Street demonstration, Petrograd, 18 June 1917. The banner in the foreground reads "Down With The 10 Capitalist Ministers/ All Power To The Soviets Of Workers', Soldiers', And Peasants' Deputies/ And To The Socialist Ministers/ [We Demand That Nicholas II Be Transfered To The Peter-Paul Fortress."
ரொம்ப நாளாச்சுங்க காத்தாட மனசுவிட்டு அரட்டை அடிச்சி! மனுஷனோட வாழ்க்கையில அன்னாடம் சாப்பாட்டுக்கும், பொழப்புக்கும் நாய் படாதபாடு பட்டுட்டு இருக்குறப்போ அரட்டைதான் விஷயமா என்ன? சரி நாம விஷயத்துக்கு வருவோம்.
1) ஒருவழியா ராசாவோட கிரீடத்தை எறக்கியாச்சு. காங்கிரஸு கவருமெண்டு இனிமே "எங்கமேல எந்த தப்புமில்ல"னு புனிதப்பசுவா வேசம்போட ஆரம்பிச்சிடும். சிவபெருமான் தலைக்குள்ளாற கங்கைய அடக்கி வெச்சிருக்குறமாரி மண்ணுமோகனும் ஸ்பெக்ட்ரம் ஊழல்ல இன்னும் எத்தினி கறுப்பாடுங்க இருக்குங்குற டீடெயில எல்லாம் தன்னோட தலைப்பாக்குள்ள மூடிவெச்சிட்டு அமைதியா புன்னகைப்பாரு. நாமளும் ரொம்ம்ம்...ப டீசண்டான பெரதமருன்னு சொல்லிக்கிடலாம்.
ராசாவும் கனிமொழியும் பவர்புரோக்கருங்ககிட்ட பேசுன டேப்பெல்லாம் வெளியவருது. பதவியப் பத்தி புரோக்கருங்ககிட்டதாம் பேசணும்னா அப்ப மண்ணுமோகனும், மைனா அம்மாவும் சும்மாவா? இல்ல ஆட்டத்துல அவங்களுக்கும் பங்குண்டா? ஞாயமான கேள்விதானே? இந்த லட்சணத்துல காங்கிரஸுகார பெருமக்கள்ளாம் திமுகவால கவருமெண்டுக்கு கெட்டபேருன்னு சலம்பிகிட்டு திரியிறாங்க. ஹ்ம்ம்ம்... "ஈயத்தப் பாத்து இளிச்சிதாம் பித்தாள!"
2) பவருபுரோக்கருங்ககூட கனிமொழியும் ராசாவும் பேரம்பேசுன தேதிய பாத்தீங்களா? 21,மே,2009 ல ஆரம்பிச்சி கிட்டத்தட்ட ஒருவாரம். ரொம்ப சீரியஸா, அழுவாச்சியா எனக்கு அந்த முட்டாயிதான் வேணும்னு சின்னப்புள்ளத்தனமா பேச்சுவார்த்தை நடந்திருக்கு. அடப்பாவியளா! எங்க சொந்தபந்தம் ஒண்ணரை லட்சம் பேரு செத்துப்போயி அவங்க ஒடம்புல சூடு அடங்குறதுக்குள்ள இப்படி நெஞ்ச அறுத்துப்போட்டுட்டு யாவாரம் பேசி இருக்கீங்களே! நீங்கள்ளாம் நெசமாவே மனுசப்பொறப்புதானா? இதுல என்ன மசுத்துக்கு ஒங்களுக்கெல்லாம் தமிழு, மசுரு, மட்டன்னு வெளிவேசம்? பக்கத்து ஊட்டுல எழவு விழுந்தாலும் பாயாசத்துக்கு சண்டை போடுற நீங்கள்ளாம் தலைவருங்க... த்தூ! பேச்சு மட்டும் பெர்ர்ருசா இனத்தைக் காக்க வந்த தேவதூதன் மாதிரி! "ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம்; உத்துப்பாத்தா உள்ள ஈறும் பேனுமாம்!"
3) நண்பரு ஒருத்தருகூட ரெண்டுநாளு முன்னாடி பேசிட்டு இருந்தப்போ ஒரு சுவாரசியமான தகவல சொன்னாரு. அவரோட நெலத்துல கொஞ்சூண்டு பகுதியில தமிழ்நாட்டோட பாரம்பரிய நெல்லுவகைய சாகுபடி பண்ணிட்டு இருக்காரு. காட்டுயாணம் னு பேராம். உரம், பூச்சிமருந்து எதுவும் வேண்டாமாம். ஆறுமாசமாவும் அறுவடைக்கி. சக்கரை வியாதிக்கு கண்கண்ட மருந்தாம் அந்த நெல்லுச்சோறு.
