார்த்தை

@ வேங்கை

உணர்வுகள்
எதார்த்தம் நண்பரே !!!

இதைத்தாங்க எதிர்பார்த்தேன்

@ நேசமித்ரன்

//அருமை .குறையற்ற கவிதை //

அய்யோடா.. ஜி நீங்களா??!!

நான் தன்யனானேன்

//நண்பர்களிடம் சொல்றேன் புது வரவுகளை எதிர் பாருங்க //

நன்றியில் நனையுமென்னெஞ்சம்...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

உங்க கமெண்ட்கூட நச் தலைவா

@ ராகவ் //ஆண் மையப்பார்வையில் எழுதப்பட்டிருப்பது சிறப்பு.
எவ்வளவு காலம் தான் லீனாவைப் படித்துக்கொண்டிருப்பது

பின்னே??!! நம்ம சார்பாவும் யாராவது எழுதவேண்டாமா?//

நன்றி ராகவ்

@ குகன்
//அது எல்லாம் ஒரு காலம் :)//

பசுமை நிறைந்த நினைவுகளே...

@கே.ஆர்.பி.செந்தில்

//இந்த கவிதையை விகடனுக்கு அல்லது தீராநதிக்கு அனுப்பிவையுங்க,//

இரும்பு அடிக்குற இடத்தில 'ஈ'க்கு என்ன வேலைன்னு பொடனில அடிச்சி விரட்டிடுவாங்களோன்னு
பயமா இருக்குண்ணே

@ பிரபு . எம்

//சிந்தையின் அத்தனை சேனல்களும் ஒருங்கே வந்து நின்றுவிட்டது, உங்கள் கவிதையை வாசித்துமுடிக்க, இந்த இருவரிகளைப் பார்த்த மாத்திரத்தில்.... :)

அடுத்தடுத்த வரிகளில் அழகாக ஒரு க்விக் ரவுண்ட் அப் கவிதை வடிவில்...

ஸ்கூல்களின் ஆங்கிலப் பரிட்சையில் வருமே காம்ப்ளக்ஸ் சென்டன்ஸை சிம்பிள் சென்டன்ஸாக மாற்றி எழுதச்சொல்லி....... அதுபோல பல்லாயிரம் "காம்ப்ளக்ஸ்" வரிகளை ரொம்ப சிம்பிளாக சொல்லிவிட்டன துவக்கமும் முடிவுமான இந்த இருவரிகள்.....//

என்ன சொல்றதுன்னே தெரியலீங்க....
நிஜமாவே உங்க பாராட்டு பார்த்தவுடனே அப்டியே எம்பி குதிச்சிட்டேன்

//நல்ல அறிமுகம் கொடுத்ததற்கு நேசமித்திரன் அவர்களுக்கு நன்றிகள் பல //
மீண்டும் மீண்டும் நேசனுக்கு கண்ணீர் கலந்த நன்றிகள்

Unknown சொன்னது…

நல்லா எழுதி இருக்கிங்க நண்பா. செந்தில் சொன்ன மாதிரி செய்யலாம், ஆனால் வேறு ஒரு கவிதையை எழுதி இங்கே வெளியிடாமல் அனுப்பி வையுங்க.

மணிஜி சொன்னது…

விந்(து)தை மனிதன்!!!!!!!!!!!!!!111

சிவாஜி சங்கர் சொன்னது…

:)

//காம்புகள் மட்டும் மூடப்பட்ட
"கவர்ச்சி தப்பில்லை" பேட்டிகளும்//

மெல்லிய சுவாலை..

பெயரில்லா சொன்னது…

ennum karpanyil than irukiren

Related Posts with Thumbnails