வியாழன், 6 மே, 2010

இன்னும் எழுதப்படாத கவிதை

ஏதோ ஓர் ஏக்கம்...

கேவிக்கொண்டே இருக்கிறது
மனத்திலோர் மூலை

விசுவரூபமெடுக்கும் அது
அந்திநிழலாய்...
காதுக்குள் கிசுகிசுக்கும்
மென்னிரவின் தனிமைகளில்

உதிர்ந்துவிட்ட ரோமங்களாய்
கழிந்துபோன காலங்களா...

உலர்ந்துபோன கனவுகளோடு
உதறிவிட்ட சிறகுகளா...

பால்யங்களில் தொலைந்துபோன
தேவதைக்கதைகள்
எப்போதும்
மானுடத்தேடலில்...

காவியங்களின் பாடுபொருளாய்
தத்துவங்களின் பேசுபொருளாய்

தனிமைகளில்
புலம்பிக் கொண்டிருக்கிறது
மனம்

இன்னும் எழுதப்படாத
கவிதையின் வரிகளை
இசைத்தபடி

8 பேரு கிடா வெட்டுறாங்க:

இராகவன் நைஜிரியா சொன்னது…

// தனிமைகளில்
புலம்பிக் கொண்டிருக்கிறது
மனம் //

மனம் - வேறு என்ன செய்யமுடியும். புலம்பலே வாழ்க்கையாகி போயிடுச்சு.

இராகவன் நைஜிரியா சொன்னது…

// இன்னும் எழுதப்படாத
கவிதையின் வரிகளை
இசைத்தபடி //

முதல்ல ட்யூன்... அப்புறம் பாட்டு... வெரி நைஸ்

நேசமித்ரன் சொன்னது…

சொதப்பல் :(

போனகவிதை நல்லா இருந்துச்சு

vinthaimanithan சொன்னது…

//மனம் - வேறு என்ன செய்யமுடியும். புலம்பலே வாழ்க்கையாகி போயிடுச்சு//

ஸேம் ப்ளட்!!!

நன்றி ராகவன் சார்

@நேசமித்ரன்

உங்ககிட்ட வாங்கி கட்டிக்கப் போறேன்னு நினைச்சிட்டே இருந்தேன்.
கரெக்டா போயிடிச்சு.
பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஜி.

பழைய பெருங்காய வாசனைலதான் ஏதோ கிறுக்கிட்டு இருக்கேன்...
புதுசா வாசிக்கிறது ரொம்ப ரொம்ப கம்மி.
"வெள்ளத்தனையது மலர்நீட்டம்" இல்லீங்களா...
அதான் நிறைய சொத்தை...
பிக்கப் ஆயிருவோம்ல....

Unknown சொன்னது…

சொல்லபடாத எல்லாவற்றிற்கும் வலி அதிகம்

movithan சொன்னது…

தனிமைகளில்
புலம்பிக் கொண்டிருக்கிறது
மனம்
இன்னும் எழுதப்படாத
கவிதையின் வரிகளை
இசைத்தபடி

ரசித்தேன்

சிவாஜி சங்கர் சொன்னது…

இன்னும் அழகா சொல்லி இருக்கலாமே..

அழுக்கேறிய வுடலோடு
சுண்ணம் பூசிய சுவரெங்கும்
கன்னமழுத்தி அழுகிறேன்....
கண்ணீர் வரைந்த கோடுகளில்
அன்........


இப்படித்தான்…
முழுக்கவிதையும்
வாசிக்க நேர்ந்தால்,
என் துயர் தாங்க மாட்டாயென
பாதியிலேயே கைவிடப்படுகின்றன…
என் பல கவிதைகள்! :)

வால்பையன் சொன்னது…

கிளிஷேக்கள் முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது! எதுவும் எழுத எழுத தானே வரும், வாழ்த்துக்கள்!

Related Posts with Thumbnails