கொஞ்சம் யோசிங்க! சக்கரை வியாதிக்காரங்க அரிசிச்சோறு சாப்புடக்கூடாதுன்னு சொல்றாங்க. கோதுமைதான் சாப்புடணுங்கிறாங்க. அப்டின்னா காலங்காலமா அரிசி சாப்பிட்ட நம்ம தாத்தன் பாட்டன்லாம்??? உணவே மருந்து, மருந்தே உணவுன்னு வாழ்ந்த ஒரு பண்பாடும் செத்துப்போச்சு, உணர்வுகளும் மரத்துப்போச்சு!
I think that one possible definition of our modern culture is that it is one in which nine-tenths of our intellectuals can't read any poetry ~Randall Jarrell
4) தொல்பழங்கலாச்சாரத்துக்கு, நாகரீகத்துக்குச் சொந்தமான எல்லா எனத்துலயும் நடுகல் வழிபாடு இருக்குங்க. சமூகத்துக்காவயும், நாட்டுக்காவயும் சண்டை போட்டு செத்துப்போனவங்க நெனவா கல்லுநட்டு கும்புட ஆரம்பிப்பாங்க! காலப்போக்குல இந்தமாரி வீரதீரமா சண்டைபோட்டு செத்துப்போனவங்க அந்தந்த இனக்குழுவுக்கு குலசாமியா ஆயிடுவாங்க. நம்மூரு மதுரவீரன், காத்தவராயன், ஒண்டிவீரன், தூண்டிகாரன் இந்தமாரி சாமியெல்லாம் ஒருகாலத்துல தேசம்காக்க சண்டைபோட்டு செத்துப்போனவங்கதான். ஒரு மனுசன் தனக்காக இல்லாம தன்னோட சமூகத்துக்காவ உசுரத் தியாகம் பண்றப்போ அவன் கடவுள்ங்கிற நிலைய அடஞ்சிடுறான்.
கிட்டத்தட்ட அஞ்சாயிரம் வருசத்துக்குமேல தொன்மையான தமிழ் இனத்துக்காவ சண்டைபோட்டு மண்ணோடயும், நம்ம மனசோடயும் கலந்துபோன நம்ம கொலசாமிகளைக் கொண்டாடுற 'மாவீரர் வாரம்'ங்க இது. அவங்களோட மூச்சு கலந்துறக்குற காத்தை சுவாசிச்சி, உணர்வு கலந்துருக்குற நெலத்துல வாழ்ந்துட்டு இருக்குற தமிழனா பொறந்த எல்லாரும் இந்த வாரத்துல அவங்க கனவுகளைக் கொஞ்சமாச்சும் அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போறதைப் பத்தி தீவிரமா யோசிக்கணும்.
If you have much, give of your wealth; if you have little, give of your heart.- Arabian Proverb
5) நவம்பர்னா எனக்கு மாவீரர் வாரம் மட்டுமில்லீங்க; அக்டோபர் புரட்சின்னு சொல்லப்படுற ரஷ்யப்புரட்சியும் ஞாவகத்துக்கு வரும். தத்துவங்களும் அறிவியலும் சும்மா வியாக்கியானம் மட்டும் பேசிட்டு இருந்தப்போ மக்களுக்கான தத்துவமா இயங்கியல் பொருள்முதல்வாதத்தை முன்வெச்சி இதுதான் உழைக்கும் மக்களோட தத்துவம்னு மார்க்ஸ் சொல்லிட்டு போனத நெசமாக்கி கண்ணுக்குத் தெரியுற பூலோக சொர்க்கமா கம்யூனிச சமுதாயத்தை லெனின் தலைமையில ரஷ்யமக்கள் உருவாக்கிட்டுப் போன மாசம்ங்க இது! மதங்களும் கடவுள்களும் மனுசங்களுக்கு கொடுத்துருந்த போதைய தெளியவெச்ச கம்யூனிசப்புரட்சியை நாம இந்த மாசத்துல நினைவுபடுத்திக்கலாம் இல்லையா?
வயலாரோட ஒரு கவிதை எனக்கு நினைவு வருது.
"மனிதன் மதங்களைப் படைத்தான்
மனிதனும் மதமும் கடவுளைப் படைத்தனர்
மனிதனும் மதமும் கடவுளும் சேர்ந்து
மண்ணைப் பங்கிட்டுக் கொண்டார்கள்."
6) வழக்கம்போல கடைசியா எனக்குப் பிடிச்ச கவிதை ஒண்ணு. ஜீவா ரஷ்யாவைப் பத்தி எழுதினது:
ஊனில்லை உடையில்லை ஓய்வில்லை வீடில்லை
உற்ற நற்கல்வியில்லை
உரிமையும் கடமையும் ஒத்ததாயில்லை
எனும் ஒப்பாரி அங்கில்லை!
