சனி, 1 மே, 2010

யாஹூ மெஸஞ்சரும் சில தேவதைகளும்....

தணலாய் எரிக்கிறது
காதல்
தாவணியால்
விசிறிவிட்டுப் போ



2002 ஜூன்.

ஒரு சூட்கேஸ், ரெண்டு செட் ஷூ, கையில ஒரு பயோடேட்டாவோட தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் வந்து இறங்குன ஆனந்துவுக்கு அப்போ தெரியாதுங்க... அவந்தான் இந்த கதையோட ஹீரோனு.

எப்டி இந்த கதைக்கு ஹீரோவானான், யாரு ஹீரோயினு, வில்லன் மத்த வெங்காயம்லாம் அப்றமா வெச்சுக்கலாம்... மொதல்ல ஆனந்து சாப்டர்

பன்னெண்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்ச ஸ்கூல்ல பொண்ணுங்ககூட ஒரு வார்த்த பேசினாலே அடுத்தநாள் ”டேஷுக்கும் டேஷுக்கும் லவ்வுடோய்”னு பரபரப்பு பத்திக்கிற ஊருல மொதொமொதோல்ல எஞ்சினியரிங்க எட்டி பார்த்தவன்.

காலேஜ்ல அட்மிஷன் கிடைச்சவுடனே யாருக்கு சந்தோஷமோ இல்ல சோகமோ தெரியாது... ஆனா பட்டில சும்மா கிண்ணுனு திரிஞ்சிட்டுருந்த ரெண்டு கிடாய்க்கு சோகம்... மழைக்கு கூரைகூட
இல்லாம ஏங்கிட்டு இருந்த கலித்தய்னாருக்கு (அதாங்க கலிதீர்த்த அய்யனார்) ஜாலியோ ஜிம்கானா...

அப்பிடி இப்பிடினு ஊருல இருந்த வட்டிக்காரங்ககிட்டல்லாம் பணம்பொரட்டி காலேஜுக்குள்ள நொழஞ்ச ஆனந்துவுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி!

இருக்காதா பின்னே!

எல்லா பொம்பளை புள்ளங்களும் பசங்களுக்கு சரிக்கு சரியா நின்னு பேசிட்டு இருந்தா....?!

நம்மாளுக்கும் என்னிக்காவது ஒருநாள் ஏதாவது ஒரு புள்ளகிட்டயாவது பேசி ஃப்ரண்டாயிடணும்னு ஆசதான்...

என்னத்த பண்றது? பட்டனத்துப் புள்ளைங்க தஸ்ஸு..புஸ்ஸுனு இங்கிலீஷ் பேசுறத பாத்தாலே ஏதோ பாம்பு புஸ்ஸு புஸ்ஸுனு மூச்சுவிடற மாதிரி ஃபீலிங்கு... ராத்திரி பூரா கெட்ட கெட்ட கனா..

ம்ஹும்.. நாலு வருசமும் பொட்டப்புள்ளங்கள பார்த்து ஜொள்ளு விட்ருக்கானே ஒழிய ஒரு சொல்லு விட்டதில்ல

ஒருவழியா 10 அரியரோடயும், கேர்ள்ஃப்ரண்ட் ஆசை நிறைவேறாத ஏக்கத்தோடயும் சென்னையில கால்வெச்ச ஆனந்துவுக்கு திடீர்னு டார்ச் லைட் (சிகரெட் லைட்டர்னும் வெச்சிக்கலாம்)
வெளிச்சத்த பாய்ச்சினான் முகிலன்.. அவன் காலேஜ் சீனியர்... இப்போதைக்கு ஐடியாமணி (பின்ன... சிகரெட்டு, தண்ணி, அக்கா கடை பரோட்டா, ஆஃப் பாயிலுக்கு இந்த மாச உபயதாரர் ஆச்சே!)

ஓவர் டு முகிலன் - ஆனந்து

”பொண்ணுங்கள ஃப்ரண்ட் புடிக்கறதெல்லாம் ஒரு மேட்டரே இல்லடா... யாஹூ மெஸஞ்சர் போ! அங்க இருக்கும் ஆயிரம் ஃபிகரு.. ஈசியா புடுச்சிக்கலாம்”

”அது எப்டிண்ணே! நம்மள எப்டி நம்புவாங்க? அப்டீல்லாம் பேசுவாங்களா?”

“ட்ரை பண்ணி பாருடா! நானே நாலு ஃபிகர்கூட இப்போ பேசிட்டு இருக்கேன்”

ஆனந்து கண்ணுக்கு முன்னாடி இப்போ ஆல்பர்ட்டு ஐன்ஸ்டைன், ஐசக் நியூட்டன் எல்லாரும் தெரிய ஆரம்பிச்சாங்க... முகிலன் ரூபத்துல..

கைல இருந்த அம்பது ரூபாவோட ப்ரௌசிங் செண்டர்குள்ள நுழைஞ்சு ஆனந்து க்ரியேட் பண்ண ஐ.டி anand_chem.engg@yahoo.com.( அய்யா எஞ்சினியர்னு சொன்னாக்கத்தான் ஃபிகர் மடியுமாம்...
உபயம் முகிலன்)

இனி ஆனந்துவும் யாஹூ மெஸஞ்சரும் சில தேவதைகளும்....

“ஹாய்..”.

”ஹாய்...”

“ஹௌ ஆர் யூ?”

“ஃபைன். யூ?)

“யா.ஃபைன்”

"asl pls?"

"m,21,ch, engg... யூ?"

”மீ டூ.. பை”

என்னடாது எழவாப் போச்சு! எங்க பார்த்தாலும் சுத்தி சுத்தி பசங்களாவே வர்றானுங்களேனு யோசிக்க ஆரம்பிச்ச ஆனந்து ஆறு மாசத்துல மெஸஞ்சர்ல ஒரு நூற்றாண்டுப்போரையே நடத்தி கடேசியா
புடிச்சான்யா ஒரு ஃபிகர....

