வெள்ளி, 13 நவம்பர், 2009

நான் ஒரு முட்டாளுங்க...

எவ்ளோதான் எடுத்துச் சொன்னாலும் நம்மளை மாதிரி ஜென்மங்களுக்கு சில விஷயம் ஏறவே மாட்டேங்குது! ஆளாளுக்கு "போடா முட்டாக்கூ... "( அட கூமுட்டைங்க!) அப்டீன்னு கண்டமேனிக்கு திட்டிட்டு போனா கூட... ம்ஹூம்... நாம திருந்தவா போறோம்?
"விஷயத்தையே சொல்லாம என்னடா புலம்பல்?"னு நீங்களும் திட்ட ஆரம்பிச்சிடாதீங்க.
ஒன்னுமில்லீங்க! நமக்கு கொஞ்சம் கிறுக்கு ஜாஸ்தி.அப்புறம் வாய்த்துடுக்கு வேற! 'பெர்ய மனுஷங்க' இருக்குற சபையில எதாவது ஒண்ணுகிடக்க ஒன்னு டவுட் கேட்டு அப்புறம் வழக்கம்போல திட்டு வாங்குவேன்.
அன்னிக்கும் அப்படிதான் சார்! நாலு 'பெர்ய மனுசனுங்கோ' இருக்குறப்போ ஒரு ஒலகமகா டவுட்ட கேட்டுட்டேன்.
"அண்ணே! "இந்த பிரபாகரன் செத்துபூட்டாரு. அவரு அம்மனகுண்டியா கிடந்தப்போ நாங்கதான் அவருக்கு ட்ரஸ் மாட்டி விட்டோம்! அவரு பொணத்தை கூட நல்லபடியா எரிச்சி சாம்பலையும் கடல்ல கரைச்சாச்சு! உங்களுக்கு தேவைப்பட்டா டெத் சர்டிபிகேட் கூட தர்றோம்!" அப்படீன்னு இலங்கை கவுருமெண்ட்டு சொன்னாங்களாமே? அது உண்மையா?" னு கேட்டு தொலைச்சேன்.
உடனே என் பக்கத்துல இருந்த எங்க ஊரு வக்கீல் அண்ணன் "டேய்! என்னடா உனக்கு புது டவுட்டு! அதுக்கு அப்புறம் நம்ம நாராயணன்கூட போயி பாத்துட்டு "சீக்கிரமா அந்த சர்டிபிகேட்ட அனுப்பி வைங்க. எங்க தலிவரு ராசீவு கொலைகேசை முடிக்க அது வோணும்"னு சொல்லிட்டு வந்தார்! ஆனா இன்னும் அவங்க கொடுக்கலைடா"னு சொன்னார்.
நான் வாயையும் சூ....... யும் மூடிட்டு இருந்திருக்கலாம்! சனி சும்மாவா இருக்கும்?
"அப்படியாண்ணே? அந்த கேச நம்ம நாட்டுலேயே பெரிய போலீசு சி.பி.ஐ தான விஜாரிக்குதாம்! அவங்க கூட மறுபடியும் இலங்கை கவுருமண்டுகிட்ட கேக்கலியா? அப்புறம் நம்ம சோனியா அம்மா கூட அதைப்பத்தி ஒன்னும் கண்டுக்கலயே? ஏன் அண்ணே?" கேட்டேன்.
அவ்ளோ தான்! "பெர்ய மனுசங்ககிட்ட எது எதை கேக்கனும்னு விவஸ்தை இருக்காடா உனக்கு?"னு சொல்லிட்டு பக்கத்தல இருந்த விளக்கமாத்த எடுத்தாரு. அப்புறம் நான் எதுக்கு அங்க நிக்க போறேன்?
நான் கேட்டது தப்பாங்க?

5 பேரு கிடா வெட்டுறாங்க:

Cable Sankar சொன்னது…

ஆரம்பமே படு சூடா இருக்கே.. வாழ்த்துக்கள்.. விந்தை மனிதன்.. பதிவுலகம் உங்களை வருக, வருக வென வரவேற்கிறது.. please remove word verification

Dhivya சொன்னது…

chance ila...super vinthai manitha!!!!

Anbu சொன்னது…

Ji,

Cable sankar sonnathupola "ஆரம்பமே படு சூடா இருக்கூ.."
வாழ்த்துக்கள்..

anbuvel

பெயரில்லா சொன்னது…

விந்தை மனிதனுக்கு வாழ்த்துக்கள்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் விந்தை மனிதன்

துவக்கமே கலக்கி இருக்க்கீங்க போல - பலே பலே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Related Posts with Thumbnails