செவ்வாய், 17 நவம்பர், 2009

பொருத்தம்

தளிர்மேல் இருக்கும்
வண்ணத்துப்பூச்சியை
குதூகலிக்கத்
தெரியும் எனக்கு

நீயோ
கரன்ஸிக் காகிதங்களில்
வர்ணமிழந்து போகிறவன்

மிக மெல்லிய
கவிதை வரிகளிலும்
எனை மீட்டும்
ஸ்வரங்களிலும்
லயித்திருக்கும் போது
சலித்துக் கொள்கிறாய்
உன் பிரமோஷன்
பற்றி நான்
கேட்பதில்லையென

டிஸம்பர்ப் பூக்களில்
ஆகாய நீலத்தைத்
தேடிக்கொண்டிருக்கும்போது

நீ காம்பவுண்ட் சுவருக்கு
வெள்ளையடிப்பதில்...

எனது
‘ஜே.கே’விலும்
‘ஜெயகாந்தனி’லும்
ஆர்வமில்லை உனக்கு

உன் பொருளியல் கணக்குகள்
புரிவதில்லை
எனக்கு

ஆனாலும்
சுற்றம் பூரிக்கிறது
நமது
‘அழகிய ஜோடிப்பொருத்தம்’
பற்றி

தோல் நிறத்தினையும்
உடல் வடிவத்தையும்
வருடம் ஒருமுறை
‘வாந்தி’யெடுத்து வாங்கிய
‘டிகிரி’யையும் வைத்து...

8 பேரு கிடா வெட்டுறாங்க:

மணிஜி சொன்னது…

நன்றாக இருக்கிறது..நண்பரே... வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

கவிதை நன்று...
காதல் கவிதைகளை விடுத்து .. சமுதாய கவிதைகளை எழுதுங்கள்

ஜெனோவா சொன்னது…

மிகவும் நன்றாக இருக்கிறது நண்பரே ! தொடர்வோம் !
வாழ்த்துக்கள்

anujanya சொன்னது…

நேரடிக் கவிதை. நல்லா வந்திருக்கு. தொடர்ந்து எழுதுங்க ராஜாராமன்

அனுஜன்யா

பா.ராஜாராம் சொன்னது…

நல்லா இருக்கு நான்!

:-))

Unknown சொன்னது…

////எனது
‘ஜே.கே’விலும்
‘ஜெயகாந்தனி’லும்
ஆர்வமில்லை உனக்கு

உன் பொருளியல் கணக்குகள்
புரிவதில்லை
எனக்கு////

அருமை.....அருமை....

Unknown சொன்னது…

////தளிர்மேல் இருக்கும்
வண்ணத்துப்பூச்சியை
குதூகலிக்கத்
தெரியும் எனக்கு

நீயோ
கரன்ஸிக் காகிதங்களில்
வர்ணமிழந்து போகிறவன்////
அழகாகச் சொன்னீர்கள்....
முரண்பாடுகள் நிறைந்த உடன்பாடு தானோ வாழ்க்கை..... .
விஜயலட்சுமி

Unknown சொன்னது…

விஜயலட்சுமி

Related Posts with Thumbnails