“ஹாய்”

“ஹாய்”

”asl pls?" (இப்போல்லாம் ஆனந்து டைம் வேஸ்ட் பண்றதே இல்ல... ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வந்துடறது.. ”நீ ஆணா பொண்ணா?")

“f,20,கோயமுத்தூர்”

ஆனந்துவுக்கு மண்டைக்குள்ள மணியடிக்க ஆரம்பிச்சது... கண்ணுக்கு முன்னாடி பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சது.... டெம்போரல் லூப்புக்குள்ள கஜோல் ரேஞ்சுக்கு ஒரு பொண்ணு வந்து “ ஊ... லலல்லா” பாட ஆரம்பிச்சா

“யுர் நேம்?”

“நிரஞ்சனா”

( சாட்டிங் ஹிஸ்டரி தொடரும்)

13 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

//தணலாய் எரிக்கிறது
காதல்
தாவணியால்
விசிறிவிட்டுப் போ//

அது இல்லாம பாக்குறதுக்கு எனக்கு இருக்குங்கோ..
அப்புறம் நிரஞ்சனா இப்ப தொடர்புள்ள இருக்காங்களா?

Unknown சொன்னது…

"கூச்சமா" விட்டுபோச்சு

vinthaimanithan சொன்னது…

கூச்சம் விட்டுப் போகாம இருந்தா சரிதாங்கண்ணே!

Unknown சொன்னது…

//கூச்சம் விட்டுப் போகாம இருந்தா சரிதாங்கண்ணே//

ஹி .. ஹி ..

நேசமித்ரன் சொன்னது…

தணலாய் எரிக்கிறது
காதல்
தாவணியால்
விசிறிவிட்டுப் போ//

அப்புறம் அனலா இல்ல ஆகும்

“கொஞ்சம் பொறு கொஞ்சம் இரு தாவணி
விசிறிகள் வீசுகிறேன் மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனை பூசுகிறேன்....

அந்தி மழை பொழிகிறது “

தண்ணீரில் நிற்கும் போதே வேர்கின்றது”


சரி சரி திருத்துறைப் பூண்டி வெந்நீரூற்றில் குளிச்சவங்ளுக்கு அப்பிடித்தேன் இருக்கும்

ம்ம் இப்பதான் ப்ளாக்கர் ஃபார்ம்ல வந்திருக்கீங்க
பொழைச்சுக்குவீங்க

:)

settaikkaran சொன்னது…

கதை நல்லா கீது! கவுஜயும் சூப்பர்!

செந்தில்குமார் சொன்னது…

தணலாய் எரிக்கிறது
காதல்
தாவணியால்
விசிறிவிட்டுப் போ//


பாராட்டுகள்.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சொன்னது…

//பன்னெண்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்ச ஸ்கூல்ல பொண்ணுங்ககூட ஒரு வார்த்த பேசினாலே அடுத்தநாள் ”டேஷுக்கும் டேஷுக்கும் லவ்வுடோய்”னு பரபரப்பு பத்திக்கிற ஊருல//

எங்க ஊருல இப்படித்தான் நிறைய பேர் சுத்திகிட்டு
இருக்காங்க...
நல்லாதான் எழுதிறீங்க..தொடருங்க

ராம்ஜி_யாஹூ சொன்னது…

u should ask for voice chat and webcsm chat then it is easy to find out whther the oppiste side chatter is male or fem,

AkashSankar சொன்னது…

அனுபவந்தான்... கொஞ்சம் சூர்யா(குசி) கதை சொல்ற மாதிரி இருக்கு...

பெயரில்லா சொன்னது…

17 votes in tamilish ? nice story then

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

நல்லாதான் எழுதிறீங்க
நிரஞ்சனா இப்ப தொடர்புள்ள இருக்காங்களா?

vinthaimanithan சொன்னது…

//அது இல்லாம பாக்குறதுக்கு எனக்கு கூச்சமா இருக்குங்கோ..//

ரொம்ப கூச்சப்படாதீங்கண்ணே... எல்லாரும் பச்சப்புள்ளனு தப்பா நினைச்சிக்கப் போறாங்க

//கதை நல்லா கீது!// சேட்டை... அடிக்கடி இப்படி ஹார்லிக்ஸ் கொடுத்துட்டே இருங்க

நன்றி செந்தில்குமார்

நேசமித்திரன் ஜி சத்தியமா இது நான் எழுதினதில்ல ஆனந்து பயபுள்ள எழுதுனது மெஸஞ்சர் சாட்ல.. ஹி ஹி

//எங்க ஊருல இப்படித்தான் நிறைய பேர் சுத்திகிட்டு
இருக்காங்க...
நல்லாதான் எழுதிறீங்க..தொடருங்க//

எல்லாம் மலரும் நினைவுகள்தான்.. நன்றி வெங்கட்

//u should ask for voice chat and webcsm chat then it is easy to find out whther the oppiste side chatter is male or fem,//
நம்ம ஆனந்து பய கேக்காமலா இருப்பான்?! வேதனைய கிளப்பாதீங்க ராம்ஜி ஜி

@ராசராசசோழன்

ஹி ஹி போங்க ஜி... இதெல்லாம் பப்ளிக்ல சொல்லிகிட்டு... எனக்க வெக்க வெக்கமா வருது

@Anonymous

ஓட்டு போட்ட மக்களுக்கு கோடி புண்ணியம்

@மணி (ஆயிரத்தில் ஒருவன்)

எப்படி கரெக்டா பாயிண்ட கேட்ச் பண்ணுறீங்க?

Related Posts with Thumbnails