வீணில்லை வேலையற் றோரில்லை தனியுடமை
வெம்பூத ஆட்சியில்லை
வீழ்வில்லை ரஷ்யாவில் மேலில்லை கீழில்லை
வெற்றி எல்லோர்க்கும் எல்லை!
12 பேரு கிடா வெட்டுறாங்க:
மா வீரர்கள் வாரத்தில் மா ‘சோரர்’களின் முகமூடி கிழிந்தது யதேச்சையா? அமானுஷ்யமா? கூசாமல் தமிழருக்கு தங்களைவிட்டால் யாருமில்லை எனச் சொல்லுவார்கள். :(. கச்சேரி களை.
இதில் விமர்சிக்க எதுவுமில்லை. படித்து உள்வாங்கிக் கொள்ள உதவியது.
வந்தேன். படித்தேன்.
ஜோதிஜி சொல்வது போல் ஏனோ எதுவுமே விமர்சிக்கத்தோன்றவில்லை.
//ஊனில்லை உடையில்லை ஓய்வில்லை வீடில்லை
உற்ற நற்கல்வியில்லை
உரிமையும் கடமையும் ஒத்ததாயில்லை
எனும் ஒப்பாரி அங்கில்லை!
வீணில்லை வேலையற் றோரில்லை தனியுடமை
வெம்பூத ஆட்சியில்லை
வீழ்வில்லை ரஷ்யாவில் மேலில்லை கீழில்லை
வெற்றி எல்லோர்க்கும் எல்லை//
thanks comrade.
அரிய கவிதை, அறியத்தந்த விந்தை வாழ்க.
லஞ்சலாவண்யங்கள் ஒழிஞ்சி நாடு நல்லாயிருக்கனும்னா கம்யூனிசம்தான் வழின்னு சொல்லியிருக்கீங்க. உண்மைதான்.
விமர்சிக்கத்தோன்றாமல் இருக்க காரணம் இங்கே சொல்லப்பட்டிருக்கும் விடயங்களின் கனமே, மாவீரர் வாரம்.
அடுத்து, மார்க்சிய தத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு லெனின் மற்றும் மாவோ வின் வழிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சோவியத் ஒன்றியம் ஏன் உடைந்தது? சீனாவில் Communism என்கிற Nut shell இற்குள் Capitalism அடைக்கப்பட்டிருக்கிறது. இந்த கேள்வியெல்லாம் ஏனோ மனதில் தோன்றாமல் இல்லை. வேலைத்தளத்தில் என் நண்பர் ஒருவர் சொன்னார் சீனாவில் Shangai, Being இங்கே மட்டும் தான் உலகமயமாக்கல். சீனாவின் மற்றப்பகுதிகளில் இன்னனும் communism வாழ்கிறது என்று. என் அறிவுக்கு அது எட்டவில்லை.
தமிழக ஆ.ராசா பற்றிய செய்திகள் விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு அதன் ஆழம் தெரியாது. ஆனால், இவர்களின் அரசியல் பற்றி படிக்கும் போது தெருவில் கண்ட நரகல் போல் விலகிப்போகத் தான் தோன்றுகிறது பல சமயங்களில். ஆனால், அதுவே அவர்களுக்கு வசதியாகவும் போகிறது.
முதல் இரண்டு மேட்டருக்கான பழமொழிகள் நச்..
என்னமோ போங்க இங்க இப்ப புதுசா ஓடுறது சொத்து பிரச்சினைதான்.. பத்த வச்சிட்டியே பரட்ட...
ஆத்தோட போற தண்ணிதானே அம்மா குடிச்சு ஐயா குடிச்சு மிச்ச மீதிய சந்ததிக்கு சேத்து வைப்பாங்க..
அப்புறம் இன்னிக்கு இந்து ராம் "ங்கோத்தா" பய ராஜபக்சே பேட்டியே போட்டிருக்கார். லூசுபசங்களா நாம இருக்கிறவரிக்கும் சிங்கள ...... தாங்கிகள் என்னவேனா எழுதுவாய்ங்க..
//மனிதனும் மதமும் கடவுளும் சேர்ந்து
மண்ணைப் பங்கிட்டுக் கொண்டார்கள்."//
ராசா விஷயத்தில் அலசல் அருமை..
நல்ல விரிவான அலசல்
காட்டுயாணம் னு பேராம். உரம், பூச்சிமருந்து எதுவும் வேண்டாமாம். ஆறுமாசமாவும் அறுவடைக்கி. சக்கரை வியாதிக்கு கண்கண்ட மருந்தாம் அந்த நெல்லுச்சோறு.
Brother, I am from agri family and I want to cultivate it, where can I get the seed? Please give me details @ chanishere03@yahoo.co.in
கருத்துரையிடுக