வியாழன், 25 நவம்பர், 2010

வார்த்தை என்னைக் கைவிடும்போது மௌனம் பேசுகிறேன்...



உலர்ந்துபோன என் உதடுகளில்
ஒட்டவைத்துப் போகிறாய்
ஒரு புன்னகையை

நீண்டதூரப் பயணங்களின்
ஜன்னலோரங்களில்
எழுதிக் கொண்டே
இருக்கிறேன்
உனக்கான என் கவிதையை

தூக்கம் கலைந்த அதிகாலைகளில்
மீண்டும் தொடர்கின்றன
முத்தம் பற்றிய கனாக்கள்

இமைகளைப் பறித்துக்கொண்ட
மொட்டைமாடி இரவுகள்
எத்தனை யுகங்களாய் 
நீள்கின்றன?

கவிதைக்குச் சொற்களைத்
தேடிக்கொண்டிருந்தபோது
மெல்லக் கடந்து
செல்கிறது
உன் காதல்.


13 பேரு கிடா வெட்டுறாங்க:

Unknown சொன்னது…

அஹா .. பின்றீங்க... ஆன இதற்கும் முன் எழுதுன பின் நவீனத்துவ பதிவுக்கு இது ஆயிரம் மடங்கு மேல் ...

Prabu M சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
dheva சொன்னது…

வலியான காதல் உணர்வு தம்பி....!!!!

கொஞ்சம் உன்னோட ஆழமான டச் மிஸ்ஸிங் பா!!!!!!!

பிச்சைக்காரன் சொன்னது…

தேவையற்ற அலங்காரங்கள் இல்லாமல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருக்கும் ஸ்டைல் அருமை

Bibiliobibuli சொன்னது…

வார்த்தைகள் அடிக்கடி உங்களை கைவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

Simply, pull yourself together.

Prabu M சொன்னது…

ஒவ்வொரு பத்தியும் தென்றலாய் மணந்திருக்கிறது...

காத‌லை மனதுக்குள் தேடிக்கொண்டிருக்கும்போது
மெல்லக் கடந்து செல்லும் உங்கள் கவிதை ;-)

இடையே கொஞ்சம் கேப் விட்டுட்டேன்.... நிறைய எழுதிட்டீங்க :)
படிச்சுட்டு பின்னூட்டம் போடுறேன் நண்பா :)

காமராஜ் சொன்னது…

//தூக்கம் கலைந்த அதிகாலைகளில்
மீண்டும் தொடர்கின்றன
முத்தம் பற்றிய கனாக்கள்

இமைகளைப் பறித்துக்கொண்ட
மொட்டைமாடி இரவுகள்
எத்தனை யுகங்களாய்
நீள்கின்றன?//

மொட்டை மாடி,பம்புசெட் மாடி,கண்மாய்க்கரை மர நிழல்,ஊரோரத்து பாலச்சுவர் ...இப்படி இன்னும் நீளும் பட்டியல்.

பெயரில்லா சொன்னது…

மிகக் கச்சிதமா உணர்வுகள் வெளிப்பாடு..
நல்லா இருக்கு பாஸ்!

எஸ்.கே சொன்னது…

அழகான உணர்வுமிக்க கவிதை!

ஜெயந்தி சொன்னது…

காதல் கவிதைன்னாலே எல்லாருக்கு ஒரு உற்சாகம் வந்துருதுப்பா. முடிவு வலியைத் தருகிறது.

Unknown சொன்னது…

//நீண்டதூரப் பயணங்களின்
ஜன்னலோரங்களில்
எழுதிக் கொண்டே
இருக்கிறேன்
உனக்கான என் கவிதையை//
எழுதிக் கொண்டே என்பதற்கு பதில் வேறு வார்த்தை இருந்தால் இன்னும் ஜொலிக்குமே...

Unknown சொன்னது…

//உனக்கான என் கவிதையை//
nice.

ராஜ நடராஜன் சொன்னது…

இன்னும் எத்தனை கவிஞர்கள் பதிவுலகில் ஒளிந்து கொண்டிருக்கிறார்களோ!

Related Posts with Thumbnails