திங்கள், 17 மே, 2010

முள்ளிவாய்க்காலுக்காக துளி கண்ணீர்

இருண்மையில் கரைந்து கொண்டிருக்கிறது காலம். இன்னும் அழுகிக் கொண்டிருக்கும் உடலங்களின் மேல் அலகுகளைக் கூர்தீட்டிக் கொண்டிருக்கின்றன மானுட தர்மங்களும் மனச்சாட்சிகளும். செய்வதற்கு ஏதுமின்றி தவித்துப் புலம்பிக்கொண்டிருக்கும் ஜீவன்களும் தத்தமது வாழ்க்கைப் போராட்டத்தில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஓராண்டாயிற்று... முழுப் பூவுலகும் வேடிக்கை பார்க்க ஓர் இனத்தையே கதறக் கதறக் காவு கொடுத்து... செய்து முடித்தோர் செத்து மடிந்தோரை வரலாற்றின் பக்கங்களிலிருந்து நீக்கிவிட்ட பெருமிதத்திலும், துணைபுரிந்தோர் தண்டகாரண்யக்காடுகளில் அடுத்த வேட்டையிலும், தடுக்கும் வல்லமை கொண்டிருந்தோர் அரியணைக் கனவுகளிலும், அவர் துரோகி, இவர் துரோகி என்று மேடைகளில் ஒப்பாரிக் கச்சேரி வைத்தோர் தத்தமது துரோகங்களை ஒளித்து வைப்பதிலும் மூழ்கிவிட்டனர்.

ஆயிரமாயிரம் வகைகளில் எழுதிக் குவித்தாயிற்று... கவிதைகள், ஆய்வுக்கட்டுரைகள், வாதப் பிரதிவாதங்கள், அஞ்சலிக்கட்டுரைகள் என...அவரவர் வாழ்க்கை வழமைக்குத் திரும்பியாயிற்று.

மேலும் சொல்லவும், செய்யவும் என்ன இருக்கிறது? துளி கண்ணீரை விட ?

”விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை”

8 பேரு கிடா வெட்டுறாங்க:

நேசமித்ரன் சொன்னது…

நல்ல இடுகை

vinthaimanithan சொன்னது…

நன்றி நேசன்... மனம் முழுதும் குற்ற உணர்விலும் வெட்கத்திலும் குறுகிப் போயிருக்கின்றது... எனவேதான் வேறேதும் எழுதத் தோன்றவில்லை

Unknown சொன்னது…

//மேலும் சொல்லவும், செய்யவும் என்ன இருக்கிறது? துளி கண்ணீரை விட ?//
இதுதான் என் நிலையும்...

செ.சரவணக்குமார் சொன்னது…

//மேலும் சொல்லவும், செய்யவும் என்ன இருக்கிறது? துளி கண்ணீரை விட ?//

உண்மை நண்பரே..

மிக நல்ல பகிர்வு.

ஹேமா சொன்னது…

ஒரு துளி கண்ணீரில்... ! ?

Unknown சொன்னது…

வேடிக்கை பார்ப்பதுவும்
வேதனைப்படுவடுவும் தவிர
வேறென்ன முடிகிறது நம்மால்?

இடி முழக்கம் சொன்னது…

என்கண்ணீரும்.....................
ஈழத்தின் கண்ணீர் கொழும்பு வீதிகளில்..
http://idimulhakkam.blogspot.com/2010/05/blog-post_9062.html

vinthaimanithan சொன்னது…

நன்றி செந்திலண்ணா..

நன்றிகள் பலப்பல சரவணகுமார், ஹேமா, கலாரசிகன், இடிமுழக்கம்

Related Posts with Thumbnails